மாலைமலர் : நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு உரிய புள்ளி விவரங்களை ஆய்வு செய்து, தமிழ்நாட்டிலுள்ள பின்தங்கிய மாணவர்களின் நலனைப் பாதுகாத்திடத் தேவையான பரிந்துரைகளை அரசுக்கு அளிக்கும்.
சென்னை: நீட் தேர்வின் தாக்கம் குறித்தும், நீட் தேர்வுக்கு மாற்றாக அனைவரும் பயன்பெறத்தக்க வகையிலான மாணவர் சேர்க்கை முறைகள் குறித்தும் அரசுக்கு பரிந்துரைகளை அளிப்பதற்காக,
ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் கல்வியாளர்கள் மற்றம் சம்பந்தப்டட அலுவலர்கள் அடங்கிய உயர்நிலைக் குழு அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பின்படி,
ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார். அந்த குழுவில் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், டாக்டர் ஜவகர் நேசன், மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர், சட்டத்துறை செயலாளர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர்/சிறப்பு பணி அலுவலர், மருத்துவக் கல்வி இயக்கக இயக்குநர், மருத்துவக் கல்வி இயக்கக கூடுதல் இயக்குனர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்தக் குழு உரிய புள்ளி விவரங்களை ஆய்வு செய்து, தமிழ்நாட்டிலுள்ள பின்தங்கிய மாணவர்களின் நலனைப் பாதுகாத்திடத் தேவையான பரிந்துரைகளை ஒரு மாத காலத்திற்குள் அரசுக்கு அளிக்கும்.
இந்தப் பரிந்துரைகளை ஆய்வு செய்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் என அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக