ஞாயிறு, 15 அக்டோபர், 2023

பாலஸ்தீன மக்களை வெளியேற விடாமல் ஹமாஸ் குழு தடுக்கிறது - இஸ்ரேல் ராணுவம் குற்றம்சாட்டு

tamil.news18.com : பாலஸ்தீன மக்களை வெளியேற விடாமல் ஹமாஸ் தடுத்து வருவதாக இஸ்ரேல் ராணுவம் குற்றம்சாட்டியுள்ளது.
இஸ்ரேல் பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் ஜோனாதன் கூறுகையில், இந்த போரால் சாமானிய மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். ஆபத்தான பகுதிகளில் இருந்து வெளியேறும் மக்களை ஹமாஸ் தடுப்பது வேதனை அளிப்பதாக கூறிய இஸ்ரேல் ராணுவம்,
120க்கும் அதிகமான சாமான்ய மக்களை பணயக் கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் பிடித்து வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இதனிடையே, இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீனியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பாலஸ்தீனியர்கள் வடக்கே பெய்ட் ஹனூனில் இருந்து தெற்கே கான் யூனிஸ் வரை செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பான பாதையில் பாலஸ்தீனியர்கள் பயணிக்கலாம் என அங்கு தாக்குதல் நடத்தப்படாது எனத் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக