tamil.oneindia.com - Vignesh Selvaraj : வட்டியும் முதலுமா திருப்பி கொடுப்போம்.. முதல்வர் ஸ்டாலினை எச்சரித்த அமர் பிரசாத் ரெட்டி: இன்றே கைது!
சென்னை: எங்கள் கொடியை தொட்டால் உங்கள் கொடி இனி தமிழகத்தில் பறக்காது என முதலமைச்சர் ஸ்டாலினை குறிப்பிட்டு சமூக வலைதளத்தில் எச்சரித்த அமர் பிரசாத் ரெட்டி இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை அருகே உள்ள பனையூரில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் வீடு உள்ளது. அவரது வீட்டுக்கு அருகில், சுமார் 50 அடி உயரமுள்ள பாஜக கொடி கம்பத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பாஜகவினர் அந்த 50 அடி உயரத்திலுள்ள பாஜக கொடிக்கம்பத்தை, அண்ணாமலையின் வீட்டு அருகே நட்டு வைத்திருந்தனர்.
சனி, 21 அக்டோபர், 2023
பாஜக - அமர் பிரசாத் ரெட்ட கைது!
ஜஸ்டின் ட்ருடோ : மக்களின் வாழ்க்கையை இந்தியா கடினமாக்குகிறது – Justin Trudeau says India has violated international law
தமிழ் மிரர் : “ஒட்டாவா,இந்தியாவுக்கும், கனடாவுக்கும் இடையே சமீப காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த சம்பவத்தில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டினார். இந்த குற்றச்சாட்டை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது.
இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல் அதிகரித்த நிலையில் கனடாவில் உள்ள இந்திய தூதரை வெளியேற ஜஸ்டின் ட்ரூடோ உத்தவிட்டார்.
இதற்கு பதிலடியாக கனடாவில் உள்ள இந்தியர்கள் கவனமாக இருக்கும்படியும், இனவெறி தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதாகவும் இந்தியா எச்சரித்தது.
சூத்திரன்_ஏன்_அடிமையானான்? சனாதனலீக்ஸ்..
Dhinakaran Chelliah : சனாதனம் அறிவோம்(பாகம் 51) சனாதனலீக்ஸ்
#சூத்திரன்_ஏன்_அடிமையானான்
அவனவனுக்கு விதிக்கப்பட்ட தர்மம் கீழானதாக இருந்தாலும் வேறு தர்மத்தை சிறப்பாகச் செய்யும் திறமை இருந்தாலும் கீழான தன் தர்மத்தை செய்வதே உத்தமம், மற்றவர்களின் தர்மத்தைப் கடைப்பிடிப்பது பாபத்தை உண்டு பண்ணும் என்பதை கீதை ஸ்லோகத்தின் மூலம் “ஆரியமத ஸித்தாந்த ஸங்கிரகம்” நூல் ஆசிரியர் வில்லவரம்பல் குப்புஸ்வாமி அய்யர் அவர்கள் விளக்குகிறார்,
“இமானின் முன்னாள் மனைவி பொய் சொல்றாங்க..” பிரபல நடிகை பரபரப்பு பேச்சு..!
zeenews.india.com - Yuvashree : தமிழ் சினிமாவில் கடந்த சில நாட்களாக ஹாட் டாப்பிக்காக இருப்பது, டி.இமானும் சிவகார்த்திகேயனும்தான்.
சில நாட்களுக்கு முன்னதாக, டி.இமான் ஒரு பிரபல யூடியூப் தளத்திற்கு பேட்டி கொடுத்திருந்தார்.
அதிலிருந்தே ட்விட்டர் எக்ஸ், பேஸ்புக் என அனைத்து சமூக வலைதளங்களிலும் இவர் கொடுத்த பேட்டிதான் ட்ரெண்டிங்கிள் உள்ளது.
இசையமைப்பாளர் டி.இமான், சில வருடங்களுக்கு முன்பு வரை சிவகார்த்திகேயனுடன் இணைந்து அவரது பல படங்களில் அவருடன் சேர்ந்து பணிபுரிந்துள்ளார். மனம் கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட சிவகார்த்திகேயனின் படங்களுக்கு அவர் இசையமைத்து கொடுத்துள்ளார். ஒன்றாக பல படங்களில் பணிபுரிந்ததையும் தாண்டி, இருவரும் குடும்ப நண்பர்களாகவும் இருந்துள்ளனர். டி.இமான் கொடுத்த பேட்டி:
டி.இமான் சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். அதில், சிவகார்த்திகேயனுடன் இணைந்து இப்போதெல்லாம் ஏன் பணிபுரிவதில்லை என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், அவர் தனக்கு பெரிய துரோகம் செய்து விட்டதாகவும் அதை தன்னால் வெளியில் கூற முடியாது என்றும் கூறினார்.
வெள்ளி, 20 அக்டோபர், 2023
கட்டு கட்டாக ஊழல் பணத்துடன் சிக்கிய சார் பதிவாளர் பெத்துலட்சுமி sub registrar Bethulakshmi!
tamil.oneindia.com - Arsath Kan : ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் வெளிப்பட்டினம் சார் பதிவாளர் பெத்துலட்சுமியிடமிருந்து கட்டுக்கட்டாக லஞ்சப்பணத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
வசூல் வேட்டை: ராமநாதபுரம் மாவட்டம் வெளிப்பட்டினம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பொறுப்பு சார் பதிவாளராக இருப்பவர் பெத்துலட்சுமி.
பத்திரப்பதிவு செய்ய வருவோரிடம் பதிவுக்கட்டணம் நீங்கலாக,
அவர்களின் சொத்து மதிப்புக்கேற்ப கூடுதல் தொகையை ஆவண எழுத்தர்கள் சிலர் மூலமும், இடைத்தரகர்கள் மூலமும் வசூல் செய்து வந்திருக்கிறார். இதனால் கடுப்பான பாதிக்கப்பட்டோர் இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்கு தகவல் சொல்லியிருக்கின்றனர்.
DVAC conducting through investigation after confiscating the bribe from sub registrar Bethulakshmi
நடிகை ஜெயப்பிரதா மீதான சிறை தண்டனையை நிறுத்திவைக்க கோரிய மேல் முறையீட்டு மனு தள்ளுபடி-
மாலைமலர் : சென்னை நடிகை ஜெயபிரதா, சென்னையைச் சேர்ந்த ராம் குமார், ராஜ்பாபு ஆகியோருடன் சேர்ந்து, அண்ணா சாலையில் தியேட்டர் நடத்தி வந்தார்.
அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட இ.எஸ்.ஐ., தொகையை, தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தில் செலுத்தவில்லை என புகார் எழுந்தது.
இதுகுறித்து, சென்னை எழும்பூர் கோர்ட்டில் தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் சார்பில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகளை விசாரித்த எழும்பூர் கோர்ட்டு, ஜெயப்பிரதா உள்ளிட்ட 3 பேருக்கும் தலா ஆறு மாதம் சிறை தண்டனை, 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து கடந்த ஆகஸ்டு மாதம் தீர்ப்பளித்தது.
களப்பிரர்கள் காலம் . கி.பி 3 - 6 ஆம் நூற்றாண்டு.விரிவான ஆய்வு கட்டுரையும் பின்னூட்டங்களும்
Marirajan Rajan : களப்பிரர்கள் காலம் . கி.பி 3 - 6 ஆம் நூற்றாண்டு.
கி.பி. 3 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய சங்க காலத்தில் வழிபாடு பற்றிய தரவுகள் ஏராளமாக இருந்தாலும் கட்டுமானக் கோவில்கள் பற்றியத் தரவுகள் பெரிதாக. எதுவும் இல்லை.
கி.பி.6 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு
சம்பந்தரும் நாவுக்கரசரும் ஏராளமான கோவில்களைப் பாடுகிறார்கள்.
தமிழகம் முழுவதும் கோவில்கள்..கோவில்கள்.
சுமார் 1000 கோவில்கள் பற்றிய விரிவான செய்திகள் இவர்களது பாடல்களில் இடம்பெறுகிறது.
சிவன், விஷ்ணு, முருகன் என்று கடவுளர்களின் கோவில்கள் இடம்பெற்றன.
இந்தக் கோவில்கள் எல்லாம் எப்போ கட்டப்பட்டன..? அந்த இடைப்பட்ட காலமான
கி.பி.3 - 6 ஆம் நூற்றாண்டுக்குள் களப்பிரர் காலத்தில்தான் கட்டப்பட்டன.
களப்பிரர்கள் தமிழ் அரசர்கள் தமிழர்கள்.
தமிழி எழுத்திலிருந்து வட்டெழுத்தாக தமிழ் மாறியதும் களப்பிரர் காலம்தான். தமிழ் வளர்ச்சிக்கு மிகப்பெரும் பங்காற்றியவர்கள் களப்பிரர்கள். தேவாரப்பாடல் பெற்ற கட்டுமானக் கோவில்கள் அனைத்தும் களப்பிரர் காலத்தில்தான் எழுந்தன.
இவ்வாறு கூறுபவர் .. தொல்லியல் அறிஞர் Dr.கலைக்கோவன் அவர்கள்.
5 மாநில தேர்தலில் வெற்றி யாருக்கு? தமிழ்நாட்டில் இருந்து ஒரு கருத்துக் கணிப்பு!
மின்னம்பலம் Kavi : தெலங்கானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர் என தேர்தலை எதிர்கொள்ளும் 5 மாநிலங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று கருத்துகணிப்புகளை நடத்தியிருக்கிறது.
INDIAN POLITICAL DEMOCRATIC STRATEGIES என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் ஆகிய 2 மாநிலங்களில் காங்கிரஸுக்கும், ராஜஸ்தானில் பாஜகவுக்கும், தெலங்கானாவில் சந்திரசேகர ராவின் பி.ஆர்.எஸ் கட்சிக்கும், மிசோரத்தில் மிசோ தேசிய முன்னணி கட்சிக்கும் வெற்றி வாய்ப்புகள் இருப்பதாக முடிவுகள் தெரிவிக்கின்றன.
மத்தியப் பிரதேசம்
மத்தியப் பிரதேசத்தை பொறுத்தவரை வரும் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க வாய்ப்பிருப்பதாகவும் மொத்தமுள்ள 230 தொகுதிகளில் 105-122 (45.49 %) இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று இந்த கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
பாஜக 95-110 (41.88 %) இடங்களிலும், பகுஜன் சமாஜ்வாதி கட்சி 2 – 3 (5.73 %), மற்றக் கட்சிகள் 3 – 5 (6.90 %) இடங்களை பிடிக்கும்.
பங்காரு அடிகளார் காலமானார் . 82 வயது
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று மாலை காலமானார்.
1941-ம் ஆண்டு மார்ச் 3-ல் பிறந்த அவர், பக்தர்களால் அம்மா என்று அன்புடன் அழைக்கப்பட்டவர்.
கோவில் மற்றும் ஆன்மீகத்தில் பல சீர்திருத்தங்களை கொண்டு வந்தவர். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் கருவறைக்குள் பெண்கள் சென்று பூஜை செய்யும் வழக்கத்தை கொண்டு வந்தார்.
ஆதிபராசக்தி தொண்டு மருத்துவ கல்வி, கலாசார அறக்கட்டளையின் தலைவராகவும் இருந்தவர்.
வியாழன், 19 அக்டோபர், 2023
செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
ஏற்கனவே சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14ம் தேதி, அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
அவர் நீதிமன்ற காவலில், புழல் சிறையில் உள்ளார். அவர் ஜாமின் கேட்டு தாக்கல் செய்த ஜாமின் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் 2 முறை தள்ளுபடி செய்தது.
காசா மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!
மின்னம்பலம் Kavi : மனிதம் மரத்து போய்விட்டதா?: மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு ஸ்டாலின் கண்டனம்!
காஸா மருத்துவமனை மீதான தாக்குதலுக்குத் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் பாலஸ்தீன் இடையே கடந்த 10 நாட்களுக்கும் மேலாகப் போர் நடந்து வருகிறது.
இந்த போரின் உச்சக்கட்டமாக இன்று (அக்டோபர் 18) இஸ்ரேல் ராணுவம் காஸா நகரில் இருக்கும் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது.
இந்த வான்வழித் தாக்குதலில் Al-Ahli Baptist மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர்.
பலர் படுகாயங்களுடன் அருகில் உள்ள வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான தீர்ப்பு நாளை
இந்த வழக்கின் கடந்த விசாரணை முடிவில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 7 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது. அதன்படி, அக்டோபர் 20ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து சென்னை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
புதன், 18 அக்டோபர், 2023
ராமஜெயம் கொலை வழக்கு: பாமக பிரமுகர்கள் 2 பேரிடம் திடீர் விசாரணை! அமைச்சர் நேரு தம்பி ..
tamil.oneindia.com - Mathivanan Maran : திருச்சி: தமிழ்நாடு அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் படுகொலை வழக்கில் புதிய திருப்பமாக பாமக பிரமுகர்கள் என கூறப்படும் 2 பேரிடம் சிபிசிஐடி போலீசார் திடீரென விசாரணை நடத்தி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மூத்த திமுக தலைவரும் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம். திருச்சி திமுகவின் நேருவின் 'நிழலாக' திமுகவின் 'செயல்' முகமாக இருந்து வந்தவர்.
கடந்த 2012-ம் ஆண்டு திமுக ஆட்சியில் வீட்டில் இருந்து நடைபயிற்சி சென்ற நிலையில் மர்ம நபர்களால் கடத்திச் செல்லப்பட்டார் ராமஜெயம்.
பின்னர் ராமஜெயத்தின் உடல் கொடூரமாக தாக்கப்பட்டு முள்கம்பிகளால் கட்டப்பட்ட நிலையில் திருச்சி- கல்லணை சாலையில் காவிரி ஆற்று படுகையில் கண்டெடுக்கப்பட்டது.
இந்த கொலை சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
காஸா மருத்துவமனை மீது இஸ்ரேல் குண்டு மழை- 500க்கும் அதிகமானோர் உயிரிழப்பு
இந்த துயரத்துக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் பாலஸ்தீன அரசு 3 நாள் துக்கம் கடைபிடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் பயங்கரவாதிகள், இஸ்ரேல் மீது கடந்த 7-ந் தேதி பல்லாயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
கர்நாடகத்தில் வசிப்பவர்கள் கன்னட மொழியை கற்று கொள்ளவேண்டும் . முதல்வர் சித்தராமய்யா அதிரடி
மாலை மலர் ; கா்நாடக கன்னட வளர்ச்சித்துறை சார்பில் கர்நாடகம் பெயர் சூட்டி 50 ஆண்டுகள் ஆவதையொட்டி 'கர்நாடகம்-50' விழாவுக்கான இலச்சினை வௌியிடும் நிகழ்ச்சி பெங்களூரு விதான சவுதாவில் நடைபெற்றது.
இதில் முதுல்-மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு, அந்த இலச்சினையை வெளியிட்டு பேசும்போது கூறியதாவது:-
நாம் அனைவரும் கன்னடர்கள். கர்நாடகத்தில் பல்வேறு மொழிகளை பேசும் மக்கள் உள்ளனர்.
இங்கு வசிப்பவர்கள் ஒவ்வொருவரும் கன்னடம் பேச கற்றுக்கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, உத்தரபிரதேச மாநிலங்களில் அங்குள்ளவர்கள் உள்ளூர் மொழியை கற்கிறார்கள்.
ஆனால் இங்கு இருக்கும் பிற மொழியினர் கன்னடம் கற்காமல் வாழ்க்கையை நடத்த முடியும்.
செவ்வாய், 17 அக்டோபர், 2023
தன்பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் இல்லை: உச்ச நீதிமன்றம்
எனினும் ரேஷன் கார்டுகள், ஓய்வூதியம் உள்ளிட்டவை தொடர்பான உரிமைகளை தன்பாலின தம்பதிகளுக்கு வழங்குவது தொடர்பாக குழு அமைக்க மத்திய அரசு அளித்த பரிந்துரகளை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருக்கிறது.
தன்பாலினத் திருமணத்தைச் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கக் கோரிய மனுக்கள் மீதான தீர்ப்பை இந்திய உச்ச நீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 17) வழங்கியது.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் உட்பட ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, நான்கு தீர்ப்புகளை வழங்கியது.
விருதுநகர் வெடி விபத்து; 14ஐ தொட்ட உயிரிழப்பு
ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள ரெங்காபாளையத்தில் சுந்தரமூர்த்தி என்பவருக்குச் சொந்தமான கனிஷ்கர் என்ற பெயரில் தனியார் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது.
இந்நிலையில், இன்று மதியம் புதிதாகத் தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை சோதனை செய்து வந்தனர். அப்போது வெடி விபத்து ஏற்பட்டது.
அதேபோல் சிவகாசியில் கிச்சநாயக்கன்பட்டி பகுதியிலும் பட்டாசு ஆலை ஒன்றில் வெடிவிபத்து ஏற்பட்டது. இப்படி ஒரே நாளில் இருவேறு இடங்களில் நிகழ்ந்த விபத்தில் 14 பேர் மொத்தம் உயிரிழந்துள்ளனர்.
இந்திய அரசியல்வாதிகள் அயோக்கியர்கள் .. தீர்க்கதரிசி வின்சென்ட் சர்ச்சில்
சாவித்திரி கண்ணன் : உண்மையிலேயே வின்சென்ட் சர்ச்சில் ஒரு தீர்க்கதரிசி தான்:
பிரிட்டிஷ் பிரதமராக இருந்த வின்சென்ட் சர்ச்சில் இந்தியாவிற்கு சுதந்திரம் தருவது பற்றி பேசியதை முதன்முதல் கேள்விப்பட்ட போது,
அவர் மீது எனக்கு அளவில்லா கடும் கோபம் ஏற்பட்டது என்பது உண்மை!
ஆனால், தற்போது நினைத்துப் பார்க்கும் போது, ‘அந்த ஆள் இந்தியாவின் தலைவர்கள் பற்றி அன்றே சரியாக கணித்து, வைத்திருக்கான்…’ என விரக்தியுடன் வியக்கத் தோன்றுகிறது..!
அவர் சொன்னாராம்;
இந்தியாவிற்கு சுதந்திரம் தருவதில் எனக்கு உடன்பாடில்லை. ஏனென்றால், சுதந்திரம் தந்தால் அதிகாரம் ராஸ்கல்ஸ், ரோக்ஸ், உழைக்காமல் வழிபறி செய்பவர்கள் கைகளுக்கு போய்விடும்.. இந்தியத் தலைவர்கள் திறனில்லாதவர்கள், வேத்துப் பேர்வழிகள்!
இவர்கள் இனிமையான நாக்குள்ளவர்கள், ஆனால், அற்பமான இதயம் படைத்தவர்கள்.
வாச்சாத்தி வழக்கு : ஐ.எப்.எஸ் அதிகாரிகள் சரணடைய உத்தரவு!
வாச்சாத்தி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஐ. எப். எஸ் அதிகாரிகள் 6 வாரத்தில் சரணடைய உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தி கிராமத்தில் அரசு அதிகாரிகளால் 18 இளம் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 269 பேரில் 215 பேர் குற்றவாளிகள் என்று கடந்த 2011 ஆம் ஆண்டு தர்மபுரி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இவர்களில் 126 பேர் வனத்துறை அலுவலர்கள், 84 பேர் காவல்துறையினர் மீதமுள்ள ஐந்து பேர் வருவாய்த் துறை ஊழியர்கள்.
MDMK துரை வைகோ : நாடாளுமன்ற தேர்தலில் பம்பரம் சின்னத்தில்தான் போட்டியிடுவோம்
மாலைமலர் : திருச்சி: திருச்சியில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வருகை தந்த துரை வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
காவரி நீர் பங்கீட்டில் கர்நாடக அரசு உரிய நீரை வழங்காததால் தமிழகம் முழுவதும் சுமார் 3 லட்சம் ஏக்கர் குறுவை பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகி உள்ளது. எனவே மத்திய அரசு உரிய இழப்பீட்டை தமிழகத்திற்கு வழங்க வேண்டும்.
அதேபோல் தமிழகத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் என்பது நாளுக்கு நாள் பின்னோக்கி சென்று கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை நம்பி 16 கோடி பெண்கள் பதிவு செய்து அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.
தமிழக காங்கிரசுக்கு புதிய தலைவர் - திருநாவுக்கரசர்
மாலை மலர் : புதுக்கோட்டை திருச்சி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் திருநா வுக்கரசர் ஏற்பாட்டின் பேரில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் புதுக்கோ ட்டை அரசு மகளிர் கலை அறிவியல் கல்லுரியில் நடைபெற்றது.
இதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை திருநாவுக்கரசர் எம்.பி. வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியா ளர்களுக்கு பேட்டியளி த்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-தலைவர் மாற்றப்படலாம்தமிழ்நாட்டிலேயே நம்பர் ஒன் மற்றும் பெரிய கட்சி தி.மு.க. தான், தி.மு.க.வை வளர்க்க காங்கிரஸ் பாடுபடு கிறது என்று அண்ணாமலை கூறுவது அர்த்தமற்ற குற்றச்சாட்டு,மகளிர் உரிமை மாநாடு பெரியார் அண்ணா கால த்தில் இருந்து நடத்தப்பட்டு வருகிறது. இன்று நாட்டில் நடைபெறும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை எடுக்கவும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய் வும் இந்த மாநாடு நடை பெறுகிறது.
திங்கள், 16 அக்டோபர், 2023
ராகுல் காந்தி : “பிரதமர் மோடி மணிப்பூரை விட இஸ்ரேல் மீதுதான் ஆர்வம் காட்டுகிறார்”
நக்கீரன் : பிரதமர் மோடி மணிப்பூரை விட இஸ்ரேல் மீதுதான் ஆர்வம் காட்டுகிறார்” - ராகுல் காந்தி
தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் தேதியை நேற்று (9ம் தேதி) தேர்தல் ஆணையம் அறிவித்தது.
தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பிருந்தே இந்த ஐந்து மாநிலங்களிலுமே அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தங்கள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வந்தனர்.
சில இடங்களில் தேர்தல் தேதி அறிவிப்புக்கும் முன்பே தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மிசோரம் மாநிலத்தில் இன்று (16-10-23) காலை பாதயாத்திரை மேற்கொண்டார்.
அதன் பிறகு காங்கிரஸ் கட்சி சார்பில் ஜஸ்வால் பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கொங்கு முருக பக்தர்களை நம்பவைத்து கூட்டம் கூட்டி மோசடி அரசியல் செய்த இந்து முன்னணி சங்கிகள்
கொங்கு உரிமைக்குரல் "என்ற தளத்தில் வந்த செய்தி இது! முருகா சரணம்
சென்னிமலையை பாதுகாக்க கூடிய கூட்டம் கட்சி சார்பற்ற கூட்டம் ஆனா இதை இந்து மக்களை வைத்து அரசியல் செய்யும் கட்சிகள் நம் ஒற்றுமையை அவர்கள் அரசியலுக்கு பயன்படுத்தி இருக்கார்கள்.
இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் என்றோ, பாஜக ஆர்ப்பாட்டம் என்றோ சொன்னால் ஒரு ஈ, காக்கா கூட வராது என்பதால், முருக பக்தர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் என மக்களை நம்ப வைத்து, கூட்டம் நடக்கும்போது இந்து முன்னணி பெயரை சொல்கிறார்கள், இதற்கு சில கட்சிகளில் உள்ள அப்பாவி நிர்வாகிகளும் பலியாகி உள்ளனர், மேடை கிடைத்தால் போதும் என்று மேடையேறி பேசியும் உள்ளனர்,
இதுவரை வராத கிறிஸ்துவ மிஷனரி இப்போ எங்க இருந்து வந்தது? அவனுகளை வரவைத்தது யார் என்பதை தமிழக அரசு உடனே விசாரிக்க வேண்டும்.
வாழ்க்கை அழகானது ஞானத்தை விட மேலானது Life is precious than enlightenment
Radha Manohar : ஒருவன் அழகான ஒரு குட்டி தீவில் இருந்து அதன் ரம்மியத்தை
ரசித்துகொண்டிருந்தான் .
அவனை சந்திக்கும் பலரும் வேறு ஒரு பெரிய கற்பனைக்கு எட்டாத அற்புத தீவை பற்றி புகழ்ந்து புகழ்ந்து பேசிகொண்டேயிருந்தர்னர் . அதைப்பற்றிய வர்ணனைகளால் நாளடைவில் அவனுக்கும் எப்படியாவது அந்த அற்புத தீவுக்கு செல்ல வேண்டும் என்று தோன்றி நாளடைவில் அது அவனது ஒரே நோக்கம் என்றாகி விட்டது ,
தான் குடியிருக்கும் குட்டி தீவின் எந்த அழகும் தற்போது அவனை கவர்வதில்லை, எப்போ அந்த அற்புத தீவை அடைவோம் என்ற ஒரே சிந்தனையில் காலம் கழிந்தது ,
பல நாள் விடா முயற்சியின் பின்பு அவனது எண்ணம் நிறைவேறக்கூடிய தருணம் வந்தது , அந்த அற்புத தீவுக்கு செல்லும் படகில் அவனும் ஏறிக்கொண்டான் , பலவிதமான கற்பனைகளுடன் இறுதியில் அந்த தீவை அடைந்ததும் விட்டான் ,
தனது நோக்கம் நிறைவேறிய மகிழ்ச்சியில் துள்ளி குதித்து ஆனந்தித்தான் ,
எல்லோரும் குறிப்பிட்டது போலவே அழகான மரங்கள் மலர்கள் சின்ன சின்ன மலை குன்றுகள் ஏராளமான பழவகைகள் கொண்ட அற்புத சோலைகள் எல்லாவற்றிலும் மேலாக அழகான மாந்தர்கள் என்று எல்லோரும் குறிப்பிட்ட நல்ல காட்சிகளையே அவன் கண்டான்
ராஜராஜ சோழன் கோயில் கட்டுனதே இதுக்குதான்! தினகரன் ஞான குருசாமி!
Dhinakaran Chelliah : : இந்த நேர்காணல் ராஜராஜ சோழனைப் பற்றியதாக இருந்தாலும் சனாதன தர்மமே உரையின் மையப் புள்ளியாக இருந்துள்ளது.
தமிழர்களுக்கு சாதி மதம் சமயம் போன்ற எந்த ஒரு அடையாளமும் தேவையில்லை என்பதை ஓரளவிற்கு விளக்கியுள்ளேன்.
மதமும் சாதியும் சமயமும் அதை வைத்து பிழைப்பு நடத்துபவர்களுக்கே தேவைப்படுகிறது. பேரலையில் இந்த நேர்காணல் வெளிவந்து ஒரு வருடமாகிறது,
சனாதனம் பற்றி விசயங்களை நூல்கள் வாயிலாக மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டிய அவசியம் உண்டு,தொடர்வோம்…
அதிர்ச்சியில் K S அழகிரி! முழுநாள் முயற்சி... 3 நிமிட சந்திப்பு! சோனியா ட்ரீட்மென்ட்....
“மேடையில் நடந்தவை செய்திகளாக வெளிவந்துவிட்டன. சோனியா வந்து சென்ற பின்னரும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளின் குமுறல்கள் இன்னும் காங்கிரஸாருக்குள்ளேயே எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன.
சோனியா காந்தி தற்போது நாடாளுமன்ற காங்கிரஸ் குழு தலைவராக இருக்கிறார். அவர் சென்னைக்கு அக்டோபர் 13 இரவு வந்தார், அக்டோபர் 14 முழு நாளும் இங்கே இருந்து அக்டோபர் 15 காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
இந்த இரு இரவு ஒரு பகலில் சோனியா காந்தியை காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் என்ற முறையில் தனிப்பட்ட முறையில் சந்திக்க கே.எஸ்,. அழகிரி கடும் முயற்சி செய்த பிறகே அதுவும் மிகவும் சில நிமிடங்களே சாத்தியமாயிற்று என்பதுதான் தமிழ்நாடு காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் மத்தியில் பேச்சாக இருக்கிறது.
பவா செல்லத்துரை : ஒரு சொல் மட்டுமே.ஒருவனை உயர்த்தும்! அதுவே அவனை வீழ்த்தும்!
Bavachelladurai Bava : எழுத்தாளனிடம் இருக்கும் ஒரே சொத்து, அவனின் ஒரே ஒரு சொல் மட்டுமே. அதுவே அவனை உயர்த்தும்! அதுவே அவனை வீழ்த்தும்!
அப்படி ஒரு சொல்லால்தான் இப்போது நான் வீழ்த்தப்பட்டிருக்கிறேன்.
நண்பர்களின் தொடர் அறிவுறுத்தல்களால் இந்த ஐந்து நாட்களாக அலைக்கழிக்கப்பட்டேன்.
எதுவும் எதிர்வினையாற்றாதே, பேஸ்புக் பார்க்காதே, பதில் ஏதும் எழுதாதே என்று..
அதனாலேயே இன்று வரை இம்மௌனம் காத்தேன்.
தொடர்ந்து பல நண்பர்கள் நான் என்றோ, யாருக்கோ செய்த சில உதவிகளை இந்நேரத்தில் என்னை தேற்றுவதாக சொல்லி என்னை உள்ளுக்குள் சுருங்க வைக்கிறார்கள்
ஞாயிறு, 15 அக்டோபர், 2023
பாலஸ்தீன மக்களை வெளியேற விடாமல் ஹமாஸ் குழு தடுக்கிறது - இஸ்ரேல் ராணுவம் குற்றம்சாட்டு
இஸ்ரேல் பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் ஜோனாதன் கூறுகையில், இந்த போரால் சாமானிய மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். ஆபத்தான பகுதிகளில் இருந்து வெளியேறும் மக்களை ஹமாஸ் தடுப்பது வேதனை அளிப்பதாக கூறிய இஸ்ரேல் ராணுவம்,
120க்கும் அதிகமான சாமான்ய மக்களை பணயக் கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் பிடித்து வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மாளிகையை குத்தகைக்கு விட தீர்மானம்..?
jaffnamuslim.com : ஜனாதிபதி மாளிகையை குத்தகைக்கு விட தீர்மானம்..?
நல்லாட்சி அரசாங்கத்துக்கு முன்னரான 2010 தொடக்கம் 2015 வரையிலான ஆட்சிக் காலத்தில் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்ட யாழ். ஜனாதிபதி மாளிகையை இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி அலுவலகப் பிரதானி சாகல ரத்நாயக்கவின் தலைமையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலொன்றில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
காங்கேசன்துறையில் சுமார் 29 ஏக்கர் நிலப்பரப்பில் 12 ஏக்கரில் குறித்த ஜனாதிபதி மாளிகை அமைக்கப்பட்டுள்ளது.
இலங்கை – இந்திய பயணிகள் கப்பல் சேவை இடை நிறுத்தம் .. போதிய பயணிகள் இல்லையாம்
ada derana : : இந்தியா – இலங்கை இடையேயான செரியாபாணி பயணிகள் கப்பல் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் கப்பல் சேவை வாரத்தில் மூன்று நாட்கள் இயக்கப்படுமென அறிவிப்பு வெளியாகி உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியாவின் நாகப்பட்டினம் துறைமுகம் – காங்கேசன் துறைமுகம் வரை பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை நேற்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் காணொளி காட்சி வாயிலாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்தியா வெல்வது உறுதி.. மகளிர் உரிமை மாநாட்டில் முழங்கிய சோனியா! அடுத்து அவர் சொன்ன முக்கிய விஷயம்
இன்று சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் திமுக மகளிர் அணி சார்பில் சென்னையில் மகளிர் உரிமை மாநாடு நடைபெறுகிறது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடக்கும் இந்த மாநாட்டில் தேசிய அளவில் இருந்து பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த மாநாட்டில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார். மேலும், பிரியங்கா காந்தி, சுப்ரியா சுலே எனப் பல தலைவர்களும் கலந்து கொண்டனர்.
ஹமாஸின் சொர்க்கபுரியாக விளங்கும் சுரங்கப்பாதை.. அப்படி என்ன இருக்கிறது?
இஸ்ரேல் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் ஜோனதன் கான்ரிகஸ், இந்த ரகசிய நிலத்தடி அறைகளின் வலைப்பின்னல் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கட்டப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்று கூறினார். “இருபது ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதி ஹமாஸின் கட்டுப்பாட்டிற்குள் வந்தபோது, அவர்கள் காசா நகரத்திலிருந்து தெற்கில் இருக்கும் கான் யூனிஸ் மற்றும் ராஃபா வரை இந்த சுரங்க கட்டமைப்புகளை அமைத்தனர்,” என்றார் அவர்.
இந்துமத்தின் ஒவ்வொரு மூலையிலும் மறைந்திருப்பது பௌத்த சமண சம்பிரதாயங்கள்தான்!
Radha Manohar : பௌத்த சமணங்கள் மறைந்தனவே என்ற கவலை வேண்டாம்!
இந்துமத்தின் ஒவ்வொரு மூலையிலும் மறைந்திருப்பது
பௌத்த சமண சம்பிரதாயங்கள்தான்!
புகச்சோவ் : 100% true
Subash Winston Thangaraja ; ஆனால் சித்தார்த்த கௌதமர் பிறப்பு, வளர்ப்பால் ஒரு இந்து அல்லவா?
Radha Manohar ; a சித்தார்த்தர் காலத்தில் இந்து மதம் என்ற ஒரு மதமே இருக்கவில்லை
அவர் இந்து என்பது அவாளின் இன்னொரு பொய்
Subash Winston Thangaraja : ஆரியர்கள் கைபர் கணவாயைக் கடந்தபோது கொண்டு வந்த மதம் என்ன?
Radha Manohar : அநேகமாக வெறும் கால் நடைகளோடுதான் வந்தார்கள் வந்த இடத்தில் இருந்த அத்தனை மதங்களையும் கலாச்சாரங்களையும் பெயர் மாற்றி உருமாற்றி தங்களுடையதாக்கினார்கள்
Subash Winston Thangaraja : அதெப்படி? அவர்கள் வழியில் எந்த மதம் இருந்தது? அவர்கள் விரட்டிய தமிழர்கள் இயற்கை வழிபாட்டைக் கடைப் பிடித்தவர்கள் அல்லவா?
Balanathan Balakrishnan : இல்லை அவருடைய முந்தைய தலைமறையான அவருடைய தகப்பனாரின் தலைமுறையிலே புத்தரின் பெயர் உபயோக படுத்தப்பட்டுள்ளது. சாக்கிய புத்தரின் பிறப்பின் சமயத்திலேயே அவர் புத்தர் ஆவர் என்று சொல்லப்பட்டது என்றால் புத்தர் என்பது அதற்கு முன்னே வழக்கில் இருந்த சொல்.