புதன், 16 மே, 2012

MP யாக ரேகா பதவியேற்பு: கண்டுகொள்ளாத ஜெயாபச்சன்

புதுடில்லி: ராஜ்யசபா எம்.பி.,யாக, பிரபல இந்தி நடிகை ரேகா பதவியேற்றார். அவருக்கு, துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார். பிரதமர் மன்மோகன், ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் அருண் ஜெட்லி, நடிகர் சிரஞ்சீவி உட்பட பலரும், ரேகாவுக்கு வாழ்த்து தெரிவிக்க, ஜெயாபச்சன் எம்.பி., மட்டும், அவரை கண்டுகொள்ளவே இல்லை.
நேற்று காலை, 10.57 மணிக்கு ராஜ்யசபாவுக்கு வந்த நடிகை ரேகா, கோல்டன் பிரவுன் நிற சேலையும், அதற்கு பொருத்தமாக குதிகால் உயர செருப்பும் அணிந்திருந்தார். பதவியேற்பு நிகழ்ச்சிக்கு ஹமீது அன்சாரி வருவதற்கு சற்று முன்பாக, நடிகை ரேகாவுக்கு, பிரபல பத்திரிகையாளரும், நியமன உறுப்பினருமான எச்.கே.துவா, அவருக்கான இருக்கை குறித்தும், பதவியேற்பு நிகழ்ச்சி குறித்தும் விளக்கிக் கூறினார். பதவியேற்புக்காக அவரது பெயர் வாசிக்கப்பட்டதும், உறுப்பினர்கள் மேஜைகளை தட்டி வாழ்த்து தெரிவித்தனர். ஆங்கிலத்தில் அவர் பதவியேற்றுக் கொண்டார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக