வெள்ளி, 2 அக்டோபர், 2020

டொனால்டு டிரம்பு மற்றும் மனைவி மெலனிக்கு கொரோனா பாதிப்பு.. அமெரிக்க பங்கு சந்தைகள் கடும் சரிவு..

Pugazharasi S - tamil.goodreturns.in : அமெரிக்க பங்கு சந்தை குறியீடுகள் 2 சதவீதத்திற்கும் அதிகமாக கடும் சரிவினைக் கண்டுள்ளன. உலகம் முழுக்க கொரோனாவின் தாக்கம் பரவி வரும் நிலையில், அதன் தாக்கம் அமெரிக்காவில் மிக அதிகம். இந்த நிலையில் அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அவரே தனது டிவிட்டர் பக்கத்திலும் தெரிவித்துள்ளார். அதோடு உடனடியாக தனிமைப்படுத்திக் கொள்வதாகவும், விரைவில் இதிலிருந்து குணமடைவோம் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார் 

பங்கு சந்தையில் சறுக்கல் முன்னதாக டிரம்பின் உதவியாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பெருந்தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், டிரம்புக்கும் அவரது மனைவிக்கும் இந்த தொற்று ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் அதிபர் தேர்தல் அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் நிலையில், இது சந்தையில் பதற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக அமெரிக்க பங்கு சந்தைகள் சரிவினைக் கண்டு வருகின்றன.

தேர்தல் குறித்தான நிச்சயமற்ற நிலை தேர்தல் குறித்தான நிச்சயமற்ற நிலை ஏனெனில் அமெரிக்காவின் அதிபர் தேர்தல் நெருங்கி வந்து கொண்டு வரும் நிலையில், டிரம்பின் பிரச்சாரம் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அமெரிக்காவின் டிரம்ப் ஜெயிப்பாரா அல்லது ஜோ பிடன் ஜெயிப்பாரா என்ற நிச்சயமற்ற நிலையே இருந்து வருகிறது. இதுவே சந்தையின் நிச்சயமற்ற நிலைக்கு காரணமாக அமைந்துள்ளது. 

 

அமெரிக்கா குறியீடுகள் சரிவு முன்னதாக அமெரிக்காவின் பொருளாதார தூண்டுதல் குறித்தான பேச்சு வார்த்தைகள் நிச்சயமற்ற நிலையில் இருந்து வரும் நிலையில், அமெரிக்கா பங்கு சந்தைகள் சரிவினைக் கண்டன. இதற்கிடையில் அமெரிக்கா பங்கு சந்தையான ஆரம்பத்தில் டவ் ஜோன்ஸ் 432 புள்ளிகள் சரிந்து( அல்லது) 1.56% சரிந்தும், எஸ் &பி 500 52 புள்ளிகள் சரிந்து (ஆ) 1.54% சரிந்தும், நாஸ்டாக் 100 205 புள்ளிகள் சரிந்தும் காணப்பட்டது.

 

ஐரோப்பிய சந்தைகள் சரிவு ஐரோப்பிய பங்கு சந்தைகளான எஃப்டிஎஸ்இ 0.75% சரிவுடனும், இதே சிஏசி 0.81% வீழ்ச்சியுடனும், இதெ டேக்ஸ் 0.94% வீழ்ச்சியுடனும் காணப்படுகிறது. இதே போல ஆஸ்திரேலியா சந்தைகளும், பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளின் சர்வதேச சந்தைகளும் சரிவில் காணப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக