திங்கள், 28 செப்டம்பர், 2020

ஒரு கூட்டு அவியல் மொழியே சமற்கிருதம் !

Kalidasan Swaminathan : சமற்கிருதமும், இந்தியும் என்ன மொழி ? ஆரிய
இனக்குழுவின் ஆதிமொழி சாந்தசி, பௌத்தர்களின் பாலி, சமணர்களின் மகதி, இவற்றை எல்லாம் தமிழில் பேச்சு வழக்கில் இருந்த பெரும்பான்மை ( கொச்சை ) சொற்களுடன் கலந்து திரித்து உருவாக்கப் பட்ட/சமைக்கப்பட்ட ஒரு கூட்டு அவியல் மொழியே சமற்கிருதம் ! இந்த சமற்கிருதம் இயல்பாய், எளிதாய் அதை உருவாக்கிய கூட்டத்தாராலேயே பேச வராத நிலையில், அது பேச்சு வழக்கில் பரவ இயலாது செத்து ஒழிந்தது !! இதைத் தாங்கிக் கொள்ள முடியாத அதே ( ஆர்.எஸ்.எஸ். ) கூட்டம் திட்டமிட்டு அதே செத்துப் போன சமற்கிருதத் தின் மிச்சம் மீதியைக் கொண்டு, வடக்கில் பல பகுதிகளில் பரவலாகப் பேசப்பட்ட பல மொழிகளிலும் காணப்படும் பொதுவான சொற்களை எல்லாம் கலந்து உருவாக்கி வளர்த்த மொழியே இந்தி எனும் மந்தி மொழி !!
அந்த சமற்கிருதம், இந்த இந்தி இரண்டுக்குமே எழுத்து வடிவம் என்பதே இல்லாத நிலையில் இவற்றை எழுத தேவநாகரி எழுத்து வடிவங்களைப் பயன்படுத்த முடிவு செய்து,
அப்போதைய ஆட்சியாளர்களின் துணையோடு திணிக்கப்பட்டு நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டதே தற்போதுள்ள இந்த தேவநகரி எழுத்து முறை;
இதனால், வடக்கில் புழக்கத்தில் இருந்த பல நூறு மொழிகளும், அவற்றின் எழுத்து முறைகளும் அழித்து ஒழிக்கப் பட்டன.
தென்னிந்தியாவிலும் தமிழுடன் இதே சமற் கிருத சொற்களைக் கலக்க ஸ,ஷ,ஜ, ஸ்ரீ போன்ற கிரந்த எழுத்துக்களை திட்டமிட்டு உருவாக்கி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் என புதிய மொழிகளைத் தோற்றுவித்து தமிழ் மண்ணும் மொழியும் நான்கு ஐந்தாக பிரிந்து போக வழி செய்து,
இப்போது மேலும் அதே இந்தியை இங்கே திணித்து, எஞ்சியுள்ள தமிழ் மொழியை சிதைக்க, அழிக்க ’ஒரே நாடு,ஒரே மொழி’ என்ற சதித் திட்டத்தை வெளிப்படையாகவே அரங் கேற்றத் துணிந்து விட்டனர், அதே ஆரிய கூட்டத்தினர்.
எனவே இந்த இந்தியும் சமற்கிருதமும் எல்லாவற்றையும் விழுங்கி ஏப்பம் விடும் அகில இந்திய அனஹோண்டா பாம்புகள் என்பதால்,
//இவற்றை பிற மொழிகள் பேசும் மாநில மக்கள் எல்லோருமாக சேர்ந்து அழித்து ஒழித்தே ஆக வேண்டும் !//
இது காலத்தின் கட்டாயம் !!
வரலாறு கற்பிக்கும் பாடம் !!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக