திங்கள், 16 அக்டோபர், 2023

கொங்கு முருக பக்தர்களை நம்பவைத்து கூட்டம் கூட்டி மோசடி அரசியல் செய்த இந்து முன்னணி சங்கிகள்

 கொங்கு உரிமைக்குரல் "என்ற தளத்தில் வந்த செய்தி இது!  முருகா சரணம்
சென்னிமலையை பாதுகாக்க கூடிய கூட்டம் கட்சி சார்பற்ற கூட்டம் ஆனா இதை இந்து மக்களை வைத்து அரசியல் செய்யும் கட்சிகள் நம் ஒற்றுமையை அவர்கள் அரசியலுக்கு  பயன்படுத்தி இருக்கார்கள்.
இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் என்றோ, பாஜக ஆர்ப்பாட்டம் என்றோ சொன்னால் ஒரு ஈ, காக்கா கூட வராது என்பதால், முருக பக்தர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் என மக்களை நம்ப வைத்து, கூட்டம் நடக்கும்போது இந்து முன்னணி பெயரை சொல்கிறார்கள், இதற்கு சில கட்சிகளில் உள்ள அப்பாவி நிர்வாகிகளும் பலியாகி உள்ளனர், மேடை கிடைத்தால் போதும் என்று மேடையேறி பேசியும் உள்ளனர்,
 இதுவரை வராத கிறிஸ்துவ மிஷனரி இப்போ எங்க இருந்து வந்தது? அவனுகளை வரவைத்தது யார் என்பதை தமிழக அரசு உடனே விசாரிக்க வேண்டும்.


 தேர்தல் சமயம் என் மண் என் மக்கள் இயக்கம்  நடைபயனம்  நடக்கும் நேரத்தில் இந்த சம்பவம் பல கேள்விகளை எழுப்பி உள்ளது எனவே நம்மை ஆட்சி செய்த முகலாயர் ஆங்கிலேயர் காலத்தில் கைபற்றாத இடத்தை இப்போ எவன் கைபற்றுவான்? எனவே  மக்கள் சற்று யோசிக்கனும், எடுத்தோம் கவிழ்த்தோம் என எந்த நடவடிக்கைக்கும் போகாதீர்.
 நம் சென்னிமலையாண்டவர் பக்தியை எவனோ அவர்கள் சார்பு அமைப்புகள் மூலமாக வாக்குகளாக மாற்ற முயல்கிறார்கள்,
எனவே நம் மக்களுக்கு ஒரு வேண்டுகோள் நமக்கும்  நம் குலத்துக்கும்  தேவையை நிறைவேற்றும்   சென்னிமலையாண்டவருக்கா நாம் போராட போக வேண்டும்? நம்மை காக்கும் சென்னியாண்டவரை நாம் காப்பாற்றுகிறோம் என சொல்வது அபத்தமாக இல்லையா? எவனாவது சென்னிமலையில் உள்ள ஒரு கல்லையாவது தொட்டுவிட முடியுமா? கலவரத்தை எப்படியாவது நிகழ்த்தி பதவியை பிடிக்க வேண்டும் என்று நினைக்கும் மதவெறி சக்திகளின் நாசவேலை இது, அதற்காக, தங்கள் ஆதரவு இந்து அமைப்புகள் மூலமாக முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களை தூண்டிவிடுவது போல பேசி, பதிலுக்கு அவர்கள் இந்து மதத்தை விமரிசித்து பேச வைக்க வேண்டும், அதன்மூலமாக இந்து மக்கள் உணர்ச்சியை தூண்ட வைப்பது அவர்கள் நோக்கம், அதுதான் நேற்று நடந்துள்ளது,
நேற்று கூடிய கூட்டம் உண்மையான முருக பக்தர்கள் கூட்டம்,  சர்வ கட்சிகளில் உள்ளவர்கள் வந்ததால் சேர்ந்த கூட்டம், ஆனால் பறந்த கொடி  ஏதும் சர்வகட்சி கொடி இல்லை, ஆனால் நம்மை பயன்படுத்த நினைத்தவர் கொடி மட்டும் அங்கு பறக்கிறது, எனவே பார்த்து நடந்துக்கனும்....
நமது உண்மையான பக்தியை பயன்படுத்தி, உணர்ச்சியை தூண்டி மதவெறி மூலம் மக்களை பிளவுபடுத்தி, ஊரில் அமைதியை குலைத்து, ஓட்டுக்களை அறுவடை செய்து ஆட்சியை பிடிப்பது பாஜக எனும் அழிவு சக்தியின் தந்திரம், படிப்பறிவு குறைந்த வட மாநிலங்களில் இதைத்தான் செய்தனர், இப்போது இங்கும் அதை தொடங்கியுள்ளனர், அந்த நாசகார சக்திகளின் சூழ்ச்சி வலையில் நாம் சிக்கிவிட கூடாது,
சுயம்புவாக தோன்றி, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக பிரமாண்டமாக பரவியுள்ள இந்து மதத்தை எவனோ ஒருசில மனித பிறவி அழித்துவிட முடியாது, அதை காலம் காலமாக நாம் பார்த்து வருகிறோம், எனவே, நாங்கள்தான் இந்து மதத்தை காப்பாற்றுவோம் என்று சொல்லி ஓட்டு கேட்டால்,  என் மதத்தை காப்பாற்ற எனக்கு தெரியும் என்று சொல்லி விரட்டி அடிக்க வேண்டும். உண்மையான பக்தியுள்ள கடைசி இந்து இருக்கும்வரை நமது மதத்தின் அருகில்கூட எவனும் வர முடியாது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். பக்தியையும் அரசியலையும் பிரித்து பார்க்க வேண்டும், பக்தியை மூலதனமாக்கி அரசியல் செய்ய நினைக்கும் தீய சக்திகளை புறம்தள்ள வேண்டும்.
எனவே,
விழிப்போடு இருப்போம், அழிவினை தடுப்போம்...
என்றும் இறைபணியில்...
முருக பக்தர்கள் கூட்டமைப்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக