வியாழன், 10 ஜூன், 2021

தமிழ்நாட்டு தலைவர்களின் ஈழப்போர் குற்றங்கள்! .. சமூக ஊடக லீக்ஸ்!

 Ravishankar Ayyakkannu  : "தமீழழ விடுதலைப் போராட்டம் என்பது அந்த நாட்டு மக்களின் இறையாண்மைப் பிரச்சினை;
அவர்களின் போராட்ட வழிமுறைகளை முடிவு செய்யும் முழு உரிமை அவர்களுக்கு உண்டு;
தமிழ்நாட்டுத் தமிழர்கள் அதை விமர்சிக்கவோ குறுக்கிடவோ கூடாது"
என்று சிலர் சொல்கிறார்கள்.
தமிழீழம் ஏதோ கியூபாவுக்குப் பக்கத்து நாடு என்றால் நாமும் இப்படி இருக்கலாம்.
ஆனால்,
1989 - தமிழீழ விடுதலைப் புலிகள் சென்னையில் வைத்து செய்த பத்மநாபா படுகொலையால் திமுக ஆட்சி இழந்தது.
1991 - ராஜீவ் படுகொலையால் திமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பை இழந்தது மட்டுமல்லாமல் கட்சியே தடை செய்யப்படும் அளவுக்குப் போய் மீண்டு வந்தது.
2011 - மீண்டும் ஈழப்போரே தேர்தல் பிரச்சினையாகக் கிளப்பப்பட்டு திமுக ஆட்சியை இழந்தது.
1980 கள் முதல் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு தந்த காரணத்தாலேயே தமிழ்நாட்டில் பலர் பெரும் துயரத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள். சிறைப்பட்டிருக்கிறார்கள்.


புலி வாலைப் பிடித்த காரணத்தால் தமிழ்நாட்டின் முன்னேற்றம் 30 ஆண்டுகள் பின்னோக்கி இழுக்கப்பட்டது என்றே சொல்லலாம்.
தற்கொலை செய்ய நினைத்துக் கிணற்றில் குதிப்பவர்கள் தனியாகக் குதிக்கலாம். அல்லது, கல்லைக் கட்டிக் கொண்டு குதிக்கலாம்.
நம்மையும் சேர்த்து இழுத்துப் பிடித்துக் கொண்டு குதித்தால்,
தற்கொலை செய்யாதே. இது தேவையில்லை என்று சொல்லலாம். சாவது தான் உன் முடிவென்றால் என்னையாவது விட்டு விடு என்றாவது சொல்லலாம்.
தமிழ்நாட்டை விட்டு விடுங்கள்.
தமிழக அரசியல்
ராஜீவ் படுகொலை என்பது Collateral damage..
அதனால் ஜெயா ஆட்சிக்கு வருவார், என்றெல்லாம் யாரும் கணக்கு எடுத்து இருக்க மாட்டார்கள்..
ராஜீவ் கொலையை புலிகள் செய்து இருந்தால் அவர்களுக்கு கோவ பட காரணம் இருந்தது..
அமைதி படை என்கிற பெயரில் அட்டூழியம் செய்த ஆத்திரம் அவர்களுக்கு மட்டும் இல்லை, இங்கேயும் இருந்தது..
கலைஞரே Protocl மதிக்காமல் அமைதி படையை வரவேற்க முடியாது என்றார்...

G Shanmugakani : தமிழக அரசியல் ராஜீவ் கொலையால்தான் திமுக ஆட்சிக்கு வரவில்லை.

Raja Rajendran Tamilnadu  :  இதை முழுமையாக ஏற்க முடியாது. ராஜிவ் கொலைக்கு சில மாதங்களுக்கு முன்புதான் நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது. ஆட்சியைப் பிடித்தது வி.பி.சிங்.
அந்தக் கூட்டணிக்கு பாடுபட்டு அதைக் கட்டமைத்ததெல்லாம் கலைஞர்.
ஆனால் இங்கு ஒரே ஒரு தொகுதியைக் கூட திமுக வெல்லவில்லை. வாங்கியது பூஜ்யம்.
கூட்டணி சார்பாக நின்ற கம்யூனிஸ்ட் மட்டும் நாகையில் வென்றது !
இருந்தாலும் திமுக ஆட்சி கலைக்கப்பட்டதை மக்கள் விரும்பவில்லை !
ராஜிவ் கொல்லப்படாதிருந்தால், திமுக ஆட்சியைப் பிடித்திருக்குமோ இல்லையோ, ஜெயா அவ்வளவு பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றிருக்க முடியாது என்பது மட்டும் உண்மை !

G Shanmugakani :  ராஜீவ் கொல்லப்படாமல் இருந்திருந்தால் அதிமுக ஆட்சிக்கு வந்திருக்கவே முடியாது. ஊடகங்கள் அப்படித்தான் சொன்னன.
Balu Mani  : ராஜீவ் கொலையால் ஆடசிக்கும் வரமுடியவில்லை, திமுக காரன் சுப்புலட்சுமி, சிப்பிப்பாரை ரவிசந்திரன் அனுபவித்த இன்னல்களை சொல்லிமளாது, காரணம் திமுக என்ற இயக்கம்மட்டும்தான் ஈழ விவகாரத்தை உலகிற்கு வீரியமாய் எடுத்துகாட்டியது, அந்த விவகாரத்தில் ஒரு பங்குதாரர்தான் விடுதலைபுலிகள்,அவர்கள் செய்த தவறுக்கு இன்றளவும் பழிமை சுமக்கிறது திமுக, ஆனால் ஒரு நிமிடம் தலைவர் பிரபாகரனுடன் போட்டோ எடுத்தவனெல்லாம் பெரிய ஈழ ஆதரவாளர், பிரபாகரனை தூக்கில் போட சொல்லி தீர்மானம் போட்டவர்கள் எல்லாம் ஈழதாய், காலகொடுமை..

Ravishankar Ayyakkannu  :  அமைதிப் படையை வரவேற்கப் போகாதது அரசியல் வரைமுறைகளுக்கு உட்பட்ட எதிர்ப்பு. அதையும் கொலையையும் சமப்படுத்த வேண்டாம். சுத்தமாக அரசியல் அறிவே இல்லாமல் பழிக்குப் பழி என்று கொலை செய்த வெறி தான் ஈழத் தமிழர்கள் இக்கட்டில் கொண்டு வந்து நிறுத்தியது.

Thilipkumaar Ganeshan : மிகச்சரி

செல்லபுரம் வள்ளியம்மை  : பல விடயங்களை கடடமைக்க பட்ட பொதுப்புத்தியில்தான் பல புத்தி ஜீவிகளும் கூட சிந்திக்கிறார்கள் அல்லது நடிக்கிறார்கள்
ஈழவிடுதலை போராட்டம் மதுரை டெசோ மாநாடுவரை மிக வெற்றிகரமாக நடந்தது  
அந்த மதுரை டெசோ மாநாடும் அப்போது வரை தாக்குதல்களில் முன்னணியில் இருந்தது டெலோ இயக்கம்தான் என்பதுவும் மீண்டும் மீண்டும் சிந்தித்து பார்க்கவேண்டிய விடயமாகும்.
டெசோ மாநாடும் டெலோவும் கலைஞரின் ஆசீர்வாதத்தோடு ஈழம் அமைந்துவிடும் என்ற முடிவுக்கு எம்ஜியார் வந்திருந்தார்
அவர் பிரபாகரன் மூலம் ஸ்ரீ சபாரெத்தினத்தை கொலை செய்தார்  ஒரே கொலையில் பல காய்களை நகர்த்தினார் எம்ஜியார்  
அதன் பின்பு இது தொடர்ந்தது எம்ஜியாரின் வெற்றிகள் தொடர்ந்தது  ஈழப்போராட்டம் வெறும் பயங்கரவாத போராட்டமாக உருமாறியது  
இதற்கு எம்ஜியாரோடு தோளோடு தோளாக நெடுமாறன் வைகோ திருமா மற்றும் ஏராளமான பெரியார் அமைப்புக்கள் தொண்டர்கள் எல்லாம் அளப்பரிய போர்க்குற்றங்களை அரங்கேற்றினார்கள்
இந்த இடத்தில ஜூனியர் விகடன் போன்ற தமிழ் பத்திரிகைகள் ஆற்றிய கொலைப்பணி அளவுக்கணக்கில்லாதது.
இவர்கள் மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை தேவை .
இவர்களால் ஈழமக்கள் அடைந்த துயரம் கொஞ்சநஞ்சமல்ல  
வரலாறு இந்த கொலையாளிகளை மன்னிக்காது  

கிளாடியஸ் கிளாடிஸ்
இது இங்க உள்ள பெரியாரிய அமைப்புகள் உணர்ந்தால் சரி. ஆனாலும் இப்பவரை அவர்களால்தான் தமிழ்நாட்டுக்கு இவ்வளவு இழப்பு என்கிற குற்ற உணர்ச்சி அந்த அமைப்புகளுக்கு கொஞ்சம் கூட இல்லை என்னும்போது கடுமையான கோபம் வருகிறது..
Ranganathan Manni
1980 முற்பகுதியில் குட்டி மணி &தோழர்கள் கொல்ல பட்டபோது ஈழத்தில் இருந்து அகதிகளாக பல குடும்பங்கள் தமிழகம் வந்தனர். அதில் சில குடும்ப குழந்தை களுக்கு சென்னையில் பள்ளி களில் சேர்க்கைக்கு நாங்கள் பெரும் முயற்சி செய்து பெற்றோம் (ஈழ குழந்தை களுக்கு பள்ளி சான்றிதழ், பிறப்பு சான்றிதழ் தமிழகத்தில் செல்லாது. மேலே சொன்ன எல்லாவற்றையும் எப்போடியோ தயார் செய்து சரி செய்தோம். அப்போது நான் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்க நேர்ந்தது..  
கணன் சுவாமி
சும்மா கிடந்த மம்பட்டி பயலுகளை கூட்டிவைத்து ஆயுதப்பயிற்சி கொடுத்து அவனுக கையில் ஆயுதம் கொடுத்து பணம் கொடுத்து ஆயிரக்கணக்கான இளைஞர்களை இந்தியாவின் பிராந்திய நலனுக்காக இலங்கையுடன் போரை ஆரம்பித்து நாட்டை சீரளித்து பல நூறு ஆண்டுகள் சேர்க்கப்பட்ட மக்கள் சொத்தை நொடியில் அழிக்கக்காரணமான இந்தியாவை ஒரு வார்த்தை சொல்லி இருக்கணும் ரவிசார்.!
இந்தியாவின் இமாலயத்தவறு பிரபாகரனை உருவாக்கியது.
இந்தியா மட்டும் இவர்கள் பின்னால் இல்லை எனில் வஸ்தியாம்பிள்ளை போன்ற ஒரு போலீஸ் ஆபீஸரால் இவர்கள் அடக்கப்பட்டு இருப்பார்கள்.
அவ்வளவு இலகுவாக இந்தியா இந்த பிரச்சனையில் இருந்து தப்பித்து விடமுடியாது.
சேலம், ஒரத்த நாடு உத்தரபிரதேசம் போன்ற இடங்களில் இந்தியா நடத்திய தீவிரவாதிகள் பயிற்சிமுகாம் பற்றி ஒரு தெளிவான முடிவுக்கு வரணும். இடையிலே இருந்து வரலாற்றை பார்க்கும் போக்கை மாற்றணும்.
மேலும் ஒரு அரசியற்க்கட்சியின் தலைவர்களை முன்வைத்து ஆயுததாரிகள் இவ்வாறு இருக்கணும் என்று பேசுவது எல்லாம் கொஞ்சங்கூட சரியாக இல்லை. இனிமே கொஞ்சம் அதிக இந்த விடயங்களில் வயதான திமுக தலைவர்களை வைத்து பேசணும்.
இதெல்லாவற்றையும் விட செம வரலாறு மாலைதீவின் இந்திய இராணுவ தளம் அமைத்தது எப்படி என்று அதையாவது ஆயணும்..

கணன் சுவாமி
DrManohar Aldo எங்க போரை ஆரம்பித்தவனே அது தப்புங்க, ரொம்ப தப்புங்கனு எடப்பாடியார் மாதிரிலாம் பேசக்கூடாது. அதற்குள் இருந்து இன்னமும் மக்கள் மீளவில்லை.! 1960 களில் தமிழகத்தில் இருந்து மக்கள் கொழும்புக்கு போனா பெளச்சுக்கலாம் எனும் அளவில் இருந்த நாட்டை தெருவுக்கு கொண்டு வந்திருக்கிறது இந்த போர்.

கணன் சுவாமி
DrManohar Aldo போர் முடிந்து விட்டது. சீனாக்காரன் இராமேஸ்வரத்துக்கு பக்கத்திலேயே குடிவந்திட்டான். இந்தப்போரில் பிராந்திய வல்லரலசு இந்தியா படுதோல்வியை அடைந்திருக்கிறது என்று கவலைப்பட்டதாக ஒரு இந்தியரையும் பார்க்கவில்லை.
பகடைக்காயாக இலங்கை தமிழனை இந்தியா உபயோகித்த போர் வரலாறு இது இதில் மறுதலையாக நீங்கள் கவலைப்பட ஒன்றும் இல்லை ஆனாலும் இந்தப்போர் இலங்கைத்தமிழனையும் அவன் கல்வி பொருளாதாரத்தையும் அதலபாதாளத்தில் தள்ளி இருக்கிறது. நீங்கள் முன்னேறிக்கொண்டு இருக்கிறீர்கள் அவர்களையும் சேர்த்து முன்னேற்றணும்.! அந்த பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது ஒரு திமுக அபிமானி என்றவகையில் நான் உங்களிடம்
கேட்டுக்கொள்கிறேன்

கணன் சுவாமி
DrManohar Aldo ஏங்க ஆயுதங்களை கொடுத்து ஒரு குழுவை உருவாக்கியவர்களுக்கு தெரியணும், மேலும் தலைவர்னா இப்படி இருக்கணும்னு ஒரு அரசியற் தலைவருடன் ஆயுததாரியை கம்பேர் பண்ண முடியாது ஆயுததாரி கொலை தான் பண்ணுவான்.

கணன் சுவாமி
DrManohar Aldo இது சீமான் ஜோம்பிகளுக்கான அறிவுரை எதிர்வினைனா ஏற்றுக்கலாம். அந்தமாதிரி ஒரு வசைக்கூட்டத்தை தமிழகத்தில் உருவாக்கிய நாயை பேசுங்கள்.!

கணன் சுவாமி
DrManohar Aldo இந்தப்பிரச்சனை முற்றுப்புள்ளி வைத்து கையாளமுடியாதது தொடர்ந்து கொண்டே இருக்கும். இந்தப்போர் என்னை தூக்கியடித்துவிட்டிருக்கிறது. எனது ஊர் நெடுந்தீவு சீனாவுக்கு விற்கப்பட்டு இருக்கிறது எப்படி முற்றுப்புள்ளி வைப்பது!? மறுபடியும் இந்தியா அங்… See More

கணன் சுவாமி
DrManohar Aldo சாமி ஆள வுடுங்க இவனுக ரேஞ்சில் எவனும் இருக்க முடியாது. அதற்கு ரியாக்ட் பண்ண திமுக ஆட்சியை பிடித்திருக்க வேண்டியதில்லை. சீமான் திருமுருகன் காந்தி போன்ற தீவிரவாத ஆதரவாளர்கள் ஆபத்தானவர்களை ஒன்று சேர்க்க இந்திய உளவு நிறுவனத்தால் உருவாக்கப்… See More
 
கணன் சுவாமி
DrManohar Aldo இல்லை தட்டிக்கேட்கலைனு சொல்லிமுடியாது நான் தான் இவர்களிடம் இலங்கையனாக திமுக ஆதரவாளனாக பன்னிரண்டு வருடம் சண்டை போடும் ஆளாக இருக்கமுடியும்.
   
கணன் சுவாமி
DrManohar Aldo அனேக இன்றைய இளைஞர்கள் வெற்றிச்செல்வன் போன்றவர்களை வாசிக்க வேண்டுகிறேன்.
ஏற்றற்ற  89888  கணன் சுவாமி
தயவு செய்து இந்த ஆட்சிக்காலத்திலாவது தமிழகத்தில் இலங்கை அகதியாய் வாழும் இந்திய வம்சாவளி மக்களுக்காகில் இந்திய குடியுரிமையும் வீட்டு மனை பட்டாவும் முதல்வர் ஏற்பாடு செய்து கொடுக்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன்.! அவர்கள் கடந்த 200 ஆண்டுகளுக்கு மேலாக நாடற்றவராக வாழ்வது எல்லாம் பெருவலி.!

Ravishankar Ayyakkannu
ஈழப் போராளி இயக்கங்கள் தோன்றியதில், தொடர்ததில் இந்திய உளவுத் துறையின் பங்கை யாரும் மறுக்கவும் இல்லை. கண்டிக்காமலும் இல்லை. ஆனால், ஒரு stakeholder என்ற முறையில் விடுதலைப் புலிகள் எடுத்த நிலைப்பாடுகள் பற்றியும் பேச வேண்டுமே! அவர்கள் மீதான பேச்சுகள் வரும் போது எல்லாம் மற்றவர்களைக் கைகாட்டி தப்பிப்பது முறை இல்லை. யார் என்ன குழப்பினாலும் தங்களுக்கு என்ற சொந்த புத்தி வேண்டும் அல்லவா?

கணன் சுவாமி
நிச்சயமாக பேசணும் அதில் எனக்கு ஒருபோதும் மாற்றுக்கருத்தில்லை

Ravishankar Ayyakkannu
கணன் சுவாமி அதைத் தான் பேசுகிறோம். பேசாப் பொருள் என்பதால் பேசத் துணிகிறோம். வேறு யாரும் பேசுகிறார்கள் இல்லையே? மற்றவர்களுக்கு இந்தியா மீதோ வேறு யார் மீதோ விமர்சனம் இருந்தாலும் நாங்கள் தடுப்பது இல்லையே? சொல்லப்போனால் எல்லாரையும் அடிக்கும் இவர்கள் மிகக் … See More

கணன் சுவாமி
Ravishankar Ayyakkannu கருணாகரன், நிலாந்தன் போன்றவர்களை வைத்து பேசுங்கள் சிறப்பாக
இருக்கும் அவர்கள் கையால் இவனுகள் செருப்படி வாங்கும் போது தான் செம்மையா இருக்கும்.!

கணன் சுவாமி
ராஜபக்‌ஷ யதார்த்தவாதி என்று பிரபாகரனால் புகழப்பட்ட அரசியல்வாதி என்பதனால் அவரை விட்டுட்டார்கள் போலும் 120 கோடி வேற கொடுத்தார்கள்

1 கருத்து:

  1. தமிழ் நாட்டை பிடித்த பீடை கட்டுமரம் செத்தாலும் அவன் பெற்ற சனியன்கள் தமிழ் நாட்டை விடாது போல இருக்கே

    பதிலளிநீக்கு