ஞாயிறு, 3 மார்ச், 2024

24 உதயசூரியன்கள்... இழுத்துப் பிடிக்கும் ஸ்டாலின்- திமுக கூட்டணியின் நிஜ நிலவரம்!

மின்னம்பலம் - Aara : திமுக கூட்டணியில் சுமூகமாக தொடங்கிய தொகுதிப் பங்கீடு தற்போது மதிமுக, விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் ஆகிய முக்கிய கட்சிகளோடு உண்டான உரசலால் தாமதமாகியுள்ளது.
மதிமுகவுக்கு ஒரே ஒரு மக்களவைத் தொகுதி என்று திமுக தலைமை நிர்ணயம் செய்துள்ளது. ஆனால் மதிமுகவோ எங்களுக்கு 2019 இல் கொடுத்ததைப் போல ஒரு மக்களவைத் தொகுதி, ஒரு மாநிலங்களவை இடம் வேண்டும் என்று வற்புறுத்துகிறது.
மேலும் நாங்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம் எங்களது தனி சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்றும் மதிமுக அறிவாலய வளாகத்திலேயே தெரிவித்து விட்டு சென்றிருக்கிறது.
இதே போல விடுதலை சிறுத்தைகள் கட்சி இரண்டு தனி தொகுதிகளையும், ஒரு பொதுத் தொகுதியையும் கேட்கிறது. ஆனால் திமுகவோ இரண்டு தொகுதிகள் மட்டும் தான் என்பதில் உறுதியாக இருக்கிறது.



தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் திமுகவையடுத்து பிரதான கட்சியாக இருக்கும் காங்கிரசோடும் உடன்பாடு ஏற்படுவதில் தேக்கம் நீடிக்கிறது. இது குறித்து டெல்லி தலைமை திமுக தலைமையோடு பேசிவருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகை கூறியுள்ளார்.
                                                             2019 திமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு

திமுக தரப்பில் இது குறித்தெல்லாம் விசாரித்தோம்.

“எங்களது கூட்டணியில் இருக்கும் ஒவ்வொரு கட்சியும் அவர்கள் 2019 தேர்தலில் போட்டியிட்ட இடங்களை விட அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்று விரும்புகிறார்கள். அது அவர்களின் நியாயமான விருப்பம்தான்.

அதே நேரம் அதேபோன்ற விருப்பம் கூட்டணிக்கு தலைமை தாங்க கூடிய திமுகவுக்கு இருக்கக் கூடாதா?

24 seats for DMK
24 seats for DMK
திமுக கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 இடங்களில் 20 இடங்களில் தான் போட்டியிட்டது.

மீதி 20 இடங்களை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது. அதில் காங்கிரஸ் 10, இந்திய கம்யூனிஸ்ட் 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2, விடுதலைச் சிறுத்தைகள் 2, (இதில்1 பானை, 1 உதயசூரியன்) முஸ்லிம் லீக் 1 என 17 தொகுதிகள் போய்விட்டன.

மீதி இருக்கும் 3 தொகுதிகளிலும் திமுகவின் கூட்டணி கட்சியினர் உதயசூரியன் சின்னத்தில் நின்றார்கள்.

24 seats for DMK
24 seats for DMK
நாமக்கல் தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஈரோட்டில் மதிமுக, பெரம்பலூர் தொகுதியில் பாரிவேந்தர் ஆகியோர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார்கள். இவர்களோடு விசிக சார்பில் ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார். ஆக மொத்தம் 24 தொகுதிகளில் உதயசூரியன் போட்டியிட்டது.

கூட்டணி கட்சிகளுக்கு இருக்கும் அதே விருப்பம் திமுகவுக்கும் இருக்கும். ஆனால் திமுக முரண்டு பிடிக்க விரும்பவில்லை. எனவே இந்த முறை 2024 நாடாளுமன்ற தேர்தலில் 24 இடங்களுக்கும் குறையாத இடங்களில் உதயசூரியன் சின்னம் நிற்க வேண்டும் என்பது திமுகவின் திடமான முடிவு.
அதனால்தான் திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் கூட்டணிப் பேச்சுவார்த்தை குழுவினரிடம் 2019 இருந்த அதே ஒற்றுமை, அதே எண்ணிக்கை, அதே வெற்றி என்ற அடிப்படையில் பேசச் சொல்லியிருக்கிறார்.

24 seats for DMK

இந்த நிலையில்தான் திமுக இப்போதும் இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு கூட்டணி கட்சியினரும் தங்களது சின்னத்தில் நிற்போம் என்று கூறுகிறார்கள். மதிமுக பம்பரம் சின்னத்தை கேட்கிறது. ஆனால் இப்போது வரை மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் கிடைப்பது சட்ட ரீதியாக உறுதியாக வில்லை.
24 seats for DMK
சிறுத்தைகள் கடந்த முறை ஒரு பானை சின்னத்திலும் ஒரு உதயசூரியன் சின்னத்திலும் வென்றது. அதேபோலத்தான் இப்போது நிற்கச் சொல்லுகிறோம்.

எனவே  24 தொகுதிகளுக்கு குறையாமல் உதயசூரியன் போட்டியிடவேண்டும் என்பதுதான் எங்களது உறுதியான நிலைப்பாடு” என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில்.

–வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக