Manoj Kumar : எந்த ஒரு அருந்ததிய அமைப்பிற்கும் சமூக வலைதள ஊடக பலத்தை பெரிதாக பார்க்க முடியவில்லை,,,
காரணம் பெரும்பான்மையான அருந்ததிய மக்கள் அரசியல்படுத்தப்படாத மக்களாக இருக்கிறார்கள்,,,
ஏன் என யோசித்தால், அவர்கள் வாழ்வாதாரமே இன்னும் அதளபாதாளத்தில் தான் உள்ளது,,,
ஏன் என யோசித்தால், மற்ற பட்டியல் சாதிகளில் இட ஒதுக்கீட்டை பயன்படுத்தி சில குறிப்பிட்ட சதவீத மக்கள் மேலே வந்தது போல,அருந்ததிய சாதியில் அப்படி மேலே வந்தவர்கள் சதவீத அடிப்படையில் மிக மிக சொர்ப்பமே,,,
(பள்ளிப்படிப்பை தாண்டி, கல்லூரிக்கு செல்பவர்களும் சொர்ப்பமே)
மற்ற பட்டியலின சாதியில் குறிப்பிட்ட சதவீதம் நிலவுடைமை உடையவர்களாக இருப்பது போல, அருந்ததிய மக்கள் இல்லை,
சனி, 9 மார்ச், 2024
அருந்ததிய அமைப்புக்களுக்கு சமூக வலைதள ஊடக பலத்தை ஏன் பார்க்க முடியவில்லை?
கஸ்தூரி : கமல்ஹாசன் திமுகவிடம் விலை போனதில் ஆச்சரியமில்லை! மய்யத்தில் இணைந்தவர்களுக்கு பெரிய அறை
nakkheeran.in : நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில்,
அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.
தமிழ்நாட்டில் தி.மு.க. இந்தியா கூட்டணியிலும் அ.தி.மு.க, அவர்கள் தலைமையில் ஒரு தனி கூட்டணியிலும் தேர்தலை சந்திக்கிறது.
அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் உள்ளிட்ட தி.மு.க முன்னணி நிர்வாகிகளைச் சந்தித்தார்.
பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன்,
ஜாபர் சாதிக் கைது - போதைப்பொருள் கடத்தல் வழக்கில் நடவடிக்கை
சென்னை: ரூ.2000 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய வேதிப் பொருட்களை (சூடோபெட்ரின்), தேங்காய் பவுடர் மற்றும் ஹெல்த் மிக்ஸ் (சத்து மாவு) பாக்கெட்களில் மறைத்து வைத்து,
நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்படுவதாக
எம் பி சீனிவாசன் இசையமைப்பாளர் - மார்க்சியவாதி நினவு நாள் 9 மார்ச் (1988)
Thulakol Soma Natarajan : பொது உடைமைச் சிந்தனையாளர்
மக்களிசைச் செல்வர் எம் பி சீனிவாசன் என்கிற
மானாமதுரை பாலகிருஷ்ணன் சீனிவாசன் நினவு நாள் 9 மார்ச் (1988),
தமிழ், மற்றும் மலையாளத் திரைப்பட இசையமைப்பாளர். பொதுவுடமைக் கட்சியைச்
சேர்ந்த ஒரு மார்க்சியவாதி.
திரையுலகிலும் கம்யூனிஸ்ட் இயக்க வட்டாரத்திலும் அவர் "எம்.பி.எஸ்" என்று
அன்டன் அழைக்கப்பெற்றார்.
எம் பி சீனிவாசன்1925இல் மானாமதுரை பாலகிருஷ்ணன் என்பவருக்கு , 19.9.1925இல் மகனாக பிறந்தார்.
இசைக் கலைஞராகிய தன் தாயிடமே இசையைக் கற்றார்.
கம்யூனிஸ்ட் தலைவராகிய தன் சிறிய தந்தையிடமிருந்து அரசியல் கற்றார்.
வெள்ளி, 8 மார்ச், 2024
திமுக கூட்டணியில் உறுதியான இறுதிவடிவம்! காங்கிரஸுக்கு சறுக்கல்!
tamil.samayam.com - மரிய தங்கராஜ் : திமுக கூட்டணி மிக வலுவாக 2019 முதல் தொடர்ந்து வந்தாலும் 2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தற்போது நடைபெற்று வரும் கூட்டணி பேச்சுவார்த்தை என்பது இறுதிகட்டத்தை எட்டாமல் இழுபறி நீடித்து வருவது அந்த கூட்டணி குறித்த பேச்சுக்களை தமிழக அரசியல் களத்தில் அதிகளவில் ஏற்படுத்தியுள்ளது.
இணக்கமாக செயல்பட்டு வரும் கட்சிகள் அணி மாறுவதற்கும் வாய்ப்பு இருக்கிறதா என்பது வரை பேச்சுக்கள் எழுந்தன. ஆனால் தொகுதிப் பங்கீட்டை முடிக்காத காங்கிரஸ், விசிக, மதிமுக ஆகிய கட்சிகள் கட்டாயம் நாங்கள் திமுக கூட்டணியில் தான் இருப்போம் என்று தெளிவுபடுத்திவிட்டன.
இந்நிலையில் திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை இடங்கள் இந்த முறை ஒதுக்க உள்ளனர் என்பது கிட்டதட்ட உறுதியாகி அந்தந்த கட்சிகளுக்கும் தெரியப்படுத்தப்பட்டு விட்டதாம். ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை தொகுதிகள், உதயசூரியன் எத்தனை தொகுதிகளில் களம் காணப் போகிறது என்பதை பார்க்கலாம்.
திமுக கூட்டணியில் விசிகவிற்கு இரண்டு மக்களவை தொகுதிகள்!
திமுக கூட்டணியில் இரண்டு தனித்தொகுதிகள், ஒரு பொதுத்தொகுதி என மூன்று தொகுதிகள் ஒதுக்கக்கோரி விசிக கோரிக்கை வைத்து வந்தது. இதற்கு திமுக தலைமை சம்மதம் தெரிவிக்காததால், தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது.
இந்தநிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை விசிக தலைவர் திருமாவளவன் இன்று காலை சந்தித்து கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதனைதொடர்ந்து, திமுக கூட்டணியில் விசிகவிற்கு விழுப்புரம், சிதம்பரம் என இரண்டு தனி தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூட்டணி பங்கீடு தொடர்பான ஒப்பந்தம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன் முன்னிலையில் கையெழுத்தானது.
திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு ஒரு மக்களவை தொகுதி ஒதுக்கீடு!
மின்னம்பலம் -Selvam : திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு ஒரு மக்களவை தொகுதி ஒதுக்கீடு!
நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு ஒரு மக்களவை தொகுதி இன்று (மார்ச் 8) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் ஐயூஎம்எல், கொமதேக ஆகிய கட்சிகளுக்கு தலா 1 தொகுதிகளும் சிபிஎம், சிபிஐ கட்சிகளுக்கு தலா 2 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்தநிலையில், காங்கிரஸ், விசிக, மதிமுக கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு எட்டப்படாமல் இழுபறி நீடித்து வந்தது.
மதிமுகவை பொறுத்தவரை ஒரு மக்களவை, ஒரு மாநிலங்களவை என இரண்டு இடங்களை ஒதுக்கக் கோரி திமுக தலைமையிடம் கோரிக்கை வைத்தனர். அதேநேரத்தில், தனிச்சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்பதிலும் உறுதியாக இருந்தனர்.
கனடா 6 இலங்கையர்கள் கொலை ..சந்தேக நபர் இலங்கை மாணவர்! Ottawa ஒரு வீட்டில்
hirunews.lk : கனடாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உட்பட 6 இலங்கையர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
பலியான ஆறு பேரும் கனடாவுக்கு புதிதாக வந்தவர்கள் எனவும் அவர்களில் நான்கு சிறுவர்களும் அடங்குவதாகவும் அந்த நாட்டு காவல்துறையினர் தெரவிக்கின்றனர்.
குறித்த குடும்பத்துடன் வசித்து வந்த இலங்கையைச் சேர்ந்த 19 வயது இளைஞர் ஒருவரே இந்தக் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
ஒட்டாவா புறநகர் பகுதியான பார்ஹேவனில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விடயமறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் சந்தேக நபரை விரைவாக அடையாளம் கண்டு அவரை கைது செய்துள்ளனர்.
குறித்த வீட்டிலிருந்து தாயும் அவரது நான்கு பிள்ளைகளும். அந்த குடும்பத்துடன் வசித்து வந்த ஒருவருமே காவல்துறை அதிகாரிகளால் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
ஒரு சீட்டுக்கு ஒ.கே.சொன்ன வைகோ... 24 மணி நேரத்தில் நடந்தது என்ன? துரை வைகோவிடம் பேசியது யார்?
மின்னம்பலம் - Aara : “மதிமுக நிர்வாகக் குழுவின் அவசரக் கூட்டத்தை நேற்று மார்ச் 6 ஆம் தேதி பகல் அறிவித்தார் வைகோ. திமுக கூட்டணியில் ஒரு சீட்டுதான், அதுவும் உதயசூரியன் தான் என்று திமுக உறுதியாக சொல்லிவிட்ட நிலையில்…
வைகோவின் இந்த நிர்வாகக் குழு அறிவிப்பு திமுகவிலேயே ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது.
வைகோவுக்கு எடப்பாடி தரப்பில் இருந்தும் முன்கூட்டியே தூது விடப்பட்டிருந்த நிலையில், வைகோ தேர்தலுக்கு முந்தையை திடீர் முடிவுகளை மீண்டும் எடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில்தான் மதிமுக மாவட்டச் செயலாளர்களும், நிர்வாகக் குழு உறுப்பினர்களும் சென்னைக்குக் கிளம்பினர். அவர்களில் கணிசமானோரிடம் திமுக மாசெக்கள் தொடர்புகொண்டு, ‘பாத்துக்கங்க… உங்க தலைவர் ஏதாச்சும் டென்ஷன்ல முடிவெடுத்துடப் போறாரு…’ என்று விசாரித்துள்ளனர்.
திமுக மதிமுக, விசிக உடன் இன்று தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்பட வாய்ப்பு
மக்களவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தம் நான்கு கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. காங்கிரஸ், மதிமுக, விசிக கட்சிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
விடுதலை சிறுத்தைகளை கட்சி கடந்த முறை திமுக கூட்டணியில் இரண்டு தொகுதிகளில் நின்றன. தற்போது மூன்று தொகுதிகள் கேட்கிறது. இரண்டு தனித்தொகுதி மற்றும் ஒரு பொதுத்தொகுதி கேட்கிறது. ஆனால் திமுக சார்பில் இரண்டு தனித்தொகுதியை வழங்க தயாராக இருக்கிறது.
வியாழன், 7 மார்ச், 2024
புதுச்சேரி சிறுமி படுகொலை- கைது செய்யப்பட்ட இருவருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்
மாலை மலர் :புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த 9-வயது சிறுமி வன்கொடுமைக்கு ஆளாகி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு கடும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
இச்சம்பவம் தொடர்பாக கைதான இருவர் மீது போக்சோ உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறுமி கொலை வழக்கு தொடர்பாக சிறப்புக் குழு விசாரணையை தொடங்கியுள்ளது.
சிறுமி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருந்த நிலையில், பாதுகாப்பு கருதி இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் மருத்துவ பரிசோதனை முடித்து போலீசார் சிறைக்கு அழைத்து சென்றனர்.
திமுக கூட்டணியில் இருந்து புறப்படுகிறாரா வைகோ? 4 எம்.எல்.ஏ.க்களை மடக்கும் அமைச்சர்கள்!
“திமுக கூட்டணியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஒரே ஒரு மக்களவைத் தொகுதி தான் இந்த முறை ஒதுக்கப்படும் என திமுக தலைமை கடந்த பிப்ரவரி 29ஆம் தேதி நடந்த பேச்சுவார்த்தையில் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
ஆனால் மதிமுக தரப்பில் 2019 இல் ஒரு மக்களவைத் தொகுதியும் ஒரு மாநிலங்களவை இடமும் கொடுத்தது போல இந்த முறையும் எங்களுக்கு வேண்டும்.
அதுவும் கடந்த முறை போட்டியிட்டது போல உதயசூரியன் சின்னத்தில் நாங்கள் போட்டியிட மாட்டோம். சொந்த சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என பேச்சுவார்த்தையில் தெரிவித்தனர்.
பெங்களூர்.. குடிக்க கூட தண்ணீர் இல்லை..! நாளை சென்னைக்கு கூட இதே நிலை ஏற்படலாம்!
கர்நாடக தலைநகர் பெங்களூரில் உள்ள பல ஆழ்துளைக் கிணறுகள் வறண்டு கிடப்பதால் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பெங்களூரில் பல பகுதிகளில் மக்கள் தங்கள் அன்றாட வேலைகளுக்குக் கூட தண்ணீர் டேங்கர்களை நம்பியிருக்கிறார்கள்,
Bangalore water problem is the alert for Chennai as summer is starting in couple of weeks
ஆனால், இப்போது தண்ணீருக்கு அதீத தேவை இருப்பதால் தண்ணீர் டேங்க்கள் இப்போது அதிக தொகையை வசூலிக்கின்றன.
புதுவை சிறுமியின் உள்ளுறுப்பில் தையல்.. பிரேத பரிசோதனையில் பகீர்! பால் பற்கள் கூட விழுந்திருக்காதே!
புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகர் பாடசாலை வீதியைச் சேர்ந்த ஓட்டுநருக்கு 9 வயதில் ஒரு மகள் இருந்தார். அவர் அங்குள்ள பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்தார்.கடந்த 2ஆம் தேதி சிறுமி அவரது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் திடீரென அந்த சிறுமியை காணவில்லை. பெற்றோரும் விளையாடிவிட்டு வீட்டுக்கு வரும் சிறுமியை இன்னும் காணவில்லை என்பதால் அக்கம்பக்கம் தேடி பார்த்துள்ளனர்.
Poacher என்கிற மலையாள வெப் தொடர் .. யானைகளுக்கும் கேரளாவும்
Raja Rajendran : Poacher என்கிற மலையாள வெப் தொடரைப் பார்த்தவர்கள், பார்க்கவிருப்பவர்களும் இந்தக் கட்டுரையை வாசிக்கலாம்.
இந்தத் தொடரில் யானைகள் மீதான பரிவை அதிகம் கொட்டினாலும், கோவில் அடிமைகளாக யானைகளை அதிகம் உபயோகிக்கும் மாநிலம் கேரளாதான்.
நாட்டுக்குள் யானைகளால் அதிக மக்கள் கொல்லப்படும் நாடும் கேரளாதான். (காடு, காட்டின் எல்லையோர மக்கள் கிடையாது)
ஆனால் அதைப்பற்றி அவர்கள் கண்டுகொள்ளவில்லை.
யானைகளை கொல்பவன்களைக் காட்டிலும் அதன் வாழ்நாள் முழுக்க வதைப்பவனும், அதைக் கண்டுகொள்ளாதவனும் எவ்வளவு பெரிய பாவிகள் ??
அட்லீஸ்ட் அழியாமலாவது இருக்கேன்னு இதையெல்லாம் சகிச்சிக்கிட்டு போவதுதான் நல்லது என்று தொடரில் ஒரு வரி வசனம் வருகிறது.
புதன், 6 மார்ச், 2024
நடிகை நிவேதா பெத்துராஜுக்கு உதயநிதி வீடு கொடுத்ததாக சவுக்கு சங்கர் பதிலடி கொடுத்த நடிகை
Cinemapettai - Anamika : Uthayanithi: உதயநிதி தீவிர அரசியலில் இறங்கியதில் இருந்து கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு தான் வருகிறார். அதிலும் சவுக்கு சங்கர் உதயநிதி பிரபல நடிகைக்கு 50 கோடியில் வீடு வாங்கி கொடுத்ததாக கூறியிருந்தது கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
அந்த நடிகை நிவேதா பெத்துராஜ் தான் என்றும் துபாயில் அவருக்காக பிரம்மாண்ட பங்களாவை அவர் வாங்கி கொடுத்ததாக கூறியிருந்தார். அது மட்டுமின்றி கார் ரேசில் ஆர்வம் உள்ள நிவேதாவுக்காக சென்னையில் ஒரு போட்டியை அவர் நடத்தப் போவதாகவும் தெரிவித்திருந்தார்.
தி கடந்த சில நாட்களாகவே பரபரப்பை கிளப்பிய நிலையில் தற்போது நிவேதா அதற்கு நீண்ட விளக்கம் ஒன்று கொடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, இது போன்ற செய்தி முற்றிலும் தவறானது. உண்மை என்ன என்று தெரியாமல் ஊடகங்கள் இப்படிப்பட்ட செய்திகளை வெளியிடுகின்றன.
ஃபேஸ்புக் Facebook, இன்ஸ்டாகிராம் Instagram முடங்கியது!
மின்னம்பலம் - Kavi : மெட்டா நிறுவனத்தின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்கள் செயல்படாமல் முடங்கியுள்ளது.
இன்று இரவு 8 மணி முதல் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், த்ரெட்ஸ் உள்ளிட்ட வலைதளங்கள் திடீரென்று முடங்கி உள்ளன.
இந்த மூன்று சமூக வலைதளங்களும் மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்குகின்றன.
இந்தியா உட்பட உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் இந்த சமூக பக்கங்கள் செயல்படாமல் முடங்கியதோடு, பயனர்களின் ஃபேஸ்புக் கணக்குகளும் லாக் ஆவுட் ஆகியுள்ளன.
இன்ஸ்டாகிராம் பக்கத்தை திறந்தால் ஹேம்பேஜ் தெரியாமல் உள்ளது. ரிஃபெரஸ் செய்தாலும் கூட Couldn’t Refresh feed என தோன்றுகிறது.
செவ்வாய், 5 மார்ச், 2024
புதுச்சேரியில் நிர்மலா சீதாராமன் பா.ஜ.க. வேட்பாளராக களமிறங்கிறார்?
இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன.
இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது.
அந்த வகையில், 543 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களில் முதற்கட்டமாக 195 வேட்பாளர்களின் பெயர்களை பா.ஜ.க. வெளியிட்டிருந்தது.
இலங்கை - இரு பொலிஸ்காரர்களுக்கு மரண தண்டனை – கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி
தமிழ் மிரர் :இலங்கை - இரு பொலிஸ்காரர்களுக்கு மரண தண்டனை – மேல் நீதிமன்றம் அதிரடி
பேலியகொட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (04) இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
2005ஆம் ஆண்டு பேலியகொட பொலிஸாரால் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு, அவரை அடித்துக் கொலை செய்த குற்றச்சாட்டில் இவர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நீண்ட விசாரணையின் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இந்தத் தீர்ப்பை வழங்கினார்
திங்கள், 4 மார்ச், 2024
சாந்தன் அரசியலும் தமிழக சிறப்பு முகாம் தமிழர்களும்
ராதா மனோகர் : தமிழக சிறப்பு முகாம் மக்கள் எந்தக்காலத்திலும் வெளியே வரக்கூடாது என்பதே
இலங்கையில் சாந்தன் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் நோக்கம் .
கிடைக்கும் ஒவ்வொரு துரும்பையும் வைத்து தங்களின் அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்பதுதான் செல்வநாயகத்தின் தமிழ் தேசியம் இவர்களுக்கு கற்று கொடுத்திருக்கிறது!
பின் விளைவுகளை பற்றி எந்த சிந்தனையும் கூடாது.
ஆனால் செல்வநாயகம் நாகநாதன்களுக்கு பின்விளைவுகள் எல்லாம் ஐந்து நட்சத்திர அளவில்தான் அன்றும் இருந்தது இன்றும் இருக்கிறது
அவர்களின் நைலோன் கயிறுகளை விழுங்கிய எந்த மீனும் தப்பவில்லை.
செல்வநாயகத்தின் அரசியலை அடுத்தடுத்த கட்டங்களுக்கு முன்னேடுத்தவர்களின் எச்சங்கள்தான் இன்று சாந்தன் உடலை வைத்து வெறுப்பு அரசியல் கார்னிவேலை முன்னெடுக்கிறது.
நவீன கல்விமுறையின் தந்தை லார்ட் மெக்காலே. Lord Thomas Babington Macaulay! October 25, 1800 - December 28, 1859 (age 59 years)
Vimalaadhithan Mani : கால்டு வெல் போல சங்கிகள் வெறுக்கும் தமிழர்கள் மற்றும் இந்தியர்கள் போற்றும் மற்றுமொரு ஆங்கிலேயர் இன்று இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் நவீன கல்விமுறையின் தந்தை என்று போற்றப்படும் லார்ட் மெக்காலே.
நம் பாட்டியும் கொள்ளுப் பாட்டியும் எப்படி படித்த பெண்களாக முடிந்தது?
அதுவும் பெண்கள் படிக்கவே கூடாது, குருகுலக்கல்வி என்பது பிராமண மாணவர்களுக்கு மட்டும்தான் என்றிருந்த அந்தக் காலத்தில் இந்தப் பெண்கள் எப்படிக் கல்வி பெற்றார்கள்?
கல்வி மறுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த ரெட்டைமலை ஶ்ரீநிவாசன் எப்படி லண்டன் சென்று படித்து இரட்டை பட்டம் வாங்கினார்?
இது போன்ற பல கேள்விகளுக்கு பதில்தான் லார்ட் மெக்காலே என்று அன்புடன் நினைவு கூறப்படும் "லார்ட் தாமஸ் பபிங்க்ட்டன் மெக்காலே "
சுந்தர் பிச்சை பொறுப்புக்கு ஆப்பு... கூகுளில் இருந்து டிஸ்மிஸ்? - பின்னணி என்ன
zeenews.india.com - Sudharsan G : Google CEO Sundar Pichai: உலகத்தின் நம்பர் 1 இணைய தேடுபொறியான கூகுளின் தலைமை செயல் அதிகாரியாக (CEO) பொறுப்பு வகிப்பவர் சுந்தர் பிச்சை.
இவர் உலகளவில் மிகவும் பிரபலமானவர்களில் ஒருவர். குறிப்பாக, இவர் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர் என்பதால் இந்தியாவில் இவர்மீது அதிக கவனம் எப்போதும் இருக்கும்.
கடந்த 2004ஆம் ஆண்டில் இருந்த கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி வரும் சுந்தர், கடந்த 2015ஆம் ஆண்டில் சிஇஓ-ஆக பொறுப்பேற்றார்.
இவர் தலைமையில் கூகுள் நிறுவனம் பல மடங்கு வளர்ச்சி கண்டது எனலாம்.
திமுக கூட்டணியில் சீறும் சிறுத்தைகள்... அன்புமணி வெயிட்டிங்!
minnambalam.com - Aara : திமுக கூட்டணியில் மூன்று இடங்களை கேட்டு திரும்பத் திரும்ப வற்புறுத்துவோம் என்று தெரிவித்திருக்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்.
நேற்று மார்ச் 2 ஆம் தேதி பகல் 12 மணிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியோடு தொகுதி உடன்பாடு செய்வதற்கான பேச்சுவார்த்தைக்கு திமுக தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்ட போதும், அறிவாலயம் செல்லாமல் உயர்நிலைக் குழு கூட்டத்தை கூட்டி விவாதித்தார் திருமாவளவன்
அதற்குப் பிறகு செய்தியாளரிடம் பேசிய அவர், ‘நாங்கள் திமுக கூட்டணியில் தான் உறுதியாக இருக்கிறோம்.
ஆனால், மூன்று தொகுதிகள் எங்களுக்கு வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கிறோம்.
ஞாயிறு, 3 மார்ச், 2024
சாந்தன் ( ராஜிவ் காந்தி + பத்மநாப கொலையாளி) 1990 களில் யாழ் வேலணை புலிகளின் புலனாய்வுத் துறை உள்ளகப் பொறுப்பாளர்
காலம் கடந்தாவது உண்மைகள் வெளிவருவது அவசியம்! வரலாறுதானே பள்ளிக்கூடம்!
பாடம் படித்தால்தான் மனிதர்கள் முன்னேறுவார்கள்!
Mannar Jegan : இறந்த உடுப்பிட்டி சாந்தன் ( ராஜிவ் காந்தி + பத்மநாப கொலையாளி சாந்தன்) 1990 களில் யாழ் தீவகப் பகுதியில் (வேலணை) புலிகளின் புலனாய்வுத் துறை உள்ளகப் பொறுப்பாளராக பதவி வகித்தவர்.
Velamalikithan Arunasalam : மன்னார் ஜெகனை முகநூல் நட்பு நீக்குவதற்கான. பணிகளை ஆரம்பிப்போம்
Mannar Jegan -Velamalikithan Arunasalam உண்மையான தகவல்களை வெளியிடுவோம்...நீங்களும் எங்களைப் பற்றிய சரியான தகவல்களை பண்பாக எழுதுங்கள்.. மக்கள் உண்மைகளை அறிய வேண்டும்...
Pavithra Pavi - மன்னார் ஜெகனா . அது சரி . எல்லோரும் எல்லாத்திலியையும் இருந்தாத்துதகள் தான் . இப்ப சொல்லுங்கள் தாங்கள் ஒண்டுலையும் இருக்கேல்லை என்று ..இது ஒரு பெறிய விஷயம் இல்லை நான் நினைச்சேன் அவர் புத்தி இல்லாதவர்ன்னு . அப்போ நிறய புத்தி இருந்திருக்கு பொன்னியின் செல்வன் வந்தியத்தேவன் படு கள்ளன் என்றால் சாந்தனும் அவரா இருக்கட்டும்
Mannar Jegan - Pavithra Pavi ஒன்றுமே புரியவில்லை
24 உதயசூரியன்கள்... இழுத்துப் பிடிக்கும் ஸ்டாலின்- திமுக கூட்டணியின் நிஜ நிலவரம்!
மின்னம்பலம் - Aara : திமுக கூட்டணியில் சுமூகமாக தொடங்கிய தொகுதிப் பங்கீடு தற்போது மதிமுக, விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் ஆகிய முக்கிய கட்சிகளோடு உண்டான உரசலால் தாமதமாகியுள்ளது.
மதிமுகவுக்கு ஒரே ஒரு மக்களவைத் தொகுதி என்று திமுக தலைமை நிர்ணயம் செய்துள்ளது. ஆனால் மதிமுகவோ எங்களுக்கு 2019 இல் கொடுத்ததைப் போல ஒரு மக்களவைத் தொகுதி, ஒரு மாநிலங்களவை இடம் வேண்டும் என்று வற்புறுத்துகிறது.
மேலும் நாங்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம் எங்களது தனி சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்றும் மதிமுக அறிவாலய வளாகத்திலேயே தெரிவித்து விட்டு சென்றிருக்கிறது.
இதே போல விடுதலை சிறுத்தைகள் கட்சி இரண்டு தனி தொகுதிகளையும், ஒரு பொதுத் தொகுதியையும் கேட்கிறது. ஆனால் திமுகவோ இரண்டு தொகுதிகள் மட்டும் தான் என்பதில் உறுதியாக இருக்கிறது.
தெருவோர பெஞ்சில் சந்திரிகா அம்மையார்.. அலைபேசியில் .. ..
இவர் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிகா பண்டார நாயக்கா !.
ஒரு தேர்தல் பிரசார மேடையில் வை
த்து தற்கொலை குண்டுதாரியின் குறியில் இருந்து ஒரு கண்ணை மட்டும் பறிகொடுத்துவிட்டு உயிர்தப்பினார். அதில் பல முக்கிய தலைவர்கள் உயிரிழந்தனர்.
அதன் பின்பு இரண்டாவது முறையும் ஜனாதிபதியாக வெற்றி பெற்றார்.
இவரது ஆட்சிக்காலத்தில்தான் (1995) இலங்கை வடகிழக்கு மாகாணங்களின் ஐந்து மாவட்ட தலைநகரங்களும் முற்று முழுதாக இலங்கை அரசின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது.
இவரது மகனும் மகளும் இங்கிலாந்தில் டாக்டர்களாக பணியாற்றுகிறார்கள்.
திரும்பத் திரும்ப கேட்போம்... தொகுதி பங்கீடு பற்றி திருமா பேட்டி!
மின்னம்பலம் -Kavi : திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு செல்லாதது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி அளித்தார்.
மக்களவை தேர்தலை முன்னிட்டு தொகுதி பங்கீடுக்காக திமுக – விசிக இடையே முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு இன்று மதியம் 12 மணிக்கு அறிவாலயத்துக்கு வருமாறு திமுக அழைப்பு விடுத்திருந்தது.
ஆனால் விசிக தலைவர் திருமாவளவன் அறிவாலயம் செல்லவில்லை. அசோக் நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் உயர்நிலை குழு கூட்டத்தை கூட்டி கட்சி நிர்வாகிகளுடன் திருமாவளவன் ஆலோசனை நடத்தினார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இன்று 12 மணியளவில் திமுக தேர்தல் குழுவினரோடு தொகுதி பங்கீடு குறித்து பேச இசைவு அளித்திருந்தேன். ஆனால் உயர்நிலை குழு கூட்டம் முடிய தாமதம் ஆனதால், திமுக குழுவில் இடம்பெற்றுள்ள முக்கிய தலைவர் மூத்த அமைச்சரை தொடர்புகொண்டு பேசினேன்.
195 இடங்களுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக- வாரணாசியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டி
மாலை மலர் : பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 195 இடங்களுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இதில், 28 பேர் பெண்கள், பட்டியலினத்தவர்- 27, ஓபிசி- 57 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இதில், வாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டியிடுகிறார்.
பாஜக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் 42 இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசம் மாநிலத்தில் 51 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.