வியாழன், 1 அக்டோபர், 2020

காதுகளை பாதுகாப்போம் ... காதுகள் கேட்பதற்காக மட்டுல்ல நேராக நிற்கவும், தடுமாற்றம் இல்லாமல் நடந்து செல்லவும் ..

Maha Laxmi : · காதுகள் ஒரு மனிதனுக்கு சரியாக கேட்க வேண்டும் என்றால் காதுகளின் உள்ளே இருக்கும் செவிப்பறை ( Ear drum) சுத்தமாகவும் சேதமடையாமலும் இருக்க வேண்டும். இதற்கு இயற்கை மனிதனுக்கு தந்துள்ள பாதுகாப்பான ஒரு அம்சம்தான் காதுக்குரும்பி. இது ஆங்கிலத்தில் இயர் வேக்ஸ் (Ear wax) என்றும் மருத்துவ பெயரில் 'செருமென்' ( Cerumen) என்றும் அழைக்கப்படுகிறது.
நம்முடைய காதுக்குள் செருமேனியஸ் க்ளான்ட்ஸ் ( Cerumanious glands) எனப்படும் சுரப்பிகள் உள்ளன. இவைதான் காதுக்குள் 'செருமென் ' திரவத்தை சுரக்க வைத்து ஒரு மெழுகைப் போல் உருமாற்றமடைந்து செவிப்பறையை பாதுகாக்கின்றன.
காதுக்குள் பூச்சிகள், ஒவ்வாமை தூசி போன்ற அந்நிய பொருட்கள் உள்ளே நுழைந்து செவிப்பறையை பதம் பார்த்து விடக்கூடாது என்பதற்காகவே
இந்த செருமென் குரும்பி ஒரு காவல் வீரனைப் போன்ற பணியை 24 மணி நேரமும் செய்து கொண்டிருக்கிறது.எந்த பூச்சி உள்ளே போனாலும் அதற்கு ஆயுள் சில விநாடிகள்தான்.  எனவே.....
இந்த குரும்பியை அகற்ற வேண்டிய அவசியம் இல்லை. புது குரும்பி உருவாகும் போது பழைய குரும்பி தானாகவே மெல்ல மெல்ல ஊர்ந்து வெளியே வந்துவிடும்.இதற்கு 'ஆட்டோ க்ளீனிங் சிஸ்டம்'
(Auto cleaning system) என்று பெயர்.
ஆனால் சிலர் இதை வலுக்கட்டாயமாக அகற்ற இயர் பட்ஸை உபயோகிப்பார்கள் .
இது மிகவும் தவறான ஒன்று.
அப்படி அகற்றும் போது இரண்டு பெரிய ஆபத்துகள்
உள்ளன.
ஒன்று.....
எவ்வளவு பெரிய தரம் வாய்ந்த கம்பெனியாக இருந்தாலும் அவர்கள் தயாரித்த இயர் பட்ஸ் பஞ்சில் பூஞ்சை காளான்கள் போன்ற கிருமிகள் இருக்கும்.
அவை செவிப்பறையில் நோய் தொற்றை உண்டாக்கும். நோய் தொற்றை சரி செய்யாவிட்டால் செவிப்பறையில் கிழிசல் ஏற்பட்டு காதுகேளாத நிலை உண்டாகும்.
இரண்டாவது.....
இயர் பட்ஸை காதுக்குள் நுழைத்து குரும்பியை வெளியே எடுக்க முயற்சிக்கும் போது சில நேரங்களில் தவறுதலாக அந்த குரும்பி இன்னும் உள்ளே போய் செவிப்பறையில் அழுத்தமாக ஒட்டிக்கொண்டு வெளியே வர முடியாமல்
செவிப்பறையை வீங்க வைக்கும்.அதன் பிறகு பல்வேறு பிரச்சினைகளை
உண்டாக்கும்.
காதைக் குடையும் போது சுகமாகத்தான் இருக்கும்.
ஆனால் பிரச்னை ஏற்பட்ட பின் அது கொடுக்கும் குடைச்சலை நம்மால் தாங்கமுடியாது. லட்சக் கணக்கில் மருத்துவ செலவு வைத்துவிடும்.
அப்புறம்........இன்னொரு முக்கியமான விஷயம்.
காதுகள் கேட்பதற்காக மட்டுமே படைக்கப்படவில்லை.
நாம் நேராக நிற்கவும், தடுமாற்றம் இல்லாமல் நடந்து செல்லவும்
காதுகளில் உள்ள என்டோலிம்ப், (Endolymph) பெரிலிம்ப் ( Perilymph) என்கிற இரண்டு திரவங்கள் சமநிலையில் வைக்கப்படுவதால்தான் என்கிற
உண்மையையும் தெரிந்து கொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக