வியாழன், 1 அக்டோபர், 2020

Sperm Test விந்தணுக்களின் ஆரோக்கியத்தை வீட்டிலேயே தெரிஞ்சுக்கலாம்... Check Sperm Count At Home

Maha Lakshmi S - /tamil.boldsky.com  :  ஆண்களுள் சிலர் நிச்சயம் தங்களின் விந்தணுக்களைப் பற்றி அறிந்திருப்பார்கள். அதில் விந்தணுக்கள் எவ்வாறு நகர்கின்றன, எவ்வளவு விந்தணுக்கள் உள்ளன என்பன குறிப்பிடத்தக்கவை. உங்களுக்கு அத்தகைய அனுபவம் இல்லையென்றால், வீட்டிலேயே எளிமையாக ஒரு டம்ளர் நீரின் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஆரோக்கியமான விந்து எண்ணிக்கை என்பது ஒரு ஆரோக்கியமான நிலை மற்றும் குழந்தைக்கு தந்தையாவதற்கான அறிகுறியாகும். தற்போது ஏராளமான தம்பதிகள் கருத்தரிக்க முடியாமல் மருத்துவரை சந்தித்து கருத்தரிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். கருத்தரிக்க முடியாமல் போவதற்கு பெண்கள் மட்டும் காரணமாக இருக்கமாட்டார்கள், ஆண்களும் காரணமாக இருக்கலாம். ஒரு பெண் கருத்தரிப்பதற்கு ஒரு ஆணின் விந்தணுக்களின் நிலை மற்றும் எண்ணிக்கை போன்றவை மிகவும் முக்கியமானவை.* பொதுவாக விந்தணு சோதனையை மேற்கொள்வதற்கு மூன்று நாட்களுக்கு முன்பிருந்தே பாலியல் செயல்பாடுகளான உடலுறவு அல்லது சுயஇன்பம் காண்பதைத் தவிர்க்க வேண்டும். 
 
 * இன்னும் சரியான தீர்வைப் பெற நினைத்தால், 7 நாட்களுக்கு எவ்வித பாலியல் செயல்பாடுகளிலும் ஈடுபடாதீர்கள். ஒவ்வொரு மருத்துவரும் விந்தணு சோதனைக்கு முன், இதைப் பரிந்துரைப்பார்கள். ஏனெனில் ஒருவேளை அவ்வாறு விந்தணுக்களை சோதனைக்கு முதல் நாள் வரை வெளியேற்றினால், உடலில் விந்தணுக்களின் அளவு குறைவாக இருக்கும். இந்நிலையில் சோதனையை மேற்கொள்வது தவறான முடிவையே காட்டும். 
 
விந்தணுக்களை பரிசோதனை செய்வதற்கு, முதலில் சுயஇன்பத்தின் மூலம், விந்தணுக்களை வெளியேற்ற வேண்டும். இதற்கு நீங்கள் கைகளைப் பயன்படுத்தலாம். ஆனால் சுயஇன்ப கருவிகளைப் பயன்படுத்துவதன் மூலம், இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்.
 
சோதனைக்கு பயன்படுத்தும் விந்தணு மாதிரிகள் பிரஷ்ஷாக இருப்பது நல்லது. வேண்டுமானால், விந்தணு மாதிரிகளை சேகரித்த பின், அதை அறை வெப்பநிலையில் வைத்து, 1 மணிநேரத்திற்குள் சோதித்துவிட வேண்டும். முக்கியமாக விந்தணு சோதனையை மேற்கொள்ளும் முன் மது அருந்தக்கூடாது. 
 
 ஒரு டம்ளர் நீரைக் கொண்டே விந்தணு பரிசோதனையை மேற்கொள்ளலாம். ஆனால் இந்த நீர் பரிசோதனையில் விந்தணுக்கள் நல்ல தரமாக, ஆரோக்கியமாக உள்ளதா என்பதை மட்டுமே அறிய முடியும். இதற்கு தேவையானது ஒரு டம்ளர், தண்ணீர் மற்றும் விந்தணு. முதலில் ஒரு கண்ணாடி டம்ளரில் நீரை நிரப்பிக் கொள்ளுங்கள். பின் அதில் சேகரித்த விந்தணு மாதிரிகளை உற்றுங்கள். 2-3 நிமிடம் காத்திருங்கள். 
ஆனால் 5 நிமிடத்திற்கு மேல் காத்திருக்க வேண்டாம். MOST READ: விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரம் அதிகரிக்க வேண்டுமா? அப்ப தினமும் இத ஒன்னு சாப்பிடுங்க... முடிவு: முடிவு: 
 
* நீரில் விந்தணுக்கள் மூழ்கி டம்ளரின் அடியே சென்றால், உங்கள் விந்தணுக்கள் ஆரோக்கியமானதாக உள்ளது என்று அர்த்தம். 
 
* ஒருவேளை விந்தணுக்கள் முழுமையாக மூழ்காமல் மையப்பகுதியில் இருந்தால், மிதமான தரத்தில் உள்ளது என்று அர்த்தம். இம்மாதிரியான முடிவைப் பெறுபவர்கள், விந்தணுக்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் உணவுகளை உண்ண ஆரம்பிப்பது நல்லது. 
 * விந்தணுக்கள் மூழ்காமல் மேலே மிதந்து கொண்டிருந்தால், விந்தணுக்களின் தரம் குறைவாக உள்ளது என்று அர்த்தம். இந்நிலையில் விந்தணுக்களின் தரத்தை அதிகரிக்க உடனே வாழ்க்கை முறையில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக