செல்லபுரம் வள்ளியம்மை எல்லா ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அறிவிப்பு!
இந்து மதமோ இஸ்லாமியமோ கிறிஸ்தவமோ பௌத்தமோ மற்றும் இதர மதங்களும் இன்னும் சில நூற்றாண்டுகளுக்கு அல்லது அதற்கு அப்பாலும் கூட வழக்கத்தில் இருக்கும்
மதங்கள் எதுவுமே இலகுவில் வழக்கொழிந்து போகாது
காலத்திற்கு ஏற்ற பல சீர்திருத்தங்கள் அவசியம்
அந்த சீர்திருத்தங்கள்,
மதங்கள் மீதான பல போலியான கற்பிதங்களை காலப்போக்கில் தவிடு பொடியாக்கிவிடும்.
சீர்திருத்தங்கள் தேவை இல்லை என்றால் இன்று வரை மனைவியை கணவனின் உடலோடு தீயிட்டு கொளுத்துவது தொடர்ந்து கொண்டே இருக்கும்
இந்து மதத்தில் மட்டுமல்ல எல்லா மதங்களிலும் சீர்திருத்த வாதிகளே மனிதாபிமானத்தை காத்துள்ளார்கள்
கருவறைக்குள் செல்வது என்பது ஏதோ கடவுளின் அருகிலேயே நிற்பது போலவும் அதற்கு பார்ப்பன பிறப்பு ஒரு அடிப்படை தகுதி என்று இன்றுவரை நம்பும் மக்கள் நிறைந்த உலகம் இது
சாதாரண மக்கள் எவருமே வழிபட்டு சிஸ்டம் படித்துவிட்டால் போதும் அந்த இடம் ஒன்றும் பிறப்பால் வருவது அல்ல அவை வெறும் கற்பிதங்கள் என்பது புரிந்துவிடும்
எனவே எல்லா மக்களும் அர்ச்சகர் ஆகலாம் அதற்கு ஜாதி ஒரு தடை இல்லை என்று அறநிலைய துறை அமைச்சர் திரு சேகர் பாபு அவர்களின் அறிவிப்பு மிகவும் வரவேற்புக்கு உரியது.
இந்த அறிவிப்பானாது ஆயிரம் ஆண்டுகளாக தொடரும் ஜாதீய சங்கிலியின் மீது விழுந்த பெருவெட்டு என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
இதை நிகழ்த்தி காட்டிய திராவிட முன்னேற்ற கழக அரசுக்கும் அதை கொள்கை வழியில் நடத்தி செல்லும் மாண்புமிகு முதலமைச்சர் திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் தமிழ்கூறும் நல்லுலகம் என்றும் கடமை பட்டிருக்கிறது நன்றி - வாழ்த்துக்கள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக