வெள்ளி, 20 அக்டோபர், 2023

களப்பிரர்கள் காலம் . கி.பி 3 - 6 ஆம் நூற்றாண்டு.விரிவான ஆய்வு கட்டுரையும் பின்னூட்டங்களும்

 Marirajan Rajan  :  களப்பிரர்கள் காலம்   . கி.பி 3 -  6 ஆம் நூற்றாண்டு.
கி.பி. 3 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய சங்க காலத்தில் வழிபாடு பற்றிய தரவுகள் ஏராளமாக இருந்தாலும் கட்டுமானக் கோவில்கள் பற்றியத் தரவுகள் பெரிதாக. எதுவும் இல்லை.
 கி.பி.6 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு
  சம்பந்தரும் நாவுக்கரசரும் ஏராளமான கோவில்களைப் பாடுகிறார்கள்.
தமிழகம் முழுவதும் கோவில்கள்..கோவில்கள்.
சுமார் 1000 கோவில்கள் பற்றிய விரிவான செய்திகள் இவர்களது பாடல்களில் இடம்பெறுகிறது.
சிவன், விஷ்ணு, முருகன் என்று  கடவுளர்களின் கோவில்கள் இடம்பெற்றன.
இந்தக் கோவில்கள் எல்லாம் எப்போ கட்டப்பட்டன..? அந்த இடைப்பட்ட காலமான
கி.பி.3 - 6 ஆம் நூற்றாண்டுக்குள் களப்பிரர் காலத்தில்தான் கட்டப்பட்டன.
களப்பிரர்கள் தமிழ் அரசர்கள் தமிழர்கள்.
தமிழி எழுத்திலிருந்து வட்டெழுத்தாக தமிழ் மாறியதும் களப்பிரர் காலம்தான். தமிழ் வளர்ச்சிக்கு மிகப்பெரும் பங்காற்றியவர்கள் களப்பிரர்கள். தேவாரப்பாடல் பெற்ற கட்டுமானக் கோவில்கள் அனைத்தும் களப்பிரர் காலத்தில்தான் எழுந்தன.
இவ்வாறு கூறுபவர் .. தொல்லியல் அறிஞர் Dr.கலைக்கோவன் அவர்கள்.


( முதல் பின்னூட்டக் காணொளி. 6.வது நிமிடம் முதல்)

தஞ்சை யாருடையது..? சோழர்கள் - முத்தரையர்கள்? | Ponniyin Selvan | Chola History | Pazhuvettaraiyar
Reply
19h
Mani Pari
Marirajan Rajan முத்தரையர் என்பதீ மூத்தஅரையர் என்பதாகும். மூத்த அரையரை வடமொழியில் விருதராஜர் அழைக்கப்படுகிறது. விருதராஜர் என்பது கங்கவேளீரின் பெயராகும்.


வீரா அம்பலம் : அப்பொழுது ஏன் அண்ணா களப்பிரர்கள் வந்தேறிகள் எனவும் இருண்டகாலம் எனவும் பதிவு செய்றாங்க

செந்தில் விநாயகம் பண்ணையார் : களப்பிரர் கங்கர் முத்தரையர் இவர்கள் அனைவரும் ஒருவரே என்று உலகம் அறியும் நாள் வரும் விரைவில்

Raj Sibi  : Absence of evidence is not evidence of absence.
சங்க காலக் கோவில்கள் பற்றிய தகவல்கள் நமக்கு பெரிதாக கிடைக்கவில்லை என்பதற்காக சங்ககாலத்தில் பெரிதாக கோயில்கள் இல்லை என்று வாதிடுவது அபத்தம்.
அதே காலகட்டத்தில் பாரதம் முழுமையும் இருந்த அரசுகளையும் அவர்தம் நகரங்களையும் அங்கிருந்த கோவில்களை பற்றிய தகவல்களையும் கல்வெட்டு கூறும் செய்திகளையும் பார்த்தோமானால் தமிழ்நாடு மட்டும் ஒன்றும் விதிவிலக்காக கோயில்கள் குறைந்து இருந்திருக்கும் என்று சொல்லுவது சரியான முடிவு அல்ல.
குப்தர் காலத்துக்கு முன்பே தமிழ்ச் சங்க காலகட்டத்தில் வடநாட்டில் இருந்த குஷான, சாதவாகன மற்றும் சுங்கப் பேரரசுகள் எத்தனையோ கோவில்களைக் கட்டி எழுப்பின. முத்தமிழகத்தில் மட்டும் அதே காலகட்டத்தில் பெரிய அளவில் கோவில்கள் இல்லை என்று சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாத வாதம்.

Deva Priyaji  :  களப்பிறர் அரசர்கள் என்ப்படுபவர் எந்த பகுதியை ஆண்டார்கள்? அவர் பரம்பரை, மன்னர்கள் பெயர் கூற இயலுமா?

அயிலவன் ஆனந்த் : களப்பிரர்கள், அன்றைய கருநாடக தமிழ் பழங்குடியினர், அவர்களுக்கு துலு நாட்டில் பயிற்ச்சி கொடுத்து அனுப்பிவைக்கப்பட்டனர்..
❗Pt1 களப்பிரர் கால திரமிளசங்கம் Tenkasi Subramanian in Tamil

❗களப்பிரர் யார்? பாகம் 2 காலக்கணிப்பில் தவறு Tenkasi Subramanian in tamil
Reply
19h
முதுகண் பெருவழுதி 
https://youtu.be/OpvNcd0qtJ0?si=R-7oY5CqPPgA-NaE
❗ பிராமணிய அடிமை வடுக களப்பிரரா ? Part 3 Tenkasi Subramanian
முதுகண் பெருவழுதி
https://youtu.be/sBo3-Fmb99Y?si=55Qn-v7fkBjjLJt5
❗ஈழமும் களப்பிரரும் பாகம் 4 YOUTUBE.COM
❗ஈழமும் களப்பிரரும் பாகம் 4 Tenkasi Subramanian in Tamil

Mani Pari : களப்பிரர் என்ற பெயர் வரலாற்றாய்வாளர்கள் கொடுத்த பெயர். களப்பிரர் என்று ஒரு அரசவம்சமோ; சாதியோ; குழுவினரோ தனிப்பட்டு எங்கும் கிடையாது.
தென்னிந்திய மொழிகளை ஒப்பிட்டு ஆராய்ந்த கால்டுவெல் தென்னிந்திய தொல்மொழியான தமிழுக்கு திராவிடம் என்று பெயர்கொடுத்த பாவத்திற்கு திராவிட இனம் கற்பித்ததுபோன்று களப்பிரர் என்பதும் ஆகும்.
களப்பிரர் என்று கூறப்பாடுவோர் நந்திகணம் எனப்படும் சைவ/சமண சமையத்தை பின்பற்றிய கூட்டத்தாரை குறித்தது என்பது என்கருத்து. நன்னன் அச்சமணத்தை பின்பற்றிய வேளீர் என்பதும் நன்னன் சேரவேந்தமரபினன் ஆவான் என்று சான்றுகள் கூறுகிறது.
மேற்படி சைவ/சமணமானா நந்திகூட்டத்தார்( நந்திகணம்) தாற்போதைய மைசூர் பகுதியில் வேருன்றி இருந்தது/ஈருக்கிறது.

Marirajan Rajan :  நமக்குப் பிடித்த கருத்தியல் எல்லாம் எவ்வாறு வரலாறு ஆகும்.? களப்பிரன் என்னும் பெயர் பாண்டியர் செப்பேட்டில் உள்ளது. களப்பிரனிடமிருந்து பாண்டிய அரசை மீட்டேன் என்று பராந்தக நெடுஞ்சடையன் சொல்கிறார்.
வேள்விக்குடி செப்பேட்டை ஒரு முறை வாசிக்கவும்.

Mani Pari :   நான் எந்த கருத்துக்கும் ரசிகரல்ல ஐயா.
களப்பிரர் என்றசொல் அரசவம்சத்தை குறித்துவழங்கியதாகக் கொள்ளமுடியுமானால் அப்பாடியான அரசவம்சம் இந்தியாவில் இருந்தற்கு சான்று வேண்டும்.
களப்பிரர் என்று செப்பேடு குறிப்பிடுவது சமணசமைய தீவிரமாய் கடைபிடிக்கும் வழக்குடைய கூட்டத்தாரையும் அதைபின்பற்றி சமணத்தை முன்னெடுத்த அரசர்களையும் இடத்தடியாக குறித்து வழங்கிய பெயராகக் கருதுகோள் வைக்கிறேன்.

Parakrama Paandian : முத்தரையர் களப்பிறர் வழியினரா இருக்கலாம்,

Mani Pari : Parakrama Paandian இருக்கலாம். மூத்தரையர் வடமொழியில் விருதராஜ என்பது நந்திமலையை ஆடையாளமலை(மலைக்கிழவோன்)யாகக்கொண்ட கங்க வேளீரின் பெயராகும்.
கங்க மன்னன் துர்வினீதன் உரகபுரம்(திருப்பாம்பூர்) சோழரின் மகளை திருமணம் கொண்டவர். ஒரு கங்கராஜர் ஆதரவில் நந்நூல் இலக்கணம் எழுதப்பட்டது. கங்கர் சமணர். கங்கமன்னன் தளபதியே சிரவணபெலக்கோலாவில் பரதச்சக்கரவர்த்தி சிலைஎடுப்பித்தவன்



முதுகண் பெருவழுதி
https://youtu.be/I6UE9amvJMs?si=S9kfar7zaRxNcwRi
❗CASTE ARROGANT Kalabhra Period tenkasi subramanian in tamil
YOUTUBE.COM

முதுகண் பெருவழுதி : https://www.youtube.com/live/V8DKR6DbFPM?si=_x6e4EKYJ3lfgnWm
 ஈழத்து வரலாறு கேள்வி பதில் Tenkasi Subramanian in tamil
YOUTUBE.COM

Kumar Parameswaran : இந்த களபிரர்கள் யார் ??

Narayanan Kannan : நடுகல் வழிபாட்டிலிருந்து பரிணாமமுற்ற ஆகம கோயில் வழிபாட்டு முறைகளை உருவாக்கியவர்கள் இவர்களோ? அவர்கள் சமணர்களா? சைவ, வைணவ மரபுகள் சாக்கிய, சமண நெறிகளைச் சாடுகின்றன. சமணர்களைக் கேலி செய்கின்றன. அரசைக் கேலி செய்திருக்க முடியாது. களப்பிரர்கள் இந்துவாகவே இதுந்திருக்க வேண்டும்.

இரா.ச.இராச வேல்.: தேவாரம் பாடியது சமயத்தை வளர்க்க. அது சைவத்துக்கு உயிர் கொடுத்திருக்கு. இன்றைய பிரசங்கம் மாதிரி தான்.
பாடிய பிறகு கோயில் எழுந்ததா ஏற்கனவே செங்கல்தளியா இருந்ததா இல்ல ஊருக்கு ஒரு மைல் கல்ல கோயிலாக்கிட்டாங்களா?
தெர்ல.
களப்பிரர் காலம் இருண்டகாலம் மட்டும் இல்லைன்னு தெரியுது ஆனாலும் ஏனோ தரவுகள் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது.
ஒரு பாடபத் ர ஓணாண்டி புலவன் கூடவா இல்லாமல் இருந்திருப்பான்.
இருந்திருப்பான்
ஆனா அவன் பாடல்கள் எல்லாம் அழிக்கப்பட்டிருக்கும்.
இந்த தகவல்யின்மை தான் களப்பிரர் சைவத்தை ஆதரித்து இருக்க வாய்ப்பில்லை என எண்ணவைக்கிறது.

Marirajan Rajan : இரா.ச.இராச வேல்.
உங்கள் ஐயத்திற்கு பூலாங்குறிச்சி கல்வெட்டு தெளிவு கொடுக்கும். பதிவாகப் போடுகிறேன்.

Chokka Puni : இரா.ச.இராச வேல். அனல் புனல் வாதங்கள் ஆதாரங்களை அழிக்கும் தகிடு தத்தங்களாகவே தோன்றுகிறது.

இரா.ச.இராச வேல்.: தேவாரக்கோயில்கள் எல்லாம் செழுமையான இடத்தில் மட்டுமே உள்ளன. ஒரு அரச மரபு இப்படி செயல்பட்டிருக்காது.
கோயில்கள் நிர்வாக மையமாக வசூல் மையமாக இர்ருந்திருக்குமோ?

இராசேந்திரன் அழகப்பன்  : வடமொழி இலக்கியங்கள் வளர்ச்சியுற்ற போதெல்லாம் தமிழ் இலக்கியங்களும் செழித்தோங்கியதை காலநெடுகிலும் காணமுடிகிறது.

Mani Pari : பூம்புகாரை ஆண்ட "அச்சுத களப்பாளன்" !!!
******
மா.ராசமாணிக்கனாரின் "பல்லவர் வரலாறு" பக்கம் 53. நூலில் கி.பி 350ல் புத்தத்தர் என்ற பௌத்த தமிழ் துறவி (புத்தகோஷர் காலத்தவர்)பாலிமொழியில்"அபிதம்மாவதாரம்"என்ற நூல் எழுதியுள்ளார்;அதில் புகார்நகரை "அச்சுதவிக்ரந்தன்(அச்சுத விக்ரம நந்தன்)"என்ற அரசன் ஆண்டுவந்ததாகக் குறிப்பிடுகிறார்.
"அச்சுதகளப்பாளன்"என்னும் அரசன் மூவேந்தரையும் வென்று சிறைப்படுத்தினான் என்று "தமிழ்நாவலர் சரிதை"குறிப்பிடுகிறது. கிபி 11ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த "யாப்பெருங்கலகாரிகை"யின் ஒரு பாடல்
"அடுதிறல் ஒருவ!நிற் பரவுதும்! 'எங்கோன்'
தொடுகழற் கொடும்பூண் பகட்டெழீல் மார்பில் ;
கயலோடு கலந்த சிலையுடைக் கொடுவரிப்;
,புயலுழற் தடக்கைப் போர்வெல் 'அச்சுதன்' ;
தொன்றுமுதிர் கடலுலகம் முழுதுடன்;
ஒன்றுபு திகிரி உருட்டுவோன்" என்று விளக்கத்தனார் என்ற புலவர் பாடியதாகும்.யாப்பெருங்கலவிருத்தியில் மற்றொரு பாடல்
"பொருளுடை வளாகம் ஒருகுடை நிழற்றி;
இருபிறப்பாளர்க்(கு) ஈந்து மனமகிழ்ந்து
அருள்புரி பெரும்புகழ் 'அச்சுதகோவே!'
நந்திமலை சிலம்ப!
நந்தி! நிற்பரவுதல் நாவலர்கரிதே"
என்கிறது;இப்பாடல் பழஞ்சொற்கள் கொண்டு பார்க்கின் புத்ததத்தர் கூறிய கி.பி350 காலத்து புகார் நகராண்ட அச்சுதவிக்ரந்தனே என்கிறார் ராசமாணிக்கனார்.
***
மேற்கண்டபாடல் களப்பிரர் பிராமணர்களுக்கு நிலதானம் கொடுத்து ஆதரித்ததை காட்டுகிறது.
**

Mani Pari  : நந்தி என்றால் நல்லேறு எனப்படும் எருமைக்காளை. எருமை மலை என்பது எருமைநாடு எருமையூரின் கன் எருமைமலையே நந்திமலை.நந்திமலையே நந்திச்சிலம்பு. நந்திச்சிலம்பை அடையாளமலையாகக் கொண்டவனே சேரகுல வேளீர் நந்நன்/நன்னன். நன்னன் சமண சமையத்தவன். மாட்டை(நந்தி)சாமியாக குப்பிடும் சமணமே நந்திகணம் எனப்படும் பூர்விக சமணம். சமண சமையத்தர் கண்ட சங்கமே "திரமிளர் சங்கம்"(தமிழர் சங்கம்). தமிழில் பாலிமொழியை கலந்து மணிப்பிரவாள தமிழை உருவாக்கியோர் இச்சமைய தமிழ் புலவர்கள்தாம். இச்சமணதுறவிகள் கல்பாழி(மலைக்குகை)யில் வசித்து சமையம்வளர்த்ததால் சமண அரசர்களின் ஆட்சியே களப்பாளர் ஆட்சி எனப்பட்டது.

Mani Pari  : ஐயப்பனுக்கு( பால ஐயனார்) அச்சுதன்னும் பெயருண்டு.ஐயானார் சமணத்தின் ஒருவழியான அசுவிகம் என்பர். நான் ஐயனார் நந்திகணம்/காளைமுகம் சைவத்தவர் என்கிறேன்.
ஐயனார் வம்சத்தவரே நூற்றுவர்கண்ணர்.
*****
தமிழ் தமிழ் அகரமுதலி
அச்சுதன்
அழிவில்லாதவன், கடவுள் திருமால் அருகன் சிவன் முருகன்

Thiruchitrambalam P : இரா.ச.இராச வேல். Marirajan Rajan
சங்கத் தமிழரின் வழிபாட்டிடமாக பொதியிலையும் ( பொது இல் = பொதுவான இல்லம் ) காண்கிறோம்.. அங்கு வழிபாட்டில் கந்து (கம்பம்) இருந்ததையும் அறியமுடிகிறது..
வழிபாடுகள் நின்றதால் பாழ்பட்ட நிலையில் உள்ள பொதியிலை புறநானூறு இவ்வாறு கூறுகிறது..
" கலி கெழு கடவுள் கந்தம் கைவிட பலிக் கண் மாறிய பாழ்படு பொதியில் "
இப்பொதியில்கள் சுடுமண் செங்கல் மற்றும் மரம் உள்ளிட்டவையால் கட்டப்பட்டு இருந்ததையும் வழிபாடு கைவிடப்பட்ட நிலையில் இடிபாடுகளோடு இருந்ததை அகநானூறும்
" இட்டிகை நெடும் சுவர் விட்டம் வீழ்ந்து என மணிப்புறா துறந்த மரம் சேர் மாடத்து எழுதணி கடவுள் போகலின் புல்லென்று ஒழுகு பலி மறந்த மெழுகா புன் திணை "
என்று காட்டுகிறது.
சங்கத்தமிழனுக்கு கோயிலும் உண்டு இறைநெறியும் உண்டு!! வழிபாடு நிமித்தமாக பொதுமக்கள் ஒருங்கே கூடிய இடமே அன்றைய பொதியில் கள்..
சங்க காலத்தில் ஏதோ ஒரு காரணத்தால் கந்து வழிபாட்டிடங்கள் கைவிடப்பட்டுள்ளன..
இக் கந்தே கந்தன் வழிபாட்டிற்கும் சிவ வழிபாட்டிற்குமான ஆரம்பநிலை.. எங்கும் நீக்கமற இயற்கையில் நிறைந்த இறைவனை ஆதித்தமிழர் கந்து ( கம்பம் / தூண் / நெடுங்கல் / நடுதறி )வழிபாடாகவே வணங்கியுள்ளனர்..
இடையில் பாழ்பட்ட இவ்வழிபாட்டிடங்களையே தேவார காலத்தில் ஞானசம்பந்தரும் அப்பரும் பாடி தொல்தமிழரின் வழிபாட்டு நெறிகளை எல்லாம் திரட்டி சைவ சமயமாக எழுச்சியுறச் செய்தனர்..

Mani Pari  : கி.மு 3 நூற்றாண்டிலிருந்தே தமிழகத்தில் களப்பிரர் ஆட்சி இருந்ததாகக் கொள்ளமுடியும்.
பாரிவேளிருக்கும் வேந்தர்களுக்கும் இடையில் மற்றும் நன்னனுக்கும் இளஞ்சேட்டு சென்னி செறுப்பாழி போரும் சமையப்போருக்கான அடையாளங்கள் தெரிகின்றது

Sankar Narayanan : ஏற்க முடியாத கருத்து. எண்தோள் ஈசர்க்கு எழுபது மாடம் அமைத்த கோச்செங்கணான் சோழன்தானே? அவன் களப்பிரர் காலத்திற்கு முற்பட்டவனல்லவா? முதலாழ்வார்கள் காலம் பொ.யு 4 அல்லது ஐந்து.. அவர்கள் பல கோவில்களை மங்களாசாசனம் செய்துள்ளனர்? செந்தில், செங்கோடு, பரங்குன்று, திருவெஃகா என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் கோவில்கள் பல. திருமுறுகாற்றுப்படையில் ஆறு படைவீடுகளையும் குறிப்பிட்டுகிறது. குன்றுதோறாடல் என்று முருகன் பல குன்றுகளில் உறைவதையும் குறிப்பிடுகிறது.
திருக்கழுக்குன்றம் கல்வெட்டு ஸ்கந்தசிஷ்யன் கொடையைக் குறிப்பிடுகிறது. அவன் சிம்மவிஷ்ணுவிற்கு குறைந்தது ஒரு நூற்றாண்டாவது முன்பு ஆண்ட பல்லவன்..

கும்பகோணம் ஜம்புலிங்கம் :  ஜூலை 2015இல் கோயில் உலாவின்போது நான் எடுத்து, விக்கிப்பீடியாவில் பதிந்த படத்தை இப்பதிவில் கண்டதில் மகிழ்ச்சி

Mani Pari : ஸ்வஸ்திஸ்ரீ மதுரானக் கள்வர திருராஜ்யதல் மள்ளே கவுண்டரும் சாவா காவுண்டுரு துயீநாத பல்கனிளலுதுவ காமூண்ட ஸத்த எர்ரதயக் கர்ளனபூழ்திகம்.[

பாரதி : திருவெஃகா பெருமாள் கோயிலும் , திருப்பிடவூர் சாத்தன் கோயிலும் களப்பிரர் காலத்திற்கும் முன்பு.

Mani Pari : பாரதி எந்த சாத்தன் கோயிலை சொல்கின்றீர்கள்?

பாரதி : Mani Pari திருச்சி மாவட்டம் திருப்பட்டூர் என்ற ஊரில் உள்ள சாத்தன் கோயில்

Mani Pari : பாரதி சான்று?

பாரதி : Mani Pari
நெடுங்கை வேண்மான் அருங்கடிப் பிடவூர் அறப்பெயர்ச் சாத்தன் கிளையோம், பெரும! புறம் 395
அதே சாத்தனை தான் பெரியபுராணத்தில் சேக்கிழார் :
சேரர் காவலர் விண்ணப்பம் செய்த அத் திருஉலாப் புறம் அன்று சாரல் வெள்ளியங் கயிலையில் கேட்ட மாசாத்தனார் தரித்து இந்தப்
பாரில் வேதியர் திருப்பிடவூர் தனில் வெளிப்படப் பகர்ந்து எங்கும் நார வேலை சூழ் உலகினில் விளங்கிட நாட்டினர் நலத்தாலே 12.4280

பாரதி : அக்கோயிலில் உள்ள சோழர் கால கல்வெட்டுகள் - அவ்வூரை திருப்பிடவூர் என்று தான் சுட்டுகிறது.

Mani Pari : பாரதி உண்மை. நீங்கள் குறிப்பிடும் திருப்பட்டூ என்பது உறையூருக்கு வடக்கே உள்ளது.
ஐயனார் பிறந்த திருப்பிடவூர் (பிடவூர்நாட்டு பிடவூர்) சேத்தியாத்தோப்பு கும்பகோணம் நெடுஞ்சாலையில் உள்ளது. திருப்பிடவூரில் அகழியுடன் பாழடைந்த கோட்டையும் மிகப்பழையது அதன் நடுவே பிற்காலசோழர் கட்டிய சிவன் கோயிலும் உள்ளது.

பாரதி : Mani Pari அது பல்லவர் கோயில்.

Mani Pari : பாரதி அது பிற்கால பிடவூர்வேளின் தலைநகராகலாம். புறம் குறிப்பிடும் உறையூர் கிழக்கே உள்ள "திரு பிடவூர்" சேத்தியாத்தோப்பிற்கு கிழக்கே உள்ளது

Mani Pari : பாரதி இல்லை. சரிபாருங்க

Mani Pari : பாரதி திருப்பிடவூர் வீராணம் ஏரிக்கரையில் உள்ளது. வீரணார் ஐயனாரின் பெயரில் ஒன்று. அவர்வெட்டியதாகலாம்.பிற்காலச்சோழர் செப்பனிட்டுபுதுப்பித்ததாகத் தெரிகிறது.

Kaleesan Rajagopal : பெரியபுராணத்தில் களப்பிரர்களை கருநாடக தேசத்தில் இருந்து வந்தவர்கள் என்று தெய்வச் சேக்கிழார் கூறுகிறார்( மூர்த்தி நாயனார் புராணம்)

பாரதி : Kaleesan Rajagopal 5.38- பாருங்கள், அவர் வாய் தவறி தான் தமிழ் நாட்டை சேர்ந்தவர் என்று சொன்னார், அதை உடனடியாக அவரே திருத்தி தமிழ்நாட்டின் வரலாற்றை சேர்ந்தவர் என்று கூறுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக