புதன், 6 மார்ச், 2024

நடிகை நிவேதா பெத்துராஜுக்கு உதயநிதி வீடு கொடுத்ததாக சவுக்கு சங்கர் பதிலடி கொடுத்த நடிகை

 Cinemapettai - Anamika :  Uthayanithi: உதயநிதி தீவிர அரசியலில் இறங்கியதில் இருந்து கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு தான் வருகிறார். அதிலும் சவுக்கு சங்கர் உதயநிதி பிரபல நடிகைக்கு 50 கோடியில் வீடு வாங்கி கொடுத்ததாக கூறியிருந்தது கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
அந்த நடிகை நிவேதா பெத்துராஜ் தான் என்றும் துபாயில் அவருக்காக பிரம்மாண்ட பங்களாவை அவர் வாங்கி கொடுத்ததாக கூறியிருந்தார். அது மட்டுமின்றி கார் ரேசில் ஆர்வம் உள்ள நிவேதாவுக்காக சென்னையில் ஒரு போட்டியை அவர் நடத்தப் போவதாகவும் தெரிவித்திருந்தார்.
தி கடந்த சில நாட்களாகவே பரபரப்பை கிளப்பிய நிலையில் தற்போது நிவேதா அதற்கு நீண்ட விளக்கம் ஒன்று கொடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, இது போன்ற செய்தி முற்றிலும் தவறானது. உண்மை என்ன என்று தெரியாமல் ஊடகங்கள் இப்படிப்பட்ட செய்திகளை வெளியிடுகின்றன.



நாங்கள் துபாயில் தான் பல வருடங்களாக வசித்து வருகிறோம். அதுவும் வாடகை வீட்டில் தான் நாங்கள் இருக்கிறோம். அதேபோன்று சென்னையில் நடக்கும் போட்டி பற்றி எல்லாம் எனக்கு தெரியாது. நான் இருபது படங்களுக்கு மேல் நடித்திருக்கிறேன்.

அதில் நடிப்பதற்காக நான் யாரிடமும் சென்று வாய்ப்பு கேட்டது கிடையாது. என்னைப் பற்றி வரும் சில செய்திகள் என் குடும்பத்தினரை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருகிறது. இப்பவும் இந்த விஷயத்தை நான் சட்டரீதியாக எடுத்துச் செல்ல விரும்பவில்லை.

ஏனென்றால் பத்திரிகைகள் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார். அவருடைய இந்த பதிவு சவுக்கு சங்கருக்கான தரமான பதிலடியாக இருக்கிறது. இதே போல் தான் திரிஷாவும் தன்னைப் பற்றிய அவதூறு செய்திகளுக்கு பதிலடி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக