செவ்வாய், 17 அக்டோபர், 2023

விருதுநகர் வெடி விபத்து; 14ஐ தொட்ட உயிரிழப்பு

நக்கீரன் : விருதுநகர் மாவட்டத்தில் இருவேறு இடங்களில் ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் மொத்தம் 14 பேர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள ரெங்காபாளையத்தில் சுந்தரமூர்த்தி என்பவருக்குச் சொந்தமான கனிஷ்கர் என்ற பெயரில் தனியார் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது.
இந்நிலையில், இன்று மதியம் புதிதாகத் தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை சோதனை செய்து வந்தனர். அப்போது வெடி விபத்து ஏற்பட்டது.
அதேபோல் சிவகாசியில் கிச்சநாயக்கன்பட்டி பகுதியிலும் பட்டாசு ஆலை ஒன்றில் வெடிவிபத்து ஏற்பட்டது. இப்படி ஒரே நாளில் இருவேறு இடங்களில் நிகழ்ந்த விபத்தில் 14 பேர் மொத்தம் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் அழகாபுரியைச் சேர்ந்த அனிதா(40), தங்கமலை (33), பஞ்சவர்ணம் (35), மகாதேவி (50), தமிழ்செல்வி (55), பாக்கியம் (35), பாலமுருகன் (30), முனீஸ்வரி (32), குருவம்மாள் (55) ஆகியோரின் பெயர்கள் மட்டும் அடையாளம் காணப்பட்டுள்ளது. விபத்து நிகழ்ந்த இடங்களில் மாவட்ட எஸ்.பி ஸ்ரீனிவாச பெருமாள் ஆய்வு மேற்கொண்டுள்ளார். ரெங்கம்பாளையத்தில் மதுரை சரக டிஐஜி ரம்யபாரதி நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக