வெள்ளி, 8 மார்ச், 2024

திமுக கூட்டணியில் விசிகவிற்கு இரண்டு மக்களவை தொகுதிகள்!

மின்னம்பலம் -Selvam : திமுக கூட்டணியில் விசிகவிற்கு இரண்டு மக்களவை தொகுதிகள் இன்று (மார்ச் 8) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் இரண்டு தனித்தொகுதிகள், ஒரு பொதுத்தொகுதி என மூன்று தொகுதிகள் ஒதுக்கக்கோரி விசிக கோரிக்கை வைத்து வந்தது. இதற்கு திமுக தலைமை சம்மதம் தெரிவிக்காததால், தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது.
இந்தநிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை விசிக தலைவர் திருமாவளவன் இன்று காலை சந்தித்து கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதனைதொடர்ந்து, திமுக கூட்டணியில் விசிகவிற்கு விழுப்புரம், சிதம்பரம் என இரண்டு தனி தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூட்டணி பங்கீடு தொடர்பான ஒப்பந்தம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன் முன்னிலையில் கையெழுத்தானது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “திமுக கூட்டணியில் விசிகவிற்கு விழுப்புரம் (தனி), சிதம்பரம் (தனி) தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. தனிச்சின்னத்தில் நாங்கள் போட்டியிடுவதில் திமுக உடன்பாடு தெரிவித்திருக்கிறது” என்றார்.

செல்வம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக