சனி, 21 அக்டோபர், 2023

சூத்திரன்_ஏன்_அடிமையானான்? சனாதனலீக்ஸ்..

May be an image of 1 person and text that says 'முனிகிரேஷ்டர்களே சூத்திரர்களுக்கு இன்னது புஜிக்கத்தக்கது, இன்னது புஜிக்கத்தகாதது, இது குடிக்கத்தக்கது, இது குடிக்கத்தகாதது என்ற நியமமில்லாததனாலே சூத்திரன் ஸாது வென்று சொன்னேன் -வில்லவரம்பல் குப்புஸ்வாமி அய்யர் அவர்கள் இயற்றிய "ஆரியமத ஸித்தாந்த ஸங்கிரகம்' நூல் 1902 பதிப்பு "பிராம்ணனா பிறந்தா கஷ்டம்டா, .."ஆவே பிற.. பிராம்ணனா பிறந்தா நிறைய ஆச்சாரத்தைக் கடைப்பிடிக்கனும்.. நிறைய பிரச்சனை.. அதனால ஆவே பிற.நீ பாபம் பண்ணலாம்னு உனக்கு அருகதை இருக்கு.. நீ குடிக்கலாம், கொள்ளை அடிக்கலாம்.." என சமீபத்தில் உபன்யாசகர் ஒருவர் பேசியது நினைவிருக்கலாம். THMBRANS சனாதனலிகஸ்!'

Dhinakaran Chelliah    :  சனாதனம் அறிவோம்(பாகம் 51)   சனாதனலீக்ஸ்
#சூத்திரன்_ஏன்_அடிமையானான்
அவனவனுக்கு விதிக்கப்பட்ட  தர்மம் கீழானதாக இருந்தாலும் வேறு தர்மத்தை சிறப்பாகச் செய்யும் திறமை இருந்தாலும் கீழான தன் தர்மத்தை செய்வதே உத்தமம், மற்றவர்களின் தர்மத்தைப் கடைப்பிடிப்பது பாபத்தை உண்டு பண்ணும் என்பதை கீதை ஸ்லோகத்தின் மூலம் “ஆரியமத ஸித்தாந்த ஸங்கிரகம்” நூல் ஆசிரியர் வில்லவரம்பல் குப்புஸ்வாமி அய்யர் அவர்கள் விளக்குகிறார்,


ஸ்ரீ பகவத்கீதை - அத்-கஅ-ல், “அந்தந்த வர்ணத்தாருக்கு விதித்திருக்கிற கருமத்திற் சிரத்தையுடைய மனிதன் ஞான யோக்கியதையை யடைகிறான். தன்னுடைய தருமமானது குணமற்றதென்று காணப்பட்டாலுங் கிரமமாய் அநுஷ்டிக்கப்பட்ட பிறருடைய தருமத்தைக் காட்டிலுஞ் சிரேஷ்டமானது. தனக்கு இயல்பாயிருக்கிற கருமத்தைச் செய்கிறவன் பாபத்தையடையமாட்டான்."
மஹாபாரதம், ஆரண்ணியபருவம்-அத்-கஎக-ல், : "வேடனாகிய தருமவியாதன் சொல்வது. பிதா பிதாமஹ்னிடத்திலிருந்து வந்ததாகிய இந்த மஹத்தான கருமமானது. என் குலத்திற்கு யோக்கியமானது. (அப்படிப்பட்ட) என்னுடைய சுவதருமத்திலேயே இருந்துகொண்டிருக்கிற என் விஷயத்தில் ஒ ! பிராம்மணோத்தமா ! கோபிக்கலாகாது. ஆதி காலத்திற் பிரும்மாவினாலேற்படுத்தப்பட்ட விதியை அனுஸரித்து ஒ! பிராம்மணோத்தமா ! எனக்கு இயல்பான கருமத்தை இரக்ஷித்துக்கொண்டிருக்கிறேன்.''
மேற்கண்ட தருமவியாதனென்கிற வேடன்
மஹாகா ஞாநியாயிருந்தும் மாம்ஸங்களை விற்றுக் கொண்டிருந்தபோது அவனை ஸந்தித்தப் பிராம்மணன் "ஞாநியான உனக்கு இத்தொழில் யோக்கியமாகுமா? நிந்திக்கத்தக்க தொழிலல்லவா?” என்றப் பிராம்மணனுடைய வாக்கியத்திற் குத்தரமாக பரம்பரையாய் வந்ததும் எனக்கு சுவதருமமானதுமாகிய இந்த கருமத்தை பிரும்மாவினாலேற்படுத்தப்பட்ட விதியை யநுஸரித்துச் செய்வது என் கடமையென்று
சொன்னதனாற் தன்னுடைய சுவதருமமானது எவ்வளவு நிந்தியமானதாயிருந்தாலும் அதை விடக்கூடாதென்று சிரேஷ்டமான ஞாநியாகிய தருமவியாதனே அநுஷ்டித்தானென்றால், மற்ற வர்ணத்தார் விஷயத்திற் சொல்லவும் வேண்டுமோ.எந்த வர்ணத்தானானாலும்
புத்திர மித்திர களத்திராதிகளில் அபிமாநம் அற்றவனாய் உலக விஷயங்களில் விரக்தியையடைந்து தபஸ் அல்லது யோகத்தில் நிலையாயிருக்கிறவனுக்கிந்த வர்ணாசிரம
தருமங்களை யநுஷ்டிக்க வேண்டுமென்பது விதியல்ல. அப்படிப்பட்டவன் தவிர மற்ற கிரஹஸ்தாசிரமத்திலிருக்கிற பிரும்ம, க்ஷத்திரிய, வைசிய, சூத்திரர்கள் அவரவர்களுக்கு
ஏற்பட்டிருக்கிற வர்ணாசிரம தருமங்களை அவசியம் அநுஷ்டிக்க வேண்டும். அநுஷ்டிக்காமல் விட்டு விடுவானானாலவன் துர்கெதியையடை வான்.
சூத்திரர்கள் மேலான வர்ணத்தாரை சுசுரூஷை
முதலியவைகளினாற் பூஜித்து வருவார்களானால் அவர்களுக்குத் தம் கெதி யுண்டாகுமென்று வேதவியாஸ மஹரிஷி சொல்லியிருக்கிறார். ஒருக்காலத்திற் சில மஹரிஷிகள் வேதவியாஸரிடத் திலிருந்து ஸந்தேகங் கேட்டறிய, அவரிருக்குமிடஞ் சென்றார்கள். அக்காலத்தில் வேதவியாஸர் கங்கா நதியில் ஸ்நாநஞ்
செய்துகொண்டிருந்தார். மஹரிஷிகள் வந்திருக்கிற காரணத்தைக் ஞாநதிருஷ்டியினாலறிந்த வேதவியாஸர் அந்த ரிஷிகளுடைய சந்தேகந் தீரும்படி அடியிற்கண்ட வாக்கியங்களைச் சொல்லிக்கொண்டு மூன்று தடவை ஸ்நாநஞ் செய்தார். இவ்விஷ யங்களை யுரைக்கிற விஷ்ணுபுராண வாக்கியங்களைக்கேள்.
விஷ்ணுபுராணம் - அம்சம்-சு-அத்-உ-ல், “( ரிஷிகள் கங்காநதிக்கரையில் வந்த) பிறகு முனிகள் கேட்கும்படியாய், "கலிஸாது" (யோக்கியன் அல்லது நல்லவன்) ஸாது வென்றிப்படிச் சொல்லி அந்த வியாஸரானவர் மறுபடி முழுகியெழுந்து "சூத்திரன் ஸாது" என்றும் "புண்ணியவான்" என்றுஞ் சொன்னார். அந்த மஹா முனியானவர் மறுபடி முழுகியெழுந்து "ஸ்திரீகள் ஸாது, புண்ணியவதிகள், அவர் களைவிட எவன் புண்ணியசாலியாயிருக்கிறான்” என்றார். ஸ்நாநஞ் செய்த பிறகு தன்னுடைய கருமங்களைக் கிரமமாய் முடித்துக்கொண்டு வருகிற மஹானான (பராசர மஹருஷியாகிய) என் குமாரனைப் பார்த்தெழுந்திருந்து வந்தநஞ் செய்தார்கள். அம்முனிகளுக்கு ஸத்தியவதீ குமாரராகிய வியாசர் ஆஸநங்களைக் கொடுத்து நீங்களெதற்காக வந்தீர் களென்று கேட்டார். (அதற்கந்த முனிகள்) தங்களிடத்தில் ஸந்தேகம் கேட்கும் பொருட்டு வந்தோம். அதிருக்கட்டும், 66 தாங்கள் கலி ஸாது என்றும் சூத்திரன் ஸாது என்றும் ஸ்திரீகள் ஸாதுக்களென்றும் அவர்களெல்லோரும் புண்ணிய
வான்களென்றும் அடிக்கடி சொன்னீர்களே அதன் தாத்பரியத்தை முந்தியறிந்து கொள்ள விரும்புகிறோம். அது இரஹஸியமல்லாத பக்ஷத்தில் அதையெங்களுக்குச் சொல்ல விரும்புகிறோம். பிறகு நாங்கள் உத்தேசித்துவந்த காரியத்தைக் கேட்கிறோம். இப்படிச் சொன்னதைக்கேட்ட வியாஸர் புன்சிரிப்புடன் சொன்னதாவது - ஒ ! முனிசிரேஷ்டர்களே! ஸாது ஸாது வென்று எதனாற் சொன்னேனோ அதைக்கேளுங்கள். கிருத யுகத்திற் பத்து வருஷங்களினால் எது சித்தியாகுமோ அது திரேதாயுகத்தில் ஒரு வருஷத்தினாற் சித்தியாகும். அதுவே த்துவாபரயுகத்தில் ஒருமாதத்தினாற் சித்தியாகும். கலியுகத்திலோ, இராப்பகலுள்ள ஒருநாளிற்சித்தியாகும். இவ்விதமா ய்த்தபஸுக்காவது பிரும்மசரிய விரதத்திற்காவது ஜபம் முதலியவைகளுக்காவது பலனைக் கலியுகத்திலே மனிதன் மற்றமூன்று யுகங்களிலடைவதைப்பார்க்கிலும் மிகவும் எளிதா யடைவானாகையாற் கலி ஸாது வென்று சொன்னேன். மேலும் கிருதயுகத்திற் தியாநத்தினாலும், திரேதாயுகத்தில்
யக்ஞத்தினாலும், துவாபரயுகத்திற் பூஜையினாலும் எந்தப் பிரயோஜநமுண்டாகுமோ அந்தப் பிரயோஜநம் கலியுகத்திற் கேசவனுடைய நாம பஜனையினாலடையப்படுகிறது. ஒ ! தருமமறிந்தவர்களே! இக்கலியுகத்திலற்பப்பிரயாசையினாலேயே மனிதன் சிரேஷ்டமான தருமத்தைப் பெறுவானாகையாற் கலியை நான் கொண்டாடுகிறேன். இனி சூத்திரன் ஸாது வென்று சொன்னதற்குக் காரணஞ் சொல்லுகிறேன். பிராம்மணர்கள் விரதாநுஷ்டாநந் தவறாமற் செய்துகொண்டு முதலில் வேதங்களை யோதவேண்டும். பிறகு தருமமாய் ஸம்பாதித்த பொருள்களைக் கொண்டு விதிப்படி யாகங்கள் செய்யவேண்டும். பிராம்மணர்களுக்கு பகவானைப்பற்றிய வார்த்தைகளைத் தவிர வீண்வார்த்தைகளைச் சொல்வதும் பகவானுக்கு அர்பணஞ் செய்யாத ஆகாராதிகளை புஜிப்பதும் டம்பத்திற்காகவும் லாபத்திற்காகவும் யாகாதிகளைச் செய்வதும் தீமையை யுண்டாக்குமாகையால் அவர்களெப்போதும் மனது, காயங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கவேண்டும். அல்லாமலும் பிராம்மணர்களுக்கெதையும் விதிப்படிச் செய்யா மற்போனாற் குற்றமாகும். ஆகாராதிகள் இஷ்டப்படிச்செய்ய வொண்ணாது. விதிப்படிச் செய்யவேண்டும். இவ்வாறவர்களுக்கு ஸகல காரியங்களிலும் சுவதந்திரமில்லாததனாலே அவர்கள் மிகவும் வருத்தத்தினாற் தாங்களடையவேண்டிய உலகங்களை ஜயிக்கவேண்டும். சூத்திரனோ,வேதாத்தியயநம், அக்கியிற் செய்யவேண்டியதாகிய யக்ஞாதி கருமங்கள் இவைகளில்லாமலே பாகயக்ஞாதி காரியமுடையவனாய் முந்திய வர்ணத்தாராகிய பிராம்மணாதிகளுக்கூழியஞ் செய்வதனாலேயே பிராம்மணர்களடையத்தகுந்த உத்தமலோகங்களை யடைவான். ஆதலால் அவனைக் (சூத்திரனை) காட்டிலும் புண்ணியவான் யாரிருக்கிறார்கள்? ஒ ! முனிகிரேஷ்டர்களே ! சூத்திரர்களுக்கின்னது புஜிக்கத்தக்கது, இன்னது புஜிக்கத்தகாதது, இது குடிக்கத்தக்கது, இது குடிக்கத்தகாதது என்ற நியமமில்லாததனாலே சூத்திரன் ஸாது வென்று சொன்னேன். (ஸ்திரீகள் ஸாது வென்றதற்குக் காரணஞ் சொல்லுகிறார்.) புருஷர்கள் தங்களுடைய தருமத்திற்கு விரோதமன்றி ஸம்பாதித்த பொருள்களை ஸத்பாத்திரத்தில் எப்போதுஞ் சிலவிடவேண்டும். சாஸ்திரவிதி தவறாமல் யக்ஞம் முதலிய கருமங்களைச் செய்யவேண்டும். ஒ ! பிராம்மண சிரேஷ்டர்களே ! இப்படியாகப் பொருள்களை சம்பாதிப்பதிலும் அதைக் காப்பாற்றுவதிலும் மிகவும் வருத்தமிருக்கிறது. அப்பொருளை நல்வழியிற் சிலவிடுவதிலோ, மனிதர்களுக்கு அதிக வருத்தமிருக்கிறது. ஒ! பிராம்மண சிரேஷ்டர்களே! புருஷர்களிப்படிப்பட்ட வருத்தங்களினாலும் பின்னு மநேக வருத்தங்களினாலும் பிரும்மலோகம் முதலிய உத்தமலோகங்களைக் கிரமமாய் வெல்லுகிறார்கள். ஸ்திரீயோ வென்றால், மனது வாக்குக் காயங்களினாலே கணவனுக் கநுகூலியாயிருந்துகொண்டு சுசுரூஷை செய்து வருவாளாகிலந்தப் புருஷனடையு முலகத்தையே இவளுமடைவாள். இவ்விதமாயதிக வருத்தமின்றியிலேயே, தங்கள் கணவன் வருத்தத்தி னாலடையு முலகத்தை இவளுமடைவாளாகையால், மூன்றாவதாக ஸ்திரீகள் ஸாதுவென்று சொன்னேன்."
ஆகையால், ஒ ! ஜயவிரதா! சூத்திரர்கள் அவர்களுடைய சுவதருமத்தைச் செய்வதனாலேயே அவர்களு உத்தமகெதியடையக் கூடியதாயிருக்கையிற் பாபத்திற்கு ஹேதுவாய் சுவதருமத்தை விட்டு பரதருமமாகிய பிராம்மண தருமத்தை யநுஷ்டிக்க, ஏன் முயலவேண்டுமோ அதையறியக் கூடவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக