திண்டுக்கல்: முன்னாள் திமுக அமைச்சர் ஐ.பெரியசாமியின்
திண்டுக்கல் வீடு, அவரது மகள், மகன் வீடுகளிலும், வத்தலக்குண்டில் உள்ள
அவர்களது நூற்பாலையிலும் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் இன்று காலை முதல்
சோதனை நடத்தி வருகின்றனர்.
நேற்று தான் இன்னொரு முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் சென்னை, சேலம், தர்மபுரி வீடுகளில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் சோதனை நடத்தினர்.
இந் நிலையில் இன்று ஐ.பெரியசாமிக்கு சொந்தமான வீடுகளிலும் அவரது உறவினர்கள் வீடுகளிலும் சோதனை நடந்து வருகிறது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல் அசோக்நகரில் உள்ள ஐ.பெரியசாமி வீடு, ரவுண்ட் ரோட்டில் உள்ள பெரியசாமியின் மகள் இந்திராவின் வீடு, பாண்டி நகரில் உள்ள மகன் செந்திலின் வீடு, வத்தலக்குண்டு அருகே உள்ள ஐ.பெரியசாமிக்கு சொந்தமாக நூற்பாலையிலும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
பெரியசாமி இப்போது திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக