thesamnet.co.uk - அருண்மொழி :: சினிமாவுக்கு வழங்கப்படும் ஒஸ்கார் விருதை போல ஊடக, புகைப்பட கலைஞர்களுக்கு வழங்கப்படும் உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் புலிட்சர் விருது,
அமெரிக்கா ஊடகவியலாளர் ஜோசப் புலிட்சர் என்பவரின் பெயரில் 1912 ஆம் ஆண்டு முதல் ஊடகவியல், இணைய ஊடகம், இலக்கியம், இசையமைப்பு, நாடகம், ஆகிய துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு வழங்கப்படுகிறது.
உலகின் தலைசிறந்த விருதுகளுள் ஒன்றான இந்த விருது இவ்வருடம் அமெரிக்க கறுப்பினத்தவர் ஜோர்ஜ் பிளொய்ட் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்ட நிகழ்வை,
உலகிற்கு அடையாளம் காட்டிய 18 வயது யுவதிக்கு 2021 ஆண்டுக்கான இவ்விருது வழங்கப்படவுள்ளது.
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில் கடந்த 2020 மே 25 ஆம் திகதி ஜோர்ஜ் பிளொய்ட் (46) என்ற கறுப்பினத்தவரை சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கிப் பிடித்த டெர்ரக் சாவின் (44) என்ற காவல்துறை அதிகாரி, அவரை மண்டியிடச் செய்து கழுத்தில் முழங்காலை வைத்து பலமாக அழுத்தினார். இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பிளொய்ட் உயிரிழந்தார்.
சனி, 12 ஜூன், 2021
ஜோர்ஜ் பிளொய்ட்டின் கொலையை உலகுக்கு காட்டிய 18வயுது யுவதிக்கு புலிட்சர் விருது !
சிவசங்கர் பாபாவும் யாகவா முனிவரும் சண்டையிட்ட காணொளி காணாமல் போனதெப்படி? சன்டிவி கைவரிசை?
மறைந்த யாகவா முனிவரும் சிவசங்கர் பாபாவும் சன்டிவி தொலைக்காட்சியில் விவாதித்த காணொளியை தேடி தேடி பார்க்கிறேன் அது கிடைக்கவே இல்லை
இப்போது சிவசங்கர் பாபா பற்றி எல்லோரும் பேசிய விடயங்களை பெரும்பாலும் அன்றே யாகவா முனிவர் நேரடியாகவே கூறினார் யாகவா முனிவரின் அத்தனை குற்றச்சாட்டுக்களையும் மறுக்க முடியாமல் பசப்புதனமாக சிரித்து சிரித்து சமாளித்தார் சிவசங்கர் பாபா
ஒரு கட்டத்தில் கோபத்தை அடக்க முடியாத யாகவா முனிவர் தனது தோளில் இருந்த துண்டை எடுத்து அடிக்க பாய்ந்தார்
அவர் கூறினார் பாரு பாரு அயோக்கிய பயல என்று அர்ச்சனை பொழிந்தார்.
சரியாக இனம் கண்டுகொண்டார் யாகவா முனிவர்
அதன் பின்பு அக்காட்சியை நடிகர் விவேக்கும் மயில்சாமியும் ஒரு படத்தில் காட்சியாக வைத்தனர்
இப்போது அந்த ஒரிஜினல் காணொளி மிஸ்ஸிங்
சன்டிவி நிர்வாகத்திற்கு பார்ப்பன சகவாசம் தாராளமாகவே உண்டு அதன் காரணமாக அவர்கள் அதை மறைத்து விட்டார்கள் ....?
இலட்சத்தீவின் பெண் திரைப்பட இயக்குனர் ஆயிஷா சுல்தானா மீது தேச துரோக வழக்கு!
Muthu Krishnan : யார் இந்த ஆயிஷா சுல்தானா ?
லட்சத்தீவின் முதல் பெண் இயக்குநர் ஆயிஷா சுல்தானா மீது தேசத்துரோக வழக்கு பதியப்பட்டிருக்கும் நிலையில், இலட்சத்தீவு மக்கள் அவருக்கு ஆதரவாக நிற்பதாக சபதமெடுத்திருக்கிறார்கள்.
லட்சத்தீவு சாகித்ய பிரவர்த்தக சங்கம் (Lakshadweep Sahitya Pravarthaka Sangam), ``ஆயிஷாவை தேசத்துரோகியாகச் சித்திரிப்பது தவறானது.
அவர் பிரஃபுல் படேலின் மனிதாபிமானமற்ற செயல்களுக்கு எதிராக நின்றவர். அவருக்கு ஆதரவாக ஒட்டுமொத்த லட்சத்தீவின் கலசார சமூகமும் துணை நிற்கும்'' என்று ஆயிஷாவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
ஆயிஷா சுல்தானாவுக்கு எதிராக தேசத்துரோக வழக்கு பதியப்பட்டது ஏன் ?
மலையாள நியூஸ் சேனல் ஒன்றில் நடந்த விவாத நிகழ்ச்சியில் பேசிய ஆயிஷா,
``(மனித) பயோ ஆயுதங்கள்கொண்டு, மத்திய அரசு லட்சத்தீவில் கொரோனா நோய்த் தொற்றைப் பரப்பிவருகிறது. லட்சத்தீவில் ஒருவர்கூட கொரோனாவால் பாதிக்கப்படாத நிலையே இருந்தது.
வடலூர் வள்ளலார் அனைத்துலக மையம் உருவாக்கப்படும் .. அமைச்சர் சேகர் பாபு நேரில் ஆய்வு
இது குறித்து இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் அதிகாரிகளுடன் சென்று முதற்கட்ட ஆய்வு செய்தனர். கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் பெயரிலான சர்வதேச மையம் அமைக்கப்படும் என்று திமுக அரசு ஆட்சிக்கு வரும் முன் தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. அதற்கான செயல் வடிவங்களை தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தொடங்கி உள்ளது.
வடலூரில் வள்ளலார் பெயரிலான சர்வதேச மையம் அமைக்கப்பட்டால் மிகப்பெரிய அளவில் கடலூர் மாவட்டத்திற்கு பலன் அளிக்கும் என்பதால் இத்திட்டம் குறித்து அதிக எதிர்பார்ப்பு உள்ளது
மதுரையில், இரண்டு லட்சம் சதுர அடி பரப்பளவில் நவீன கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும்.
minnambalam :மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும் என்ற அரசின் அறிவிப்புக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பாராட்டு தெரிவித்துள்ளது.
கலைஞரின் 97வது பிறந்தநாளான ஜூன் 3ஆம் தேதி தமிழ்நாடு அரசு 6 புதிய திட்டங்களை அறிவித்தது. அதில், சங்கத் தமிழ் வளர்த்த மதுரையில், இரண்டு லட்சம் சதுர அடி பரப்பளவில் நவீன வசதிகளுடன், ரூ.70 கோடி செலவில், கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும். அண்ணா நூற்றாண்டு நூலகம் போல மற்ற பகுதிகளில் வாழும் மக்களும், இத்தகைய அரிய வாய்ப்பினைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த நூலகம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது.
இலங்கை – சீன நட்புறவின் ஒரு மைல்கல்! பொலனறுவை சிறுநீரக வைத்தியசாலை
கொழும்பு (சின்ஹுவா) தெற்காசியாவில் மிகவும் பெரியவிசேட சிறுநீரக வைத்தியசாலையை பொலனறுவை நகரில் கடந்த வெள்ளியன்று ஜனாதிபதி கோlட்டாபய ராஜபக்ச உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார்.
இது சீனாவிடமிருந்து கிடைத்த நன்கொடையில் நிர்மாணிக்கப்பட்டதாகும்.
இந்த புராதன நகரில் சீன – இலங்கை நட்புறவு ந தேசிய சிறுநீரக வைத்தியசாலை திறப்புவிழா வைபவத்தில் நினைவுப்படிகத்தை ராஜபக்ச திரைநீக்கம் செய்துவைத்தார்.
வைபவத்தில் முன்னாள் ஜனாதிபதியும் பொலனறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேனவும் இலங்கைக்கான சீனத்தூதுவர் கீ ஷென்கும்ஹொங்கும் கலந்துகொண்டனர்.இந்த வைத்தியசாலை சீன -இலங்கை நட்புறவின் ஒரு சின்னமாகும் என்று குறிப்பிட்ட சீனத்தூதுவர் இதனால் தெற்காசிய மக்கள் சகலரும் பயனடையக்கூடியதாக இருக்கும் என்று சொன்னார்.
மலேசியா Sybil Medan Kathigasu.. நினைவு தினம். (12 ஜூன் 1948)
Subashini Thf : மலேசியம் - வாட்ஸ்அப் குழுமத்தில் கென்னடி ஆறுமுகம் என்பவர் எழுதிய பதிவு. மலேசியாவில் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஜப்பானியர்கள் செய்த கொடுமையை இந்தப் பதிவும் ஓரளவு விளக்கும்.
கூடுதல் தகவலுக்கு விக்கிபீடியா செய்தி. -https://en.m.wikipedia.org/wiki/Sybil_Kathigasu//
இன்று ஜூன் 12 இரண்டாம் உலகப் போரில் ஜப்பானியரை எதிர்த்துப்
போராடிய, மலேசிய சீனர்களால் “தியாகி” என போற்றப்படும் இங்கிலாந்து அரண்மனையில்
பேரரசர் George VI ல் “George Medal” விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட Irish வம்சாவழியைச் சேர்ந்த
இலங்கைத்தமிழர் Dr. ஆறுமுகம் கணபதி பிள்ளையின் மனைவியும், செவிலியருமான Sybil Medan Kathigasu.. நினைவு தினம். (12 ஜூன் 1948)
இவரது கணவர் Dr. ஆறுமுகம் கணபதி பிள்ளை கிறிஸ்துவராக மாறி Abdon Clement Kathigasu எனப் பெயர்மாறினார்.
பெண்களையும் அர்ச்சகராக்கும் திட்டம் உள்ளது - அமைச்சர் சேகர்பாபு பேட்டி!
நக்கீரன் செய்திப்பிரிவு : தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து அமைச்சர்களும் பொறுப்பேற்றுக்கொண்டனர்.
இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, அண்மையில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் சொத்து விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும் என அறிவித்திருந்தார்.
அதன்படி இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் ஆவணங்கள் www.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் கடந்த 9ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்பட்டன. பெண்களையும் அர்ச்சகராக்கும் திட்டம் இருப்பதாக தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பெண்களையும் அர்ச்சகராக்கும் திட்டம் உள்ளது. பற்றாக்குறை உள்ள இடங்களில் பெண்கள் நியமிக்கப்படுவர்'' என்றார்
ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டம் உடனடியாக அமல்படுத்த -மேற்கு வங்காள அரசுக்கு உச்ச நீதிமன்றம்...
மாலைமலர் : ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டமானது புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கானது என்று உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது. புதுடெல்லி: கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் வேலைகளை இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் அரசு உதவிகளை பெறுவதற்காக அமைப்புசாரா தொழிலாளர்களின் பதிவு நடைமுறை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மேற்கு வங்காள மாநிலத்தில் ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டத்தை எந்தவித காரணமும் சொல்லாமல் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியது.
மற்றொரு சிக்கலை மேற்கோள் காட்ட முடியாது என்றும், இது புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கானது என்றும் உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது.
வழக்கின் வாதப்பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில், உச்ச நீதிமன்றம் உத்தரவை நிறுத்தி வைத்துள்ளது.
தமிழ்நாடு அரசுக்கு சவால் விட்ட சாட்டை துரைமுருகன்?
Karthick Ramasamy : தீவிரவாத இயக்கங்களின் பெயரால் வெளிப்படையாக மிரட்டல் விடுக்கிறார்கள். இதை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும்.
பெரியார் நேசன் : புலிகள் அரசியல, திமுக,விற்கு ஈழ மக்கள் மீது இருக்கும் சாஃப்ட் கார்ணர் வைத்து இந்த ஆட்சியில் இவர்கள் வளர்த்திட முயற்சி செய்வாங்கனு தோனுது...மறுபடியும் புலிகள் பர்னிச்சர எடுத்து ஒரு ரவுண்ட் விட்டாதான் சரியாகும்போல
செல்லபுரம் வள்ளியம்மை :ஏராளமான திமுகவினருக்கு இன்னும் புலிகள் மீது ஈர்ப்பு இருக்கிறது
இது ஒரு பாசிஸத்தின் மீதான ஒரு மயக்கம்
கலைஞரை தவிர எல்லா கட்சிகளும் தலைவர்களும் இயக்கங்களும் ஊடகங்களும் புலிகளின் அத்தனை சகோதர படுகொலைகளையும் ஆதரித்து போர்க்குற்றம் புரிந்தவர்கள்தான்
இதன் நீட்சியாக புலிகளால் படுகொலை செய்யப்பட அத்தனை போராளிகளையும் தலைவர்களையும் கூட துரோகிகள் என்று உரத்த குரலில் முப்பது வருடங்களாக கட்டமைத்த மோசடி தமிழ் நாட்டிலும் நடந்தது
ஸ்டாலினின் ஒரு மாத கால ஆட்சி.. பார்ப்பனீய சக்திகளுக்கு அடிபணியாமல் ஸ்டாலின் ஆட்சி... சவுக்கு சங்கர்
100 ஆண்டுகளுக்கு ஒரு முறை மனித குலத்தை தாக்கும் கொள்ளை நோய், பல்வேறு வடிவங்களில் தன்னை சமன் செய்துகொள்ள, இது போன்ற கொள்ளை நோய் வடிவங்களில் வரும் என்று ஆய்வாளர்கள் கணித்திருக்கின்றனர். இணைப்பு. இப்படி ஒரு நோய் உலகெங்கும் தாக்கி, குறிப்பாக, அந்நோயின் இரண்டாவது அலை, பெரும் வீச்சோடு இந்தியாவை தாக்கிய சமயத்தில் ஸ்டாலின் பதவியேற்றிருக்கிறார்.
இந்தியாவின் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், தமிழகம் மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளில் பல மடங்கு முன்னேறி இருந்தபோதும் கூட, இரண்டாவது அலையின் வீச்சு, எந்த அரசையும் நிலைகுலைய வைக்கும். அதுவும், புதிதாக பொறுப்பேற்ற அரசுக்கு, சிக்கல்கள் நிறையவே இருக்கும்.
தமிழ்நாடு கோயில் நிலங்களில் 47 ஆயிரம் ஏக்கர் மாயமா? – அறநிலையத்துறை ஆணையர் சொல்வது என்ன?
ஆ விஜயானந்த் - பிபிசி தமிழுக்காக : அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களின் விவரங்களை, இணையத்தில் பதிவேற்றும் வேலைகள் நடந்து வருகின்றன.
`கோவில் நிலங்களை பயன்படுத்துவோர் குறித்த தகவல்கள் இணையத்தில் இல்லாததால், தவறுகள் நடக்கவே வாய்ப்புகள் அதிகம்’ என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
என்ன நடக்கிறது? 47,000 ஏக்கர் நிலங்கள் எங்கே?
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார்.
அதில், ` தமிழ்நாட்டில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் 38,600 கோவில்கள் இருந்தாலும் இதில் 331 கோவில்களில் மட்டுமே ஆண்டுக்கு 10 லட்ச ரூபாய்க்கு மேல் வருமானம் கிடைக்கிறது.
நீட் தடை.. வேக்சின் சப்ளை.. நேராக டெல்லி பறக்கும் முதல்வர் ஸ்டாலின்.. பிரதமருடன் ஜூன் 17ல் மீட்டிங்
Shyamsundar - tamil.oneindia.com : சென்னை: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஜூன் 17ம் தேதி பிரதமர் மோடியை சந்திக்கிறார். ஆட்சி பொறுப்பேற்ற பின் முதல்முறையாக முதல்வர் ஸ்டாலின் டெல்லி செல்கிறார்.
தமிழ்நாட்டில் தற்போது கொரோனா கேஸ்கள் குறைய தொடங்கி உள்ளது. தினசரி கேஸ்கள் 17 ஆயிரத்திற்கும் கீழ் சென்றுள்ளது. தொடர்ந்து கேஸ்கள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்டு வந்த முதல்வர் ஸ்டாலின், இந்த மாதம் டெல்லி செல்கிறார். ஜூன் 17ல் அவர் பிரதமர் மோடியை நேராக சந்தித்து பேச உள்ளார்.
கோரிக்கை இதில் நிறைய முக்கியமான கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் வைக்க இருக்கிறார். அதில் நீட் தேர்வு ரத்து மற்றும் வேக்சின் ஒதுக்கீடு பிரதான கோரிக்கையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டிற்கு போதிய அளவு வேக்சின் வழங்கப்படவில்லை என்று புகார் உள்ளது.
பாஜக உத்தர பிரதேசம், குஜராத் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களுக்கு வேக்சின் அதிக அளவில் கொடுக்கப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டிற்கு போதிய அளவு வேக்சின் ஒதுக்கப்படவில்லை என்று புகார் உள்ளது. வேக்சின் மட்டுமின்றி நீட் தேர்வு தடை குறித்தும் முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியுடன் பேச உள்ளார் என்று கூறப்படுகிறது.
நாம் தமிழர் கட்சி சாட்டை துரைமுருகன் உட்பட நான்கு ரவுடிகள் கைது! கார் நிறுவன ஊழியரை மிரட்டினார்கள்
/tamil.oneindia.com: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக அரசை வலியுறுத்தி உள்ளார்.
திருச்சி கே.கே. நகரில் கார் உதிரி பாகன நிறுவனத்தில் புகுந்து, அதன் உரிமையாளரை மிரட்டியதாக, யூ டியூபர் சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்து, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழ்த் தேசிய இனத்தின் ஒப்பற்ற தேசியத் தலைவர் வே.பிரபாகரனைப் பற்றி மிகவும் இழிவாகப் பதிவுகள் இட்ட திருச்சியைச் சேர்ந்த வினோத் என்பவரை நேரடியாகச் சந்தித்து, புரிதல் ஏற்படுத்தி காவல் துறை முன்னிலையில் மறுப்பு காணொளி வெளியிட வைத்த ஊடகவியலாளர் சாட்டை துரைமுருகன், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த திருச்சி மேற்கு மாவட்டச் செயலாளர் வினோத், மாநிலத் தகவல் தொழில்நுட்பப் பாசறை பொறுப்பாளர் சந்தோஷ் என்ற மகிழன், மாநிலக் கொள்கை பரப்புரையாளர் திருச்சி சரவணன் ஆகியோரை காவல் துறை திடீரென கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது.
க்ளப் ஹவுஸ் லீக்ஸ் ... சாம்பிள் .. என்னதான் நடக்கிறது ?
Sarav Urs :: நேத்து இரவு club house'ல பட்டறையை போட்டோம். அரட்டை அங்கம் மாதிரி தான்... எனக்கு புதுசு என்பதால அர்வமாக இருந்த சில இளைஞர்களை மாடரேட்டராக விட்டுட்டு கதை கேட்டுட்டு இருந்தேன். ஜாலியா பேசிட்டு இருந்தாங்க...,
நடுவில கொஞ்சம் facilitate பண்ணி 'நம்ம வீட்டில் இருப்பவர்களின் அந்தரங்க வீடியோ ஒரு வேளை சோசியல் மீடியால ரிலீஸ் ஆகிடுச்சுன்னா அதை எப்படி கையாள்வதுன்னு' ஒரு டாபிக் கொடுத்து சோசியல் ஸ்டடி பண்ணிட்டிருந்தேன்... கலவையா பேசிட்டிருந்தாங்க. அப்புறமா வேலை வந்தனால வெளியேறிட்டேன்.
வெளியேறின கையோட இன்னொரு க்ரூப் கண்ல பட்டது.. அதன் தலைப்பு.., 'உன் மனைவி எனக்கும் மனைவி'..! தலைப்பு இழுக்க உள்ளே போனேன்....
10-15 பசங்க & பொண்ணுங்க பேசிட்டுருந்தாங்க... 3000 பேர் கிட்ட சைலண்ட்டா கேட்டுட்ருந்தாங்க... குழு பெயரே எனக்கு முதல் அதிர்ச்சி, தலைப்பு அதுக்கு மேல அதிர்ச்சியா இருந்தது..,
டாபிக் இது தான்: ஓலுக்கு ஓகேவா...?
இந்த கேள்விக்கு க்ரூப்ல எந்த பையன் வேண்டுமானாலும் எந்த பொண்ணையும் பெயர் சொல்லி அவங்களை தேர்ந்தெடுத்து கேக்கலாம்...
லாக்டவுன் ஜூன் 21 வரை நீட்டிப்பு.. டாஸ்மாக் இயங்க அனுமதி.. என்னென்ன தளர்வு அறிவிப்பு.. முழு லிஸ்ட்
Shyamsundar - /tamil.oneindia.com : சென்னை: தமிழ்நாட்டில் ஜூன் 14 முதல் 21ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா கேஸ்கள் குறைய தொடங்கி உள்ளன. தினசரி கேஸ்கள் 17 ஆயிரத்திற்கும் கீழ் சென்றுள்ளது. இதையடுத்து தமிழ்நாட்டு ஊரடங்கில் நிறைய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஊரடங்கு 14-6-2021 முதல் 21-6-2021 காலை 6-00 மணி நீட்டிக்கப்பட்டுள்ளது.
சில தளர்வுகளுடன் மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
11 மாவட்டங்களில் கொஞ்சம் கட்டுப்பாடும், மற்ற மாவட்டங்களில் அதிக தளர்வும் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கின் போது, அனைத்து மாவட்டங்களிலும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.
தளர்வுகள் கடைகளின் நுழைவு வாயிலில் வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் (hand sanitizer with dispenser) கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்ப நிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும் (thermal screening).
வெள்ளி, 11 ஜூன், 2021
இந்தியாவின் கொரோனா பாதிப்பும் உயிரிழப்பும் மிகப் பெரிது – தி நியுயார்க் டைம்ஸ் ஆய்வில் முடிவு
மே 24ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் இந்தியாவில் பதிவான உயிரிழப்புகள் என்பது உலகில் எந்த நாட்டிலும் பெருந்தொற்று காலத்தில் இல்லாததாகும். ஆனால், வெளியான புள்ளிவிவரங்கள் குறைத்துதான் காட்டப்பட்டிருக்கிறது
கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்த தேவையில்லை
இந்தியாவில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. முழு ஊரடங்கு போன்ற மாநில அரசுகளின் நடவடிக்கைகளால், கொரோனா பரவல் குறைந்து வருகிறது. இந்நிலையில், கொரோனா தடுப்பூசி திட்டம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து, பிரதமர் நரேந்திர மோடியிடம் மருத்துவ நிபுணர்கள் குழு அறிக்கை அளித்துள்ளது.
நெஞ்சுவலி எனக் கூறி தப்பித்த சிவசங்கர் பாபா..! விசாரணை ஆணையத்தில் தகவல்..!
சென்னையில் உள்ள பத்ம ஷேஷாத்ரி பள்ளியில் ஆன்லைன் வகுப்பில் ராஜகோபாலன் எனும் ஆசிரியர், மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது, தகாத முறையில் நடந்துகொண்டது தொடர்பான புகார்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு பள்ளிகளில் பயிலும் மாணவிகள் மற்றும் முன்னாள் மாணவிகள், ஆசிரியர்களால் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளைப் புகார்களாக தெரிவித்துவருகின்றனர். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
மின்னம்பலம் :கொரோனா மளிகை பொருள் டெண்டர்: ஊழல் கிருமி நுழைந்துவிட்டதா?
மின்னம்பலம் :மே 7ஆம் தேதி தொடங்கி, இந்த முப்பது நாள் ஆட்சியில் கொரோனாவை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்பதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
இந்த வகையில்தான் கொரோனா கால ஊரடங்கால் அடித்தட்டு ஏழை மக்கள் கஷ்டப்பட கூடாது என்பதற்காக தமிழகத்தின் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 14பொருட்கள் அடங்கிய தமிழக அரசின் இலவச மளிகைத் தொகுப்பை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆட்சிக்கு வந்த ஒரு வாரத்திலேயே முடிவெடுத்தார். மே 10 ஆம் தேதிவாக்கிலேயே இதுகுறித்த தகவல்கள் வெளிவந்தன. ஜூன் 3 ஆம் தேதி கலைஞரின் பிறந்த நாளை ஒட்டி இந்த மளிகைப் பொருள் தொகுப்பை வழங்கிடத் திட்டமிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின். ஜூன் 3 ஆம்தேதி கலைஞர் பிறந்தநாளன்று அடையாளத்துக்காக இத்திட்டத்தைத் துவக்கியும் வைத்தார் முதல்வர்.
இலங்கை கடலில் கைவிடப்பட்ட பேருந்துகள்... மீன்களின் இனப்பெருக்கத்திற்காக .. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவிப்பு
ராமநாதபுரத்தில் 60 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாம் போக சாகுபடி: சாத்தியமானது எப்படி?
ராமநாதபுரம் மாவட்டத்தை ‘வானம் பார்த்த பூமி’, ‘வறட்சி மாவட்டம்’ என பொதுவாக மக்கள் அழைப்பது வழக்கம். இந்த மாவட்டத்துக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் வடகிழக்கு பருவமழை, கடந்த சில வருடங்களாக சரிவர பொழியவில்லை. இதனால் அனைத்து பகுதிகளிலும் விவசாயம் அடியோடு பாதிக்கப்பட்டன. இதனால் இங்குள்ள விவசாயிகள் முதல் போக சாகுபடியில் மட்டுமே ஆர்வம் செலுத்தினர். இரண்டாம் போக சாகுபடி மீது அவர்கள் பெரிய ஆர்வம் காட்டவில்லை.
பத்ம சேஷாத்திரியில் 10 ஆண்டுகளில் 300க்கும் மேற்பட்ட மாணவிகள் பாதிப்பு
விடுதலை : பத்ம சேஷாத்திரி பள்ளியில் 10 ஆண்டுகளில் 300க்கும் மேற்பட்ட மாணவிகள் பாதிப்பு
பள்ளி முதல்வர் கீதா, தாளாளர் ஷீலாவிடம் மீண்டும் விசாரணை நடத்த முடிவு
சென்னை,ஜூன்10- சென்னை பத்ம சேஷாத்திரி பள்ளி மாண விகளுக்கு பாலியல் தொல்லை தொடர்பான விவகாரத்தில் அப்பள்ளியின் முதல்வர், தாளாளர் ஆகியோரிடம் காவல்துறையினர் மீண்டும் விசாரணை நடத்த உள்ளனர்.
அப்பள்ளி மாணவிகளிடம் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் ராஜகோபாலன் அளித்த வாக்கு மூலத்தின் படி,
கடந்த 10 ஆண்டு களில் ஆசிரியரால் பாதிக்கப்பட்ட 300 மாணவிகளின் பட்டியலை காவல்துறையினர் சேகரித்து வருகின்றனர்.
பத்ம சேஷாத்திரி பள்ளியின் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவி களுக்கு ஆன்லைன் வகுப்பின் போது, வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் மீது,
பாதிக்கப் பட்ட மாணவிகள் தங்களது டிவிட்டர் பக்கத்தில் அவருடையே அரை நிர்வாண புகைப்படத்துடன் புகாரை பதிவு செய்தனர்.
வியாழன், 10 ஜூன், 2021
தமிழ்நாட்டு தலைவர்களின் ஈழப்போர் குற்றங்கள்! .. சமூக ஊடக லீக்ஸ்!
Ravishankar Ayyakkannu : "தமீழழ விடுதலைப் போராட்டம் என்பது அந்த நாட்டு மக்களின் இறையாண்மைப் பிரச்சினை;
அவர்களின் போராட்ட வழிமுறைகளை முடிவு செய்யும் முழு உரிமை அவர்களுக்கு உண்டு;
தமிழ்நாட்டுத் தமிழர்கள் அதை விமர்சிக்கவோ குறுக்கிடவோ கூடாது"
என்று சிலர் சொல்கிறார்கள்.
தமிழீழம் ஏதோ கியூபாவுக்குப் பக்கத்து நாடு என்றால் நாமும் இப்படி இருக்கலாம்.
ஆனால்,
1989 - தமிழீழ விடுதலைப் புலிகள் சென்னையில் வைத்து செய்த பத்மநாபா படுகொலையால் திமுக ஆட்சி இழந்தது.
1991 - ராஜீவ் படுகொலையால் திமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பை இழந்தது மட்டுமல்லாமல் கட்சியே தடை செய்யப்படும் அளவுக்குப் போய் மீண்டு வந்தது.
2011 - மீண்டும் ஈழப்போரே தேர்தல் பிரச்சினையாகக் கிளப்பப்பட்டு திமுக ஆட்சியை இழந்தது.
1980 கள் முதல் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு தந்த காரணத்தாலேயே தமிழ்நாட்டில் பலர் பெரும் துயரத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள். சிறைப்பட்டிருக்கிறார்கள்.
புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டு அங்கே சட்டமன்ற கூட்டமும் நடந்து முடிந்திருந்த நிலையில்...!
Sowmian Vaidyanathan : நான் ஏற்கனவே ஓ பி எஸ் பற்றி எழுதியிருந்தேன். அவர் பக்குவமாக பேசுவது போல பேசி, அதிமுக ஆட்சியில் நியமித்த தற்காலிக பணியாளர்களை நீக்காமல் பார்த்துக் கொண்டார். அதே போல் தலைவர் தளபதியாரின் செயல்பாடுகளுக்கு திமுக தொண்டர்களால் கேடு வரும் என்று பேசி...
கொரானா தடுப்பூசியை மக்களுக்கு போடாமல் திமுகவினரே மிரட்டி போட்டுக் கொள்கின்றனர் என்ற நஞ்சை உமிழ்ந்தார்...
இந்த நிலையில்....
தலைவர் கலைஞர் பார்த்துப் பார்த்து... ஒவ்வொரு செங்கல்லிடம் பேசிப் பேசி, பழங்கால திராவிட கட்டிடக் கலையில் உருவாக்கிய ஆசியாவின் மிகப் பெரிய பசுமைக் கட்டிடத்தை....
அது இன்றைக்கு சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகமாக செயல்பட்டுக் கொண்டிருந்தால்... இந்தியாவிலேயே மிகச் சிறந்த ஐகனாக... பேசு பொருளாக...
மத்திய அரசின் தடையை உடைத்த மா .சுப்பிரமணியம்! கொரோனா தடுப்பூசி கையிருப்பை வெளியே சொல்ல கூடாது.. மத்திய அரசு !
Veerakumar - tamil.oneindia.com : டெல்லி: கொரோனா தடுப்பூசி கையிருப்பு தொடர்பான தகவல்களை வேறு எந்த நிறுவனத்துடனும் பகிர்ந்து கொள்வதை மத்திய சுகாதார அமைச்சகம் தடை செய்துள்ளது.
இது "சென்சிட்டிவ்" டேட்டா என்று மத்திய அரசால் குறிப்பிடப்பட்டுள்ளது.
அனைத்து தடுப்பூசிகளின் கையிருப்பு மற்றும் அவற்றின் மூவ்மென்ட் குறித்து மாநிலங்கள், மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டியது கடமை.
அதேபோல, ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டு திட்டத்தின் உதவியுடன் இந்தியாவில் செயல்படுத்தப்படும் மேலாண்மை அமைப்பான எலக்ட்ரானிக் தடுப்பூசி நுண்ணறிவு வலையமைப்பும் ( (EVIN) தடுப்பூசி பற்றிய அப்டேட்களுக்கு பயன்படுகிறது
அப்டேட் 2012-13 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட பின்னர், தேசிய முதல் மாவட்டங்கள் வரை தடுப்பூசி சேமிப்பின் அனைத்து மட்டங்களிலும் தடுப்பூசி கையிருப்பு மற்றும் அவை எந்த வெப்பநிலையில் பாதுகாக்கப்படுகிறது என்பது குறித்த தகவல்கள் ஈவின் வலைத்தளத்தில் அப்டேட் செய்யப்படுகிறது.
சிவசங்கர் பாபா: அதிரவைக்கும் ஆறு மணி நேர வீடியோ!
சிவசங்கர் பாபாவைச் சுற்றி சுமார் முப்பது வயது மதிக்கத் தக்க இளம் தாய்மார்கள் அமர்ந்திருக்கிறார்கள். பாபாவின் பள்ளியில் படிக்கும் மாணவிகளின் தாய்கள்தான் அவர்கள்.
நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய குழு அமைப்பு- ஒரு மாதத்திற்குள் அறிக்கை தாக்கல்
மாலைமலர் : நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு உரிய புள்ளி விவரங்களை ஆய்வு செய்து, தமிழ்நாட்டிலுள்ள பின்தங்கிய மாணவர்களின் நலனைப் பாதுகாத்திடத் தேவையான பரிந்துரைகளை அரசுக்கு அளிக்கும்.
சென்னை: நீட் தேர்வின் தாக்கம் குறித்தும், நீட் தேர்வுக்கு மாற்றாக அனைவரும் பயன்பெறத்தக்க வகையிலான மாணவர் சேர்க்கை முறைகள் குறித்தும் அரசுக்கு பரிந்துரைகளை அளிப்பதற்காக,
ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் கல்வியாளர்கள் மற்றம் சம்பந்தப்டட அலுவலர்கள் அடங்கிய உயர்நிலைக் குழு அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பின்படி,
சீன யானை கூட்டம் இடம் பெயர்ந்து செல்லும்.. படுத்துறங்கும் காட்சி!
தினமணி :சீனாவில் வலசை (பறவைகள், விலங்குகள் ஆகியவை பருவகாலங்களை ஒட்டி புலம் பெயருவதைக் குறிக்கும்.) செல்லும் யானைக் கூட்டம் உலக மக்களின் கவனத்தைப் பெற்றிருக்கும் நிலையில், தங்களது நீண்ட நெடிய பயணத்துக்கிடையே அவைகள் படுத்துறங்கிய காட்சி பார்ப்பவர்களின் முகத்தில் ஒரு சிறு புன்னகையை ஏற்படுத்தத் தவறவில்லை.
தென்மேற்கு சீனத்தின் யூனான் மாகாணத்தில் கடந்த 3-ஆம் தேதி இந்த 15 யானைகளும் கூட்டமாக மக்கள் வசிக்கும் பகுதிக்குள் நுழைந்து விட்டன.
யூனான் மாகாணத்தின் வனப்பகுதியை ஒட்டியிருக்கும் கும்மிங் எனும் இடத்தில் அந்த யானைகள் தங்கியிருந்தன. அங்குதான் அந்த அழகிய காட்சி படமாக்கப்பட்டது.
சுமார் ஓராண்டுகாலமாக இந்த 15 யானைகள் சீனத்தில் தங்களது இயற்கையான சரணாலயப் பகுதியிலிருந்து கூட்டமாக வலசைச் செல்ல ஆரம்பித்தன. தற்போது 500 கிலோ மீட்டர் தூரத்தை அவைகள் கடந்திருக்கும் நிலையில், உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
சாதி வெறி குடிகாரர்களுக்கு சிகரெட் கொடுக்காத குறவர் மக்கள் மீது கொலைவெறி தாக்குதல்!.. கிருஷ்ணகிரி மாவட்டம்,
இலக்கியன் சூனாம்பேடு : சாதி வெறி குடிகாரர்களுக்கு சிகரெட் கொடுக்காத தலித் மக்கள் மீது கொலைவெறி தாக்குதல்/ வன்கொடுமை.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், ராயன்கோட்டை காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பாஞ்சாலி நகர் குறவர் மக்கள் சுமார் 70 குடும்பம் வசித்து வருகிறது.
இவர்கள் தலைசுமையாக பாத்திரங்கள் வாங்கி விற்று தொழில் செய்து வசித்து வருகிறார்கள்.
இதன் அருகிலேயே கோட்டை கிராமம் உள்ளது. இங்கு வன்னியர், நாயுடு, உப்பார் என்ற சாதி மக்கள் வசிக்கிறார்கள்.
இந்த பட்டியல் சாதி அல்லாத சாதி வெறியர்கள்
பாஞ்சாலி நகர் குறவர் மக்கள் வசிப்பிடத்தில் மது அருந்துவது வழக்கமாம்.
ஏற்கனவே பலரை தாக்கி சாதி பெயர் சொல்லி டேய் குற பயலே தே.....வி...டி...யா வெளியூர் இருந்து வந்து நல்ல முன்னேரிடீங்க உங்களை இந்த ஊரைவிட்டே துரத்தணும் என பேசுவதும் பின்னர் போலீஸ் போகாதீங்க தாயா பிள்ளையா கதை பேசி கொள்வதும் வழக்கமாம்.
வழக்கம் போல கடந்த 04.06.2021 பிற்பகல் 4.30மணிக்கு மது அருந்திய பட்டியல் சாதி அல்லாத உப்பார் சாதி இளைஞர் கள் துர்வாசன், மஞ்சு, அருண்மொழி என்ற தலித் பெண்ணிடம் உனது கடையை சிகரெட் கொடு என்று கேட்க கொரோன நேற்று கூட போலீஸ் வந்து திறக்க கூடாது என்று கூறி உள்ளது
மாற்று திறனாளிகளும் உதவியாளர்களும் நகர பேருந்துகளில் இலவச பயணம்!. தமிழ்நாடு அரசு அறிவிப்பு
கலைஞர் செய்தி - Vignesh Selvaraj : மாற்றுத் திறனாளிகள், அவர்களுடன் பயணிக்கும் உதவியாளர் ஒருவர் நகர பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணம் செய்வதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் இயங்கக்கூடிய அரசுப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்வதற்கான அறிவிப்பை முதலமைச்சராகப் பதவியேற்ற அன்றே வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதன் தொடர்ச்சியாக, திருநங்கைகளுக்கும் நகரப் பேருந்துகளில் இலவச பயணம் என அறிவிக்கப்பட்டது.
ஆய்வின்போது ஆடம்பர உணவுகள் ஏற்பாடு செய்யவேண்டாம்-வெ.இறையன்பு வேண்டுகோள்!
நக்கீரன் செய்திப்பிரிவு : தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மாவட்டங்களில் ஆய்வு செய்து வருகிறார்.
இந்நிலையில் ஆய்வின் போது ஆடம்பர உணவுகள் வேண்டாம் என தற்போது மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதத்தின் மூலமாக வலியுறுத்தியுள்ளார்.
அதில், 'ஆய்வு செய்ய வரும்போது மாவட்ட நிர்வாகத்தினர் ஆடம்பர உணவுகளை ஏற்பாடு செய்ய வேண்டாம்.
காலை, இரவு நேரங்களில் எளிய உணவும், மதியம் இரண்டு காய்கறிகளுடன் கூடிய சைவ உணவும் போதும்' என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஏற்கனவே, அரசு விழாக்களில் தான் எழுதிய புத்தகங்களை பரிசாக வழங்க கூடாது அது சுய விளம்பரமாக பார்க்கக்கூடும் என தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சோதனைக்காக 5 நிமிடம் நிறுத்தப்பட்ட ஆக்சிஜன் விநியோகம்!
minnambalan :உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சோதனைக்காக நோயாளிகளுக்கான ஆக்சிஜன் சப்ளை 5 நிமிடம் நிறுத்தப்பட்டது.
இந்தியாவில், குறிப்பாக வட மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை மிகப் பெரிய பிரச்சினையாக இருந்தது. இதனால் ஏராளமானோர் உயிரிழந்தனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், பரிசோதனைக்காக ஆக்சிஜன் சப்ளையை 5 நிமிடம் நிறுத்திய மருத்துவமனை உரிமையாளரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா நகரில் ‘பராஸ்’ என்ற தனியார் மருத்துவமனை உள்ளது. இங்கு, கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நகரில் மற்ற மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பதாலும், இந்த மருத்துவமனையில் ஆக்சிஜன் இருப்பு அதிகம் இருப்பதாலும் இங்கு நோயாளிகள் அதிகமான அளவில் வருவதாக கூறப்படுகிறது.
லட்சத்தீவில் ஒரு இந்துத்துவா வத்திக்கான்.. சங்கிகளின் எல்லைகடந்த பேராசை
aramonline.in - கே.பாலகிருஷ்ணன் : லட்சத் தீவில் நடக்கும் இந்து ராஷ்டிராவிற்கான முன்னெடுப்புகள்..!
லட்சத்தீவில் நடப்பது நாளை இந்தியா முழுமைக்கும் பாஜக அரசு செயல்படுத்த உள்ள இந்து ராஷ்டிரா திட்டத்தின் முன்னோட்டமா..?
என்ற சந்தேகம் மனசாட்சியுள்ள யாருக்கும் தோன்றக் கூடும்…!
அதி மோசம், படு அநாகரீகம், கெடு நோக்கம் கொண்ட ஒரு இந்துத்துவ நிர்வாகத்திற்கான மாடலை அங்கு நிறுவிக் கொண்டுள்ளது பாஜக அரசு!
இதனால், இந்திய அரசின் உயர் பொறுப்புகளில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்,ஐ.பி.எஸ், ஐஎப்.எஸ் அதிகாரிகள் 93 பேர் பிரதமர் மோடிக்கு ஆழ்ந்த வருத்ததுடன் ஒரு கடிதம் எழுதியுள்ளனர்.
இவர்கள் அரசியலமைப்புச் சட்டத்தின்வழி நடக்க வலியுறுத்தும் குழு (constituition conduct group)’ என்ற அமைப்பை நடத்தி வருகின்றனர்.
அவர்கள் எழுதியுள்ள அந்த கடிதத்தில், ஓய்வு
ஊழல் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு மீண்டும் முக்கியத்துவமா..? -“அறப்போர் இயக்கம்
இதன் காரணமாக ஊழல் ஆட்சியாளர்களின் பாக்கெட்டுக்குள் போக இருந்த பல ஆயிரம் கோடி மக்கள் வரிப்பணம் அரசு கஜானாவுக்கு ஒரளவு வந்துள்ளது.
கடந்த அ.தி.மு.க ஆட்சியில் அறப்போர் இயக்கம் வெளிச்சத்துக்கு கொண்டுவந்த பல்வேறு ஊழல் விவகாரங்களை கண்ணுற்ற மு. க. ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு ஆளான சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரினார் .ஆனாலும் தமிழக லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அறப்போர் இயக்கம் ஆதாரங்களுடன் அளித்துள்ள பத்து ஊழல் புகார்கள் அந்த துறையில் கிடப்பில் உள்ளன.
புதன், 9 ஜூன், 2021
நால்வர் கூட்டணிக்கு மணல் குவாரி.. துரைமுருகனைச் சுற்றும் ஆடியோ சர்ச்சையும் கதிர் ஆனந்த்தின் பதிலும்!
தமிழ்நாடு முதலமைச்சரிடம் பொதுமக்கள் புகார் அளிக்க இணையதளம் தொடக்கம்
மாலைமலர் :முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பொதுமக்கள் புகார் அளிக்க முதலமைச்சரின் தனிப்பிரிவு இணையதளம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை: முதல்வரின் தேர்தல் பிரசாரத்தில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்வின் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு 100 நாட்களுக்குள் தீர்வு காணும் பொருட்டு, ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற புதிய துறை உருவாக்கப்பட்டது. இத்துறையில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பொதுமக்கள் புகார் அளிக்க முதலமைச்சரின் தனிப்பிரிவு இணையதளம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.
http://cmcell.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பொதுமக்கள் புகார்களை அளிக்கலாம். புகார்கள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்.
கனடா 4 முஸ்லிம்களை.. வெறி கொண்டு லாரி ஏற்றி கொன்ற 20 வயது இளைஞர்.. 9 வயது சிறுவன் உயிர் ஊசல்.. அதிர்ச்சி
Hemavandhana - tamil.oneindia.com : ஒட்டாவா: இஸ்லாமியர்கள் என்பதால் வெறியாகி, 4 பேரை லாரி ஏற்றி கொன்றே விட்டனர்.. இப்படி ஒரு சம்பவம் கனடாவில் நடந்துள்ளது.
கனடா நாட்டின் ஆண்டரினோ மாகாணம், ஹைட் பார்க் சாலை பகுதியில், இரவு 8.40 மணிக்கு, 5 பேர் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தனர்..
இவர்கள் 5 பேருமே ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான்..
அப்போது, அந்த ரோட்டில் ஒரு லாரி வேகமாக வந்து இவர்கள் அனைவர் மீதும் கண்மூடித்தனமாக மோதியது.
அந்த குடும்பத்தை சேர்ந்த 74, மற்றும் 44 வயது பெண்கள், 46 வயது ஆண் மற்றும் 15 வயது சிறுமி ஆகியோர் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் சுருண்டு விழுந்து இறந்தனர்.
சுப்ரமணியன் சாமி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!
நக்கீரன் :பாலியல் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கும் தமிழக அரசுக்கு எதிராக செயல்படுவதாக பாஜக எம்.பி. சுப்ரமணியன் சாமி மீது முறையீடு.
இதில் உடன் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்திய மக்கள் மன்றத்தின் தலைவரான வாராகி தாக்கல் செய்துள்ள மனுவில்,
பள்ளி மற்றும் பயிற்சி வகுப்புகளில் ஆசிரியர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானவர்கள் அளித்த புகாரில்.
தமிழ்நாடு அரசு விசாரணை நடத்தி, கைது நடவடிக்கை எடுத்து வருவதை சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில், மாநிலங்களவை பாஜக உறுப்பினரான சுப்ரமணியன் சாமி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு அனுப்பிய கடிதத்தில்,
அயோத்தி ராமனின் மறுபக்கம் .. சொல்லாமல் மறைத்த பல பக்கங்கள்
அயோத்தி ராம ஜென்ம பூமியில் நடைபெறும் நிகழ்வை சிறப்பிக்கும் முகமாக அந்த ஜெகம் புகழும் உண்மை கதையை இங்கே காட்சிக்கு வைக்கிறோம் :
செல்லபுரம் வள்ளியம்மை: ராமன் ஒரு பணக்கார வீட்டு விளையாட்டு பிள்ளை. பணக்கார அமைச்சர்களின் மகன்களை போல் ஒரு அடாவடி உதவாக்கரை பையனாக இருந்தான் .மது மாது மற்றும் கேளிக்கை விடுதி வில்லங்கங்கள் என ஜாலியாக திரிந்தான். தசரதன் எவ்வளவோ முயற்சி செய்தும் ராமனை ஒரு பொறுப்புள்ள அரச வாரிசாக உருவாக்கவே முடியவில்லை பெரும் பிரயத்தனம் செய்து . தங்கள் அந்தஸ்த்துக்கு சமமான ஜனக மகாராஜாவின் புத்திரியான சீதையை கண்டுபிடித்தனர். அவளை எப்படியாவது ராமனுக்கு திருமணம் செய்து வைத்தால் ராமன் வழிக்கு வந்து விடுவான் என்று பல ஜால்ராக்கள் உபதேசம் செய்யதனர். சீதையின் சுயம் வர செய்தியும் வந்து சேர்ந்தது. இங்குதான் சுயம்வரம் என்ற பெயரில் வில்லங்கம் வந்தது. ராமன் சுயம்வரத்தில் வெல்லகூடிய அளவு பெரும் அழகனோ திறமைசாலியோ இல்லை.
தசரதன் சீதையின் மனதில் ராமனை பற்றி நல்ல விதமாக சொல்லிவைக்க சிலரை ஏற்பாடு செய்தான். இந்த தந்திரம் நன்றாக வேலை செய்தது. அடிமை சமுகத்தில் இது ஒன்றும் பெரிய காரியம் இல்லை. பணம் வருமென்றால் எதுவும் செய்ய தயாரான கூட்டம் தாராளமாகவே இருந்தது. அப்படி தப்பு தகவல் கொடுக்கப்போன வதந்தி கூட்டம் அந்த சீதைக்கு ஏற்கனவே ஒரு காதலன் இருப்பதாக அரசல் புரசலாக அறிந்தது. இது தசரதனுக்கு நல்ல செய்தி இல்லையே . எனவே அவர்கள் எல்லோரும் கப் சிப் என்று வாயை முடிக்கொண்டு விட்டனர். போதாக்குறைக்கு சீதை பற்றி இல்லாதது பொல்லாததாக தங்கள் பங்குக்கு போலி புகழுரைகளை வேறு அள்ளி வீசி விட்டனர் .
கேரளா ஆதிவாசி தலைவி பா.ஜ.க கூட்டணியில் சேர ரூ.10 லட்சம் ; ஆடியோ வெளியாகி பரபரப்பு
மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்திக்கு 7 ஆண்டு சிறை! தென் ஆப்பிரிக்காவில் ஆஷிஷ் லதா ராம்கோபின் சர்மா பணமோசடி
kuruvi.lk : பண மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மகாத்மா காந்தியின் 56 வயதான கொள்ளு பேத்திக்கு தென்னாப்பிரிக்கா டர்பன் நீதிமன்றத்தால் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் வாழும் பிரபல மனித உரிமை ஆர்வலர்கள் எலா காந்தி மற்றும் மறைந்த மேவா ராம்கோபிந்தின் மகள் ஆஷிஷ் லதா ராம்கோபின்( வயது 56) .
ராம்கோபின் அகிம்சைக்கான சர்வதேச மையத்தில் பங்கேற்பு மேம்பாட்டு முயற்சியின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநராக இருந்தார்.
இவர் மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்தி ஆவார். இவர் மீது தொழிலதிபர் ஒருவர் பண மோசடி செய்ததாக கடந்த புகார் அளித்தார்.
இலங்கை வரலாற்றில் சீன தேச இளவரசி...
Sivalingam Sivakumaran : இலங்கை வரலாற்றில் சீன தேச இளவரசியின் வரலாற்று பின்னணி ...
கடந்த மே மாதம் 26 ஆம் திகதி சீனாவின் தலைநகர் பீஜிங்கில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்தில் அனுஷ்டிக்கப்பட்ட வெசாக் கொண்டாட்டங்களின் படம் ஒன்றை, பி.ஆர்.ஐ.எஸ்.எல் தனது டுவீட்டர் தளத்தில் பதிவேற்றியுள்ளது..
சீனாவிற்கான இலங்கை தூதுவர் கலாநிதி பாலித கோகன்ன உட்பட சீன அதிகாரிகளுக்கு மத்தியில் ஒரு பெண்ணும் நிற்கிறார். இலங்கை கோட்டை இராஜ்ஜியத்தை ஆண்ட 6 ஆம் பராக்கிரமபாகுவின் 19 ஆவது தலைமுறை வாரிசான இலங்கை இளவரசி 'சு ஷி இன்' உம் இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டார் என அதில் விளக்கம் தரப்பட்டுள்ளது.
அந்த பதிவில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இலங்கை இதிகாசத்தின் படி 15 ஆம் நூற்றாண்டில் இலங்கையை ஆண்ட இளவரசர் ஒருவர் சீன நாட்டு பெண்ணை மணந்த பின்னர் சீனாவிலேயே தங்கி விட்டார். அவரின் நேரடி வம்சாவளியில் வந்த இளவரசியே சூ ஷி ஹின்
செவ்வாய், 8 ஜூன், 2021
திரு சொர்ணம் காலமானார் . முதுபெரும் திராவிட போராளி! திரைப்பட கதை வசனகர்த்தா இயக்குனர் தயாரிப்பாளர்!
திரு சொர்ணம் அய்யா |
நக்கீரன் :திரைப்பட இயக்குநரும் திரைக்கதை ஆசிரியருமான செர்ணம் இன்று (08.06.2021) உயிரிழந்தார். அவரது மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும், அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்துள்ள இரங்கலில், “திரைப்பட இயக்குநரும், திரைக்கதை ஆசிரியருமான சொர்ணம், திடீர் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
அவரது மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் முதல் பிள்ளையான முரசொலியை உருவாக்கிய ஆற்றல்மிகு எழுத்தாளர்களில் ஒருவரான இவர்,
ஆரம்ப கால துணையாசிரியராக இருந்து ‘பிறை வானம்’ என்ற தொடரை முரசொலியில் எழுதியவர். மாணவப் பருவத்திலேயே முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் கூர்மைப்படுத்தப்பட்ட சொர்ணம், சமுதாய சீர்திருத்தக் கருத்துகள் அடங்கிய ‘விடைகொடு தாயே’ என்ற புரட்சிகர நாடகத்தின் மூலம் கழகத்தின் கொள்கைகளைப் பட்டிதொட்டிக்கெல்லாம் கொண்டு சென்றவர்.
கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் எழுச்சியை ஏற்படுத்திய இந்த நாடகம் கழக மாநாடுகளில் நடத்தப்பட்டது.
அனைவரும் அர்ச்சகர் ஆகலாம்! ஆயிரம் ஆண்டுகளாக தொடரும் ஜாதீய சங்கிலி மீது விழுந்த பெருவெட்டு!
செல்லபுரம் வள்ளியம்மை எல்லா ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அறிவிப்பு!
இந்து மதமோ இஸ்லாமியமோ கிறிஸ்தவமோ பௌத்தமோ மற்றும் இதர மதங்களும் இன்னும் சில நூற்றாண்டுகளுக்கு அல்லது அதற்கு அப்பாலும் கூட வழக்கத்தில் இருக்கும்
மதங்கள் எதுவுமே இலகுவில் வழக்கொழிந்து போகாது
காலத்திற்கு ஏற்ற பல சீர்திருத்தங்கள் அவசியம்
அந்த சீர்திருத்தங்கள்,
மதங்கள் மீதான பல போலியான கற்பிதங்களை காலப்போக்கில் தவிடு பொடியாக்கிவிடும்.
சீர்திருத்தங்கள் தேவை இல்லை என்றால் இன்று வரை மனைவியை கணவனின் உடலோடு தீயிட்டு கொளுத்துவது தொடர்ந்து கொண்டே இருக்கும்
இந்து மதத்தில் மட்டுமல்ல எல்லா மதங்களிலும் சீர்திருத்த வாதிகளே மனிதாபிமானத்தை காத்துள்ளார்கள்
கருவறைக்குள் செல்வது என்பது ஏதோ கடவுளின் அருகிலேயே நிற்பது போலவும் அதற்கு பார்ப்பன பிறப்பு ஒரு அடிப்படை தகுதி என்று இன்றுவரை நம்பும் மக்கள் நிறைந்த உலகம் இது
சாதாரண மக்கள் எவருமே வழிபட்டு சிஸ்டம் படித்துவிட்டால் போதும் அந்த இடம் ஒன்றும் பிறப்பால் வருவது அல்ல அவை வெறும் கற்பிதங்கள் என்பது புரிந்துவிடும்
சங்கர மடத்தின் போன்: நிர்வாகியை நீக்கிய ஸ்டாலின்
minnambalam.com : சென்னை தென் மேற்கு மாவட்டம் மயிலாப்பூர் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த மாவட்ட பிரதிநிதி ஆர்.பாலு கட்சிக்கட்டுப்பாட்டை மீறிய காரணத்துக்காக அடிப்படை உறுப்பினர் பதவி உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார் என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் ஜூன் 7 ஆம் தேதி முரசொலியில் அறிவிப்பு வெளியிட்டார்.
கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பாலு திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினுடன் நெருக்கமானவர் என்பதால் இதுபற்றிய பரபரப்பு தமிழகம் முழுக்க திமுக நிர்வாகிகளிடமும் தொற்றிக் கொண்டது.
இதுபற்றி சென்னை திமுக வட்டாரத்தில் விசாரித்தோம்.
“மாவட்ட பிரதிநிதியாக இருக்கும் பாலு அவ்வப்போது திமுக தலைவரின் வீட்டுக்குச் செல்வார். உதயநிதி ஸ்டாலின் பின்னாலேயே நிற்பார். அவருக்கு அணிவிக்கப்படும் சால்வைகளை எடுத்துச் சென்று வைப்பார். இப்படி கட்சியினரிடத்தில் தான் தலைமைக்கு நெருக்கமாக இருப்பதாக காட்டிக்கொள்வார். உதயநிதி, அருள் நிதி படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்துள்ளார்.
பிறந்தநாளில் மனைவி தற்கொலை: பிரசன்னாவிடம் போலீஸ் விசாரணை!
minnambalam :திமுகவின் செய்தித் துறை இணைச் செயலாளரும், தொலைக்காட்சி விவாதங்களில் பங்குபெற்று பிரபலமானவருமான வழக்கறிஞர் தமிழன் பிரசன்னாவின் மனைவி இன்று (ஜூன் 8) தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தமிழன் பிரசன்னாவிடம் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளார்கள்.
சென்னை எருக்கஞ்சேரி இந்திரா நகரில் குடும்பத்தோடு வசித்து வந்த தமிழன் பிரசன்னாவின் மனைவி நதியாவுக்கு இன்று (ஜூன் 8) பிறந்தநாள். இன்று காலை நதியா தன் அறையிலிருந்து காலை 10 மணி வரை எழுந்திருக்காததால், பிரசன்னா கதவை உடைத்துத் திறந்துள்ளார். அப்போது மனைவி நதியா, தூக்கிட்ட நிலையில் மூர்ச்சையாகிக் கிடந்திருக்கிறார். உடனே ஸ்டான்லி மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றிருக்கின்றனர். அங்கே, ‘நதியா ஏற்கனவே இறந்து விட்டார்’என்று மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.
12 மாநில முதலமைச்சர்களுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
மாலைமலர் :சிறு, குறு, நடுத்தர தொழில்நிறுவனங்கள் கடன் தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் 12 மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை: அவர் எழுதியுள்ள கடிதத்தின் விவரம் வருமாறு:-
சிறு, குறு, நடுத்தர தொழில்நிறுவனங்கள், வாங்கிய கடன்களை திருப்பி செலுத்த கூடுதல் அவகாசம் தரப்பட வேண்டும்.
மத்திய நிதி அமைச்சர், ரிசர்வ் வங்கி ஆளுநர் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு 12 மாநில அரசுகளுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
இவ்வாறு முக ஸ்டாலின் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்
polimer.com :ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் சிறு கடனாளர்களுக்கு,
மருத்துவமனை கழிவறையில் செவிலியர் சுப்புலட்சுமி பிணமாக மீட்பு... மதுரை உசிலம்பட்டியில் பூபதியம்மாள் மருத்துவ
சில நாட்களுக்கு முன்பு இவரை சாதியின் பெயர் குறிப்பிட்டு மருத்துவ மனை நிர்வாகம் அவமானப்படுத்தி உள்ளது .
இந்த நிலையில் இவர் மருத்துவ மனையின் கழிவறையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்
இவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிகிறது வேறு சாதியை சேர்ந்த முருகன்ஜி என்பவரின் செல்வாக்கால் போலீசார் இவரின் உடலை அவசமாக உடல்கூறாய்வு செய்து எரித்துள்ளது
நீதி கேட்டு வந்த மக்களை போலீஸ் மிரட்டி கலைத்தாகவும் தெரிகிறது
இலங்கை இனக்கலவரங்களில் இந்திய முதலாளிகளின் வரலாற்று பங்களிப்பு
Rubasangary Veerasingam Gnanasangary : அதைவிட மோசமானது ஒன்று சிங்களப் பகுதிகளில், அதுவும் கண்டிய இராச்சியத்தில் தமிழ் குடியேற்றம் நடந்தமையை வசதிக்காக எவரும் பேசுவதில்லை.
சிங்கள மக்களில் சேனை பயிர் செய்யும் விவசாய மற்றும் காட்டு நிலங்களை ஏமாற்றியும் கட்டாயப் படுத்தியும் நிலங்களை அபகரித்து,
தேயிலைத் தோட்டங்கள் அமைக்க தமிழ் நாட்டில் இருந்து தமிழர்கள் வரவழைக்கப் பட்டதே நாட்டின் முதல் பிரச்சனை.
கொழும்பு வாழ் தமிழ் முதலாளிகள் குறிப்பாக செட்டிகள் மற்றும் தமிழ் நாட்டு இடைத் தரகர்கள் என்று பலரும் சிங்கள மற்றும் தமிழர்கள் இரு தரப்புக்களையுமே ஏமாறி உள்ளனர்.
Kothai Sengottuvel : உண்மையான பிரச்சனைகள் பேசப்படாமல் இன வெறுப்பு மட்டுமே எஞ்சி நிற்கிறது. அதையே அரைகுறைகள் தமிழ்நாட்டிலும் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள
Rubasangary Veerasingam Gnanasangary : இலங்கையில் குறிப்பாக தமிழர்கள் மத்தியில் தமிழ் இனவாதம் எனபது ஐம்பது வீதத்துக்கும் குறைவானது.
சிங்களவர்கள் மத்தியிலும் பெரிய அளவில் வேறுபாடுகள் இல்லை. இனவாதிகள் தங்களை ஒன்றிணைப்பதில் வெற்றி பெறுகிறார்கள். அவ்வளவுதான்.
Radha Manohar :இலங்கையின் பொருளாதாரம் இந்திய முதலாளிகளின் கைகளிலேயே பெரிதும் தங்கி இருந்தது தமிழர்களுக்கு எதிரான கலவரங்களுக்கு அது ஒரு முக்கிய காரணம்
இலங்கையின் ஏற்றுமதி இறக்குமதி மட்டுமல்ல கொழும்பிலும் கண்டி மலையகம் போன்ற இடங்களில் எல்லாம் பெரும் வர்த்தகங்கள் இந்தியர்களின் கையில்தான் இருந்தன
வடபழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான ரூ.300 கோடி நிலம் மீட்பு அமைச்சர் சேகர்பாபு ..
தினத்தந்தி : வடபழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான ரூ.300 கோடி நிலம் மீட்பு அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு செய்து அதிரடி
விருகம்பாக்கத்தில்வடபழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான ரூ.300 கோடி நிலத்தை அமைச்சர் சேகர்பாபு தலைமையிலான அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து மீட்டனர்.
பூந்தமல்லி, சென்னை விருகம்பாக்கம், கருணாநிதி நகர் பகுதியில் வடபழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான 5½ ஏக்கர் நிலம் உள்ளது.
தனியார் சிலரால் இந்த நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாற்றி இருப்பதாகவும், இதனால் கோவிலுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு இருப்பதால் கோவில் நிலத்தை மீட்கும்படியும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு புகார்கள் வந்தன.
ஓவியங்களின் அரசன் இளையராஜாவிற்கு ஓர் அஞ்சலி.
விகடன் : தத்ரூப ஓவியங்களின் அரசன் இளையராஜாவிற்கு ஓர் அஞ்சலி.
புகைப்படமா, ஓவியமா என எல்லோருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் தத்ரூப ஓவியங்களின் அரசன் இளையராஜா. ஆனந்த விகடனில் 2010 முதல் வெளிவரத் தொடங்கிய இவரது ஓவியங்கள் உலகம் முழுக்கப் புகழ்பெற்றன. பல்வேறு விருதுகளையும், அங்கீகாரங்களையும் பெற்றிருக்கும் ஓவியர் இளையராஜா நேற்று நள்ளிரவு 12 மணியளில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இவருக்கு வயது 43.
கும்பகோணம் அருகே செம்பியவரம்பில் எனும் கிராமத்தில் பிறந்தவர் இளையராஜா. ஐந்து அண்ணன்கள், ஐந்து அக்காக்கள் என மிகப்பெரிய குடும்பத்தில் பிறந்த கடைசி மகன். கடந்த வாரம் அக்கா மகளின் திருமணத்துக்காக கும்பகோணத்துக்குப்போனவர், சில நாட்களுக்கு முன்னர் சென்னை திரும்பியிருக்கிறார். ‘’ஊரில் குளத்தில் குளித்ததால் சளி பிடித்திருக்கிறது’’ என நண்பர்களிடம் சொன்னவர் அவராகவே மருந்து கடையில் மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டிருக்கிறார். பின்னர் அவர் குடும்பத்தில் பலருக்கும் கொரோனா தொற்றுப்பரவ ஆரம்பிக்க சில நாட்களுக்கு முன்னர் மூச்சடைப்பின் காரணமாக எழும்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
திடீர்னு வார்டுக்கள் நுழைந்து.. "நல்லா இருக்கீங்களா".. மலைக்க வைத்த கனிமொழி
Hemavandhana - /tamil.oneindia.com : சென்னை: பிபிஇ பாதுகாப்பு டிரஸ் அணிந்து திடீரென கொரோனா வார்டுக்குள் விசிட் செய்துள்ளார் திமுக எம்பி கனிமொழி.. அங்கிருந்த நோயாளிகளிடம் சென்று "எப்படி இருக்கீங்க? நல்லா இருகககீங்களா?" என்று நலம் விசாரித்துள்ளார்.
சென்னையில் கொரோனா பரவல் தாண்டவமாடியபோதே, தூத்துக்குடியை தொற்றில்லாமல் பாதுகாக்க கனிமொழி எம்பி முடிவெடுத்துவிட்டார்..
அதற்காக, தன்னுடைய தொகுதியில் 2 வாரங்களாகவே முகாமிட்டு வருகிறார். தன்னுடைய தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் அவரின் கால் படாத கிராமங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு விழிப்புணர்வுகளை கையில் எடுத்துள்ளார்.
இதற்காகவே 2 வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கியிருக்கிறார்.. இதில் ஒன்று வீடு, இன்னொன்று ஆபீசாக மாற்றியுள்ளார்..
நடிகை சாந்தினி வழக்கில் வசமாக சிக்கிய முன்னாள் அமைச்சர் மணிகண்டன்!
நக்கீரன் - நாகேந்திரன் : மலேஷிய நடிகை சாந்தினியின் புகாரையடுத்து வேண்டுமென்றே காயப்படுத்துதல், பெண்ணிடம் அத்துமீறி செயல்படுதல், நம்பிக்கை மோசடி,
ஒன்றுக்கு மேற்பட்ட முறை பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுதல்,
கொலை மிரட்டல், ஆபாசத்தை உள்ளடக்கிய புகைப்படங்களை வெளியிடுதல்,
பகிர்தல் என ஐபிசி 417, 376, 313, 323, 506(ஒ) மற்றும் 67-ஆ ஆகிய பிரிவுகளின் கீழ் மாஜி மந்திரி மணிகண்டன் மீது அடையாறு மகளிர் காவல்துறையினர் வழக்கைப் பதிவுசெய்தனர்.
"குடும்பத்துல உள்ள ஆட்களால்தான் எனக்கு நிம்மதி என்பதே கிடையாது.
இந்த பிரச்சனையில் என்னைக் கண்டுக்காமல் இருந்திருந்தால் இந்தளவு போயிருக்காது.
மானக்கேடான விஷயம் என அந்தாளு (செ.முருகேசன் -அவைத்தலைவர் -ராமநாதபுர மாவட்ட அ.தி.மு.க.) சொன்னதால, அவரு பேச்சைக் கேட்டு சென்னையிலுள்ள வக்கீல் ஆபீசுக்குப் போய் சமாதானம் பேசினேன்.
இந்த அறிகுறிகள் ஏற்பட்டால் உடனே தெரிவிக்கவும்" - கோவிஷீல்ட் பயனர்களுக்கு இந்திய அரசு வேண்டுகோள்!
நக்கீரன் :இந்தியாவில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுவருகின்றன.
இந்தியாவில் கோவிஷீல்ட், கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுவந்த நிலையில், கோவிஷீல்ட் தடுப்பூசி எடுத்துக்கொள்ளும் 10 லட்சம் பேரில் 0.61 பேருக்கு இரத்தம் உறைதல் பிரச்சினை ஏற்படுவதாக நோய்த் தடுப்புக்குப் பிந்தைய பக்கவிளைவுகளுக்கான தேசிய ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், கோவிஷீல்ட் தடுப்பூசிகளை எடுத்துக்கொண்டவர்களுக்கு குறிப்பிட்ட அறிகுறிகள் ஏற்பட்டால், அது இரத்தம் உறைதலுக்கான அறிகுறியாக இருக்கலாம் என்றும், அவ்வாறான அறிகுறிகள் ஏற்பட்டால் எங்கு தடுப்பூசி செலுத்திக்கொண்டார்களோ அந்த மையத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. மேலும், சுகாதாரத்துறை அமைச்சகம் கோவிஷீல்ட் தடுப்பூசி எடுத்துக்கொண்ட இருபது நாட்களுக்குள் கீழ்கண்ட அறிகுறிகள் ஏற்படுவதாக தெரிவித்துள்ளது.
அமைச்சர் சேகர் பாபு :100 நாட்களுக்குள் அனைதது ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டம்
Sivakumar Nagarajan : ஊடகங்கள் கண்டு கொள்ளாத அறநிலையத்துறை அமைச்சரின் உத்தரவு!
பின்னணி என்ன?
"தங்க நகைகள்... . வைரம்... வைடூரியம்.... வெள்ளி பொருட்கள்..... ஐம்பொன் சிலைகள். விலை மதிப்பில்லாத பழங்கால சிலைகள்.!
அரிய வகை பொருட்கள்... அசையும் சொத்துகள்..அசையா சொத்துகள்..
- என இந்து அறநிலையத்துறையின் கீழ் தமிழகமெங்கும் உள்ள கோவில் சொத்துபத்துகளை கணக்கெடுக்கவும்..
அந்த கணக்கெடுப்பில் பல நவீன யுக்திகளை புகுத்தி அந்த சொத்துகள் முழுவதையும் ஆவணப்படுத்த சொல்லி தமிழ்நாடு அரசு இந்து அறநிலையத்துறை அமைச்சர் திரு.சேகர் பாபு அவர்கள் கடந்த வாரம் ஒரு உத்தரவு பிறப்பித்து இருந்தார்.... அதை பற்றி தினகரன் செய்தி பத்திரிக்கையை தவிர வேறெதிலும் பெரிதாக செய்தி வரவில்லை..
திங்கள், 7 ஜூன், 2021
கவிஞர் தாமரையின் அதிமுக பாசமும் தமிழ் பாசமும்
Bilal Aliyar : நேற்று கவிஞர் தாமரையை விமர்சித்த போது பலரிடம் இருந்து அன்பான கேள்விகள் வந்தது…
தாமரை போன்றோர் அரசை பாராட்டுவது நமக்கொன்றும் பிரச்சனையில்லை..
ஆனால் இந்த அரசு என்ற இயந்திரம் பத்தாண்டுகளாக கடுமையான மக்கள் விரோத, மொழி விரோத, சமத்துவ விரோத, சமூகநீதி விரோத அமைப்பாக இயங்கி வந்திருக்கிறது…
அப்போது இந்த அரசு என்ற மக்கள் விரோத அமைப்பை சமரசமின்றி, ஏன் கட்சி வேறுபாடின்றி நாம் அனைவருமே கண்டித்திருக்கிறோம், விமர்சித்திக்கிறோம்.
பல நேரங்களில் ஒன்றிய அரசை ஆதரிக்கும் மேட்டுக்குடியாக தங்களை கட்டமைத்தைக்கொண்ட நண்பர்கள், செயல்பாட்டாளர்கள் கூட அடிமை, ஊழல் அதிமுக அரசை கண்டிக்க தவறியதில்லை.
இன்று ஆட்சிப்பொறுப்பேற்று ஒரு மாதம் கூட முடியாத நிலையில் ஒட்டுமொத்த அரசு இயந்திரமும், பத்தாண்டுகளாக சீரழிக்கப்பட்ட இந்த மாநிலத்தை தூக்கி நிறுத்த நேர்மையுடன் பணியாற்றுகிறது முதல் அமைச்சரின் தலைமையில், வழிகாட்டுதலில்..
இங்கு தான் தாமரையை நாம் வேடதாரியாக காட்டவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறோம்.
பசுவின் பின்பாகத்தை மட்டும்.. சீதாதேலி ஆணையிட்டதால் தான் சங்கிகள் கோமியம் குடிக்கிறார்கள்???
Gnanabharathi Chinnasamy : சங்கிகள் ஏன் கோமியம் குடிக்கிறார்கள் என்பது தெரியுமா?
பீகாரில் உள்ள கயாவிற்கு போய் இருக்கிறீர்களா?
இஸ்லாமியருக்கு மெக்கா போலவும் கிறுத்துவர்களுக்கு வாடிகன் போலவும் இந்துகளுக்கு கயா தான் புனிதத் தலைமையகம் என்பது பல முக்கிய சங்கிகளுக்குக் கூட தெரியாது..
கயா பீகாரில் இருக்கிறது. கயாவில் இறங்கியதும் "இது நக்சலைட்டுகள் நிறைந்த பகுதி" என்று எச்சரிக்கும் அரசின் விளம்பரப் பலகைகளை ஆங்காங்கு பார்க்க முடியும்.
கயாவை ஒட்டி தான் தண்டகாரண்யக் காடு இருக்கிறது...
ஆந்திராவில் இருந்து நேபாளம் வரை நீண்டு இருக்கும் தண்டகாரண்யக் காட்டில் மாவோயிஸ்டுகளின் ஆட்சி நடக்கிறது..
ராணுவ நடவடிக்கை மேற்கொண்டும் அந்த அமைப்பை மத்திய அரசால் சிதைக்க முடியவில்லை.
78 ஆயிரம் ஆண்டு பழமையான குழந்தையின் கல்லறை ஆப்ரிக்காவில் கண்டுபிடிப்பு
பி பி சி - விக்டோரியா கில் : 78 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒரு குழந்தை நல்லடக்கம் செய்யப்பட்டது, ஆப்ரிக்கவின் மிகப் பழமையான இடுகாட்டுப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.
மத்திய கற்காலத்தைச் சேர்ந்த 3 வயது குழந்தையின் கல்லறை கென்யா நாட்டில் ஒரு குகையில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
அக்குழந்தையின் கல்லறை மற்றும் எச்சங்களை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள், அக்குழந்தையின் தலையை எப்படி ஒரு தலையணையில் கிடத்தி இருப்பது போல அடக்கம் செய்திருக்கிறார்கள் என, நேச்சர் என்கிற பத்திரிகையில் விவரித்து இருக்கிறார்கள்.
விஞ்ஞானிகள் அக்குழந்தையை 'மடொடொ' என பெயரிட்டு இருக்கிறார்கள். மடொடொ என்றால் ஸ்வாஹிலி மொழியில் 'அந்த குழந்தை' என்று பொருள்.
மீதமிருக்கும் எழும்புத் துண்டுகளை பத்திரமாக பாதுகாக்கும் நோக்கில், சர்வதேச அகழ்வாராய்ச்சியாளர்கள் அணி அக்கல்லறையை பாதுகாப்பாக பிளாஸ்டரில் வெளிக் கொண்டு வந்திருக்கிறார்கள். எனவே அவ்வுடலைக் குறித்து மேலதிகமாக தெரிந்து கொள்ளத் தேவையான ஆராய்ச்சிகளை செய்ய, அதை பாதுகாப்பாக பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பி வைக்க முடிந்தது.
கல்லறை
சிவசங்கர் பாபா பள்ளிக்குள் சொகுசு பங்களா... கண்ணில் படும் மாணவிகள் பலாத்காரம்... தமிழ்நாடு கண்டிராத கொடூரம்!
Divakar M | Samayam Tamil : பிரபல தனியார் பள்ளி நிர்வாக இயக்குனர் சிவ சங்கர் பாபா மீது பள்ளியின் முன்னாள் மாணவிகள் பாலியல் புகார் தெரிவித்திருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் மீது மாணவிகள் கொடுத்த பாலியல் புகார் சம்பவம் தீயென பற்றி வரும் நிலையில்
தமிழ்நாடு இதுவரை பாத்திராத ஒரு பள்ளியின் பாலியல் கொடுமைகள் பொதுமக்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.
நமக்கெல்லாம் தெரிந்த ஒரு முகம்தான் அது. ஆன்மிகத்தின் போர்வையில் சல்லாபத்தில் ஈடுபட்ட எத்தனையோ காமுக சாமியார்களுக்கெல்லாம் சாமியாராக பாலியல் புகாரில் சிக்கியுள்ளார் சிவ சங்கர் பாபா.
திமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்! ( மாமூல் கேட்டு மிரட்டிய மயிலை திமுக நிர்வாகி பாலு)
மாலைமலர் :கட்டுமான நிறுவன பணியில் தலையிட்டதாக மயிலாப்பூர் பகுதி தி.மு.க. நிர்வாகியை கட்சியில் இருந்து நீக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மயிலாப்பூர் கிழக்கு பகுதி தி.மு.க. மாவட்ட பிரதிநிதியாக இருப்பவர் ஆர்.பாலு.
இவர் ஒரு கட்டுமான நிறுவனத்தின் கட்டுமான பணிகளில் தலையிட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து புகார் செய்தனர். இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
நீட் தேர்வை ரத்து செய்வதில் அரசு உறுதி : அமைச்சர் அன்பில் மகேஷ்
minnambalam : தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதையடுத்து தொடர்ந்து தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களும் பிளஸ் 2 தேர்வை ரத்து செய்தன. இருப்பினும், பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்கப்படும் என்ற கேள்வி மாணவர்களிடமும், பெற்றோர்களிடம் இருந்தது.
இந்நிலையில் இன்று(ஜூன் 7) செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ” பிளஸ் 2 வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு விவகாரத்தில் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று முடிவெடுக்கக்கூடாது என்பதற்காக குழுக்கள் அமைக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டது. கல்வியாளர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், சட்டமன்ற உறுப்பினர் குழு ஆகியோரிடம் ஆலோசனை கேட்கப்பட்டது.
தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கப்படும்
மாலைமலர் : புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றினார். அவர் பேசியதாவது:-
உலகில் உள்ள மற்ற நாடுகளைப் போல இந்தியாவும் கொரோனாவுக்கு எதிராக போராடி வருகிறது. கடந்த 100 ஆண்டுகளில் கொரோனா மிகப்பெரிய தொற்றுநோய்.
இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஆக்சிஜன் தேவை உயர்ந்துள்ளது. ஏப்ரல், மே மாதத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிக அளவில் இருந்தது. ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ரெயில் மற்றும் விமானம் மூலம் ஆக்சிஜன் விநியோகம் செய்யப்பட்டது. தற்போது இந்தியாவில் ஆக்சிஜன் உற்பத்தி பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கொரோனா அதிகரித்தபோது, இந்தியா தனது குடிமக்களை எப்படி காப்பாற்றப்போகிறது என உலக நாடுகள் சந்தேகப்பட்டன. உலக நாடுகளின் சந்தேகத்தை , தடுப்பூசி உற்பத்தி செய்ததன் மூலம் தீர்த்துள்ளோம்.
இலங்கை மாவனெல்லையில் புதையுண்ட நான்கு பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்
.battinews.com/ : இலங்கை மாவனெல்ல பகுதியில் சேற்று மலைக்குள் புதையுண்ட நான்கு பேர் ஒரே குடும்பத்தை சேர்த்த்வர்கள் ..கண்டுபிடிக்க துப்புக்கொடுத்த நாய்!!
நாட்டில் ஏற்பட்டிருக்கும் சீரற்ற வானிலையை அடுத்து பெய்த அடைமழை, வௌ்ளம், மண்சரிவுகளில் சிக்குண்டு, இதுவரையிலும் 16 பேர் மரணமடைந்துள்ளனர். மூவர் காணாமற் போயுள்ளனர்.
இயற்கை அனர்த்தங்களால், இரண்டு இலட்சத்து 70 ஆயிரத்து 12 பேர் இதுவரையில் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
மாவனெல்லை, தெவனகல பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வரும், சடலங்கள் நேற்று (05) மீட்கப்பட்டனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த புதையுண்டு இறந்தவர்கள்
வீடொன்றின் மீது மண்மேடு, சரிந்து விழுந்ததிலேயே ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை (வயது 57), தாய் (53 வயது), மகன் (வயது 34) மற்றும் 27 வயதான மகள் ஆகியோர் மரணமடைந்தனர்.
தமிழ்நாடு அதிகரிக்கும் கருப்பு பூஞ்சை நோய்: இதுவரை 847 பேர் பாதிப்பு
மாலைமலர் : தமிழ்நாடு அதிகரிக்கும் கருப்பு பூஞ்சை நோய்:.. 847 பேர் பாதிப்பு
சிகிச்சை முடிந்து குணமடைந்த அனைவருக்கும் கொரோனாவுக்கு பின் கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்படுகிறதா என்பதை சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் கண்காணித்திட வேண்டும் என்றும், மாவட்ட வாரியாக தேவையான சிகிச்சைகளை வழங்கிடவும் சுகாதாரத்துறை வலியுறுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனாவின் இரண்டாம் அலையைத் தொடர்ந்து, கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனாவிலிருந்து மீண்டவர்களை குறிவைத்து கருப்பு பூஞ்சை நோய் தாக்கி வருகிறது.
கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள், ஸ்டீராய்டு எடுத்துக்கொண்டவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகளை இந்த நோய் தாக்கி வருவதாக மருத்துவத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கருப்பு பூஞ்சை நோயால் தமிழகத்தில் இதுவரை 847 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மலாலா : ஆண் துணை வேண்டுமானால் அதற்கு திருமண கையெழுத்து அவசியமில்லை
thesamnet.co.uk : ஆண் துணை வேண்டுமானால் அதற்கு திருமண பேப்பர்களில் கையெழுத்துப் போட வேண்டிய அவசியமில்லை.” – பிரிட்டன் பத்திரிகையில் ஆணாதிக்கத்துக்கு எதிராக சாட்டை சுத்திய மலாலா
எதற்காக திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தானின் இளம் மங்கை மலாலா யூசுப்ஜாய் கேள்வி எழுப்பியுள்ளமை பாகிஸ்தான் அடிப்படைவாத மதவாதிகள் இடையே கடும் எதிர்ப்பை எழுப்பியுள்ளது.
அண்மையில் பிரிட்டன் பத்திரிகையான வோக் அட்டையில் மலாலா இடம் பெற்றார். அந்தப் படம் வைரலாகப் பரவியது. அந்த இதழுக்கு அளித்த பேட்டியில் இதுவரை பேசாத தமது தனிப்பட்ட வாழ்க்கையின் பல கேள்விகளுக்கு மலாலா பதிலளித்துள்ளார்.
அந்த பேட்டியில் அவர் , “பிரித்தானியாவில் தன்னுடைய சுவாரஸ்யமான பொழுதுகள் பற்றி விவரித்துள்ளார்.
மேலும் முஸ்லீம் பெண்கள், குறிப்பாக பாகிஸ்தானிய பெண்கள் கலாச்சாரம் என்ற போர்வையில் முக்கியமாக ஆடைக்கலாச்சாரம் என்று ஆணாதிக்கவாதிகள்ளால் நசுக்கப்படுகின்றார்கள். அவர்கள் குரலற்றவர்களாக உள்ளார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அகதிங்கற வார்த்தை... . எவனாவது உபயோகிச்சிங்கனா முஞ்சிலயே மிதிப்பேன். .. Brinda
Brinda : அகதிங்கற மாதிரி கேவலமான வார்த்தை எதுவுமில்ல. எவனாவது உபயோகிச்சிங்கனா முஞ்சிலயே மிதிப்பேன்.
உலகம் அத்தனை பேருக்குமானது. புரியாத அரசியல் கிறுக்கனுக போட்ட கோட்டுக்குள்ள பிறந்ததால நீ பெரிய புடுங்கியும் இல்லை,
அறிவுக்கெட்ட மடையனுக/சூழ்நிலையில் இருந்து வெளியேறினது அவுங்க தப்பும் இல்லை. Have some fucking sense.
சிங்களவனை எதிர்க்க இலங்கை தமிழர்களுக்கு தேவை/தைரியம் இருந்திச்சி.
நமக்கு அதுக்கு துப்பில்லாம மோடிகிட்ட அடிமையா இருந்திட்டு வெட்டியா அவனுகளை பார்த்து இந்தியா ஒன்றியம்னு வாய்சவடால் விட்டுட்டு இருக்கோம்.
நம்ம இந்திய அரசை எதிர்த்தா நம்ம நம்ம நிலைமையும் இது தான்.
Have some fucking sense. சக மனிஷங்களை பார்த்து இந்த மாதிரி கேவலமான வார்த்தைகளை முற்போக்காளர்கள் உபயோகிக்கிறது படு அசிங்கம்.
செல்லபுரம் வள்ளியம்மை :எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு!
கலைஞர் உரை :
எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்.
இப்பதிவு அசோக் மற்றும் இதர ஐ டி ரவுடி கும்பல்களே உங்களுக்காகத்தான்!
சகோதரி பிருந்தா உங்களுக்கு தெளிவாக ஒரு அறிவுரை கூறியுள்ளார் ..
இந்த ஆம்பிள அசிங்கங்கள் அளவுக்கு மீறி புசித்த உணவு சீரணமாவதற்கு புதிது புதிதாக யாரையாவது சொரிந்து கொண்டே இருப்பார்கள்!
திமுகவுக்கு தொண்டு செய்வதாக வேறு தம்பட்டம் அடித்து கொள்கிறார்கள்