நக்கீரன் செய்திப்பிரிவு : தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து அமைச்சர்களும் பொறுப்பேற்றுக்கொண்டனர்.
இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, அண்மையில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் சொத்து விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும் என அறிவித்திருந்தார்.
அதன்படி இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் ஆவணங்கள் www.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் கடந்த 9ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்பட்டன. பெண்களையும் அர்ச்சகராக்கும் திட்டம் இருப்பதாக தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பெண்களையும் அர்ச்சகராக்கும் திட்டம் உள்ளது. பற்றாக்குறை உள்ள இடங்களில் பெண்கள் நியமிக்கப்படுவர்'' என்றார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக