புதன், 9 ஜூன், 2021

தமிழ்நாடு முதலமைச்சரிடம் பொதுமக்கள் புகார் அளிக்க இணையதளம் தொடக்கம்

 மாலைமலர் :முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பொதுமக்கள் புகார் அளிக்க முதலமைச்சரின் தனிப்பிரிவு இணையதளம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை:   முதல்வரின் தேர்தல் பிரசாரத்தில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்வின் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு 100 நாட்களுக்குள் தீர்வு காணும் பொருட்டு, ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற புதிய துறை உருவாக்கப்பட்டது. இத்துறையில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பொதுமக்கள் புகார் அளிக்க முதலமைச்சரின் தனிப்பிரிவு இணையதளம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.
  http://cmcell.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பொதுமக்கள் புகார்களை அளிக்கலாம். புகார்கள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக