சனி, 12 ஜூன், 2021

இலட்சத்தீவின் பெண் திரைப்பட இயக்குனர் ஆயிஷா சுல்தானா மீது தேச துரோக வழக்கு!

May be an image of 1 person, tree, outdoors and text

Muthu Krishnan  : யார் இந்த ஆயிஷா சுல்தானா ?
லட்சத்தீவின் முதல் பெண் இயக்குநர் ஆயிஷா சுல்தானா மீது தேசத்துரோக வழக்கு பதியப்பட்டிருக்கும் நிலையில், இலட்சத்தீவு மக்கள் அவருக்கு ஆதரவாக நிற்பதாக சபதமெடுத்திருக்கிறார்கள்.
லட்சத்தீவு சாகித்ய பிரவர்த்தக சங்கம் (Lakshadweep Sahitya Pravarthaka Sangam), ``ஆயிஷாவை தேசத்துரோகியாகச் சித்திரிப்பது தவறானது.
அவர் பிரஃபுல் படேலின் மனிதாபிமானமற்ற செயல்களுக்கு எதிராக நின்றவர். அவருக்கு ஆதரவாக ஒட்டுமொத்த லட்சத்தீவின் கலசார சமூகமும் துணை நிற்கும்'' என்று ஆயிஷாவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
ஆயிஷா சுல்தானாவுக்கு எதிராக தேசத்துரோக வழக்கு பதியப்பட்டது ஏன் ?
மலையாள நியூஸ் சேனல் ஒன்றில் நடந்த விவாத நிகழ்ச்சியில் பேசிய ஆயிஷா,
``(மனித) பயோ ஆயுதங்கள்கொண்டு, மத்திய அரசு லட்சத்தீவில் கொரோனா நோய்த் தொற்றைப் பரப்பிவருகிறது. லட்சத்தீவில் ஒருவர்கூட கொரோனாவால் பாதிக்கப்படாத நிலையே இருந்தது. 

ஆனால், இப்போது தினசரி 100 பேர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். பிரஃபுல் படேல் எடுத்த தவறான நடவடிக்கைகளின் விளைவுதான் இது'' என்று பேசினார்.
பா.ஜ.க-வினர் பலரும் அவருக்கு எதிராக பிரச்சாரத்தை தொடங்கியதும் இது குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில்,``டி.வி சேனல் விவாதத்தில் `பயோ ஆயுதம்' என்ற வார்த்தையை நான் பயன்படுத்தியிருந்தேன். படேலையும் அவரது கொள்கைகளையும்தான் நான் `பயோ ஆயுதம்’ என்று கூறினேன். படேல் மற்றும் அவரது பரிவாரங்கள் மூலம்தான் கொரோனா நோய்த் தொற்று லட்சத்தீவில் பரவியது. நான் படேலைத்தான் பயோ ஆயுதத்தோடு ஒப்பிட்டேனே தவிர, அரசாங்கத்தையோ நாட்டையோ அல்ல என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்'' என்று பதிவிட்டிருக்கிறார் ஆயிஷா.
மற்றொரு பதிவில்...
என்மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால், உண்மைதான் எப்போதும் வெல்லும். பிறந்த நிலத்துக்காக நான் தொடர்ந்து போராடுவேன். நாங்கள் யாருக்கும் அஞ்ச மாட்டோம். என் குரல் இப்போது இன்னும் சத்தமாக இருக்கும்.-
ஆயிஷா சுல்தானா
ஆயிஷா சுல்தானா நடிகை, மாடல், சமூக ஆர்வலர், இயக்குநர் எனப் பல முகங்கள் உண்டு. லட்சத்தீவில் கொண்டு வரப்பட்டிருக்கும் புதிய சட்டங்களுக்கு எதிராக முதன்முதலாகக் குரல் எழுப்பியவர்களில் ஆயிஷா சுல்தானாவும் ஒருவர்.
தொடர்ந்து பல்வேறு தரப்பிலிருந்தும் ஆயிஷாவுக்கு ஆதரவுகள் குவிந்துவரும் நிலையில், பா.ஜ.க-வினர் பலரும் அவருக்கு எதிராகக் களமிறங்கியிருக்கிறார்கள் கேரளத்தின், திருச்சூர் மாவட்ட பா.ஜ.க வினர் ஆயிஷாவுக்கு எதிராகக் காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக