வெள்ளி, 18 மே, 2012

Dial For Books டாப் டென் புத்தகங்கள்

டயல் ஃபார் புக்ஸ் - டாப் டென் புத்தகங்கள்

நியூ ஹொரைஸன் மீடியா தொடங்கியுள்ள ‘டயல் ஃபார் புக்ஸ்’ புத்தகக் கடை தி.நகரில் கடந்த 15 நாள்களாக இயங்கிவருகிறது. இந்தக் காலகட்டத்தில் மிக அதிகமாக விற்ற 10 புத்தகங்கள் என்ற பட்டியலைக் கேட்டேன். அவை கீழே:
கிமு கிபி - மதன்
ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க - ‘நீயா நானா’ கோபிநாத்ஸ்
கீரைகள் - நலம் வெளியீடு
விரத பூஜா விதானம் - லிஃப்கோ
சுபாஷ் - மர்மங்களின் பரமபிதா - மருதன்
சூடிய பூ சூடற்க - நாஞ்சில் நாடன், தமிழினி
முகலாயப் பேரரசில் பெர்னியரின் பயணங்கள், சந்தியா பதிப்பகம்
நாஸ்டர்டாமஸ் சொன்னார் நடந்தது, சிக்ஸ்த் சென்ஸ்


கூண்டு, கார்டன் வெய்ஸ், காலச்சுவடு (இலங்கைப் போர் பற்றிய புத்தகம்)
பொன்னியின் செல்வன், கல்கி
அர்த்தமுள்ள இந்துமதம், கண்ணதாசன்
கிமு கிபி புத்தகம் பற்றி ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ நிகழ்ச்சியில் ஒரு கேள்வி வந்தது. அதிலிருந்தே இந்தப் புத்தகம் மிக அதிகமாக விற்கத் தொடங்கியுள்ளது. ‘நீயா நானா’ கோபிநாத்தின் புத்தகம் தொடர்ந்து அதிகம் விற்பனை ஆகிக்கொண்டிருக்கும் ஒன்று. லிஃப்கோவின் ‘விரத பூஜா விதானம்’ அதிகமாக விற்பதற்குக் காரணம் கடை இருக்கும் இடத்தில் முன்பு லிஃப்கோவின் ஷோரூம் இருந்தது. லிஃப்கோ வாசகர்கள் தொடர்ந்து அங்கு வந்து அனைத்து லிஃப்கோ புத்தகங்களையும் வாங்குகிறார்கள். காலச்சுவடு வெளியீடான ‘கூண்டு’ அதிகம் விற்பதில் பெரும் ஆச்சரியம் ஒன்றுமில்லை. பொன்னியின் செல்வன், அர்த்தமுள்ள இந்துமதம் போன்றவை எவர்கிரீன் புத்தகங்கள். நாஞ்சில் நாடன் புத்தகம் தொடர்ந்து விற்பது ஓர் ஆச்சரியம்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக