வெள்ளி, 11 ஜூன், 2021

பத்ம சேஷாத்திரியில் 10 ஆண்டுகளில் 300க்கும் மேற்பட்ட மாணவிகள் பாதிப்பு

May be an image of text that says 'பத்ம சேஷாத்திரி பள்ளியில் 10 ஆண்டுகளில் 300க்கும் மேற்பட்ட மாணவிகள் பாதிப்பு June 10, 2021 Viduthalai பள்ளி முதல்வர் கீதா, தாளாளர் ஷீலாவிடம் மீண்டும் விசாரணை நடத்த முடிவு'

விடுதலை : பத்ம சேஷாத்திரி பள்ளியில் 10 ஆண்டுகளில் 300க்கும் மேற்பட்ட மாணவிகள் பாதிப்பு
பள்ளி முதல்வர் கீதா, தாளாளர் ஷீலாவிடம் மீண்டும் விசாரணை நடத்த முடிவு
சென்னை,ஜூன்10- சென்னை பத்ம சேஷாத்திரி பள்ளி மாண விகளுக்கு பாலியல் தொல்லை தொடர்பான விவகாரத்தில் அப்பள்ளியின் முதல்வர், தாளாளர் ஆகியோரிடம் காவல்துறையினர்  மீண்டும் விசாரணை நடத்த உள்ளனர்.
அப்பள்ளி மாணவிகளிடம் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் ராஜகோபாலன் அளித்த வாக்கு மூலத்தின் படி,
கடந்த 10 ஆண்டு களில் ஆசிரியரால் பாதிக்கப்பட்ட 300 மாணவிகளின் பட்டியலை காவல்துறையினர் சேகரித்து வருகின்றனர்.
பத்ம சேஷாத்திரி பள்ளியின் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவி களுக்கு ஆன்லைன் வகுப்பின் போது, வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் மீது,
பாதிக்கப் பட்ட மாணவிகள் தங்களது டிவிட்டர் பக்கத்தில் அவருடையே அரை நிர்வாண புகைப்படத்துடன் புகாரை பதிவு செய்தனர்.


இது நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
அதைத் தொடர்ந்து நங்கநல்லூர் இந்து காலனி, 7ஆவது தெருவை சேர்ந்த பத்ம சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபலனை(வயது 59) கடந்த 24ஆம் தேதி பிடித்து விசாரணை நடத்தினர்.
மேலும், ஆசிரியர் பயன்படுத்திய செல்பேசி மற்றும் லேப்டாப்பை பறிமுதல் செய்து காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அதில் ஆசிரியர் மாணவிகளுடன் ஒன்றாக இருக்கும் ஆபாசப் படங்கள் மற்றும் வீடியோக்கள் சிக்கியது.
அதை தொடர்ந்து அசோக் நகர் அனைத்து மகளிர் காவல்துறையினர் ஆசிரியர் ராஜகோபாலன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இந்நிலையில் ஆசிரியர் ராஜ கோபாலனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் தெரிவிக்க 'வாட்ஸ் அப்' எண் வெளியிடப் பட்டது. அதைதொடர்ந்து  பத்ம சேஷாத்திரி பள்ளியில் தற்போது படித்து வரும் மாணவிகள் மற்றும் முன்னாள் மாணவிகள் என 40க்கும் மேற்பட்டோர் 'வாட்ஸ் அப்'பில் புகார் அளித்தனர். மாணவிகளின் தொடர் புகாரால் அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் ஆசிரியர் ராஜ கோபாலனை நீதிமன்ற அனுமதி யுடன் 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில்,அவர் கடந்த 10 ஆண்டுகளாக பத்ம சேஷாத்திரி பள்ளியில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு அதிக மதிப்பெண் எடுக்க உதவி செய்வதாக கூறி பாலியல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக