திங்கள், 4 மார்ச், 2024

சாந்தன் அரசியலும் தமிழக சிறப்பு முகாம் தமிழர்களும்

NIA in Special Refugee Camp Officials raid | அகதிகள் சிறப்பு முகாமில்  என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை

ராதா மனோகர்  :  தமிழக சிறப்பு முகாம் மக்கள் எந்தக்காலத்திலும் வெளியே வரக்கூடாது என்பதே  
இலங்கையில் சாந்தன் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் நோக்கம் .
கிடைக்கும் ஒவ்வொரு துரும்பையும் வைத்து தங்களின் அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்பதுதான் செல்வநாயகத்தின் தமிழ் தேசியம் இவர்களுக்கு கற்று கொடுத்திருக்கிறது!
பின் விளைவுகளை பற்றி எந்த சிந்தனையும் கூடாது.
ஆனால் செல்வநாயகம் நாகநாதன்களுக்கு பின்விளைவுகள் எல்லாம் ஐந்து நட்சத்திர அளவில்தான் அன்றும் இருந்தது இன்றும் இருக்கிறது
அவர்களின் நைலோன் கயிறுகளை விழுங்கிய எந்த மீனும் தப்பவில்லை.
செல்வநாயகத்தின் அரசியலை அடுத்தடுத்த கட்டங்களுக்கு முன்னேடுத்தவர்களின் எச்சங்கள்தான் இன்று சாந்தன் உடலை வைத்து வெறுப்பு அரசியல் கார்னிவேலை முன்னெடுக்கிறது.

இவர்களின் உடனடி நோக்கம் தமிழக சிறப்பு முகாமில் இருக்கும் தமிழர்கள் ஒரு போதும் வெளியே வரக்கூடாது என்பதுதான் அவர்களும் வெளியே வந்து விட்டால் பின் எதை வைத்து அரசியல் செய்வது?  
அவர்களின் நோக்கம் நிறைவேறுகிறது!
இலங்கையில் புலி அரசியலை முன்னெடுக்கும் எந்த செயலையும் ஒருபோதும் எந்த நாடும் அனுமதிக்காது.
ஆனால் இலங்கையில் புலி அரசியலை முன்னெடுத்து சில வாக்குகளை பெறலாம்
புலம் பெயர்ந்தோர் சில டாலர்களை சுருட்டலாம்
அந்த நாடகம் நடக்கிறது
முகாம் வாழ் தமிழர்களுக்கு எனது அனுதாபத்தை தெரிவித்து கொள்வதை தவிர வேறு வழி எனக்கு தெரியவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக