வியாழன், 10 ஜூன், 2021

சாதி வெறி குடிகாரர்களுக்கு சிகரெட் கொடுக்காத குறவர் மக்கள் மீது கொலைவெறி தாக்குதல்!.. கிருஷ்ணகிரி மாவட்டம்,

No photo description available.

இலக்கியன் சூனாம்பேடு  :  சாதி வெறி குடிகாரர்களுக்கு சிகரெட்  கொடுக்காத தலித்  மக்கள் மீது கொலைவெறி தாக்குதல்/ வன்கொடுமை.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், ராயன்கோட்டை காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பாஞ்சாலி நகர் குறவர் மக்கள் சுமார் 70 குடும்பம் வசித்து வருகிறது.
இவர்கள் தலைசுமையாக பாத்திரங்கள் வாங்கி விற்று தொழில் செய்து வசித்து வருகிறார்கள்.
இதன் அருகிலேயே கோட்டை கிராமம் உள்ளது. இங்கு வன்னியர், நாயுடு, உப்பார் என்ற சாதி மக்கள்  வசிக்கிறார்கள்.
இந்த பட்டியல் சாதி அல்லாத சாதி வெறியர்கள்
பாஞ்சாலி நகர் குறவர் மக்கள் வசிப்பிடத்தில் மது அருந்துவது வழக்கமாம்.
ஏற்கனவே பலரை தாக்கி சாதி பெயர் சொல்லி டேய்  குற பயலே தே.....வி...டி...யா  வெளியூர் இருந்து வந்து நல்ல முன்னேரிடீங்க உங்களை இந்த ஊரைவிட்டே துரத்தணும் என பேசுவதும் பின்னர் போலீஸ் போகாதீங்க தாயா பிள்ளையா கதை பேசி கொள்வதும் வழக்கமாம்.
வழக்கம் போல கடந்த 04.06.2021 பிற்பகல் 4.30மணிக்கு மது அருந்திய பட்டியல் சாதி அல்லாத உப்பார் சாதி இளைஞர் கள்  துர்வாசன், மஞ்சு, அருண்மொழி என்ற தலித் பெண்ணிடம் உனது கடையை சிகரெட் கொடு என்று கேட்க கொரோன நேற்று கூட போலீஸ் வந்து திறக்க கூடாது என்று கூறி உள்ளது

என்று மறுத்து உள்ளார். ஏண்டி குற தே.....வி...டி...யா  திறந்து தரமாட்டியா என  இழிவு செய்து பாக்கியலட்சுமி. சின்னப்பாப்பா, சவுத்திரி   ஆகியோர்  சேலையைப் பிடித்து இழுத்து வன்முறை தாக்குதலில் ஈடுபட்டு உள்ளனர் அதை பார்த்த செல்வம் என்பவர் செல் போனில் போலீசுக்கு போனே செய்து உள்ளார். மேற்படி எதிர்கால இருவரும் போலீசுக்கு எதுக்குடா போனே செய்யுற என்று அவரது செவ்வி பகுதியில் கையால் மாறிமாறி அடித்து கல்லை எடுத்து எரிந்து தலையில் காயம் ஏற்படுத்தி உள்ளனர். இதற்கு வீடியோ ஆதாரம் உள்ளது. செல்வதை தாக்கவிடாமல் பழங்குடி தினேஷ் என்பவர் தடுக்கிறார். பாதிக்கப்பட்ட மக்கள் ராயக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்து வாங்கி வைத்துக்கொண்ட போலீசார். காயம்பட்டவரை மருத்துவமனைக்கு அனுப்பவில்லை. எதிரிகள் மீது வழக்கு பதிவு செய்யவில்லை. ஐயா  எங்களுக்கு பாதுகாப்பு கொடுங்க என்று கேட்டு உள்ளனர். அதெல்லாம் ஒன்றும் நடக்காது போங்க என்று துரத்தி உள்ளனர்.
எதிரிகள் தூர்வாசன், மஞ்சு தங்கள் வன்னியர் சாதி நாயீடு  சாதி வெறியர்களை எல்லாம் சுமார்  25பேரை கம்பு கட்டை, பைப்பு கல் களோடு  அழைத்து வந்து செல்வம் தம்பி மனைவி தீபா என்ற விதவை பெண் வீட்டை தாக்கி உள்ளனர். அவர் வீடு ஓடுகளை அடித்து நொறுக்கி உள்ளனர். தீபாவை மருத்துவமனையில் வெளி காயம் இல்லை என மருத்துவர்கள் புறக்கணித்து உள்ளனர். மேற்படி சம்பவத்தினை போலீசாருக்கு தெரிவித்து போலீஸ்  வந்து எதிரிகளை துரத்தி உள்ளனர். பாதுகாப்பிற்கும் இருந்து உள்ளனர்.
தலித் மக்கள் இரவு 7.00 மணிக்கு எதிரிகள் தாக்கியதை புகார் செய்தபோது அந்த மனுவை வாங்கி அருணகிரி என்ற சாபு ஆய்வாளர் கிழித்து போட்டு உள்ளார். அதோடு மட்டும் அன்று எதிரிகளிடம் ஒரு பொய் புகாரை வாங்கி தலித் மக்கள் சாதி இந்து இரு பெண் அங்கே வந்ததாகவும் அவரை இழிவாக பேசி கோவிந்தராஜ் என்பவரை தாக்கியதாக 7 தலித்துகள் மீது வழக்கு பதிவு செய்து மூன்று பேரை சிறைப்படுத்தி உள்ளனர்.
இதுகுறித்து சம்மந்தப்பட்ட அருணகிரி சார்புஆய்வாளரிடம் விசாரித்தபோது அவர் குற்றத்தை மறுக்கவில்லை அவர்களை வரச்சொல்லுங்க .என்றார்.  ஆய்வாளர் சுப்பிரமணியன் எஸ்.பி. சி.ஐ.டி ஆகியோர்
 நீங்கள் இந்த வழக்கின் விசாரணை அதிகாரியா ? உங்க டி.எஸ்.பி. கு ஏன் தகவல் கொடுக்கவில்லை. மாவட்ட எஸ்.பி. என்ன அறிக்கை கொடுக்கிறீர்கள்?  மழுப்பலான உளறுகிறார்கள்.
டி.எஸ்.பி. சங்கீதா அவர்கள் நான் 04.06.2021இல் விடுப்பில் இருந்தேன் என்றும். என்னிடம் யாரும் வந்து புகார் சொல்லவில்லை நேற்று ராயக்கோட்டை சென்றேன் என்றும் வன்கொடுமை பிரிவுகளை விசாரித்து சேர்க்கிறேன் என்றும் கூறினார்.
எனவே கிருஷ்ணகிரி மாவட்ட  ஆட்சியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவ வன்கொடுமை  இடத்தினை பார்வை இடவேண்டும்.
பாதிக்கப்பட்ட மக்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கினை நீக்கம் செய்ய வேண்டும்.
 பட்டியல் சாதி மக்கள் கொடுத்த புகார் மனுவில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் வன்கொடுமை சட்ட பிரிவுகளை சேர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீருதவி/  இழப்பீடு வழங்க வேண்டும்.
வன்கொடுமை சட்டம் பிரிவு 4ன் கீழ் சார்பு ஆய்வாளர் அருணகிரி ஆய்வாளர் சுப்பிரமணியன்  மீது வழக்கு பதிவு செய்து அவரை தற்காலிக பணி நீக்கம் செய்து கைது செய்ய வேண்டும்.
கோட்டையும் பாஞ்சாலி நகரில் வசிக்கிற பட்டியல் சாதியான குறவர் மக்களுக்கு சட்ட பூர்வமான பாதுகாப்பினை மாவட்ட எஸ்.பி. சாய் சரண் உறுதி செய்ய வேண்டும்.
கி.ஆறுமுகம்.சமூக  நீதி, மதுரை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக