ஞாயிறு, 15 அக்டோபர், 2023

இந்துமத்தின் ஒவ்வொரு மூலையிலும் மறைந்திருப்பது பௌத்த சமண சம்பிரதாயங்கள்தான்!

Radha Manohar :  பௌத்த சமணங்கள் மறைந்தனவே என்ற கவலை வேண்டாம்!
இந்துமத்தின் ஒவ்வொரு மூலையிலும் மறைந்திருப்பது
பௌத்த சமண சம்பிரதாயங்கள்தான்!
புகச்சோவ் : 100% true
Subash Winston Thangaraja ;  ஆனால் சித்தார்த்த கௌதமர் பிறப்பு, வளர்ப்பால் ஒரு இந்து அல்லவா?
Radha Manohar ; a சித்தார்த்தர் காலத்தில் இந்து மதம் என்ற ஒரு மதமே இருக்கவில்லை
அவர் இந்து என்பது அவாளின் இன்னொரு பொய்
Subash Winston Thangaraja :   ஆரியர்கள் கைபர் கணவாயைக் கடந்தபோது கொண்டு வந்த மதம் என்ன?
Radha Manohar  : அநேகமாக வெறும் கால் நடைகளோடுதான் வந்தார்கள் வந்த இடத்தில் இருந்த அத்தனை மதங்களையும் கலாச்சாரங்களையும் பெயர் மாற்றி உருமாற்றி தங்களுடையதாக்கினார்கள்
Subash Winston Thangaraja :    அதெப்படி? அவர்கள் வழியில் எந்த மதம் இருந்தது? அவர்கள் விரட்டிய தமிழர்கள் இயற்கை வழிபாட்டைக் கடைப் பிடித்தவர்கள் அல்லவா?

Balanathan Balakrishnan :    இல்லை அவருடைய முந்தைய தலைமறையான அவருடைய தகப்பனாரின் தலைமுறையிலே புத்தரின் பெயர் உபயோக படுத்தப்பட்டுள்ளது. சாக்கிய புத்தரின் பிறப்பின் சமயத்திலேயே அவர் புத்தர் ஆவர் என்று சொல்லப்பட்டது என்றால் புத்தர் என்பது அதற்கு முன்னே வழக்கில் இருந்த சொல்.

அசோகரின் கல்வெட்டில் 27, 26 ஆம் புத்தரை பற்றி குறிக்க பட்டுள்ளது. குஜராத்தில் உள்ள lothal, ஹரப்பா, mohanjadero போன்ற இடங்களில் உள்ள stupa கள் அசோகரின் காலத்திற்கு முந்தயது மற்றும் அவை 28 ஆம் புத்தரான சாக்கிய புத்தருக்கு முந்தயவர்களை குறிக்கும் stupaகள். இந்தியாவிற்கு வெளியே இருக்கும் பௌத்த நாடுகளில் இந்த வரலாறு சரியாக பின்பற்ற படுகிறது, இந்தியாவில் இருட்டடிப்புச் செய்யபடுகிறது.

Balanathan Balakrishnan :   அசோகரின் தந்தையான சந்திரகுப்தர் காலத்தில் சாதிகள் மற்றும் அடிமைகள் இல்லை. இதை Megasthene தன்னுடைய நூலில் குறிப்பிடுகிறார். பிராமணர்கள் தங்களுக்கு வைத்து கொண்ட சாதி பெயர்களான Trivedi, chaturvedi, Sharma, Banerjee போன்ற surname வைக்கும் பழக்கமே பிரிட்டிஷ்கார்களின் வருகைக்கு பின் தான் அதற்கு முன் surname வழக்கம் கிடையாது அவர்கள் பிராமணர்கள் மற்றவர்கள் சூத்திரர்கள் என்ற நிலை தான் இருந்துள்ளது (இங்கு தலித்துகள் அவர்ணர்கள்). இவ்வாறு என்றால், தமிழன் பெருமையாக சொல்லி கொள்ளும் வெவ்வேறு சாதி சொல்லி குறிப்பிடுவதே ஆங்கிலேயர் காலத்திற்கு பின் தான் என்று ஊக்கிகலாம்

Balanathan Balakrishnan ; கிபி 8 ஆம் நூற்றாண்டு வரையிலுமே பார்ப்பனியம் இந்தியாவில் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை அப்படி குறிப்பிட பட்டிருந்தால் அவை மிகை படுத்தப்பட்டவை இதன் உண்மை தன்மை இன்னும் சில ஆண்டுகளில் வெளியே வந்து விட்டும், ஆரியர்கள் சந்திர குப்த மௌரியர்கள் காலத்தில் இருந்து தான் இந்தியாவில் பேசபடுகிறார்கள். அசோகரின் காலத்தில் சில மாகாணங்களை கவனிக்கும் பொறுப்பில் கொண்டு வர படுகிறார்கள். ஆரியர்கள் சொல்லும் மௌரிய அரசன் Brihadrathaநின் கொலையே அசோகவதன என்ற சமஸ்கிருத நூல் இது ஏறக்குறைய கிபி 12 நுற்றாண்டு நூலின் மூலம் அறிய படிக்கிறது. இதுவும் உண்மையாக இருக்க வாய்ப்பில்லை. இந்தியா முழுக்க பௌத்தம் ஆட்சியில் இருக்கும் போது Brihadratha மன்னனை அவனது சேனாதிபதி கொன்றான் என்பதே மிகை படுத்தப்பட்டது. சமஸ்கிரதத்தின் முதல் கல்வெட்டு கிபி 150 ஆம் ஆண்டு தான் இந்திய துணை கண்டத்தில் கிடைக்க பெறுகிறது. பிராமணர்கள் சமஸ்கிருத்தை தங்கள் தாய் மொழி போல் சொல்லி கொள்பவர்கள் ஆதால் அவர்களின் வரலாறு கல்வெட்டுகளின் படி கிபி 150 க்கு பிறகு. இந்தியாவில் கிடைக்கும் நூல்களை நாம் நம்ம முடியாது ஏன் எனில் அவை பிராமணர்களால் மாற்ற பட்டதாகவே இருக்கும். கல்வெட்டுகள் மட்டுமே நம்ப தகுந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக