சனி, 19 மே, 2012

நடுத்தர வர்க்கம் வீட்டுப் பணியாளர்களை கேவலமாகவும் கொடூரமாகவும் நடத்துவதற்கு காரணம் என்ன?

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் புறநகர் ரயில் நிலையம் ஒன்றில் வீட்டு வேலைக்கு போவதற்கு பெண்கள் காத்திருக்கிறார்கள்
மீட்கப்பட்ட வீட்டு உதவியாளர்களுக்கு செவிலியராக வேலை செய்த தனது ஒன்பது ஆண்டு கால அனுபவத்தில் மோசமானவற்றை எல்லாம் பார்த்து விட்டதாக கே மாரியம்மா நினைத்திருந்தார். 2010 இல் அவரும் உடன் பணி புரிபவர்களும் மேற்கு தில்லியில் இருக்கும் வீடு ஒன்றிலிருந்து சங்கீதா என்ற 17 வயது பெண்ணை மீட்பதற்கு போன போது அவர் தனது நினைப்பை மாற்றிக்கொள்ள வேண்டியிருந்தது. சங்கீதா உடல் முழுவதும் கடிக்கப்பட்ட காயங்களுடன் காணப்பட்டார். “நாங்கள் கடும்  அதிர்ச்சியடைந்தோம். நாங்கள் பார்த்துக் கொண்டிருப்பது ஒரு விலங்கையா அல்லது மனிதப் பிறவியையா என்று சந்தேகமாக இருந்தது” என்று நினைவு கூர்கிறார் மாரியம்மா. மாரியம்மா, வீட்டு உதவியாளர்களின் உரிமைகளுக்காகப் போராடும் நிர்மலா நிகேதன் என்ற குழுவில் வேலை செய்கிறார்.
முதலில் சங்கீதாவின் எஜமானர்கள், அவள் தன்னைத்தானே கடித்துக் கொண்டதாகச் சொல்லிப் பார்த்தார்கள். ஆனால் கழுத்தில் எப்படி காயங்கள் ஏற்பட்டன என்பதற்கு விளக்கம் இல்லை. அதன் பிறகு அவர்கள் கதையை மாற்றிக் கொண்டு -  வீட்டு எஜமானி மனநிலை சரியில்லாதவர் என்று சொன்னார்கள். “ஆனால் நாங்கள் அதையும் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் ஏன் தனது குழந்தைகளைக் கடிக்காமல் வீட்டு உதவியாளரை மட்டும் கடிக்க வேண்டும்’ என்று மாரியம்மா வாதிட்டார். பின்னர் பிரச்சினை நீதிமன்றத்துக்கு வெளியில் தீர்த்துக் கொள்ளப்பட்டது. அந்தப் பெண்ணின் குடும்பத்துக்கு 50,000 ரூபாய் கொடுக்கப்பட்டது, அவர் அஸ்ஸாமில் இருக்கும் தனது வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
தான் பார்த்த மோசமான கொடூரங்களைப் பற்றிப் பேசுவதற்கு மாரியம்மா தயாராக இருக்கலாம். ஆனால் தில்லியின் வீட்டு வேலை செய்பவர்கள் மன்றத்தின் தன்னார்வலர்களுக்கு அது அவ்வளவு எளிதாக இல்லை.

குமரிகோட்டம். ADMK MLAக்களும் சட்டமன்றமும்

சட்டமன்ற விடுதியில், “அடைந்தால் மகாதேவி, இல்லையேல் மரணதேவி!”

Viruvirupu
சட்டமன்ற விடுதிக்கு இப்போது இரவு நேரங்களில் நீங்கள் போனால், உங்களை ஒரு விநோதமான சத்தம் வரவேற்கும். ஏதோ ஒரு நாடகக் குழுவின் ஒத்திகை அறைக்குள் வந்துவிட்டோமோ என்றுகூட நீங்கள் நினைத்துக் கொள்வீர்கள்.
எம்.ஜி.ஆர் படங்களில் அந்தநாளைய வில்லன் பி.எஸ்.வீரப்பா, “அடைந்தால் மகாதேவி, இல்லையேல் மரணதேவி” என்று டயலாக் பேசுவதுபோல, கட்டைக் குரல்களில், ஏற்ற இறக்கங்களுடன் சிலர் பேசும் டயலாக்குகள் உங்கள் காதுகளில் விழும்.

நித்திக்கு ஆதரவாக வரும் ‘முற்போக்காளர்கள்

நித்தியானந்தாவிற்கு அச்சுறுத்தும் தொண்டை முள்ளாக பாலியல் குற்றச்சாட்டு பூதாகரமாக எழுந்து நிற்பதை யாரும் மறுக்க முடியாது. தாராளமய சிந்தனை கொண்ட ‘முற்போக்காளர்கள்’ பலரும் இதை ஒரு குற்றமாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதை இங்கே சேர்த்துப் பார்க்க வேண்டும். நித்தியானந்தாவின் துறவறமும், பாலியல் வேட்கையும் அவரது தனிப்பட்ட விசயம், அவரது படுக்கை அறையை எட்டிப்பார்ப்பது அநாகரீகம் என்கிறார்கள் அந்த ‘முற்போக்காளர்கள்’. ஒருவேளை அது தவறு என்றாலும் அதை கேட்க்க அருகதை உள்ளவர்கள் அவரது பக்தர்கள்தானே அன்றி மற்றவர்கள் அல்ல என்றும் கூறுகிறார்கள்.

இந்தியாவுக்கான தூதரை இத்தாலி திரும்பப் பெற்றது

டெல்லி: தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இத்தாலிய கடற்படையினருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவுக்கான தூதரை இத்தாலி விலக்கிக் கொண்டுள்ளது.
இத்தாலிய கடற்படையினர் இருவரும் திருவனந்தபுரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான வழக்கில் கொல்லம் நீதிமன்றம் கேரள போலீசார் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இதையடுத்து இந்தியாவுக்கான தூதர் கியாகோமோ சான்பெலிஸ் டி மோன்டிபோர்ட்டை இத்தாலி திரும்ப அழைத்துக் கொண்டது.
இதுதொடர்பாக இத்தாலி வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், `இத்தாலி பாதுகாவலர்கள் மீதான குற்றச்சாட்டுகள் காரணமாக ஆலோசனை நடத்துவதற்கு இந்தியாவுக்கான இத்தாலி தூதர் திரும்ப அழைக்கப்பட்டு உள்ளார்' என்று கூறப்பட்டுள்ளது.

அப்படித்தான் சமணர்களையும், பவுத்தர்களையும் கொன்றார்கள், ‘தனிநாடு’ மன்னர்கள்.

அம்பேத்கர் இந்திய தேசியத்தை ஆதரித்தார்..’ ஆமாம் இப்போ இன்னாங்குற அதுக்கு?

18 05 2012

அம்பேத்கர் இந்திய தேசியத்தை ஆதரித்தார், இந்திய தேசியம் என்பது இந்து தேசியம்தான், பார்ப்பன தேசியம்தான், அவர் இந்து தேசியத்தை, பார்ப்பன தேசியத்தை ஆதரித்தவர் என்று என் நண்பன் சொல்கிறான். உண்மையா?
-கனல்
இந்திய தேசியம் இந்து தேசியமாக இருக்கிறது என்பது உண்மைதான்.
இந்திய தேசியம் என்று உருவாவதற்கு முன்பு தமிழ்நாடு புரட்சிகர தமிழ்த்தேசியமாகவா இருந்தது?
ஜாதி வெறியும், தலித் வீரோதமும், பார்ப்பன செல்வாக்கும், பார்ப்பன அடிமைத் தனமும், நிலப்பிரபுத்துவ கொடுமையும் இன்று இருப்பதைவிட பல மடங்கு அதிக அளவில் இருந்தது.
ஒப்பிட்டளவில் பார்த்தால், தமிழ்நாடு தனித் தனியாக தமிழ் மன்னர்களால் மட்டுமே ஆளாப்பட்டு வந்தபோது இருந்த நிலையைவிட இன்றைய நிலையில் மேன்மையுள்ளதாகவே இருக்கிறது.

நித்தி: மயிர்ப் பிரச்சினையும், மரபின் பித்தலாட்டமும்! பாகம் 4

ஸ்டாலினை ‘அமுக்குவதில் ரகசியமாக All groups

ஸ்டாலின் திடீரென லண்டன் சென்றது ஏன்? கதை லேசாக புகைகிறது!!

Viruvirupu
முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா வெளியே (ஜாமீனில்) வந்த விவகாரம் தி.மு.க. வட்டாரங்களில் பரபரப்பாக அடிபட்டுக் கொண்டிருந்த நிலையில், திடீரென அந்தப் பேச்சுக்களை அமுக்கும் விதத்தில், மற்றொரு விஷயத்தைப் பற்றி இப்போது பரபரப்பாக பேசத் துவங்கியுள்ளார்கள். ஸ்டாலின் லண்டனுக்கு சென்ற பின்னணி என்ன? என்பதே இந்த புதிய டாக்.
தி.மு.க.-வின் இரண்டாம் மட்ட தலைவர்களே இதைப் பற்றி தமக்கிடையே விவாதிக்கத் துவங்கியுள்ளதால், இதில் ஏதோ விவகாரம் உள்ளது என்றுதான் தெரிகிறது. இரு மாவட்ட செயலாளர்கள், ஒரு எம்.பி., ஒரு முன்னாள் அமைச்சர் (இவர் தற்போது எம்.எல்.ஏ.கூட அல்ல) ஆகியோர் சமீபத்தில் நெல்லையில் உள்ள தி.மு.க. வி.ஐ.பி. ஒருவரது வீட்டில் சந்தித்து, இந்த விவகாரம் குறித்து ‘ஏதோ’ மிக சீரியஸாக பேசியதாக ஒரு தகவல் உள்ளது.

எங்கே தியாகு? மன உளைச்சலில் கவிஞர் தாமரை

தமிழ்நாட்டில் தீவிர அரசியல் பேசும் இளைஞர்களின் ஆதர்ஷம்... தோழர் தியாகு. தமிழ்த் தேசிய அரசியலை சித்தாந்தம் அறிந்துப் பேசும் தலைவர்களில் முக்கியமானவர். ஈழப் பிரச்னையில் அவர் காட்டிய தீவிரமும் அக்கறையும் குறிப்பிடத் தகுந்தது. ஆனால், கடந்த 13-ம் தேதியில் இருந்து தோழர் தியாகு எங்கே இருக்கிறார் என யாருக்கும் தெரியவில்லை.

நாகப்பட்டினம் மாவட்டத்தின் சிறிய கிராமத்தில் இருந்து வர்க்கப் போராளியாக எழுந்து வந்தவர் தியாகு. ஓர் அழித்தொழிப்பு வழக்கில் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டு, பின்னர் ஆயுள் தண்டனைக் கைதியானார். தன்னுடன் சிறையில் இருந்த லெனின் என்ற தோழரின் சகோதரியைத் திருமணம் செய்து கொண்டார். விடுதலையாகி வெளியில் வந்து இருவரும் இணைந்து வாழ்ந்தபோதிலும், அவர்களுக்கு இடையிலான மனக் கசப்பால் பிரிந்தனர். அதன் பிறகுதான், திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் தாமரையும் தியாகுவும் இணைந்து வாழ்ந்தனர். (தாமரைக்கும் அது இரண்டாவது திருமணம்).

செட்டாப் பாக்ஸ் மூலம் இனி 500 சேனல்கள்... சென்னையிலும் அரசு கேபிள்

 500 Channels Through Set Top Boxes Tn Govt
சென்னை: இனி தமிழகத்தில் 500 சேனல்கள் தெரியும் வகையில் அரசு கேபிள் ஒளிபரப்பு சேவையை வழங்கவிருக்கிறது. இதற்கான செட்டாப் பாக்ஸ்கள் நியாயமான விலையில் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், தற்போது சென்னை நீங்கலாக 31 மாவட்டங்களில் தனது கேபிள் டிவி சேவையை வழங்கி வருகிறது. சென்னை மாநகரில் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் இதன் சேவை விரைவில் தொடங்கப்படும். அதற்கான நடவடிக்கைகளை முதல்வர் ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின்படி, அரசு கேபிள் டிவி நிறுவனம் விரைந்து எடுத்து வருகிறது.

போலீஸ் உயர் அதிகாரி? ராமஜெயம் பகைத்துக்கொண்டார்

  அவருக்கு இதில் பங்கு இருக்கலாம்’

''திருச்சி ராமஜெயம் கொலை விவகாரத் தில் இறக்கை கட்டிப் பறக்கும் வதந்திகள் இன்னமும் நின்றபாடில்லை. 'அவர் நள்ளிரவிலேயே கொலை செய்யப்பட் டார். முதல் நாள் இரவே வீட்டைவிட்டுக் கிளம்பிச் சென்றுவிட்டார். அவரது குடும்பத்தினர் உண்மையான தகவல்களைச் சொல்லாமல் மறைப்பதால்தான், விசா ரணை நீண்டுகொண்டே போகிறது’ என்ற செய்தி சில தினங்களாக உலவுகிறது!'' என்றார் கழுகார்.
''திருச்சியில் நர்ஸை ஒருவரை போலீ ஸார் வளைத்திருப்பதாகத் தகவல் வந்ததே?''
''அவர் இறந்துபோன நேரம் பற்றிய சர்ச்சைகளை முதலில் சொல்லி விடுகிறேன். 'ராமஜெயம் போஸ்ட்மார்ட்டம் அறிக்கை யில் அவர் இறந்துபோனதற்கான காரணம் மட்டுமே தெரிவிக்கப்பட்டு இருந்தது. அவர் உயிர் பிரிந்த நேரத்தை உடற்கூறு ஆய்வு செய்த மருத்துவர்கள் குறிப்பிடவில்லை.

தண்டவாளத்தைக் கடக்கிறீர்களா? Camera....

சென்னை, மே 18-கணக்கு காட்டுவதற் காக, ரயில் பாதைகளை கடக்கும் பயணிகளை ரயில்வே பாதுகாப்பு படையினர் (ஆர்பிஎப்) ஒளிந்திருந்து பிடித்து அபராதம் விதிக்கின் றனர்.
ரயில்வேயில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை மற் றும் குற்ற வழக்குகளை விசாரிக்க அந்த மாநி லத்தை சேர்ந்த ரயில்வே காவல்துறையினர் ஈடு படுகின்றனர்.அதே நேரத்தில்ரயில்வே சொத்துக்களை பாது காக்கும் பணியில் ரயில்வே பாதுகாப்பு படையினர் ஈடுபடுகின்றனர்.
கூடவே இவர்கள் ரயில்பா தையை கடப்பவர்கள், பயணிகளிடம் அத்து மீறுபவர்கள், ரயில்வே இடங்களில் சிறுநீர் கழிப்பவர்களை ரயில்வே விதிகளின்படி பிடித்து சென்னையில் ரயில்வே நீதிமன்றங்க ளிலும், மற்ற இடங் களில் வழக்கமான நீதி மன்றங்களிலும் ஆஜர் படுத்தி அபராதம் வசூ லிக்கின்றனர்.

கிராமத்தில் பணியாற்ற மறுத்தால் டாக்டர்களுக்கு ரூ.2 கோடி அபராதம்

 அரசு மருத்துவக் கல்லூரியில் படித்தவர்கள், கிராமப்புறங்களுக்குச் சென்று பணியாற்றவில்லை எனில், அதிகபட்சமாக இரண்டு கோடி ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டும்,'' என, மகாராஷ்டிர மருத்துவக் கல்வி அமைச்சர், விஜய்குமார் காவித் கூறினார்.
சென்னை அரசு மருத்துவக் கல்லூரியையும், மருத்துவமனையையும் பார்வையிடுவதற்காக, மகாராஷ்டிர மாநிலத்தின் மருத்துவக் கல்வி அமைச்சர் விஜய்குமார் காவித்க நேற்று சென்னை வந்தார்.அரசு பொது மருத்துவமனையின் முதல்வர் கனகசபையுடன் கலந்துரையாடினார்.
பின், அமைச்சர் பேசியதாவது:எங்கள் மாநிலத்தில், அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், தனியார் மருத்துவமனையிலும் பணிபுரிவதற்கு, முற்றிலும் தடை விதித்துள்ளோம்.

உளவு துறை ரகசிய விசாரணை நித்யானந்தா பீதி

ஓசூர்:தமிழகம் முழுவதும் உள்ள நித்யானந்தா தியான பீடங்களில், உளவுத் துறை போலீசார், ரகசிய விசாரணை மேற்கொண்டுள்ளதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம், பிடதி ஆசிரமத்தை தலைமையிடமாகக் கொண்டு, நித்யானந்தாவுக்கு, நாடு முழுவதும் மட்டுமில்லாது, உலக நாடுகளிலும் ஏராளமான தியான பீடங்கள், ஆசிரமங்கள் உள்ளன. நடிகை ரஞ்சிதாவுடன் இணைத்து கூறப்பட்ட விவகாரத்தில், அனைத்து தியான பீடங்கள் மீதும் தாக்குதல் சம்பவங்கள் நடந்ததால், தியான பீடங்களுக்கு சீடர்கள் வருகை குறைந்தது.பல தியான பீடங்கள், தாக்குதல் பீதியால் பூட்டப்பட்டன. ரஞ்சிதா விவகாரம் அடங்கிய பின், தியான பீடங்கள், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

வெள்ளி, 18 மே, 2012

கொலைகார திருஞான சம்பந்தரை விட குஷால் பேர்வழி நித்தியானந்தா எவ்வளவோ மேலில்லையா?

சங்கர மடத்தின் பார்ப்புக்கு ஒரு நீதி! மனு தர்மத்தின் நியதி!

பார்ப்பனியத்தின் தலைமை பீடமாக திகழ்ந்த சங்கர மடத்தை அவாள்களும் சரி, அவாள்களின் அரசியல் இயக்கமான ஆர்.எஸ்.எஸ்ஸூம் சரி என்றைக்கும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். தற்போது நித்தியானந்தா ஆதீனமாக மலர்ந்திருக்கும் நிலையில் யாரும் ஜெயேந்திரன் விவகாரத்தை எழுப்பி விடக்கூடாது என்பதில் தினமணி வைத்தி மாமா மிகவும் கவலைப்ப்படுவது அதற்கோர் சான்று. அதாவது ஜெயேந்திரன் மடாதிபதியாக இருக்கும் போதுதான் குற்றம் சாட்டப்பட்டாராம். அது நீதிமன்றத்தால் நிரூபணமாகாத நிலையில் அவர் பதவி விலக தேவையில்லையாம். ஆனால் நித்தியானந்தா பாலியல் குற்றம் சாட்டப்பட்ட நிலையில் புதிதாக மடத்தின் தலைவராக வருவது சரியில்லை என்று புலம்புகிறது தினமணி. எனில் அவர் நித்தியானந்தா தியான பீடத்தின் தலையாக வலம் வருவதில் வைத்திக்கு உடன்பாடுதான். புதிய பதவிதான் பிரச்சினையாம்.
நெஞ்சு நிமிர்த்தி ” நீதான் குற்றவாளி” என்று சொல்ல முடியாத துர்பாக்கிய நிலைதான், “நித்தியானந்தா ஆதினத்திற்கு பொருத்தமானவர் அல்ல, மரபுகள் தேவைப்படாத சித்த மரபைச் சேர்ந்தவர்”, என்றெல்லாம் செத்துப்போகும் பாயிண்டுகளை வைத்து பேசுகிறார் வைத்தி மாமா. என்னதான் கவனமாக இருந்தாலும் மல்லாக்க படுத்து துப்பும் போது எச்சில் கீழேதானே விழவேண்டும்?

நித்தியானந்தா அயோக்கியன் என்றால் யோக்கியர்கள் யார்? பாகம்

ஆட்டத்தை இருவரும் ஆடுகிறோம், என்னை மட்டும் தனிமைப்படுத்த நினைக்காதீர்கள் என்பதே நித்தியின் விமரிசனம். 
ஒரு வேளை நித்தி இதைக் கிளப்பவில்லை என்றாலும் பிரச்சினை இதுதான், யார் யோக்கியர்கள், எது அளவு கோல்? மதுரையில் நடந்த ஆதீன மீட்பு ஆலோசனை மாநாட்டில் மகா சந்நிதானங்கள் மற்றும் பலர்" "நித்தியானந்தா-;நித்தியானந்தா அயோக்கியன் என்றால் யோக்கியர்கள் யார்? மதுரை ஆதீனம் அருணகிரி தனது வாரிசை நியமித்தார் என்றதும் மற்ற ஆதீனங்களால் அதை முற்று முழுதாக அதாவது வெளிப்படையாக எதிர்க்க முடியவில்லை. மதுரை ஆதீனம் மரபை மாற்றிவிட்டார் என்று பலவீனமான அதுவும் காறி உமிழத்தக்க பார்ப்பனிய சடங்குகளில்தான் அவர்களது விமரிசனம் மையம் கொண்டிருக்கிறது. நித்தியானந்தா சைவப்பிள்ளை இல்லை, தீட்சை பெறவில்லை, திருமேனியில் 16 இடங்களில் திருநீறு பூசவில்லை, மொட்டையடிக்கவில்லை, தனியாக மடம் வைத்திருக்கிறார், என்று இறுதியில்தான் பாலியல் குற்றச்சாட்டு உடையவர் என்கிறார்கள்.
எதற்கு இப்படி வெட்டியாக அற்ப விசயங்களை மரபு என்ற பெயரில் பட்டியிலிட வேண்டும்? நித்தியானந்தா ஒரு பொறுக்கி என்று மட்டும் சொல்லி ஏன் எதிர்க்க முடியவில்லை? சைவ ஒழுக்கத்தை தீர்மானிக்கும் விசயமாக முடி ஏன் இருக்கிறது? இதற்கு மாட்சிமை தாங்கிய ஆதினங்கள் யாரும் வாயைத் திறக்க முடியாது. நித்தியானந்தாவே அதற்கு பதிலளித்திருக்கிறார். அதாவது தனது படுக்கையறையை 24 மணிநேர கேமரா கண்காணிப்பிற்குள் வைத்திருக்க முடியுமென்றும் மற்ற ஆதீனங்கள் தயாரா என்று அவர் சவால் விட்டிருக்கிறார். ஒருவேளை தனது படுக்கையறை ஊரறிந்து விட்டபடியால் அதில் புதிதான மர்மங்கள் இல்லை என்றும் அவர் நினைத்திருக்கக் கூடும்.

திருமண ரத்து பெற்றாலும் கணவன் சொத்தில் உரிமை!

பெண் உரிமைத் தடத்தில் புதிய மைல்கல்! திருமண ரத்து பெற்றாலும் கணவன் சொத்தில் உரிமை!

புதிய சட்டத் திருத்தம் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
புதுடெல்லி, மே.18- திருமண ரத்துரிமை பெற்றவர்களாக இருந் தாலும் பெண்ணுக்குக் கணவரின் சொத்தில் பங்கு உண்டு என்ற புதிய சட்டத் திருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள் ளது. மாநிலங்களவையில் கடந்த 2-ஆம் தேதி, திருமண சட்டங்களில் திருத்தம் செய்வதற்கான முன் வரைவு சட்டம் தாக்கல் செய்யப்பட் டது. மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித், அம்மசோ தாவை தாக்கல் செய்தார்.

நித்தியானந்தா மதுரை ஆதீனமானதில் என்ன தப்பு? பாகம் 1

பா.ஜ.கவின் மதுரை சங்கமம், நித்தியால் பஞ்சரான கதை!

தமிழர்களின் ‘பண்பாட்டுத்’ தலைநகராகத் திகழும் மதுரை தனது வரலாற்றில் முக்கியமான அத்தியாயத்தை சமீபத்தில் உலகறியக் காட்டியிருக்கிறது. செய்தி தெரிந்ததுதான். மதுரை ஆதீனத்தின் 293வது தலைவராக நித்தியானந்தா நியமிக்கப் பட்டிருக்கிறார். நியிமித்தது அருணகிரி எனப்படும் 292வது நடப்பு ஆதீனம். மடங்களில் சிவனே என்று படுத்துறங்கும் காமா சோமாவாக இருக்கும் தம்பிரான்களில் ஒருவர்தான் புதிய ஆதீனமென்றால் இந்த அளவுக்கு பேசப்பட்டிருக்காது.

DMK அமைச்சர் ஐ.பெரியசாமி, மகன்-மகள் வீடு, நூற்பாலையில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் ரெய்ட்!

திண்டுக்கல்: முன்னாள் திமுக அமைச்சர் ஐ.பெரியசாமியின் திண்டுக்கல் வீடு, அவரது மகள், மகன் வீடுகளிலும், வத்தலக்குண்டில் உள்ள அவர்களது நூற்பாலையிலும் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
நேற்று தான் இன்னொரு முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் சென்னை, சேலம், தர்மபுரி வீடுகளில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் சோதனை நடத்தினர்.
இந் நிலையில் இன்று ஐ.பெரியசாமிக்கு சொந்தமான வீடுகளிலும் அவரது உறவினர்கள் வீடுகளிலும் சோதனை நடந்து வருகிறது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல் அசோக்நகரில் உள்ள ஐ.பெரியசாமி வீடு, ரவுண்ட் ரோட்டில் உள்ள பெரியசாமியின் மகள் இந்திராவின் வீடு, பாண்டி நகரில் உள்ள மகன் செந்திலின் வீடு, வத்தலக்குண்டு அருகே உள்ள ஐ.பெரியசாமிக்கு சொந்தமாக நூற்பாலையிலும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
பெரியசாமி இப்போது திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைக்காவிரிக்கு ஒரு பெண்ணோடு ஓடிப்போனவர் தானே ஜெயேந்திரர்: மதுரை ஆதீனம் தாக்கு

கும்பகோணம்: தலைக்காவிரிக்கு ஒரு பெண்ணோடு ஓடிப்போனவர் தான் காஞ்சி ஜெயேந்திரர் என்று மதுரை ஆதீனம் அருணகிரி நாதர் தெரிவித்துள்ளார். 

மதுரை ஆதீனமாக நித்யானந்தாவை நியமித்ததற்கு பல்வேறு ஆதீனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ரஞ்சிதா என்ற பெண்ணை எப்போதும் பக்கத்தில் வைத்துக் கொண்டு சுற்றும் நித்யானந்தாவுக்கு ஆதீனம் பட்டம் வழங்கியதை ஏற்க முடியாது என்று காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் கமெண்ட் அடித்தார். இதற்கு நித்யானந்தா எதிர்ப்பு தெரிவித்தார். தனக்கு எதிரான கருத்தை பத்து நாட்களில் ஜெயேந்திரர் வாபஸ் பெறவேண்டும் என்றும் கெடு விதித்தார்.
மேலும் ஜெயேந்திரரை எதிர்த்து நீதிமன்றத்தில் ரஞ்சிதா வழக்கும் தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில் ஜெயேந்திரர் குறித்து மதுரை ஆதீனம் அருணகிரி நாதர் கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

கடந்த 1987ம் ஆண்டு ஜெயேந்திரர் ஒரு பெண்ணோடு காஞ்சி மடத்தில் இருந்து தலைக்காவிரிக்கு ஓடிப் போய்விட்டார் என்று தகவல் கிடைத்தது. உடனே காஞ்சி மடத்தை தொடர்பு கொண்டோம். அப்போதைய மேலாளர் கிருஷ்ணமூர்த்தி அய்யர் மூலம் அப்போதைய மகா பெரியவரிடம் சொல்லி தலைக்காவிரியில் இருந்த ஜெயேந்திரருடன் தொலைபேசியில் பேசினேன்.

Italy கடாபியின் ரூ.132 கோடி ஹோட்டல் காம்ப்ளக்ஸ் பறிமுதல்

ரோம்: இத்தாலியில் கொல்லப்பட்ட லிபிய முன்னாள் அதிபர் கடாபி குடும்பத்திற்கு சொந்தமான நிலம் மற்றும் ஹோட்டல் காம்பிளக்ஸ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவற்றின் மதிப்பு ரூ.132 கோடி ஆகும்.
கொல்லப்பட்ட லிபிய முன்னாள் அதிபர் கடாபியின் குடும்பத்தாருக்கு இத்தாலியில் ஏகப்பட்ட சொத்துக்கள் உள்ளன. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் கடாபியின் குடும்பத்தாருக்கு சொந்தமான ரூ.7,600 கோடி மதிப்புள்ள சொத்துக்களை இத்தாலி நாட்டு வரித்துறையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து பான்டெலிரியாவில் உள்ள கடாபியின் ஹோட்டல் காம்பிளக்ஸ் மற்றும் நிலத்தை பறிமுதல் செய்யுமாறு ரோம் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில ரூ.132 கோடி மதிப்புள்ள ஹோட்டல் காம்பிளக்ஸ் மற்றும் நிலம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Dial For Books டாப் டென் புத்தகங்கள்

டயல் ஃபார் புக்ஸ் - டாப் டென் புத்தகங்கள்

நியூ ஹொரைஸன் மீடியா தொடங்கியுள்ள ‘டயல் ஃபார் புக்ஸ்’ புத்தகக் கடை தி.நகரில் கடந்த 15 நாள்களாக இயங்கிவருகிறது. இந்தக் காலகட்டத்தில் மிக அதிகமாக விற்ற 10 புத்தகங்கள் என்ற பட்டியலைக் கேட்டேன். அவை கீழே:
கிமு கிபி - மதன்
ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க - ‘நீயா நானா’ கோபிநாத்ஸ்
கீரைகள் - நலம் வெளியீடு
விரத பூஜா விதானம் - லிஃப்கோ
சுபாஷ் - மர்மங்களின் பரமபிதா - மருதன்
சூடிய பூ சூடற்க - நாஞ்சில் நாடன், தமிழினி
முகலாயப் பேரரசில் பெர்னியரின் பயணங்கள், சந்தியா பதிப்பகம்
நாஸ்டர்டாமஸ் சொன்னார் நடந்தது, சிக்ஸ்த் சென்ஸ்

ரூபாய், டாலர், பவுண்ட், யூரோ

கடந்த சில தினங்களாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இறங்கிக்கொண்டே போயிருகிறது. அதேபோல யூரோவுக்கு நிகரான பிரிட்டிஷ் பவுண்டின் மதிப்பு ஏறிக்கொண்டே போயிருக்கிறது.
இரண்டு நாடுகளிலும் இதனால் சற்றே கலக்கம்.

இதென்னடா, ஏறினாலும் பிரச்னை, இறங்கினாலும் பிரச்னை?
இந்தியாவைப் பொருத்தமட்டில் இறக்குமதிகள் அதிகம். அதுவும் கச்சா எண்ணெய் இறக்குமதி. டாலர் மதிப்பு அதிகரித்தால், அதனால் நம் நாடு நேரடியாக பாதிக்கப்படும். திடீரென டாலர் மதிப்பு ஏறுவது ஏன்? இந்தியப் பொருளாதாரத்துடன் ஒப்பிடும்போது அப்படி ஒன்றும் அமெரிக்கப் பொருளாதாரம் அதி உயர்வாகப் போவதாகத் தெரியவில்லையே?

நித்யானந்தா வெளியிட்ட ரகசியம்..ஆதீன எதிர்ப்பாளர்கள்

மதுரை: ""ஆதீன மீட்புக்குழுவில் உள்ளவர்களில் பலர், மறைமுகமாக என்னை தேடி வந்து ஆசீர்வாதம் பெற்று சென்றனர். எதிர்ப்பாளர்களின் போராட்டம் பிசுபிசுத்து போகும்,'' என நித்யானந்தா கூறினார்.
மதுரையில் நேற்று கூறியதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் எனக்கு எதிராக கருப்புக் கொடி காட்ட ஏற்பாடு செய்தவர்கள், ஆதீன சொத்துகள் மீது சட்டவிரோதமாக அமர்ந்திருப்பவர்கள். கருப்புக்கொடி காட்டியவர்கள் அரசின் நூறு நாள் வேலை திட்டத்தில் பணி செய்பவர்கள் என தெரியவந்தது. இது குறித்து அம்மாவட்ட கலெக்டரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

வியாழன், 17 மே, 2012

400 கி.மீ.இரயிலில் பயணித்து, வெறும் 4 மணி நேரம் உண்டு, உறங்கிக்

சென்னை-ஜோலார்பேட்டை
ஒவ்வொரு நாளும் 400 கி.மீ. தூரம் வரை இரயிலில் பயணித்து, வெறும் 4 மணி நேரம் மட்டும் இருளில் உண்டு, உறங்கிக் கழிப்பவர்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா 


ஒவ்வொரு நாளும் இருநூறு கி.மீ. தூரம் வரை புகைவண்டியில் கடந்து வேகமாக சென்னைக்குள் வந்து விட்டு, மாலை ஆறு மணிக்கு மீண்டும் அதே வேகத்துடன் இன்னொரு இருநூறு கி.மீ பின்னோக்கிப் பயணித்து, இடைப்பட்ட நான்கு மணி நேரத்தை இருளில் உண்டு, உறங்கிக் கழித்து விட்டு, அதிகாலை நான்கு மணிக்கு மீண்டும் எழுந்து சென்னைக்கு பயணிப்பவர்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? காலை ஒன்பதரை மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும் ஏலகிரி விரைவு வண்டி, நடைமேடையை அடைவதற்குள்ளாகவே பெட்டிகளிலிருந்து குதிப்பவர்கள், நடைமேடையில் பாதம் பட்ட உடனே கூட்டம் கூட்டமாக வாயிலை நோக்கி ஓடுகிறார்கள். வாயிலை அடைந்ததும் மாநகரப் பேருந்துகளில் திணித்துக் கொண்டு சென்னை நகரின் பல்வேறு திசைகளுக்கும் சிதறி மறைந்து போகிறார்கள். மீண்டும் மாலை 5 மணி முதல் 5.55க்குள் அனைத்துத் திசைகளிலிருந்தும் சென்ட்ரலை நோக்கிக் விரையும் கூட்டம், காலையில் வந்த அதே ஏலகிரி விரைவு வண்டிக்குள் தன்னைத் திணித்துக் கொள்கின்றது.

வாடகைதாரர்களின் விவரம் திரட்டும் சென்னை போலீசின் உத்தரவுக்கு நீதிமன்றத் தடை!

வாடகைதாரர் விவரம்சென்னை மாநகரப் போலீசு நடத்திய போலி மோதல் கொலைகளும், வடமாநிலத் தொழிலாளர்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டதும் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளன. சென்னையில் வாடகைதாரர்கள் என்ற பெயரில் குடியிருக்கும் ‘சமூக விரோதி’களால் பொது அமைதிக்கும் பங்கம் ஏற்பட்டுள்ளதாகவும், வீட்டு உரிமையாளர்கள் தாங்கள் குடியமர்த்திருக்கும் வாடகைதாரர்கள் பற்றிய விவரங்களை அருகாமை போலீசு நிலையத்தில் தரவேண்டும் என்றும், அவ்வாறு அளிக்கத் தவறினால், வீட்டு உரிமையாளர்கள் மீது இ.பீ.கோ பிரிவு 188இன் கீழ் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகர போலீசு உத்தரவிட்டது. குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144இன் கீழ், மார்ச் 3ஆம் தேதி வெளியிடப்பட்ட இந்த உத்தரவின்படி, போலீசு தருகின்ற படிவத்தில், ‘வாடகைதாரரின் புகைப்படம், அடையாள அட்டை, அவரது நிரந்தர முகவரி, அவர் ஏற்கெனவே குடியிருந்த முகவரி, செல்பேசி எண், வேலை செய்யும் இடத்தின் முகவரி, வீட்டில் தங்கியிருப்பவர்கள் குறித்த விவரம்’ ஆகியவற்றைத் தரவேண்டும்.  வீட்டு உரிமையாளர் அதற்கு கைச்சான்றும் அளிக்க வேண்டும்.

Hydrabad நிஜாமின் கஜானாவுக்கு வரி கிடையாதா?

ஹைதராபாத்-நிஜாம்வெள்ளையனை அண்டிப்பிழைத்து நாட்டை காட்டிக் கொடுத்த துரோகத்தனத்திற்காக வீசப்பட்ட எலும்புத் துண்டுகளுக்கு வரிகட்டுவதை அவமானம் என்கிறது இந்தக் கைக்கூலி நிஜாம் குடும்பம் 
ஃபோர்ப்ஸ் பத்திரிகை 2008-ஆம் ஆண்டு வெளியிட்ட கடந்த நூற்றாண்டின் (1900-2000) பணக்கார வரலாற்று மாந்தர்களின் பட்டியலில் ஐந்தாவது இடத்திலிருக்கும் ஹைதராபாத் நிஜாமின் அதிகாரப்பூர்வ சொத்து மதிப்பு 210.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இதே பட்டியலில் இருபதாவதாக வரும் பில்கேட்சின் சொத்து மதிப்பு 101 பில்லியன் டாலர்கள் தான்.
இந்த சொத்துக்களனைத்தும் அந்தக் காலத்தில் நிஜாம் வயலில் இறங்கி நாற்று நட்டோ, சுமை சுமந்து சம்பாதித்ததோ அல்ல. முகலாயர் காலம் தொடங்கி வெள்ளையர்  காலம் வரை தக்காணத்தில் அவர்களுக்கு அடியாளாகப் பணியாற்றி, மக்களைப் பல்வேறு வரிகளின் மூலம் கசக்கிப் பிழிந்து சம்பாதித்தவைதான். இது போக சிறப்பான அடிமையாகப் பணியாற்றியதற்காக வெள்ளை அதிகாரிகளாலும், காலனிய அரசாலும் அளிக்கப்பட்ட பல்வேறு பரிசுப்பொருட்களும் தான் நிஜாமின் கஜானாவில் நிறைந்துள்ளது.

அந்த காட்சியை அஞ்சலி விரும்பினார்’ - சுந்தர்.சி!


சுந்தர்.சி இயக்கத்தில் விமல், மிர்சி சிவா அஞ்சலி, ஓவியா ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் ‘கலாலப்பு’ சுந்தர்.சி இயக்கும் இந்த 25-வது படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ருள்ளது என்னதான் படம் நன்றாக இருந்தாலும் குறை சொல்லும் அளவிற்கு ஏதாவது ஒரு காட்சி படத்தில் இருக்கும்.
அந்த வகையில் கலகலப்பு படத்தில் பலர் குறையாய் சுட்டிக் காட்டும் காட்சி அஞ்சலியும், ஓவியாவும் போடுள்ள குத்தாட்ட பாடலைத் தான். சிலர் ஆபாச நடனம் என்றும் கூறிவிட்டதால் இதை பற்றி கேட்டபோது சுந்தர்.சி ”அஞ்சலியை இதுவரை எல்லோரும் ஒரு ஏழைப் பெண்ணாகவும், சுரிதார் அணிந்துகொண்டும் தான் பார்த்திருக்கிறார்கள்.

ஆயுள் தண்டனை இனி 30ஆண்டுகள்..14 அல்ல : உச்சநீதிமன்றம்


புதுடில்லி, மே 17- தூக்குத் தண்டனை விதிப்பதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பி வரும் நிலையில், கொடூர குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்குப் போதுமான தண்டனை விதிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், ஆயுள் தண்டனை விதிக்கப்படும் குற்றவாளிகள், 30 ஆண்டுகளுக்குப் பிறகே முன்கூட்டியே விடுதலை கோர முடியும் என, உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கொடூரமான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு, நீதிமன்றங்கள் ஆயுள் தண்டனை விதிக்கின்றன. ஆயுள் தண்டனை என்பது, ஆயுள் முழுக்க சிறையில் அடைபட்டுக் கிடக்க வேண்டும் என்பது தான்.
ஆனால், சிறை விதிகளின்படி, 14 ஆண்டுகள் சிறை வாசத்தை முடித்தவர்கள், தண்டனைக் குறைப்பு என்ற பெயரில், முன்கூட்டியே விடுதலை பெற உரிமை உள்ளது.

வெட்டுங்கடா… நான் சொல்றேன்..பா.ம.க.வின் கொள்கை முழக்கம்


Viruvirupu
டாக்டர் ராமதாஸ் நிறுவனராக உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கைப் பிரகடனம் செய்த காரணத்துக்காக, அக்கட்சியின் முன்னணி தலைவர் காடுவெட்டி குரு மீது மாமல்லபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அக்கட்சியின் கொள்கைப் பிரகடனம், சாதி உணர்வு, மற்றும் வன்முறையை தூண்டும் வண்ணம் அமைந்துள்ளது என்று போலீஸ் ரிக்கார்ட்களில் பதிவாகியுள்ளது.
மது அருந்தக்கூடாது, புகைப் பிடிக்கும் காட்சிகள் திரைப்பட போஸ்டர்களில் இடம்பெறக்கூடாது என்று மக்களை நல்வழிப்படுத்தும் பாட்டாளி மக்கள் கட்சியின் நட்சத்திரப் பிரமுகர் காடுவெட்டி குரு, “வன்னிய இன பெண்களை கலப்பு திருமணம் செய்பவர்களை வெட்டுங்கடா… வன்னியர் சங்கத் தலைவர் நான் சொல்றேன்…” என்று தமது இன மக்களை நல்வழிப்படுத்தியதே இந்த வழக்குக்கு காரணம்.

விகடனிலிருந்து விலக்கப்பட்டார் மதன்!ஜெ. படம் விவகாரம்

சென்னை: ஆனந்த விகடன் பத்திரிகையிலிருந்து முற்றாக விலக்கப்பட்டார், அதில் பல ஆண்டுகள் கார்ட்டூனிஸ்டாக, கேள்வி- பதில் பகுதி எழுதும் பொறுப்பிலிருந்த மதன்.
ஆனந்த விகடனில் 30 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றியவர் மதன். கார்ட்டூனிஸ்டாக நுழைந்து, எஸ் பாலசுப்பிரமணியன் ஆசிரியராக இருந்த காலகட்டத்தில், விகடன் குழும இதழ்களின் இணை ஆசிரியராக உயர்ந்தவர் மதன்.
அந்த பத்திரிகைகளில் மதன் எழுதிய தொடர்கள், கேள்வி பதில்கள் அவரை கார்ட்டூனிஸ்டிலிருந்து எழுத்தாளராக உயர்த்தின.
ஆனால் ஒரு கட்டத்தில், விகடனுக்கு வெளியிலும் பணியாற்ற முனைந்தார் மதன். அன்றைக்கு விஜய் மல்லையா நிர்வாகத்தில் இருந்த விஜய் டிவியில் இவர் நிகழ்ச்சிகள் செய்தார். மேலும் சினிமா படங்களுக்கும் வசனம் எழுத ஆரம்பித்தார்.

முதல்வர் காலில் அமைச்சர் விழ, விகடனில் இருந்து கீழே விழுந்த மதன்!


Viruvirupu,

விகடனில் இருந்து மதன் நீக்கப்பட்டிருக்கிறார். காரணம், விகடனில் அவர் எழுதிவரும் கேள்வி-பதில் பகுதியில் வெளியிடப்பட்ட ஒரு போட்டோ. காலில் விழுவது தொடர்பாக மதன் எழுதிய ஒரு பதிலுக்கு, முதல்வர் ஜெயலலிதாவின் காலில் அமைச்சர் ஒருவர் விழும் போட்டோ பிரசுரிக்கப் பட்டிருந்தது.
தமது கேள்வி-பதில் பகுதியில் இந்த போட்டோ பிரசுரமானது ஏன் என்று ஜெயா டி.வி.-யின் தலைமை கேட்டால், அதற்கு என்ன பதில் சொல்வது என்று அங்கலாய்த்து, விகடன் நிர்வாகத்துக்கு மதன் ஒரு கடிதம் எழுதியிருந்தார்.
“இதோ, இந்தப் பதிலை ஜெயா டி.வி.யில் கொண்டுபோய்  காட்டுங்கள்” என்று, மதனுக்கான பதிலை சஞ்சிகையிலேயே பிரசுரித்து விட்டது விகடன்.
அந்தப் பதிலில், “இனி மதனின் கேள்வி-பதில், மற்றும் காட்டூன்கள் விகடனில் இருக்காது” என்று எழுதப்பட்டுள்ளது.
அறிவுபூர்வமான விஷயங்களையும் விகடனில் எழுதிவந்த மதன், விகடனுக்கு எழுதிய கடிதம் யாரை மிக மோசமாகச் சித்தரித்திருக்கிறது என்றால், ஜெயா டி.வி. தலைமையைதான். மதனின் வார்த்தைகள், “அவர்கள் (ஜெயா டி.வி) அவ்வளவாக விஷயம் தெரியாத ஆட்கள்” என்பதுபோல சவுண்ட் பண்ணுகிறது.
இதோ, மதனின் கடிதத்தைப் பாருங்கள்:

Female டாக்டரை சீரழித்து அபார்ஷன்.. Male டாக்டர் கைது

நைட் டியூட்டி'யில் காதல்: பெண் டாக்டரை சீரழித்து அபார்ஷன் செய்ய வைத்த டாக்டர் கைது!


சென்னை: சென்னையில் பெண் டாக்டரை சீரழித்த வழக்கில் பிரபல இருதய நோய் மருத்துவமனை டாக்டர் யோகேஷ் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
சென்னை முகப்பேரில் உள்ள பிரபல இருதய நோய் சிகிச்சை மருத்துவமனையில் பணிபுரிபவர் டாக்டர் பிரீத்தி. அவர் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
எனது சொந்த ஊர் கேரள மாநிலம், கொல்லம் ஆகும். எனது தந்தை சவூதி அரேபியாவில் எண்ணெய் கம்பெனி ஒன்றில் அதிகாரியாக வேலை பார்த்தார். நான் எம்.டி. படித்துள்ளேன். அதில் சிறப்பு பயிற்சி பெறுவதற்காக முகப்பேரில் உள்ள பிரபல இருதய நோய் மருத்துவமனையில் கடந்த டிசம்பர் மாதம் சேர்ந்தேன்.

ராமஜெயம் கொலையில் அதிர்ச்சியூட்டும் தகவல்: உண்மையை மறைத்த குடும்பத்தினர்!

 Ex Minister S Family Misled Us Murder Probe Tn Cops
சென்னை: திருச்சியில் முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் தம்பி ராமஜெயம் கொலை தொடர்பாக அவரது குடும்பத்தினரே போலீசாருக்கு பொய்யான தகவல்களைக் கொடுத்திருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.
திருச்சியில் அசைக்க முடியாத நபராக வலம் வந்த ராமஜெயம் கடத்தி கொலை செய்யப்பட்டு ஸ்ரீரங்கம் அருகே வீசப்பட்டிருந்தார். அவரது கொலை தொடர்பாக பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்தும் எந்த ஒரு துப்பும் கிடைக்கவில்லை. திமுகவினரோ இதைவைத்து சி.பி.ஐ. விசாரணை கோரி வருகின்றனர்.
இந்நிலையில் ராமஜெயம் குடும்பத்தினர் கொடுத்த தகவல்கள் பொய்யானவை என்று தமிழக போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பெயர் வெளியிட விரும்பாத உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ராமஜெயத்தின் மனைவி கைப்பட எழுதிக் கொடுத்த புகாரில் ராமஜெயம் திருச்சி தில்லை நகர் பகுதியில் மார்ச் 29ம் தேதி அதிகாலை 5.20 மணிக்கு வீட்டை விட்டு வெளியே போனதாக எழுதிக் கொடுத்திருக்கிறார்.
இதைத் தொடர்ந்து அவரது உடல் கண்டெடுக்கப்பட்ட நேரமான 9 மணி வரை அதாவது 5.20 மணி முதல் 9 மணி வரை தில்லை நகர் பகுதியில் இருந்து உடல் கண்டெடுக்கப்பட்ட இடம் வரையில் என்ன நடந்தது என அலசி ஆராய்ந்துவிட்டோம். ராமஜெயத்தின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் இறந்து 12 மணி நேரத்தில் இருந்து 24 மணி நேரம் ஆகியிருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இத்தகவல் தான் விசாரணையில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

வீரபாண்டியாரின் பூலாவரி வீட்டில் ரெயிடு

தி.மு.க. முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் பூலாவரி வீட்டுக்குள் இந்த நிமிடத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், பொருட்களை தலைகீழாகப் புரட்டித் தேடிக்கொண்டு இருக்கிறார்கள். வருமானத்தை விட சொத்துச் சேர்த்த விவகாரம் இது.
கடந்த தி.மு.க. ஆட்சியில், ஆள் அம்பு சேனை சகிதம் மகா செல்வாக்காக இருந்த வீரபாண்டியார், வருமானத்தை மீறி சொத்து சேர்த்த காலம் போய், சமீபகாலமாக, அவமானத்தையே வருமானமாக பெற்றுக் கொண்டு உள்ளார். இந்த நிலையில்தான், அவர் வீட்டுக்குள் இன்று அதிகாலை பாய்ந்துள்ளது லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் டீம் ஒன்று.

ஆ.ராசாவை விட மாட்டோம்.. ஹி..ஹி.. ‘கை’விட மாட்டோமுங்க

Viruvirupu
வெளியே வந்தும் ஆ.ராசா மகிழ்ச்சியாக இல்லை. தாம் உள்ளே இருந்த 15 மாத காலத்தில், கட்சியில் இருந்து எந்தளவுக்கு விலகிப் போயிருக்கிறோம் என்பதை அவர் தெரிந்து கொண்டு திகைத்துப் போயிருக்கிறார். “ராசாவை கட்சி கைவிடாது” என்ற வார்த்தையை தி.மு.க. தலைவரில் இருந்து, சக அமைச்சர்கள் வரை ஏன் அடிக்கடி சொல்கிறார்கள் என்று இப்போதுதான் புரிந்து கொண்டிருக்கிறார்.
யாரும் கேட்காமல், “கைவிட மாட்டோம்” என்று வலிய சொல்கிறார்கள் என்றால், அரசியலில், “கைவிட்டு விட்டார்கள்” என்று அர்த்தம்.

வெட்டி தள்ளுங்க...: சாதி உணர்வை தூண்டிய காடுவெட்டி குரு மீது மாமல்லபுரம் போலீஸ் வழக்குப்பதிவு

 Case Filed Against Kaduvetti Guru Mamallapuram
மாமல்லபுரம்: வன்னியர் சங்க விழாவில் சாதி உணர்வை தூண்டும் வகையிலும் வன்முறையைத் தூண்டும் வகையிலும் பேசிய பாமக எம்எல்ஏ காடுவெட்டி குரு மீது மாமல்லபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கடந்த சித்ரா பெளர்ணமி தினத்தன்று மாமல்லபுரத்தில் வன்னியர் இளைஞர் பெருவிழா நடந்தது. மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் லட்சக்கணக்கான வன்னியர் சமூக மக்கள் கலந்து கொண்ட அந்த விழாவில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டு பேசினர்.

China எண்ணெய் அகழாய்வைக் கைவிடுவதாக இந்தியா அறிவிப்பு

 India Exits China S Backyard Learn To Play Within Pen
டெல்லி: தென்சீனக் கடற்பரப்பில் வியட்நாமுக்கு சொந்தமான பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவந்த எண்ணெய் அகழாய்வுப் பணிகளை திடீரென நிறுத்துவதாக இந்தியா அறிவித்துள்ளது.
இந்தியாவுக்கும் வியட்நாமுக்கும் இடையே 2006-ம் ஆண்டு தென்சீனக் கடற்பரப்பில் எண்ணெய் அகழாய்வு தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. அப்போதே சீனா கடும் எதிர்ப்புத் தெரிவித்தது.
தென்சீனக் கடற்பரப்பில் இந்தியாவின் பணிகள் தொடர்ந்தும் நடைபெற்று வந்தன. அவ்வப்போது சீனாவும் இந்தியா வெளியேற வலியுறுத்தி வந்தது. இந்தப் பணிகளுக்காக ரூ244 கோடி இந்தியா முதலீடு செய்துள்ளது.

சிரஞ்சிவி மகள் வீட்டு ரெயிடு: அதிர வைக்கும் நிஜமான பின்னணி இதோ!


Viruvirupu



ஆந்திர சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மூத்த மகள் சுஷ்மிதா வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனைகளின் பின்னணியில், சிரஞ்சீவியே இருந்தார் என்று டில்லியில் ஒரு நூல் ஓடுகிறது. அது நிஜமானால், சிரஞ்சிவிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் உள்ள உறவையும் கடந்து எப்படி இந்த ரெயிடு நடைபெற்றது என்ற கேள்விக்கு விடை கிடைக்கும்.
சிரஞ்சிவியின் மூத்த மகள் சுஷ்மிதாவலின் சென்னை, போயஸ் கார்டன் வீட்டு படுக்கையறையில் 35.66 கோடி ரூபாய் பணம் புதைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பூமிக்கடியில் பள்ளம்தோண்டி, 500, 1000 ரூபாய் நோட்டு கட்டுகளாக 35 அட்டைப்பெட்டிகளில் பெட்டிக்கு ஒரு கோடி வீதம் அடுக்கி வைத்திருந்தார்கள். அத்துடன் 4 கோடி மதிப்பிலான கடன் பத்திரங்களும் இருந்தன.

Karnataka BJP எடியூரப்பா வீட்டில் சி.பி.ஐ., ரெய்டு

பெங்களூரு: சுரங்க முறைகேட்டில் சிக்கிய முன்னாள் முதல்வர் எடியூரப்பா, அவரது மருமகன் மற்றும் மகன்கள் நடத்தும் கல்வி அறக்கட்டளை, மோசடி செய்த சுரங்க நிறுவனங்களில், சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று பல மணி நேரம் சோதனை நடத்தினர்.
கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவி வகித்த காலத்தில், (2008 மே 30 முதல் 2011 ஜூலை 31 வரை) முறைகேடாக, ஜிந்தால் குரூப்பின் சவுத் வெஸ்ட் மைனிங் கம்பெனி, சுரங்க உரிமையாளர் பிரவீன் சந்திராவுக்கும், சுரங்கம் நடத்த அனுமதி வழங்கியதாகவும், இதற்காக, எடியூரப்பா மகன்கள் நடத்தும் பிரேரனா கல்வி அறக்கட்டளைக்கு, 10 கோடி ரூபாயை ஜிந்தால் குரூப் நன்கொடையாக வழங்கியது மற்றும் எடியூரப்பா மகன்கள் நடத்தும் பஹத் ஹோம் லிமிடெட் நிறுவனத்துக்கு 2.5 கோடி ரூபாயும், தவளகிரி பிராப்பர்டி டெவலப்பர்ஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு 3.5 கோடி ரூபாயும், பிரவீன் சந்திரா வழங்கியதாகவும்,

ராஜாவை வரவேற்க தி.மு.க., எம்.பி.,க்கள் வராதது ஏன்?

சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்துள்ள ராஜாவுக்கு, தி.மு.க., தொண்டர்கள் உட்பட அவரது ஆதரவாளர்களும் பெரும் வரவேற்பு அளித்ததை காண முடிந்தது. அதே நேரத்தில், சிறையில் இருந்து அவரை வரவேற்க, டி.ஆர்.பாலுவை தவிர தி.மு.க., எம்.பி.,க்கள் எவருமே செல்லவில்லை.

தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ராஜாவுக்கு, பாட்டியாலா கோர்ட் நேற்று முன்தினம் ஜாமின் வழங்கியது. இதை யாருமே எதிர்பார்க்கவில்லை. இன்னும் பல ஆண்டுகளுக்கு நீடிக்கப் போகும் வழக்கு இது என்றும், இப்போதைக்கு ராஜா வெளியில் வர மாட்டார், ஜாமின் கிடைக்காது என்பதே, தி.மு.க., கட்சியின் முக்கியஸ்தர்கள் மத்தியில் கருத்தாக இருந்தது.

யாரும் வரவில்லை: ஆனால், அத்தனையும் தவிடுபொடியாக்கி, எந்த கட்டத்தில் கேட்டால் கிடைக்கும் என்பதை சரியாகக் கணித்து, அதன்படி கடைசி ஆளாக விண்ணப்பித்து ஜாமினை பெற்றுள்ளார் ராஜா.

ஆறுகள், ஏரிகள், வாய்க்கால்கள் உடைத்து விளை நிலங்கள் வெள்ளக்காடாக

கரு.முத்து,கு.ராமகிருஷ்ணன் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் தினந்தோறும் கனமழை பொழிந்த காலமெல்லாம் உண்டு. 1977, 1984, 1994 என்று பல உதாரணங்களைக் காட்ட முடியும். ஆனால், அப்பொழுதெல்லாம் இந்த அளவுக்கு ஒரே நேரத்தில் எல்லா ஆறுகள், ஏரிகள், வாய்க்கால்கள் உடைத்துக்கொண்டு, ஊருக்குள் வெள்ளநீர் புகுந்ததில்லை. விளை நிலங்கள் வெள்ளக்காடாக மாறியது இல்லை.
சமீபகாலமாகத்தான் இத்தனை பேரிழப்புகள்.
புயல்-மழைக்கு வழக்கமாக தங்கள் விளை நிலங்களை மட்டுமே பெரும்பாலும் பறிகொடுக்கும் விவசாயிகள், இந்த முறை தங்களின் வீடுகள், கால்நடைகள் என்று உடைமைகளையும், உயிர்களையும் இழந்தனர். முதல் நாள் வரை பாசத்தோடு பாசனத்துக்கு உதவிக் கொண்டிருந்த அத்தனை ஆறுகளும், சீறிக்கொண்டு விளைச் சலுக்குள்ளும், வீடுகளுக்குள்ளும் பாய... செய்வதறி யாமல் திகைத்து நிற்கிறார்கள் மக்கள். இத்தகைய பேரழிவுக்குக் காரணம்... தூர் வாரும் பணியில் காட்டப்படும் மெத்தனம்... அதில் துள்ளி விளையாடும் ஊழல் ஆகியவைதான் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

Malaysia கல்வியில் இந்தியர்களின் நிலை, படுமோசம்; படு வீழ்ச்சி!

படித்த வேலைகள் இனிமேல் இந்தியர்களுக்கு கிடைக்காது. புதிதாக உருவாக்கப்படும் வேலை வாய்ப்புகளுக்கு போட்டி போடும் அளவுக்கு தகுதி பெறும் மற்ற இனங்களை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை இந்தியர்ளை 56 விழுக்காட்டிற்கு அதிகமாக உள்ளதே அதற்குக் காரணம்.
2000-இல் வெளியிடப்பட்டு மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட புள்ளி விபரங்களின்படி கல்லூரி வரை கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை மலாய்காரர்களிடையே 11.7 விழுக்காடும் சீனர்களிடையே 11.8 விழுக்காடும் இந்தியர்களிடையே 7.5 விழுக்காடுமாக உள்ளது. அதாவது இந்தியர்களைவிட மலாய்காரர்கள் 56 விழுக்காடு அதிகமாகவும் சீனர்கள் 57 விழுக்காடு அதிகமாகவும் உள்ளனர்.
அதாவது கல்லூரியில் கல்வி பயின்ற ஒவ்வொரு இந்தியருக்கும் ஈடாக 5 சீனர்களும் 11 மலாய்காரர்களும் இருக்கிறார்கள்.

புதன், 16 மே, 2012

சம்புகர்களின் கொலை!

கற்றுக் கொள், ஒன்று திரள், போராடு என்பதுதான் உங்களுக்கு எனது இறுதி அறிவுரை. செல்வத்துக்காகவோ அல்லது அதிகாரத்துக்காகவோ இல்லை நம்முடைய போராட்டம், அது சுதந்திரத்துக்கான போராட்டம். அது மனித ஆளுமையை மீட்டெடுப்பதற்கான போராட்டம்”
– பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்

விஜயகாந்துக்கு துணைக்கு ஆள் அனுப்பியவர் ஜெயலலிதா!”

Viruvirupu
“சிவப்பு நிறத்தைக் கண்டால் மாடு மிரளும்” என்று நம்ம கிராமங்களில் சொல்வார்கள். அதைப் பொய் என்று நிரூபித்தவர் யார் தெரியுமா? ராமராஜன்! அவரது திரைப்படங்களில் சிவப்பு, ரோஸ், பிங்க், குருத்துப் பச்சை என பலபல பளபள வர்ணங்களில் சட்டை அணிந்து வருவார். அவருடைய அநேக படங்களில் மாடும் மெயின் ரோலில் நடிக்கும். அப்படியிருந்தும் அந்த மாடுகள் அவரது சட்டையைப் பார்த்தும் மிரண்டதில்லை, அவரைப் பார்த்தும் மிரண்டதில்லை.
ஆனால் இப்போது அவரது பேச்சு, விஜயகாந்தை மிரள வைக்கப் போகிறது.

அரசின் 15 கோடி ரூபா விளம்பரத்தில் விட்டுப்போன ஒரு வாக்கியம்!

அ.தி.மு.க.-வின் பிரசார பீரங்கி நடிகர் ராமராஜன், “பிற மாநிலங்கள் அம்மாவின் திட்டங்களை வியப்புடன் பார்க்கின்றன” என்று நேற்றுதான் மதுரையில் பேசும்போது சொன்னார். அவர் ஒரு தீர்க்கதரிசி. இன்று நிஜமாகவே அனைத்து மாநிலங்களும், அம்மா ஆட்சியை வியப்புடன் பார்க்கின்றன.
காரணம், தமிழகத்தில் அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைவதையொட்டி இந்தியாவிலிருந்து வெளியாகும் அனைத்து முன்னணி நாளிதழ்களிலும் 4 முழுப்பக்க விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த விளம்பரங்களை வெளியிடுவதற்காக வெறும் 15 கோடி ரூபா மட்டுமே செலவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதுவா முக்கியம்? பணம் இன்று வரும், நாளை போகும்.

மாநிலங்களவையில் கனிமொழி பேச ADMK கடும் எதிர்ப்பு

டெல்லி: நாடாளுமன்ற மாநிலங்களவையில் திமுக எம்.பி. கனிமொழி பேசுவதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து அதிமுக எம்.பி மைத்ரேயன் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் பாதிப்புக்குள்ளாகின.
மாநிலங்களவையில் இன்று காலையில் உத்தரப்பிரதேச நெசவாளர்களின் பிரச்சனை குறித்து விவாதிக்க பகுஜன் மற்றும் சமாஜ்வாதி கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்திக் கொண்டே இருந்தனர். பினன்ர் பாஜக உறுப்பினர்களும் அவர்களுடன் இணைந்து கொண்டனர். இதனால் அவை நடவடிக்கைகள் இரண்டு முறை ஒத்திவைக்க நேரிட்டது.
அதன் பினன்ர் அவை கூடியபோது திமுகவின் கனிமொழி, எண்ணுர்- துறைமுகம் சாலை விரிவாக்கப்பணியை அதிமுக அரசு முடக்கியிருப்பது குறித்து பேசினார்.
இதற்கு அதிமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதிமுக எம்.பி. மைத்ரேயன், மாநிலப் பிரச்சனையை நாடாளுமன்றத்தில் எப்படி பேச அனுமதிக்கிறீர்கள் என்று கேள்வி கேட்டபடியே அவையின் மையப்பகுதியில் நின்று முழக்கங்களை எழுப்பினார்.

நாடாளுமன்றத்தில் ஆ.ராசா: கூட்டத் தொடரில் பங்கேற்றார்!

டெல்லி: 2ஜி வழக்கில் ஜாமீனில் வெளியே வந்துள்ள முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா இன்று நாடாளுமன்றம் வந்தார். பட்ஜெட் கூட்டத் தொடரில் கலந்து கொண்டார்.
இந்த வழக்கில் கைதாகி கடந்த 15 மாதங்களாக திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராசாவுக்கு நேற்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
இதன்படி அவர் டெல்லியிலேயே தங்கியிருக்க வேண்டும், பாஸ்போர்ட்டை நீதிமன்றத்திடம் ஒப்படைக்க வேண்டும், தமிழகத்துக்குச் செல்ல நீதிமன்ற அனுமதி பெற வேண்டும், தொலைத் தொடர்பு அலுவலகத்துக்குச் செல்லக் கூடாது, ஆனால் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்கலாம் என்று நீதிபதி நிபந்தனைகள் விதித்திருந்தார்.

நிர்மலா பெரியசாமி டிவி நிகழ்ச்சியில் பங்கேற்ற காதல் ஜோடியை மீட்ட போலீசார்!

Police Try Rescue Lovers Z Tamil Tv Program
ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் பங்கேற்ற காதல் ஜோடியை போலீசார் மீட்க முயற்சி செய்தனர். இதனைக் கண்டித்த தொலைக்காட்சி நிறுவன ஊழியர் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நிர்மலா பெரியசாமி நடத்தும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி பொதுமக்களின் குறை தீர்ப்பு நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சி மக்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பு செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடியும், அவர்களின் பெற்றோர்களும் பங்கேற்றனர். நிர்மலா பெரியசாமி இருவரிடமும் கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தார்.

கிரிக்கெட் சூதாட்டம் ; இந்திய வீரர்கள் 5 பேர் தற்காலிக நீக்கம்

கிரிக்கெட்டில் சூதாட்டம் செய்தது தொடர்பாக இந்திய வீரர்கள் 5 பேர் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் எந்த கிரிக்கெட் போட்டிகளிலும் இவர்கள் விளையாட முடியாது. இது தொடர்பாக ரவி சவானி தலைமையில் விசாரணை நடைபெறுகிறது என்று ஐ.பி.எல். சேர்மன் ராஜீவ் சுக்லா கூறினார். நீக்கம் செய்யப்பட்ட 5 பேரின் பெயர்கள் வருமாறு:& டி.பி. சுதீந்திரா, மாஹ்னிஷ் மிஷ்ரா, அபினவ் பாலி, அமித் யாதவ் மற்றும் ஷலப் ஸ்ரீவத்ஸவா ஆகியோர் ஆவர்.

மதுரை ஆதீனம்: அ.தி.மு.க. கனெக்ஷன்.. தி.மு.க.விலும் கனெக்ஷன்”

நித்தியானந்தா, மதுரை இளைய ஆதீனமாக்கப்பட்ட செயல் கடும் எதிர்ப்பை சம்பாதித்துள்ள நிலையில், தமது அரசியல் தொடர்புகள் பற்றி கோடி காட்டத் துவங்கியுள்ளார் மூத்த ஆதீனம். தமிழகத்தின் இரு பிரதான கட்சிகளுக்கும், தமக்கும் இடையே ‘விட்டகுறை தொட்டகுறை’ உறவுகள் இருப்பதாக கூறுகிறார் அவர்.
நேற்று (செவ்வாய்க்கிழமை) மதுரையில் பத்திரிகையாளர்களை சந்திந்த மூத்த ஆதீனம், “ஆதீனமான பின்னரும் நான் தி.மு.க.-வை ஆதரித்தேன். ஆதீனமாவதற்கு முன் நான் தி.மு.க.-வில் உறுப்பினராக இருந்தேன். இப்போது, அ.தி.மு.க.-வுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறேன்” என்று தமது மல்டி பார்ட்டி ஜிங்கிள் ஒன்றை எடுத்து விட்டார்.
“முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு, நியாயத்துக்கும் உண்மைக்கும் ஆதரவளிக்கும் அரசு” என்று பக்கா அ.தி.மு.க. ஆதரவாளராக காட்டிக்கொண்ட மூத்த ஆதீனம், “நேர்மைக்கும் நியாயத்துக்கம் ஆதரவளிக்கும் அரசு என்பதால், எங்களுக்கும் ஆதரவளிக்கும் அரசாக அ.தி.மு.க. அரசு உள்ளது.

Jeya அரசு ஆதீன சொத்துகளை கைப்பற்றுமா?

 சட்டம் போட்டும், திட்டம் போட்டும் திருடுறது மம்மிக்கு கை வந்த கலை..
 நித்தியானந்தாகிட்ட இருந்து மதுரை ஆதினத்தை மீட்க வேண்டுமே தவிர அரசு அதனை ஏற்று நடத்தினால்...அதன் 2000 கோடி ரூபாய் சொத்துகளும் அபேஸ் ஆகி விடும்...
சென்னை: ஆதீனங்களை குறிவைக்கும் வகையில், சமாதி, பிருந்தாவனம் மற்றும் சமய நோக்கத்துக்காக பேணி வரப்படும் பிற நிறுவனங்களையும், அரசு கட்டுப்படுத்தும் வகையில், சட்ட திருத்த மசோதா, சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்து சமய மற்றும் அறநிலைக் கொடைகள் சட்டத்தை, மேலும் திருத்தும் வகையிலான மசோதாவை, சட்டசபையில் அமைச்சர் ஆனந்தன் நேற்று, தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு உள்ளதாவது: இச்சட்டப்படி, சமய நிறுவனம் என்றால், ஒரு மடம், கோவில் அல்லது திட்டவட்டமான அறநிலைக் கொடை என்று பொருள்படும். சமாதி, பிருந்தாவனம் ஆகிய இடங்கள், இச்சட்டத்தின் வகைமுறையில் உள்ளடங்கவில்லை. புகழ் வாய்ந்த குரு, சாது அல்லது புனிதரின் நினைவைப் போற்றும் வகையில், தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள சமாதி, பிருந்தாவனம் ஆகிய இடங்கள், மக்கள் சமய வழிபாடு செய்வதற்கான இடங்களாக வழிபடப்படுகின்றன.
சட்டத்தின் கீழ் இல்லை: இத்தகைய நிறுவனங்கள், சமய நிறுவனங்கள் என்ற தகுதியைப் பெற்றுள்ளன. இந்நிறுவனங்கள் பெரும் எண்ணிக்கையில் பக்தர்களை ஈர்ப்பதோடு, பெருமளவிலான சொத்துகளையும் சொந்தமாக வைத்துள்ளன.

MP யாக ரேகா பதவியேற்பு: கண்டுகொள்ளாத ஜெயாபச்சன்

புதுடில்லி: ராஜ்யசபா எம்.பி.,யாக, பிரபல இந்தி நடிகை ரேகா பதவியேற்றார். அவருக்கு, துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார். பிரதமர் மன்மோகன், ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் அருண் ஜெட்லி, நடிகர் சிரஞ்சீவி உட்பட பலரும், ரேகாவுக்கு வாழ்த்து தெரிவிக்க, ஜெயாபச்சன் எம்.பி., மட்டும், அவரை கண்டுகொள்ளவே இல்லை.

Mayavathi சிலைகள் ரூ.40 ஆயிரம் கோடி ஊழல்

லக்னோ: உ.பி.,யில் பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சியின்போது, மாயாவதி, கன்ஷிராம் மற்றும் யானை சிலைகளை அமைத்ததில், 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் கிளம்பியுள்ளன. "இது தொடர்பாக எந்த விதமான விசாரணை நடத்துவது என்பது குறித்து, விரைவில் முடிவெடுக்கப்படும்' என, அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

மாவட்ட முன்சீப் பணிக்கான தேர்வில் ஒடுக்கப்பட்ட மக்களின் சாதனை

திராவிடத்தால் வீழ்ந்தோம் என்ற விபீஷணர்கள் சிந்தித்துப் பார்க்கட்டும்!
தலைவர் அறிக்கை

அண்மையில் நடைபெற்ற  மாவட்ட முன்சீப் பணிகளுக்கான தேர்வில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் சிறுபான்மை யினர் சாதனை படைத்தது குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத் துள்ள அறிக்கை வருமாறு:

திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று பார்ப்பன மேலாண்மையாளர்களின் அம்பாக - தெரிந்தோ, தெரியாமலோ மாறிவிட்ட சில திடீர்த் தலைவர்கள், அரசியலில் அடிக்கடி கூடுவிட்டுக் கூடு பாய்ந்து நிலையான வெற்றியைப் பெற முடியாததோடு, பல்வேறு சிக்கல்களில் மாட்டிக் கொண்டு திணறும் சில ஜாதித் தலைவர்கள், திராவிடர் இயக்க சாதனைகள் ஒன்றுமே இல்லை என்பது போல, நன்றி மறந்து உளறித் திரிகின்றனர்!

நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அலையும் விபீஷணர்கள்

செவ்வாய், 15 மே, 2012

வழக்கு எண் 18/9 படத்தின் உண்மைக் கதை


ஏழை விவசாயக் குடும்பம் ஒன்றில் பிறந்தவன் வேலு. இறால் பண்ணைகளின் வரவாலும் நிலத்தடி நீர் குறைந்து போனதாலும் விவசாயம் பெரும் நஷ்டத்தைச் சந்திக்க ஆரம்பிக்கிறது. வேலுவின் பெற்றோர் கந்து வட்டிக்குக் கடன் வாங்கிக் கைவசம் இருந்த ரெண்டு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்கள். கடனைக் கட்டமுடியாமல் போகிறது.
ஒரு நாள் வேலு நண்பர்களுடன் சிறு குன்றின் மேலே விளையாடிக் கொண்டிருக்கும்போது, கந்து வட்டிக்காரர்கள் வெள்ளையும் சொள்ளையுமாக பைக்கில் அவனுடைய வீடு நோக்கிப் போவதைப் பார்க்கிறான். குறுக்கு வழியில் விழுந்தடித்து ஓடுகிறான். அவனுக்கு முன்பாக வீட்டை அடைந்த வட்டிக்காரர்கள், அவனுடைய அம்மாவைத் தாறுமாறாகக் கேள்வி கேட்கிறார்கள். அம்மா முந்தானையால் வாயைப் பொத்தியபடி அழுகிறார். இதைப் பார்க்கும் வேலு ஆத்திரத்தில் கந்து வட்டிக்காரர்களை அடிக்கப் போகிறான். வாட்ட சாட்டமான அந்த நபர்கள் வேலுவை ஒரு கையால் பிடித்துத் தள்ளுகிறார்கள். வேலு சுவரில் மோதி விழுந்து அடிபடுகிறான்.

BCCI : பில்லியனர்கள் கட்டுப்பாட்டில் இந்திய கிரிக்கெட்

Toronto வீதியில், அக்கா புகைக்கும் மர்ஜூவானா!

Viruvirupu
கனடாவின் டொரன்டோ நகரின் வீதிகளில் மர்ஜூவானா (போதைப்பொருள்) புகைக்கு ரசிகர்கள் அட்டகாசமான பேரணி ஒன்றை நடத்தி முடித்துள்ளனர். கடந்த 13 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த பேரணியின், 14-வது ஆண்டு குளோபல் மர்ஜூவானா மார்ச் இது.
இங்குள்ள முக்கிய விஷயம், கனடாவில் மர்ஜூவானா புகைப்பது குற்றம். போதைப்பொருள் என்ற ரீதியில் கருதப்படும் மர்ஜூவானா, குறிப்பிட்ட சில மருத்துவ தேவைகளுக்காக மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றது.
அப்படியிருந்தும், மர்ஜூவானா அபிமானிகள் வருடாவருடம் பேரணி நடத்துவதற்கு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.
யங் வீதி, வெலஸ்லி வீதி சந்திப்பில் துவங்கிய ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். பேரணி டொரன்டோ நகரின் டவுன்டவுன் வழியாக சென்று குவீன்ஸ் பார்க்கை சென்றடைந்தது. ஊர்வலம் முடிந்த நேரத்தில் பலர் ‘உச்சத்தில்’ இருந்தார்கள்!

திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக ஆ. ராசா நீடிப்பார்: டிகேஎஸ். இளங்கோவன்

முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசாவுக்கு எதிரான 2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் இன்று ஜாமீன் கிடைத்துள்ளது. திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆ. ராசா சுமார் 15 மாதங்களுக்குப் பிறகு இன்று ஜாமீனில் வெளிவந்தார்.
 இவரை திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்ட பல்வேறு திமுகவினர் வரவேற்று வாழ்த்து தெரிவித் தனர். நீதிமன்ற உத்தரவு இன்றி ஆ. ராசா தமிழகத்திற்கு செல்லக்கூடாது என்றும் ரூ.30 லட்ச ரூபாய் ஜாமீன் தொகையாக கட்டவேண்டும் என்ற நிபந்தனைகளின் பேரில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
 இவருக்கு ஜாமீன் கிடைத்தது குறித்து திமுக எம்.பி.யான டிகேஎஸ். இளங்கோவன்,
 ’’ஜாமீனிலிருந்து வெளிவந்த ஆ. ராசாவுக்கு திமுக முழுமையாக ஆதரவு தரும். திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக அவர் தொடர்ந்து நீடிப்பார். நீதிமன்றத்தின் உத்தரவை வரவேற்கிறோம். சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் பாதுகாப்பு வேண்டுமா என்பதை ராசாவே முடிவு செய்வார்’’ என்று தெரிவித்துள்ளார்

கேரளாவால் முல்லைப்பெரியாறு அணைக்கு ஆபத்து: தமிழக என்ஜினியர்கள் எச்சரிக்கை

சென்னை:  முல்லைப் பெரியாறு அணையின் பலத்தை அறிய போடப்பட்ட 8 துளைகளை உடனடியாக மூடவில்லை என்றால் அணைக்கு ஆபத்து என்று தமிழ்நாடு பொதுப்பணித் துறை மூத்த பொறியாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
இது குறித்து அந்த சங்கத்தைச் சேர்ந்த துணைத் தலைவர்கள் ஆர்.வி.எஸ். விஜயகுமார், நடராஜன், சட்ட ஆலோசகர் சுப்பிரமணியன், பொதுச் செயலாளர் வீரப்பன், பொருளாளர் செல்வராஜ் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

ராசாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது பெரம்பலூரில் பட்டாசு-இனிப்பு:



 Court Likely Decide On Raja Bail Plea Today

டெல்லி: 2ஜி ஊழல் வழக்கில் கைதான முன்னாள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவுக்கு இன்று ஜாமீன் வழங்கப்பட்டது. இதையடுத்து திகார் சிறையிலிருந்து அவர் விடுதலையாகிறார்.
2ஜி ஊழல் வழக்கில் ஆ.ராசா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இநத் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட திமுக எம்.பி. கனிமொழி உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டு திகாரில் அடைக்கப்பட்டனர். அவர்களில் 12 பேர் ஜாமீனில் விடுதலையாகி வெளியே உள்ளனர்.

போயஸ் கார்டனில் சிரஞ்சீவி மகளின் 40 கோடி ரூபா சிக்கியது எப்படி?

சென்னை போயஸ் கார்டனில் உள்ள வீடு ஒன்றில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் சுமார் 36 கோடி ரூபாய் ரொக்கம், 4 கோடி ரூபாய்க்கு கடன் பத்திரங்கள் கைப்பற்றப்பட்டன.
தமிழகத்தில் நடைபெற்ற இந்த ரெயிடு, ஆந்திராவிலும், டில்லியிலும் சர்ச்சையை கிளப்பியுள்ளதன் காரணம், ரெயிடு செய்யப்பட்ட வீடு, தெலுங்கு நடிகர்-கம்-அரசியல்வாதி சிரஞ்சீவியின் மகள் சுஷ்மிதா மற்றும் மருமகன் விஷ்ணுபிரசாத்தின் வீடு.
ஆந்திராவில் நடிகர் சிரஞ்சீவி தலைமையில் அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பிரஜாராஜ்யம் கட்சி காங்கிரஸ் கட்சியுடன் இணைந்தது. அதையடுத்து இக்கட்சியின் தலைவர் சிரஞ்சீவி காங்கிரஸ் கட்சியை உச்சத்துக்கு கொண்டு வருவதே தமது லட்சியம் என்று மூழங்கிக் கொண்டிருந்தார்.
அப்படியிருந்தும், அவரது மகள் வீட்டில் ஏன் வருமானவரி சோதனை நடைபெற்றது?

ரஞ்சிதாவுக்கு ‘களங்கம்’ ஏற்படுத்திய ஜெயேந்திரர், எழும்பூர் வரக் கடவது!


சமுதாயத்தில் அதி உன்னத நற்பெயருடன் வாழ்ந்துவரும் ரஞ்சிதாவின் பெயருக்கு, ஜெயேந்திரரின் கூற்று தீராத களங்கத்தை ஏற்படுத்தி விட்டது
Viruvirupu
நித்தியானந்தாவுடன் தம்மை தொடர்புபடுத்தி அவதூறு தெரிவித்ததாக நடிகை ரஞ்சிதா தொடர்ந்த வழக்குக்காக காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் நாளை (புதன்கிழமை) எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளது. ஜெயேந்திரரின் கூற்றால், ரஞ்சிதாவுக்கு உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக, அவரது புகாரில் கூறப்பட்டுள்ளது.
காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர், “நடிகை மற்றும் சிஷ்யையான ரஞ்சிதாவை நித்தியானந்தா எப்போதும் அருகிலேயே வைத்துக் கொண்டு சுற்றுகிறார்” என்று கருத்து தெரிவித்திருந்தார்.
மனுவில் உள்ளவை கோர்ட்டுகளில் உபயோகிக்கப்படும் மொழி நடையில் உள்ளதால், அதன் சாராம்சத்தை மட்டும் எமது தமிழில் அர்த்தம் மாறாமல் இதோ, கொடுக்கிறோம். படித்துப் பாருங்கள்:

சாமியார் சாமியார் தியானம், யோகா, ஹீலிங், பிரசங்கம், மெடிடேஷன்


‘யாருடைய சுயபுத்தியும் சொல்லாத எந்த விஷயத்தையும் இந்தச் சாமியார்கள் சொல்லிவிடுவது இல்லை. ஆனால், அவர்களின் தோற்றம் தரும் மாயை, அவர்களைச் சுற்றிப் பின்னப்பட்டு இருக்கும் அற்புத விளம்பர ஜோடனைதான்  இதற்குக் காரணம்’  என்று சொல்லும்    மனநல மருத்துவர் ருத்ரன், ‘இவர்களுக்கான தேவை இந்தச் சமூகத்தில் உள்ளது.  மெகா ஆசிரமம், அதிகார வட்டச் செல்வாக்கு,  சமூக சேவை என்ற போர்வை இவையே அந்தத் தேவையை நிறைவேற்றிக்கொள்ள இவர்கள் தங்களை நிறுவிக்கொள்கிறார்கள்.
இன்று இருக்கும் எல்லா சாமியார்கள் மீதும் ஏதாவது ஒரு சந்தேக ரேகையாவது படர்ந்தே வருகிறது. தன்னிடம் இருந்த சிறுவர்களுடன் ஹோமோ செக்ஸில் ஈடுபட்டார், அதைப் பார்த்த மற்ற பையன்களைக் கொன்றுவிட்டார்… கொலை வழக்கில் இருந்து தப்பிக்க சாமியார் ஆனார்… தனது சகோதரியையே பாலியலுக்குப் பயன்படுத்திக்கொள்கிறார்… பெரிய சாமியாரைக் கொல்ல சின்ன சாமியார் மருந்துவைத்தார்… தனக்குப் பிறந்த பையனையே அடுத்த வாரிசாக ஆக்கி, பிறகு பிரச்னை வந்ததும் போலீஸில் புகார் சொன்னார்… என்று இன்று இருக்கும் கோடீஸ்வர சாமியார்கள் அத்தனை பேர் மீதும் புகார்க் கதைகள் உண்டு.