nakkheerannewseditor">நக்கீரன் செய்திப்பிரிவு ;அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள்
தலைவரும், வயநாடு மக்களவை தொகுதியின் உறுப்பினருமான ராகுல்காந்தி
தலைமையில்,
எம்.பி.க்கள் அடங்கிய காங்கிரஸ் குழுவினர் உத்தரப்பிரதேச
மாநிலம், ஹத்ராஸுக்கு புறப்பட்டனர்.
ஹத்ராஸில் கொல்லப்பட்ட இளம்பெண் குடும்பத்துக்கு ஆறுதல் கூற ராகுல்காந்தி
தலைமையில் காங்கிரஸ் குழு சென்றது. ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி
காரிலும், ஜோதிமணி உள்ளிட்ட காங்கிரஸ் குழுவினர்
பேருந்திலும் சென்ற நிலையில் 5 பேர் மட்டுமே ஹத்ராஸுக்கு செல்ல
அனுமதிக்கப்படுவர் என உத்தரபிரதேச போலீசார் அவரிடம் தெரிவித்தனர்.
சனி, 3 அக்டோபர், 2020
ராகுல், பிரியங்கா நேரில் ஆறுதல்... சி.பி.ஐ.க்கு ஹத்ராஸ் வழக்கு மாற்றம்!
மணாலியில் இருந்து லே நகருக்கு 10 ஆயிரம் அடி உயரத்தில் சுரங்கப்பாதை சோனியா காந்தி அடிக்கல் நாட்டினார். 2010ஆம் ஆண்டு
Tp Jayaraman :
இமாசல பிரதேச மாநில பிரதேசத்தில் மணாலியில் இருந்து, லே நகருக்கு செல் லும் நெடுஞ்சாலையில், கடல் மட்டத்தில் இருந்து 10 ஆயிரம் அடி உயரத்தில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. 8.8கிலோ மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட் டுள்ள இந்த சுரங்கம் உலகிலேயே, நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள, மிக நீளமான சுரங்கம் ஆகும்.
10 ஆண்டுகள் கடும் உழைப்பில் இந்த சுரங்கம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இந்த சுரங்க பாதை 2010ஆவது ஆண்டு மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது யு.பி. ஏ அரசின் ( தலைவராக- CHAIR PERSON) இருந்த சோனியா காந்தி அடிக்கல் நாட்டினார். அப்போது ஏ.கே ஆண்டோனி இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சராக இருந்தார்.இமாச்சல பிரதேச முதலமைச்சர் பிரேம்குமார் துமால், எதிர்க்கட்சி தலைவர் திருமதி வித்யா ஸ்டோக்ஸ் மற்றும் சில உயர் ராணுவ அதிகாரிகள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
ராஜகண்ணப்பன், எ.வ.வேலு மகனுக்கு திமுகவில் புதிய பதவி!
minnambalam : திமுக தலைமைக் கழக பதவிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுக, பாஜக, அமமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து முக்கிய நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர். மாற்றுக் கட்சிகளில் இருந்து திமுகவில் இணைந்தவர்கள் கடுமையாக உழையுங்கள். உங்களுக்கான அங்கீகாரம் உரிய நேரத்தில் வழங்கப்படும் என ஸ்டாலினும் தெரிவித்திருந்தார்.
தற்போது திமுகவில் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள். சில நாட்களுக்கு முன்பு தங்க தமிழ்ச்செல்வனுக்கு தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டது. அதுபோலவே புதிய கொள்கை பரப்புச் செயலாளர்களாக லியோனி, சபாபதி மோகன் நியமனம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்று (அக்டோபர் 3) வெளியிட்ட அறிக்கையில், மாற்றுக் கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளன்.
ஹத்ராஸ் செல்ல ராகுல் உள்ளிட்ட 5 பேருக்கு மட்டுமே அனுமதி- உ.பி. எல்லையில் காங்கிரசார் தடுத்து நிறுத்தம்
கொரோனா நாசி ஸ்வாப் சோதனையில் பெண்ணின் மூளையை துளைத்தது, மூக்கிலிருந்து மூளை திரவம் கசிந்தது
Caste .Crime . Cremation சோள காட்டுக்குள் எங்கள் பிள்ளைகள் இழுத்து செல்லப்படுவார்கள்
காந்தி! .. உண்ணாவிரதத்தை கொடிய ஆயுதமாக பயன்படுத்த முடியும் என்று கண்டுகொண்ட தந்திரவாதி .
மக்களின் அவலங்களை போக்க SC, ST பிரதிநிதிகளின் பங்களிப்பு என்ன? ஒதுக்கீடு இனியும் வழங்க வேண்டுமா?
வெள்ளி, 2 அக்டோபர், 2020
தாய்மொழிக்கு பதில் இந்தி! பள்ளியில் மும்மொழியும் கிடையாது... புதிர் போட்டியில் இந்தி!
இந்த போட்டியில் கலந்துக்கொள்ளுபவர்களுக்கு 3 தலைப்புகளில் புதிர் கேள்விகள் கேட்கப்படுகின்றன. தலைப்பு 1. காந்தியடிகள் வாழ்க்கை வரலாறு, 2. காந்தியடிகள் மக்கள் பணிகள், 3. வாழ்க்கையோடு இணைந்த காந்தியடிகள் கருத்துக்கள் என்கிற தலைப்பில் கேட்கப்படுகின்றன. இந்த போட்டி அக்டோபர் 2ந்தேதி முதல் நவம்பர் 1ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்படவுள்ளது.
ஹத்ராஸ்: திரிணமூல் எம்.பி.யை கீழே தள்ளிய போலீஸ்!
இந்நிலையில், இன்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஹத்ராஸ் பகுதியில் மீடியாக்கள், வெளியாட்கள் யாரும் செல்ல முடியாத வகையில் போலீசார் சீல் வைத்துள்ளனர். ஒரு மாதத்துக்கு ஹத்ராஸில் 144 தடை இருக்கும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
#Hathras | "We have been completely locked up. Official beat up our uncle," says victim's brother. He says he had to run through the fields to hide from Police & speak to media. pic.twitter.com/W1tKDm47Ha
— Mojo Story (@themojoin) October 2, 2020
இந்தச்சூழலில் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர்களில் ஒருவர் வயல்வெளிகளில் யாருக்கும் தெரியாமல் ஓடி வந்து பேட்டி கொடுக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், 200 போலீசார் வீட்டை சுற்றி வளைத்துள்ளனர். குடும்பத்தில் உள்ள அனைவரும் அச்சத்தில் இருக்கின்றனர்.
டொனால்டு டிரம்பு மற்றும் மனைவி மெலனிக்கு கொரோனா பாதிப்பு.. அமெரிக்க பங்கு சந்தைகள் கடும் சரிவு..
Pugazharasi S - tamil.goodreturns.in : அமெரிக்க பங்கு சந்தை குறியீடுகள் 2 சதவீதத்திற்கும் அதிகமாக கடும் சரிவினைக் கண்டுள்ளன. உலகம் முழுக்க கொரோனாவின் தாக்கம் பரவி வரும் நிலையில், அதன் தாக்கம் அமெரிக்காவில் மிக அதிகம். இந்த நிலையில் அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அவரே தனது டிவிட்டர் பக்கத்திலும் தெரிவித்துள்ளார். அதோடு உடனடியாக தனிமைப்படுத்திக் கொள்வதாகவும், விரைவில் இதிலிருந்து குணமடைவோம் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்
பங்கு சந்தையில் சறுக்கல் முன்னதாக டிரம்பின் உதவியாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பெருந்தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், டிரம்புக்கும் அவரது மனைவிக்கும் இந்த தொற்று ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் அதிபர் தேர்தல் அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் நிலையில், இது சந்தையில் பதற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக அமெரிக்க பங்கு சந்தைகள் சரிவினைக் கண்டு வருகின்றன.
புதிய போயிங் 777 விமானம் -குடியரசு தலைவர் கோவிந்துக்கும் மோடிக்குமாக அமெரிக்காவிடம் இருந்து இரண்டு போயிங் !
மிக முக்கிய பிரமுகர்களின் விமானங்கள் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில், அமெரிக்காவின் டல்லாஸில் உள்ள போயிங் நிறுவனத்துடன் இரண்டு சிறப்பு விமானங்களை வாங்க இந்தியா 2006ஆம் ஆண்டில் ஒப்பந்தம் செய்திருந்தது.
சட்டமன்ற தேர்தலில் திமுக செலவுக்கு பணம் கொடுக்காது... . வேட்பாளர்களே சமாளித்து கொள்ளவேண்டும் .. முக்கிய நிர்வாகிகள் அதிர்ச்சி..
ஹாத்ரஸ் பாலியல் சம்பவம்: தாமாக முன்வந்து விசாரித்தது அலகாபாத் உயர் நீதிமன்றம் - காவல்துறை, ஆட்சியருக்கு நோட்டீஸ்
வியாழன், 1 அக்டோபர், 2020
ராம கோபாலன் ஒரு வாய்ப்பு கிடைக்காத யோகி ஆதித்தனாத் .... அவ்வளவே!
தனித்தமிழ்நாடு பிறப்பது மோடி கையில் தான் உள்ளது
உத்தர பிரேதசத்தில் எரியும் மனிஷா வாழ்மீகியின் உடல் |
மதுரை மீனாட்சி? "திரு ஆலவாய் உடைய நாயனார்' ! 'திருக்காமக்கோட்டம் உடைய ஆளுடைய நாச்சியார்'. கல்வெட்டுகள் தரும் புதிய செய்திகள்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்த இதுவரை படிக்கப்படாத 400க்கும் மேற்பட்ட கல்வெட்டுகளை தற்போது ஆய்வாளர்கள் படியெடுத்து, படித்துள்ளனர். இந்தக் கல்வெட்டுகள் கோயில் குறித்த பல அரிய தகவல்களைத் தருவதாகச் சொல்கிறார்கள் ஆய்வாளர்கள். தற்போது உள்ள மீனாட்சி அம்மன் கோயில் 13ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என்றும் அம்மனின் பெயர் திருக்காமக்கோட்டம் உடைய ஆளுடைய நாச்சியார் என்றே வழங்கப்பட்டது என்றும் அந்தக் கோயிலில் இருந்த பாண்டிய மன்னர் காலக் கல்வெட்டுகளில் இருந்து தெரியவந்திருக்கிறது.
திருப்பூரில் வடமாநிலப் பெண்ணை கூட்டுப்பாலியல் வல்லுறவு செய்த இளைஞர்கள்... BBC
BBC : திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடத்தில் வேலை தேடிச் சென்ற வடமாநிலப் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து சித்ரவதை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக 3 பேர் தற்போது வரை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், மூவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். என்ன நடந்தது? அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த 22 வயதுடைய பெண், தனது கணவரோடு உடுமலைப்பேட்டையில் உள்ள பாக்குமட்டை தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். அங்கு பணிபுரியும் ராஜேஷ் என்பவரிடம் வேறு வேலை வாங்கித் தருமாறு இவர் கேட்டுள்ளார். திங்கட்கிழமை அன்று அப்பெண்ணை பல்லடத்திற்கு வரவழைத்த ராஜேஷ், சில நிறுவனங்களுக்கு அழைத்துச் சென்று வேலைக்காக சிபாரிசு செய்துள்ளார். இருந்தும், வேலை கிடைக்காததால் இருவரும் ராஜேஷின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களோடு இயல்பாக பழகியுள்ளனர்.
திண்டுக்கல் லியோனியும் சபாபதி மோகனும் திமுக கொள்கை பரப்பு செயலாளர்களாக நியமனம்.
ராகுல் காந்தியை தாக்கி தள்ளி தரையில் வீழ்த்தி கைது செய்த போலீஸ்
“19 வயதான சிறுமியைக் கூட்டுப்பாலியல் வன்முறை நடத்திய நான்கு விஷ வித்துக்கள், அந்தப் பெண்ணின் கழுத்தை நெரித்தும், முதுகெலும்பை உடைத்தும் நடத்திய வன்முறையைக் கேள்விப்படும் போதே சகிக்க முடியாததாக அமைந்துள்ளது. அப்பெண்ணின் கழுத்தை நெறிக்கும் போது அவரது நாக்கு துண்டாகி உள்ளது. உடலுறுப்புகள் செயல் இழந்த நிலையில் அவர் மருத்துவமனையில் மரணத்தைத் தழுவிவிட்டார். தன்னை இக்கதிக்கு ஆளாக்கிய கயவர்கள் யார் என்பதை அவர் வாக்குமூலமாகக் கொடுத்துவிட்டார்.
minnambalam :பாலியல் வன்கொடுக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்தை சந்திக்க சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போலீசாரால் தாக்கப்பட்டு நெட்டித் தள்ளப்பட்டு கைது செய்யப்பட்டார். உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் 19 வயது இளம்பெண் செப்டம்பர் 14,ஆம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு மீட்கப்பட்டார். கடுமையான காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்தப் பெண் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த செப்டம்பர் 29-ம் தேதி உயிரிழந்தார். இந்தப் பெண்ணின் மரணம் உத்தரபிரதேசத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் அதிர்வுகளை கிளப்பியது. கொல்லப்பட்ட பெண்ணின் உடலைக் கூட உறவினர்களிடம் கொடுக்காமல் போலீசாரே அவசர அவசரமாக தகனம் செய்ததை பல்வேறு தரப்பினரும் கண்டித்துள்ளனர். அதிகமானதால் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் இன்று அக்டோபர் 1ஆம் தேதி அப்பெண்ணின் குடும்பத்தினரைச் சந்திக்க ஹத்ராஸ் பகுதிக்கு விரைந்தனர்.
உத்தரபிரதேசத்தில் மற்றொரு பெண கூட்டு பாலியல் பலாத்காரத்தில் உயிரிழப்பு . தொடரும் கொடுமை: ஹத்ரஸ் பாலியல் சம்பவத்தை அடுத்து
உயிரிழந்துள்ளார். இரண்டு ஆண்கள் அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். பால்ராம்பூர் சம்பவத்தில், லக்னோவில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டபோது பாதிக்கப்பட்ட பெண் இறந்தார். வேலைக்கு சென்ற பெண் உடலைல் காயங்களுடன் திரும்பி உள்ளார்.
அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்து உள்ளார். இது தொடர்பாக போலீசார் 2 பேரை கைது செய்து உள்ளனர். அந்த பெண் காலையில் வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது கடத்தப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் கூறி உள்ளார். உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், ஹத்ரஸ் மற்றும் பால்ராம்பூர் சம்பவத்தை மூடிமறைத்ததாக மாநில அரசை கண்டித்து உள்ளார். "ஹத்ரஸுக்குப் பிறகு, இப்போது பால்ராம்பூரில் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார், மேலும் அவர் காயங்களால் இறந்துள்ளார்" என்று அவர் டுவீட் செய்துள்ளார். உத்தரபிரதேசத்தில் தொடரும் கொடுமை:
காவிரியில் தற்கொலைக்கு முயன்ற வயதான தம்பதிகள் . மீட்கப்பட்டனர்
அதைப்பார்த்த சிலர், அவர்களின் வேண்டுதலாக இருக்கும் என்று எண்ணினர். பின்னர் இருவரும், அம்மாமண்டபம் படித்துறையில் இறங்கி கைகோர்த்தவாறு காவிரி ஆற்றில் இறங்கினர். அப்போதும், இருவரும் காவிரியில் குளிக்க செல்வதாக அங்கிருந்தவர்கள் நினைத்தனர். ஆற்றின் ஆழமான பகுதிக்கு செல்ல முடியாமல் இருவரும் நீரில் மூழ்குவதும், எழுவதுமாக இருந்தனர். நீண்ட நேரமாகியும் இதே நிலை நீடித்ததால், இருவரும் தற்கொலை எண்ணத்துடன்தான் காவிரியில் குளிக்க சென்றது தெரிந்தது.
பெண்களுக்கு பேராபத்து மிக்க இந்தியா.. Esther Nathaniel. மலையகம் இலங்கை
நேற்று உத்தரபிரதேசத்தில் தலித் பெண்ணொருவர் (சிறுமி )கூட்டுப்பாலியல் வன் கொடூரத்துக்கு ஆளாகி வெட்டிக்கொன்றுள்ளார்கள்கள் மேலும் இந்திய இளைஞர்களின் மனநிலை மிகவும் மோசமாகவும் சாதிய வாதங்களால் கறல் பிடித்து போகும்போது பயமின்றி மிகத்துணிச்சலுடன் இப்படியான செயல்களில் இறங்குகிறார்கள்.
2ஜி வழக்கை தினந்தோறும் விசாரிப்பதற்கு தடை வாங்கவேண்டும் .
இன்றைய தீர்ப்பும் பாடமும் ! ஒரு எச்சை 2ஜி வழக்கில் 70 நாளில் தீர்ப்பு வரும் தண்டிக்கப்படுவார்கள் என்கிறான்
காதுகளை பாதுகாப்போம் ... காதுகள் கேட்பதற்காக மட்டுல்ல நேராக நிற்கவும், தடுமாற்றம் இல்லாமல் நடந்து செல்லவும் ..
Sperm Test விந்தணுக்களின் ஆரோக்கியத்தை வீட்டிலேயே தெரிஞ்சுக்கலாம்... Check Sperm Count At Home
புதன், 30 செப்டம்பர், 2020
ஹத்ராஸ் .. கொன்றவர்கள் உபி.முதல்வர் யோகியின் தாக்கூர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்
சவுகார்பேட்டையில் தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளிகள் 28க்கும் மேல்... முழுக்க முழுக்க ஹிந்தி பார்ப்பன பள்ளிகளாக... .எச்சரிக்கை!
மோடியுடன் பேசியது ஞாபகத்தில் இல்லை.. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ,!
“13ஆவது திருத்தத்தை அமல்படுத்துமாறு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, உங்களுடன் இடம்பெற்ற மெய்நிகர் இருதரப்புக் கலந்துரையாடலின் போது வலியுறுத்தியுள்ளார். ஆனால், அவ்வாறு நடக்கவில்லை என்று, ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல மறுத்துள்ளார். அவ்வாறே வலியுறுத்தப்பட்டதாக இந்தியச் செய்திகளும் தெரிவிக்கின்றன. இதில் எவை உண்மையென எழுப்பிய கேள்விக்கு, “மோடியுடன் பேசியது ஞாபகத்தில் இல்லை” என, பிரதமர் பதிலளித்தார்.
சத்தமில்லாமல் உயர்ந்த சுந்தர் பிச்சையின் சொத்து மதிப்பு.5,900கோடி .....
By Prakash S - tamil.gizbot.com : கூகுள் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது என்றுதான் கூறவேண்டும், குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு தொழில்நுட்ப வசதியும் பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். மிகப்பெரிய டெக் நிறுவனமான கூகுள்
ுறிப்பாக உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனமான கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் சுந்தர் பிச்சை அவர்களின் சொத்து மதிப்பு கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சுமார் 79சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளதாக ஹூரன் ரிச் லிஸ்ட் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தில் சுந்தர் பிச்சை அதாவது கூகுள் நிறுவனத்தில் சுந்தர் பிச்சை அவர்கள் கடந்த 2004-ஆகம் ஆண்டு சேர்ந்தார், பின்பு 10 வருடத்தில் இந்நிறுவனத்தின் சிஇஓ ஆன சுந்தர் பிச்சை இன்று உலகளவில் அதிகச் சம்பளம் வாங்கும் அதிகாரியாக உள்ளார். மேலும் கடந்த ஒரு வருடத்தில் இவரின் சொத்து மதிப்பு 79சதவீதம் உயர்ந்து 5,900கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
ஹத்ராஸ் பெண்ணின் உடலை இரவோடு இரவாகத் தகனம் செய்த போலீசார்
minnambalam : உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் பாலியல் வன்கொடுமைக்கு
ஆளாக்கப்பட்ட பட்டியலின பெண்ணின் உடலை வீட்டுக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்காமல் போலீசாரே நள்ளிரவில் அவசர அவசரமாகத் தகனம் செய்துள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் அருகே ஹத்ராஸ் பகுதியைச் சேர்ந்த பட்டியலின பெண்ணை கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி, ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த 4 பேர் கொண்ட கும்பல் மிகக் கொடூரமாகத் தாக்கி வன்கொடுமை செய்துள்ளது. அந்த பெண்ணின் துப்பட்டாவைக் கொண்டு கழுத்தை நெறித்ததில் கழுத்து எலும்பு, முதுகெலும்பு ஆகியவற்றில் கடுமையான முறிவு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறை, ரவி, ராமு, சந்தீப், லாவ் குஷ் ஆகிய 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தது. கைது மற்றும் வழக்குப்பதிவு நடவடிக்கைகளிலும் போலீசார் அலட்சியம் காட்டியதாகப் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்த சூழலில் இரு வாரங்களாகச் சிகிச்சை பெற்று வந்த ஹத்ராஸ் பெண், டெல்லி சஃப்தர்சங் மருத்துவமனையில் நேற்று உயிரிழந்தார். இதையடுத்து, நேற்று மாலை உறவினர்களின் அனுமதியோ கையெழுத்தோ இல்லாமல் மருத்துவமனையை விட்டு உடலை வெளியே எடுத்து வந்ததற்காக சஃப்தர்சங் மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்தப்பட்டது.
இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் காலமானார்
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அனைவரும் விடுதலை- சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு
இந்தியாவில் இருந்து அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு வெளியேறுகிறது
குவைத் மன்னர் ஷேக் சபா அல் அஹ்மத் காலமானார்... குவைத்தில் 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு!
ஹத்ராஸ் கூட்டுப்பாலியல் சம்பவம்: எலும்பு உடைக்கப்பட்டு நாக்கு அறுக்கப்பட்ட பெண் மரணம் - என்ன நடந்தது?
கூட்டுப்பாலியல் செய்து கடுமையாகத் தாக்கிய சம்பவத்தில் 14 நாட்களாக உயிருக்குப் போராடியவர் செவ்வாய்க்கிழமை காலையில் உயிரிழந்தார். டெல்லி சஃப்தர்ஜங் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில், சேர்க்கப்பட்ட அவரது இறப்பை அவரது உடன் பிறந்த சகோதரர் பிபிசியிடம் உறுதிப்படுத்தினார். கடந்த திங்கட்கிழமை அலிகார் முஸ்லிம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இருந்து அந்த பெண் டெல்லி சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்தார். என்ன-நடந்தது?
கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி, வயல்வெளியில் புல் வெட்ட தனது தாய் மற்றும் சகோதரருடன் அந்த பெண் சென்றிருந்தார். அப்போது உயர் ஜாதியைச் சேர்ந்த நான்கு பேர் அந்த பெண்ணை பலவந்தப்படுத்தி கூட்டுப்பாலியல் செய்து பிறகு கடுமையாகத் தாக்கியதில் பலத்த காயங்களுடன் அவர் சுயநினைவை இழந்ததாக கூறப்படுகிறது.
செவ்வாய், 29 செப்டம்பர், 2020
அருந்ததியர் உள் ஒதுக்கீடு ஆர் எஸ் எஸ் யின் சதிவேலை... ஆதிக்க தலித் ஜாதிவெறியின் உச்சம்
பெரியார் திடலில் பெரியார் இல்லை ! இது தெரியாமல் நீங்கள் அங்கே போய் தேடலாமா?
தட்டார்மடம்: கொல்லப்பட்ட இளைஞரின் தாயும் மரணம்.. அதிமுக தெற்கு மாவட்ட வர்த்தக அணித் தலைவரான திருமணவேல்
minnamblam :தட்டார்மடம் அருகே காரில் கடத்தி கொல்லப்பட்ட செல்வனின் தாயும் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சொக்கன்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த செல்வன் என்ற இளைஞர், சொத்து தகராறில் செப்டம்பர் 17ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். கொலைக்கு அந்த பகுதியைச் சேர்ந்த, அதிமுக தெற்கு மாவட்ட வர்த்தக அணித் தலைவரான திருமணவேல் உட்படச் சிலர் மீது செல்வனின் தாயார் எலிசபெத் புகார் தெரிவித்திருந்தார். இவர்களுக்கு தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் உடந்தை என்றும் குற்றம்சாட்டியிருந்தார்.
செல்வன் கொலைக்கு நீதி கேட்டு, அவரது குடும்பத்தினர், திமுக, நாம் தமிழர் கட்சியினர் எனப் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். செல்வன் கொல்லப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டார்.
2ஜி வழக்கு அப்பீல்: தினமும் விசாரணை!
ரிசை ஒதுக்கீட்டு விவகாரத்தில் முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அவர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்ததும் பதவியை ராஜினாமா செய்தார். பின் அவர் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். ஆ.ராசாவை தவிர இந்த வழக்கு விவகாரத்தில் கனிமொழி, கலைஞர் டிவியின் அப்போதைய தலைவர் சரத்குமார். தொழிலதிபர் ஷாகித் பால்வா உள்ளிட்ட 19 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் டிசம்பர் 21, 2017 அன்று விடுதலை செய்தது. இதை எதிர்த்து, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை சார்பில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்றும் இந்த இரு விசாரணை அமைப்புகளும் உயர் நீதிமன்றத்தில் முறையிட்டன.
தமிழகத்தில் அக்டோபர் 31-ந்தேதி வரை பொதுமுடக்கம்! பள்ளி, புறநகர் ரெயில், சினிமா தியேட்டர்கள் தொடர்ந்து மூடல்
Flashback பன்னீர்செல்வத்தின் .. சேகர் ரெட்டி வீட்டில் 100 கிலோ தங்கம் ,70 கோடி புதிய நோட்டுக்கள் பிடிபட்டது 8 டிசம்பர், 2016 Flashback
ராஜா. nakkheeran. : வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள சேகர் ரெட்டி வீட்டிற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சென்னையில் இன்று காலை முதல் 8 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். போயஸ் கார்டனுக்கு நெருக்கமான கான்டிராக்டர் சேகர் ரெட்டி, அவரது உறவினர் சீனுவாச ரெட்டி ஆகியோரது வீடு, அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்றது. தி.நகர் மற்றும் அண்ணா நகர் பகுதிகளில் இந்த சோதனை நடைபெற்றது. இச்சோதனையில் ரூ90 கோடி ரொக்கம் மற்றும் 100 கிலோ தங்கம் சிக்கியது. இதில் ரூ70 கோடிக்கு புதிய ரூ2,000 நோட்டுகளும் பிடிபட்டன. மேலும் சேகர் ரெட்டியின் ஆடிட்டர் பிரேம் என்பவர் வீட்டிலும் சோதனை நடைபெற்றது.
இந்த நிலையில் சேகர் ரெட்டிக்கு சொந்தமாக காட்பாடி, காந்தி நகர் 10-வது தெருவில் உள்ள வீட்டில் இன்று மாலை வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். சேகர் ரெட்டி வீட்டில் யாரும் இல்லாததால் வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டது. வீட்டை வருமான வரித்துறை கூடுதல் இயக்குனர் முருகபூபதி தலைமையிலான அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பழைய ரூபாய் நோட்டுக்கள் மாற்றிய சேகர் ரெட்டி விடுவிப்பு!! ரூ.24 கோடி ....
tamil.oneindia.com L சென்னை: பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது பழைய ரூபாய் நோட்டுக்கள் மாற்றிய விவகாரத்தில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் சேகா் ரெட்டி தொடர்பான வழக்கை முடித்து வைத்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை 2016ல் பிரதமர் மோடி ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார். நாட்டில் கருப்பு பணத்தை ஒழிக்கவே இந்த நடவடிக்கை என்று கூறப்பட்டது. இந்த நோட்டுக்களுக்கு பதிலாக புதிய 2000 ரூபாய் நோட்டு புழக்கத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, தொழிலதிபர் சேகர் ரெட்டி பழைய நோட்டுகளுக்கு பதிலாக, வங்கி அதிகாரிகளின் உதவியுடன் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் வாங்கியதாக புகார் எழுந்தது.
போராடும் பன்னீர்: பொதுக்குழுவுக்குத் தயாராகும் எடப்பாடி
minnambalam :அதிமுகவின் செயற்குழுக் கூட்டம் நேற்று ( செப்டம்பர் 28) அக்கட்சியின் தலைமை நிலையத்தில் சமூக இடைவெளியின்படி நடந்தது. உணவு இடைவெளி கூட இல்லாமல் 5 மணி நேரம் நடந்த இந்தக் கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி இருப்பது அப்பட்டமாக தெரிந்தது.
செயற் குழு கூட்டத்துக்காக தலைமைக் கழகத்துக்கு வரும் முன்பு ஒபிஎஸ் ஆதரவாளர்கள், அவரது வீட்டுக்கு வெளியில் மக்களை நிற்கவைத்து வரவேற்றார்கள், கட்சி அலுவலகம் முன்பும் ஒபிஎஸ் படத்துடன் வரவேற்று உள்ளே அழைத்து சென்றார்கள். அதேபோல் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தி நகர் சத்யா தலைமையில் மக்களைக் கூட்டி வரவேற்பு கொடுத்து நிரந்தர முதல்வரே என்று கோஷத்துடன் அலுவலகம் உள்ளே அழைத்துபோனார்கள்.
செயற் குழு கூடும் முன்பே வெளியில் இப்படி இரு பிரிவாக இருக்கிறதே உள்ளே எப்படியிருக்கும் என்று அதிமுகவினர் எதிர்பார்த்தது போலவே செயற்குழுவில் அரங்கேறியுள்ளது.
ேரளாவில் பெண்களை அவமதித்து யூட்யூப் சேனல் நடத்தியவரை சரமாரியாக தாக்கிய பெண்கள்
thanathanthi :கேரளாவில் பெண்களை அவமதித்து யூட்யூப் சேனல் நடத்தியவரை நேரில் சென்று சரமாரியாக தாக்கிய பெண்கள் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் விடுதி ஒன்றில் வசிக்கும் விஜய் பி நாயர் என்பவர், வி ட்ரிக்ஸ் சீன் என்ற பெயரில் யூ ட்யூப்சேனல் நடத்தி வருகிறார். இந்த யூட்யூப் சேனலில் பெண்களை ஆபாசமாக சித்தரித்தும், கொச்சைப்படுத்தியும் வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளார். சமீபத்தில், திரைப்பட பின்னணி குரல் கொடுப்பவர்கள், மகளிர் அமைப்பினர் குறித்தும் ஆபாசமான கருத்துகளை பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பின்னணி குரல் கலைஞரான பாக்கியலட்சுமி, மகளிர் அமைப்பை சேர்ந்த தியா சனா மற்றும் சிலர், கடந்த சனிக்கிழமை விஜய் பி.நாயர் தங்கியிருந்த விடுதிக்குச் சென்று அவர் மீது கருப்பு மை ஊற்றியதோடு அடித்து உதைத்தனர். அவர் கைகளாலேயே அவர் பதிவிட்ட வீடியோக்களை அழிக்க வைத்ததோடு, மன்னிப்பு கேட்க வைத்து அதனை யூட்யூபில் வெளியிட்டுள்ளனர்.
திங்கள், 28 செப்டம்பர், 2020
தலைவர் சோனியா அதிரடி ! மத்திய வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள், சட்டமியற்ற வேண்டும்!
ரத யாத்திரையை எதிர்த்ததற்காக மன்னிப்பு கேட்க முடியாது... நடிகர் சத்யராஜ் மகள் திட்டவட்டம்.
டிரம்ப் வரி ஏய்ப்பில் ஈடுபட்டாரா? ரூ. 55 ஆயிரம் மட்டுமே ( 250 Dollars) செலுத்தியதாக நியூயார்க் டைம்ஸ்
கீழடி: 80 செ.மீ விட்டம், 380 செ.மீ உயரம்… 25 அடுக்குகளைக் கொண்ட உறைகிணறு கண்டுபிடிப்பு!!
எப்போதும் இல்லாத அளவில் கீழடி 6-ம் கட்ட அகழாய்வு கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் என்று நான்கு இடங்களில் அகழாய்வு செய்யப்படுகிறது. இதில் ஒவ்வொரு இடங்களிலும் சிறப்பு மிக்க தொல்லியல் எச்சங்கள் கண்டறியப்பட்டு வருகின்றன. இந்த மாத கடைசியில் ஆறாம் கட்ட அகழாய்வுப் பணி நிறைவுபெறுகிறது. இதனால் இயக்குநர் சிவானந்தம் தலைமையில் ஆவணப்படுத்தும் பணிகளும் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.
முதலமைச்சர் ஆக்கியது யார்: ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே வாக்குவாதம்.. 7ம் தேதி முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்படும் -கே.பி.முனுசாமி தகவல்
முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளதால், சுமார் ஐந்து மணி நேரத்திற்கு மேலாக கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே முதல்வர் குறித்து நேரடி வாக்குவாதம் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
நடிகைகளின் செல்போன்கள் பறிமுதல் போதைப்பொருள் வழக்கு... தீபிகா படுகோனே, சாரா அலிகான்,ஷ்ரத்தா கபூர் ...
உடுமலை நாராயண கவி நினைவு நாள் (செப்டம்பர் 25, 1899 - மே 23, 1981) பகுத்தறிவு கவிராயர்
நாராயணசாமியால் பள்ளிப் படிப்பைத் தான் தொடர முடியாமல் போனதே தவிர கிராமியக் கலைகளில் அவருக்கு ஆர்வம் அதிகம். கொங்கு மண்ணின் பாரம்பர்யக் கலைகளை மிகுந்த ஈடுபாட்டுடன் கற்றுக் கொண்டு ஊரில் நடக்கும் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் திருவிழாவின் ராமாயண நாடகத்தில் லக்குவன் வேடம் தரித்து நடிப்பார். அப்படியோர் சமயத்தில் தான் மதுரை சங்கர தாஸ் சுவாமிகளின் ஆப்த நண்பராக இருந்த சரபம் முத்துச்சாமிக் கவிராயரின் பார்வையில் நாராயணசாமி விழுந்தார். அன்று நாராயணசாமிக்கு வயது 12. அன்று முதல் முத்துச்சாமிக் கவிராயருடன் தொடங்கிய நாராயணசாமியின் கலைப்பயணம் அவரது 25 ஆம் வயது வரை நீடித்தது. முத்துச்சாமி கவிராயர் எங்கெல்லாம் செல்கிறாரோ அங்கெல்லாம் அவருடன் இணைந்து சென்று நாடகம் நடிப்பது, பாடல் எழுதுவது, பாடுவது என நாடகத் தொழிலின் அத்தனை நுட்பங்களையும் கற்றார்.
இலங்கை 21 கன்டெய்னர்களை பிரிட்டனுக்கே திருப்பி அனுப்பியது! மருத்துவக் கழிவுகள், பிளாஸ்டிக் ....
2017ஆம் ஆண்டு தனியார் நிறுவனம் ஒன்றால் பிரிட்டனில் இருந்து, கொழும்பு துறைமுகத்துக்கு இறக்குமதி செய்யப்பட்ட 263 கன்டெய்னர்களில் மருத்துவக் கழிவுகள், பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் உள்ளிட்டவை இருப்பது கண்டறியப்பட்டது. ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பொருட்கள் மட்டுமே அந்த கன்டெய்னர்களில் இருந்திருக்க வேண்டும். அவற்றில் சிறிய அளவு மட்டுமே பிரிட்டனுக்கும் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டிருந்தன. பெரும்பாலான கன்டெய்னர்கள் இலங்கையிலுள்ள கிடங்குகளில் வைக்கப்பட்டிருந்தன.
அதிமுக செயற்குழு: எடப்பாடி-பன்னீர் இடையே என்ன நடக்கிறது?
minnambalam : அதிமுகவின் செயற்குழுக் கூட்டம் நாளை (செப்டம்பர் 28) ஆம் தேதி நடக்கும் நிலையில் அதிமுகவில் என்ன நடக்கும் என்று அக்கட்சிக்குள்ளும், அக்கட்சிக்கு வெளியேயும் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. கடந்த 18 ஆம் தேதி நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் நடந்த விவாதங்களை அடிப்படையாக வைத்து செயற்குழு புயற்குழுவாகும் என்றும் அப்படி எல்லாம் நடக்காது என்று சிலரும் அதிமுகவுக்குள்ளேயே பட்டிமன்றம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இரு தரப்பிலும் என்ன நடக்கிறது என்பது குறித்து விசாரணை செய்தோம். வர இருக்கிற சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக மட்டுமல்ல, அதிமுகவின் பொதுச் செயலாளராகவும் தானே வர வேண்டும் என்று விரும்புகிறார் எடப்பாடி பழனிசாமி. அதன் அடிப்படையிலேயே அவர் தொடர்ந்து காய் நகர்த்தி வருகிறார். எடப்பாடிக்காக அமைச்சர்கள் சிலர் அனைத்து மாவட்டச் செயலாளர்களையும் தொடர்பு கொண்டு வருகிறார்கள். அண்மையில் நியமிக்கப்பட்ட மாவட்டப் பொறுப்பாளர்கள் பலர் எடப்பாடி ஆதரவு நிலையில் இருக்க பழைய மாசெக்களை எடப்பாடி தரப்பினர் தொடர்புகொண்டு வருகிறார்கள். சில நிர்வாகிகள் தன் மேல் அதிருப்தியில் உள்ளதாக அறிந்த எடப்பாடி, அவர்களின் பட்டியலை வாங்கி வைத்து தானே அவர்களுக்கு போன் போட்டுப் பேசியிருக்கிறார்.
பெண்கள் குறித்து மனுதர்ம கருத்துக்களில் சில : சுதந்திரமாக பெண் எதையும் செய்ய அனுமதிக்கக் கூடாது...
ஒரு கூட்டு அவியல் மொழியே சமற்கிருதம் !
இனக்குழுவின் ஆதிமொழி சாந்தசி, பௌத்தர்களின் பாலி, சமணர்களின் மகதி, இவற்றை எல்லாம் தமிழில் பேச்சு வழக்கில் இருந்த பெரும்பான்மை ( கொச்சை ) சொற்களுடன் கலந்து திரித்து உருவாக்கப் பட்ட/சமைக்கப்பட்ட ஒரு கூட்டு அவியல் மொழியே சமற்கிருதம் ! இந்த சமற்கிருதம் இயல்பாய், எளிதாய் அதை உருவாக்கிய கூட்டத்தாராலேயே பேச வராத நிலையில், அது பேச்சு வழக்கில் பரவ இயலாது செத்து ஒழிந்தது !! இதைத் தாங்கிக் கொள்ள முடியாத அதே ( ஆர்.எஸ்.எஸ். ) கூட்டம் திட்டமிட்டு அதே செத்துப் போன சமற்கிருதத் தின் மிச்சம் மீதியைக் கொண்டு, வடக்கில் பல பகுதிகளில் பரவலாகப் பேசப்பட்ட பல மொழிகளிலும் காணப்படும் பொதுவான சொற்களை எல்லாம் கலந்து உருவாக்கி வளர்த்த மொழியே இந்தி எனும் மந்தி மொழி !!
ஞாயிறு, 27 செப்டம்பர், 2020
இசையமைப்பாளர் வேதா .. ஓராயிரம் பார்வையிலே , கண்ணாலே நான் கண்ட கணமே, , பழகும் தமிழே பார்த்திபன் மகனே , இதயவானின் உதய நிலவே
இந்தியாவிலேயே தன மாமாவின் வீட்டில் தங்கிப் படித்து வந்தார் வேதா. சிறுவயதிலேயே இசையின் மீது ஈடுபாடு உண்டாயிற்று. வேதாவின் மாமாவிற்கு இசையில் மிகுந்த ஆர்வம் இருந்தது. அவர் வேதாவிற்கு கர்நாடக சங்கீதம் சொல்லிக் கொடுத்தார்.
இன்டர்லாக் சிஸ்டத்தில் அம்மி கல்லையும் குழவி கல்லையும் அடுக்கி வைத்துள்ள அழகு..
சத்துவாச்சாரியில் கோர்ட் தாண்டி செல்லும்போது என் கண்ணில் பட்ட காட்சியை இங்கே உங்களோடு பகிர்கிறேன்.ரோட்டு ஓரத்தில் அம்மிக் கல் விற்கிற ஒரு ஏழை தொழிலாளி, மலையில் இருந்து தான் வெட்டி எடுத்து வந்த பாறாங்கல்லில் இருந்து அம்மி கல்லையும் குழவி கல்லையும் (அரைவை செய்கிற கல்) கொத்தி தயார் செய்து அடுக்கி வைத்துள்ள அழகு என்னை பிறம்மிக்க வைத்தது.
பெரியாரை அவமதிப்பது ஆர் எஸ் எஸ் அக்ரஹாரங்கள் மட்டுமல்ல... தலித் சுய ஜாதி ஊடக போராளிசும்தான்!
அவருக்கு எதிராக அக்ரஹாரம் மட்டும் அவதூறு பரப்பவில்லை. அவர்களைவிட அதிகமான அவமதிப்பை; அவதூறை அடுத்த தலைமுறை அம்பேட்காரியர்கள் தொடர்ந்து செய்துகொண்டே இருக்கிறார்கள். சர்வதேச பேராசியப்பெருந்தகைகள் முதல் சாமானிய சமூக ஊடக தலித் போராளி வரை.