வெள்ளி, 17 அக்டோபர், 2014

லக்ஷ்மி ராயின் படத்தை மாப்பிங் செய்து இன்டர்நெட்டில் கிரிமினல்கள்

சென்னை: சமீபகாலமாக நடிகைகளின் நிர்வாண படங்கள் என்று இணைய தளத்தில் வீடியோவும், ஸ்டில்களும் வெளியிடப்படுகின்றன. சம்பந்தப்பட்ட நடிகைகள் இதற்கு மறுப்பு தெரிவித்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இணைய தளத்தில் வெளியான ஆபாச வீடியோ பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதில் இருப்பது நடிகை ராய் லட்சுமி என்று கூறப்பட்டது. இதையடுத்து பரபரப்பு எற்பட்டது.இதுபற்றி ராய் லட்சுமி கூறும்போது,‘இதுவரை நான் குறிப்பிட்ட வீடியோவை பார்க்கவில்லை. அந்த வீடியோவை பார்த்த எனது நண்பர்கள் மற்றும் சிலர் அதுபற்றி என்னிடம் கூறினார்கள். அதில் இருக்கும் பெண் லேசாக எனது சாயலில் இருப்பதாக தோன்றுகிறதாம். யாரோ என் மீது தவறான எண்ணம் ஏற்படும் விதத்தில் இதை பரப்பிவிட்டிருக்கிறார்கள். வீடியோவில் பெரும்பாலும் அந்த பெண்ணின் முகத்தை மறைத்திருக்கிறார்கள். அவரது கால் விரலில் மெட்டி அணிந்திருப்பது அதில் தெரிகிறதாம். அப்படியானால் அது திருமணம் ஆன பெண்ணைத்தான் குறிக்கிறது. நடிகையாக இருப்பதால் இதுபோல் வதந்திகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது என்றார். இரும்புகோட்டை முரட்டு சிங்கம்,  காஞ்சனா, இரும்பு குதிரை போன்ற பல படங்களில் நடித்த லட்சுமி ராய் தனது பெயரை சமீபத்தில் ராய் லட்சுமி என மாற்றிக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. - .tamilmurasu.org/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக