வியாழன், 7 மார்ச், 2024

புதுச்சேரி சிறுமி படுகொலை- கைது செய்யப்பட்ட இருவருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்

மாலை மலர் :புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த 9-வயது சிறுமி வன்கொடுமைக்கு ஆளாகி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு கடும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
இச்சம்பவம் தொடர்பாக கைதான இருவர் மீது போக்சோ உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறுமி கொலை வழக்கு தொடர்பாக சிறப்புக் குழு விசாரணையை தொடங்கியுள்ளது.
சிறுமி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருந்த நிலையில், பாதுகாப்பு கருதி இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் மருத்துவ பரிசோதனை முடித்து போலீசார் சிறைக்கு அழைத்து சென்றனர்.


இந்நிலையில், கைது செய்யப்பட்ட இருவருக்கும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

மத்திய சிறை வளாகத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட நீதிபதி இளவரசன், சிறையில் அடைக்கப்பட்ட விவேகானந்தன், கருணாஸ் ஆகியோருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக