Sowmian Vaidyanathan : நான் ஏற்கனவே ஓ பி எஸ் பற்றி எழுதியிருந்தேன். அவர் பக்குவமாக பேசுவது போல பேசி, அதிமுக ஆட்சியில் நியமித்த தற்காலிக பணியாளர்களை நீக்காமல் பார்த்துக் கொண்டார். அதே போல் தலைவர் தளபதியாரின் செயல்பாடுகளுக்கு திமுக தொண்டர்களால் கேடு வரும் என்று பேசி...
கொரானா தடுப்பூசியை மக்களுக்கு போடாமல் திமுகவினரே மிரட்டி போட்டுக் கொள்கின்றனர் என்ற நஞ்சை உமிழ்ந்தார்...
இந்த நிலையில்....
தலைவர் கலைஞர் பார்த்துப் பார்த்து... ஒவ்வொரு செங்கல்லிடம் பேசிப் பேசி, பழங்கால திராவிட கட்டிடக் கலையில் உருவாக்கிய ஆசியாவின் மிகப் பெரிய பசுமைக் கட்டிடத்தை....
அது இன்றைக்கு சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகமாக செயல்பட்டுக் கொண்டிருந்தால்... இந்தியாவிலேயே மிகச் சிறந்த ஐகனாக... பேசு பொருளாக...
பார்வையாளர்கள் டார்லிங்காக மிளிர்ந்து கொண்டிருந்திருக்கும்..!
2011இல் ஆட்சிக்கு வந்தவுடன் மிகக் கேவலமான, கொடூர சிந்தனையுடன் கூடிய காழ்ப்புணர்ச்சியோடு ஜெயலலிதா பாழடைய வைத்தார்.
அது பொறுக்காமல் திமுக போட்ட வழக்கிற்கு பிறகு... அதில் சட்டமன்றத்தை நடத்தாமல் பல்நோக்கு மருத்துவமனையை கொண்டு வந்தார்.
அது சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகத்துக்காகவே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட கட்டிடம்... அதில் மருத்துவமனை அமைப்பது சாத்தியமல்ல என்ற போது... அதை பல்வேறு இடங்களில் இடித்து சின்னாபின்னப்படுத்தி... மருத்துவமனையாக மாற்றினார்.
கலைஞரும், திமுகவினரும்... எது எப்படியோ நாம் கட்டிய கட்டிடம் பாழடிக்கப்படாமல் ஒரு நல்ல காரியத்துக்கு பயன்பட்டாலே போதும் என்று சமாதானமடைய....
மீண்டும் தற்பொழுது திமுக ஆட்சிக்கு வந்திருக்கும் நிலையில்....
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் தளபதியார் அவர்கள், தலைவர் கலைஞர் பிறந்தநாள் அன்று சென்னை கிண்டியில் உள்ள கிங் வளாகத்தில் புதிய பல்நோக்கு மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவித்த பொழுதே....
புதிய தலைமைச் செயலகத்தில் உள்ள அந்த மருத்துவமனை, கிண்டிக்கு மாற்றப்பட்டு கலைஞரின் கனவை நினைவாக்கும் படியாக.... தமிழ்நாடு மக்களின் பெருமையை நிலைநாட்டும் விதமாக ஓமாந்தூரார் கட்டிடத்தில் சட்டமன்றமும், தலைமைச் செயலகமும் செயல்படும் வாய்ப்பிருப்பதை மகிழ்வோடு அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில்...
இன்றைக்கு ஓ பி எஸ் ஒரு அறிக்கை மூலம்... அந்த பல்நோக்கு மருத்துவமனையை புதிய இடத்திற்கு மாற்றக் கூடாது என்றும்... அப்படி செய்தால் அது காழ்புணர்ச்சி கொண்ட செயலாக பார்க்கப்படும் என்றும் கூறியிருக்கின்றார்..!
என்னவொரு மொள்ளமாரித்தனம்...?! எடப்பாடிக்கு முன்னாடி இந்த ஆளுக்கு ஒரு பாயசம் போட்டாத்தான் சரிப்படும்...!
காரணம் காழ்ப்புணர்ச்சியோடு செயல்பட்டது ஜெயலலிதா...! புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டு அங்கே சட்டமன்ற கூட்டமும் நடந்து முடிந்திருந்த நிலையில்...
அது அப்படியே தொடர்ந்தால்.... தலைவர் கலைஞரின் பெயர் காலா காலத்திற்கும் இங்கே வரலாற்றில் பெருமையோடு நிலைத்து நிற்குமே என்ற பொச்சரிப்பில்... அதை பாழ்படுத்தியவர் ஜெயலலிதா..!
ஜெயலலிதா பண்ணிய பாவத்தை இப்பொழுது நீங்கள் கழுவுங்கள் என்று ஓ பி எஸ் நியாயமாக அறிக்கை விட்டிருக்க வேண்டும்..!
இந்த நபரை இனி இது போன்று பேச அனுமதிப்பது நல்லதல்ல..! தலைவர் தளபதியார் அவருக்கு அல்ரெடி ஒரு பேதி மாத்திரை கொடுத்து விட்டார்...! இனி பொத்திக்கிட்டு இருப்பார் என்று நம்புவோம்..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக