சனி, 7 மார்ச், 2020

கலைஞர் : பம்பரம் தானாகவே சுழன்றதா ? ... 1983 ஆகஸ்ட் இலங்கை கலவரம் ...

1983 ஆகஸ்ட் இலங்கை கலவரம்
இந்திய அரசின் விசேஷ செய்தியோடு  இந்தியவெளியுறவு அமைச்சர் நரசிம்ம ராவ்   கொழும்பில்  வந்து இறங்கினார்.
அடுத்த  இரண்டொரு நாளில் அன்றைய இலங்கை யின்  எதிர்கட்சி தலைவர் திரு அமிர்தலிங்கமும் இதர எம்பிக்களும் தமிழகத்துக்கு வந்து இறங்கினார்கள்.
அவர்களை வரவேற்று திமுக சார்பில் ஒரு கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது.
அக்கூட்டத்தில் பேசிய திரு அமிர்தலிங்கம அவர்கள் . "
நரசிம்ம ராவ் கொழும்பு விமான நிலையத்தில் கால் பதித்தார்....
 தமிழர்கள் மீதான தாக்குதல்  உடனே நின்றது என்று கூறி இந்திரா காந்தியை புகழ்ந்து பேசினார் . 
அவரின் கண்களுக்கு இந்திய அரசின் முயற்சி தெரிந்த அளவுக்கு அதற்கு காரணமாக இருந்த தமிழகத்தின் பங்கு ரயில் மறியல் போராட்டம் . கடையடைப்பு . மனித சங்கலி . ஒரு கோடி கையெழுத்து பற்றி எல்லாம் தெரிந்திருக்கவில்லையோ தெரியவில்லை.
இலங்கை தமிழர்களுக்காக உடனே களத்தில் குதித்து தொடர் போராட்டங்களை முன்னெடுத்தது திமுக .
ஏராளமான பல அமைப்புக்களும் கட்சிகளும்  பலவித போராட்டங்களை  . முன்னெடுத்தன .

யெஸ் பேங்க் நெருக்கடி: ஸ்தம்பிக்கும் ஆன் லைன் ஷாப்பிங்..

யெஸ் பேங்க் நெருக்கடி: ஸ்தம்பிக்கும் ஆன் லைன் ஷாப்பிங்!
Yes Bank இயக்குனர் நடிகர் ரவீந்தர்
மின்னம்பலம்: யெஸ் பேங்க் நெருக்கடி டிஜிட்டல் வர்த்தக உலகில் சங்கிலித் தொடர் விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. யெஸ் பேங்க் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்ததால், அதை ரிசர்வ் வங்கி தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்ட நிலையில்... யெஸ் பேங்க்கோடு இணைந்து டிஜிட்டல் பரிவர்த்தனைகளை செயல்படுத்தி வந்த, ‘ஃபோன் பே’ உள்ளிட்ட பல்வேறு டிஜிட்டல் பரிவர்த்தனை செயலிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.
ஃபோன் பேவின் பயனர்கள் செலுத்தும் அனைத்து பணப் பரிமாற்றங்களும் யெஸ் பேங்கை சார்ந்தே இருப்பதால், இந்தியா முழுதும் ஃபோன் பே டவுன் ஆகியிருக்கிறது.
ஃபோன் பே இந்தியாவின் முக்கியமான யுபிஐ பயன்பாடாக இருக்கும் நிலையில், யெஸ் பேங்க் நெருக்கடியால் ஃபோன் பேவின் பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் தங்கள் செயலியை அணுக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஃபோன் பே நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சமீர் நிகாம்,

கோவை மாநகராட்சியில் துப்புரவாளர் பணியில் சேர்ந்த எம்.எஸ்சி. மாணவி

கோவை மாநகராட்சியில் துப்புரவாளர் பணியில் சேர்ந்த எம்.எஸ்சி. மாணவிமாலைமலர் : கோவையில் துப்புரவு பணிக்கு விண்ணப்பித்து நேர்காணலில் கலந்துகொண்ட எம்.எஸ்சி. படித்து வரும் மோனிகா என்ற மாணவிக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேலைக்கான ஆணையை வழங்கினார். கோவை:< கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. இங்கு 2,520 நிரந்தர துப்புரவு தொழிலாளர்கள், 2,308 ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். காலியாக உள்ள 549 துப்புரவு பணியாளர் பணியிடங்களை நிரப்ப மாநகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த வேலைக்காக பி.எஸ்சி., பி.காம்., பி.இ. படித்த பட்டதாரிகள் உள்பட 7,300 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். இதில் 5,200 பேரே பங்கேற்றனர். இட ஒதுக்கீடு அடிப்படையில் அவர்களது விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டது.
இந்நிலையில் 321 பேருக்கு துப்புரவு தொழிலாளர் பணிநியமன உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி குனியமுத்தூரில் உள்ள மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் நடந்தது. கமி‌ஷனர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தலைமை தாங்கினார். துணை கமி‌ஷனர் பிரசன்னா ராமசாமி முன்னிலை வகித்தார்.

ஏ.ஆர்.ரஹ்மான் காலத்தின் கட்டாயம்? இளையராசா .? .. சமுக வலையில் ஒரு அலசல் ..

Nilavinian Manickam  : இளைய ராசாவைவிமர்ச்சிக்கும் முன்னமே ஓர்
அறிமுகம்..இளையராசா என் மாவட்டத்துக்காரர் மற்றும் அவரின் தீவிர இரசிகனென்பதுவும் ...நான் பெருமைகளாக கருதுபவை இளையராசா ஒன்றும் யோக்கியரல்ல...தன்கர்வம் கொண்டு மனிதர்களை மனிதர்களாக மதிக்கத்தெரியாத பார்பானீய புத்தி படைத்தவர்.. இசையின் உச்சியில் இருந்த காலங்களில் அவர் படம் முழுதும் தன் ஆக்கிரமிப்பை பயன்படுத்த முனைந்தவர்..பயன்படுத்தியவர்..
அவர் அத்தனை ஆண்டுகள் உச்சத்திலிருந்து..ரஹ்மானை விட எத்தனை தமிழ்ப்பாடகர்களை அறிமுகப்படுத்தி ஊக்குவித்து விட்டார்?
ஜெயச்சந்திரன் மற்றும் மலேசியா வாசுவை ஒழித்துக்கட்டியவர்..மனோ,சித்ரா மற்றும் அருண்மொழியை அறிமுகப்படுத்தியவர்...என்ற அளவுதான் அவருடைய அறிமுக ஊக்குவிப்புகள்...
..ஏ.ஆர்.ரகுமான் காலத்தின் கட்டாயம்...அவரால் இன்று உருவான தமிழ்ப்பாடகர்களின் பட்டியல் மிக நீளமானது..
ஒரு கவிஞரின் சுதந்திரத்தில் தலையிட்டதோடல்லாமல் ..முகப்பு பாடல்கள் மற்றும் உள் பாடல்களில் இவரின் பெருமையை பீத்த மறுத்த வைரமுத்துவுடன் முரண்பட்ட வேடதாரிதான் இளைய ராசா. (எ.கா..இராஜா..இராஜாதி இராசனிந்த இராஜா)
வைரமுத்து தனது நூலில்...இவரின் நேர்மறை மற்றும் எதிர்மறைகளை மறைக்காமல் மறுக்காமல் கூறியிருக்கிறார்...
கமலஹாசன் வாய்ப்புத்தந்த மருதநாயகம் திரைக்கதை எழுதும் பொறுப்பை ....கீழ்சபையின் தீர்மானம் மேல்சபையில் நிராகரிக்கப்படுவது போல....தட்டிவிட்டு பறித்தாயே என்ற குற்றச்சாட்டுக்கெல்லாம் வாய் திறக்காதவர்தான் இளைய ராஜா

பேராசிரியர் : ஒரு பேப்பரையும் ஒரு பேனாவையும் வைத்து கொண்டு .....

கண்ணன் இரா :; 1977 கழகம் தோல்வியை தழுவிய நேரத்தில் கழகத்திலிருந்து பொதுச்செயலாளர் நாவலர் பஉச சி.பி.சிற்றரசு செ.மாதவன் உள்ளிட்ட பலர் வெளியேறியபோது
அடுத்த பொதுச்சயலாளரை தேர்வு செய்ய தஞ்சையில் நடந்த பொதுக்குழுவுக்கு நண்பர்களுடன் சென்றிருந்தேன்.
பொதுச்செயலாளராக தேர்வானார்.
பொதுக்குழு முடிந்த பின் பொதுக்குழு தீர்மான விளக்கம் கூட்டத்தில் பேராசிரியர் பேசினார்.
நான் யாருக்கும் குறைந்தவன் அல்ல என்ற எண்ணம் கொண்டவன் ஏன் அகம்பாவம் உள்ளவன்.
அப்படிப்பட்ட நான் கடந்த ஓராண்டாக தமிழக அரசியலை கழகத்தின் நிலைபற்றி யெல்லாம் உண்ணிப்பாக கவனித்து வந்தேன்.
ஒரு பேப்பரை ஒரு பேனாவையும் வைத்துக்கொண்டு ஒரு மாபெரும் இயக்கத்தை கட்டிக்காத்த கலைஞரை பார்த்து வியந்து பார்த்து அவரின் கீழ் பணியாற்றுவதென்று முடிவுசெய்துவிட்டேன்.
அவர் கண்கள் கலைக்கண்கள் அந்த கண்ஒளியின் வெளிச்சத்தில் கழகப்பணியாற்றுதென்று முடிவெடுத்தேன் என்றார்

தலித் குடியிருப்பில் கூட வாழ அனுமதிக்கப்படாத ஒரு குடும்பத்தின் தலையெழுத்தை மாற்றிய ..

Image result for பேராசிரியர் அன்பழகன்Skp Karuna : பேராசிரியர் நினைவலைகள்
98 ஆம் ஆண்டு என நினைவு. எங்க தொகுதியில் ஒரு கிராமம். தள்ளி ஒரு காலனி. அதையும் தாண்டி ஒரு கொல்லமோட்டுலே ஏழெட்டு ஓலைக்குடிசை வீடுங்க. அதன் பேர் அருந்ததியர் குடியிருப்பு. அதில் ஒரு வீட்டுக்கு ஒரு நாள் போஸ்ட்மேன் செல்கிறார்.
வீட்டில் பக்கவாதம் வந்து படுத்துக் கிடக்கும் ஆண் மற்றும் ஒரு பெண்மணி. அவர்களுக்கு மூன்று பெண்கள். மூவரும் கூலி வேலக்குப் போயிருக்கிறார்கள். தபால்காரர் அந்தப் பெண்மணியிடம் மூன்று கடிதங்களைத் தருகிறார்.
மூன்றுமே அந்த மூன்றுப் பெண்களுக்கும் அரசுப் பள்ளிகளில் ஆசிரியராக நியமித்துள்ள பணியாணைகள்.
இப்படித்தான் ஒரு அஞ்சல்வழியே தலித் குடியிருப்பில் கூட வாழ அனுமதிக்கப்படாத ஒரு குடும்பத்தின் தலையெழுத்தை கலைஞர் ஒரே நாளில் மாற்றினார்.
பதிவு மூப்பின் வழியே மட்டும்தான் பணி அமர்த்த வேண்டும் என வாதாடி பணி ஆணை பிறப்பித்தது அப்போதைய கல்வி அமைச்சர் பேராசிரியர் பெருந்தகை. அப்படியோர் சமூகநீதிப் புரட்சி அதுதான் கடைசி.
மூன்று பெண்களும் அண்ணனை காண வந்தபோது (அப்போது அவர் வீட்டுவசதித் துறை அமைச்சர்), அண்ணியை கேசரி செய்ய சொல்லி, மாவட்ட ஆட்சித் தலைவர், கல்வி அதிகாரிகளை வரவழைத்து பிரியாணி விருந்து பறிமாற வைத்தார். எப்பேர்ப்பட்ட நெகிழ்வான தருணம்!

இந்தியப் பொது வாழ்வுக்கே எடுத்துக்காட்டான பேராசிரியர்: கி.வீரமணி மற்றும் . தலைவர்கள் அஞ்சலி!

திராவிட சிந்தனையின் தெளிவுரை- பேராசிரியருக்கு  தலைவர்கள் அஞ்சலி!மின்னம்பலம் : மறைந்த, திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகனின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக கீழ்ப்பாக்கத்தில் இருக்கும் அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஏராளமானோர் திரண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பேராசிரியர் மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம், “திமு கழகத்தின் மூத்த தலைவர் மற்றும் 47 ஆண்டு கால பொதுச்செயலாளர் பேராசிரியர் திரு அன்பழகன் அவர்களின் மறைவு குறித்து என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்”என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

BBC : பேராசிரியர் க. அன்பழகன் உடல் தகனம்: ... தலைவர்கள் இலட்சக்கணக்கான மக்கள்... வீடியோ லைவ்


திமுக பொதுச் செயலாளரும், மூத்த திராவிட இயக்கத் தலைவருமான பேராசிரியர் க.அன்பழகனின் உடல் சென்னை கீழ்ப்பாக்கம் வேலங்காடு மின்மயானத்தில் எரியூட்டப்பட்டது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர் இறுதி ஊர்வலம் கீழ்ப்பாக்கத்தில் அவரது இல்லத்தில் இருந்து தொடங்கியது. ஊர்வலத்தில் தி.மு.க. தலைவர் மு.க..ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, டி.ஆர்.பாலு, தமிழச்சி தங்கபாண்டியன், தயாநிதி மாறன், திருச்சி சிவா, முன்னாள் அமைச்சர்கள் பூங்கோதை, கே.என்.நேரு, பொன்முடி, உள்ளிட்ட நூற்றுக்கணக்கான திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.
வீட்டில் இருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள மின்மயானத்திற்கு செல்லும் அனைவரும் நடந்து சென்று இறுதி சடங்கில் கலந்துகொண்டதால் வழியில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இறுதி மரியாதை செலுத்திவிட்டு திமுக பொருளாளர் துரைமுருகன் கதறி அழுதார். அவரை டி.ஆர்.பாலு, கவிஞர் வைரமுத்து ஆகியோர் தேற்றினர்.

கொரோனா வைரஸ் 6 மாநிலங்களில் பரவ வாய்ப்பு

மாலைமலர் : கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதை கட்டுப்படுத்த 6 மாநிலங்களும் விழிப்புடன் செயல்பட்டு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைளையும் மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. புதுடெல்லி:
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதுவரை டெல்லி, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் 31 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர 13 ஈரானிய சுற்றுலா பயணிகள் அமிர்தசரஸ் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த அனைத்து மாநில அரசுகளும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் அனைத்து பயணிகளையும் விமான நிலையங்களில் வைத்தே மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படுகிறது. இதில் கொரோனா அறிகுறி தெரிந்தால் அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Yes bank ஒன்பது லட்சம் கோடிகளை பெரும் பண முதலைகளுக்கு ....

Shivakkumar TD
பாஜக ஆட்சியில் யெஸ் வங்கி கொடுத்த கடன் தொகை மதிப்பு.
நிதியாண்டு2014- 55,000 கோடிகள்.
நிதியாண்டு2015- 75,000. கோடிகள்,
நிதியாண்டு 2016- 98,000 கோடிகள்,
நிதியாண்டு 2017- 1,32,000 கோடிகள்,
நிதியாண்டு 2018- 2,03,000 கோடிகள்,
நிதியாண்டு 2019- 2,41,000. கோடிகள்

ஏறக்குறைய ஒன்பது லட்சம் கோடிகள்
இது மற்ற வங்கிகள் அளித்ததை விட இருபது சதவிகிதம் அதிகம்.
இது குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
''யெஸ் வங்கி பின்னடைவால் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை. எனெனில் அந்த வங்கியில் எனக்கு கணக்கு எதுவும் இல்லை''
என்று கூறியுள்ளார்.
எவன் செத்தால் எனக்கென்ன என்பதைப் போல உள்ளது.

 Narayanaperumal Jayaraman உண்மையான ஸ்கெட்ச் எஸ்.பி.ஐ, எல்.ஐ.சிக்குத்தான்.ஏற்கனவே ஐ.டி.பி.ஐ வங்கி திவால் ஆகும் நிலையில் எல்.ஐ.சியில் பிடுங்கி மூச்சு விட வைத்தார்கள். ஐ.எல்.எப்.எஸ் போன்ற இழுத்துக்கொண்டு கிடக்கும் பல நிறுவனங்களுக்கு எல்.ஐ.சியின் பணத்தை வாரி இறைத்திருக்கிறது அரசு.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா சிறை செல்ல காரணமாக இருந்த பேராசிரியர் அன்பழகனின் வழக்கு

Vishnupriya R - /tamil.oneindia.com : சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில்
ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் சிறை செல்ல முக்கிய காரணமாக இருந்தவர் திமுக பொதுச் செயலாளர் க அன்பழகன் ஆவார். 
கலைஞர் கருணாநிதியால் மிகவும் போற்றப்பட்டவரும் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டவருமான க அன்பழகன் கடந்த 24-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று இரவு 1 மணியளவில் காலமானார். 
அவரது உடலுக்கு பொது மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 
இந்த நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் சிறை செல்ல காரணமாக இருந்தது திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் தொடர்ந்த வழக்கு குறித்த ஒரு பார்வை. 
 ஜெ. மறைவுலஞ்ச ஒழிப்பு லஞ்ச ஒழிப்பு 1991-96-ஆம் ஆண்டு தமிழகத்தில் முதல்வராக இருந்த ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக குற்றம்சாட்டப்பட்டது. 
இதுதொடர்பாக சுப்பிரமணியன் சுவாமி 1996-ஆம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தார். ஜூன் 31ம் தேதி மனுவை விசாரித்த நீதிபதி, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை டி.ஜி.பி.,யாக இருந்த லத்திகா சரணை விசாரிக்க உத்தரவிட்டார். குற்றப்பத்திரிகை குற்றப்பத்திரிகை விசாரணைக்குப் பின்னர் ஜெயலலிதா அதே ஆண்டு கைது செய்யப்பட்டார். 
பின்னர் அவர் பிணையில் வெளியானார். வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 1997-ஆம் ஆண்டு ஜூன்4, ஊழல் தடுப்புச் சட்டத்தில் செயலலிதா மீது வழக்குத் தொடரப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது

BBC : தி.மு.க. பொதுச் செயலாளரும் திராவிட இயக்க பெரும் தலைவருமான பேராசிரியர் க. அன்பழகன் ...

திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சரும்,
தி.மு.கவின் பொதுச் செயலாளருமான பேராசிரியர் க. அன்பழகன் முதுமை காரணமாகவும் உடல்நலக் குறைவின் காரணமாகவும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக, பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ளாமல் வீட்டிலிருந்தபடியே சிகிச்சைபெற்று வந்தார்.
இந்த நிலையில், அவரது உடல்நிலை மோசமானதால் கடந்த ஃபிப்ரவரி 24ஆம் தேதி அவருக்கு மூச்சுச் திணறல் ஏற்பட்டது. அவர் உடனடியாக க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவருக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டுவந்தாலும் அவரது உடல் நிலையில், முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை. இதையடுத்து அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. இருந்தபோதும் அவரது உடல்நிலை மோசமடைந்துவந்தது. இந்நிலையில், அவர் இன்று, சனிக்கிழமை அதிகாலை ஒருமணியளவில், காலமானதாக அறிவிக்கப்பட்டது.
க. அன்பழகன் யார்?
1922ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் தேதி திருவாரூருக்கு அருகில் உள்ள காட்டூரில் கல்யாணசுந்தரம் - சொர்ணம் தம்பதியின் மூத்த மகனாகப் பிறந்த இவருக்கு முதலில் ராமைய்யா என்ற பெயரே சூட்டப்பட்டது
அன்பழகனின் தந்தை காங்கிரஸ் இயக்க அபிமானம் உடையவர் என்றாலும், 1925ல் பெரியார் காங்கிரசிலிருந்து வெளியேறியபோது அவருடன் சேர்ந்து வெளியேறியவர். இதற்குப் பிறகு தந்தையாருடன் சேர்ந்து பெரியாரின் பொதுக்கூட்டப் பேச்சுகளை கேட்பது அவரது வழக்கமாக இருந்தது. சிறுவனாக இருந்த காலத்திலிருந்தே அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டுவந்தார் அன்பழகன்.

டெல்லி நிலவரம்.. நேரில் சென்று பார்த்தவர் .. ... இவர்களை இப்படி நிராயுதபாணியாக விட்டு விட்டாயே ..

இதைப் படிக்கும்போதே கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிகின்றது..
கண் கலங்க வைத்த உரையாடல்:

நேற்று காலை 11 மணிக்கு பாடம் நடத்திக்கொணடிருக்கும் வேளையில் ஜமாஅத்துல் உலமா சபை மாநில தலைவரின் அழைப்பு ....
நீண்ட நாட்களுக்குப் பின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய ஹஜ்ரத் அவர்கள் ....
இயல்பான விசாரிப்புக்குபின்
டெல்லி நிலவரங்களை கேட்டேன்... வன்முறை வெறியாட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு விட்டு இரவு 1மணிக்கு வந்தோம் என்று நிகழ்வுகளை கண் கலங்க கூறினார்கள்
மனித நேயமுள்ள மனசாட்சியுள்ள யாரும் அந்த கோரக்காட்சிகளை பார்த்து விட்டு சாப்பிடவோ தூங்கவோ முடியாதே அப்படி ஒரு கொடூரத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள் வன்முறையாளர்கள்
பெண்கள், குழந்தைகள், வாலிபர்கள் என்று திட்டமிட்டு நிதானமாக 72 மணிநேரங்கள் அந்த பகுதி முழுமையையும் தங்கள் கட்டுப்பாட்டில்
வைத்து ஆற அமர சுமார் 1000 க்கும் அதிகமானோர் கையில் துப்பாக்கிகள் ,இரும்புத்தடிகள் வழக்கமாக அவர்கள் பயன்படுத்தும் கொடூரமான ஆயுதங்களோடு தனித்தனியாக சென்றால் நாம் தாக்கப்பட்டு விடுவோம் என்று அஞ்சி கும்பலாக ஒவ்வொரு வீதியிலும் அடையாளமிடப்பட்ட வீடுகளையும் கடைகளையும் அடித்து நொறுக்கி வீட்டிலுள்ள கேஸ்களை திறந்து விட்டு கைகளில் கொண்டு வந்த பெட்ரோல் குண்டுகளை வீசி ஆண்களை வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு துன்புறுத்தி கொலை செய்துள்ளார்கள்..
படுகொலை செய்யப்பட்ட எல்லோருடைய உடல்களிலும் குண்டு காயங்கள் இருந்தது என்றால் வன்முறை யில் ஈடுபட்ட அனைவரும் துப்பாக்கியோடு வந்துள்ளார்கள் என்று விளங்க முடிகிறது

தமிழகத்தில் வடநாட்டவர் .. அதிர்ச்சி அளிக்கும் விபரங்கள் ..

Vaa Manikandan : தமிழகத்தில் எந்த ஊரிலும் ஹார்டுவேர் கடைகளை
வடநாட்டவர்கள்தான் நடத்துகிறார்கள்.
ஊத்தங்கரை, ஜெகதேவி போன்ற கிரானைட் கிடைக்கும் இடங்களில் இருக்கும் 90% வியாபார நிறுவனங்கள் வடக்கத்தியார்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது.
பெருந்துறை, ஓசூர் மாதிரியான தொழிற்சாலைகள் நிறைந்த தொகுதிகளில் குறைந்தது பதினைந்தாயிரம் வடநாட்டு வாக்காளர்கள் இருக்கிறார்கள். தமிழகத்தின் எந்த ஊரிலும் இரவு நேர பானிபூரி கடைகள் அனைத்தையும் பீடாக்காரர்கள்தான் நடத்துகிறார்கள்.
சாலையோரங்களில் குழந்தைகளுக்கான விளையாட்டுச் சாமான்களை விற்பவர்கள், ஆங்காங்கு பட்டறை போட்டு கத்தி, அரிவாள் விற்பவர்கள் என சகல இடங்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவர்கள் அவர்கள்தான். கோவையிலிருந்து சென்னை கிளம்பும் எந்த ரயிலின் பதிவு செய்யப்படாத பெட்டிகளும் வட மாநிலத்தவர்களால் மட்டுமே நிரம்பியிருக்கும்.
கூலித் தொழிலாளர்கள், கட்டிட வேலை செய்கிறவர்கள் என அவர்கள் இல்லாத இடங்களே இல்லை. ‘

நூற்றாண்டுகளுக்கு வழிகாட்டும் வரலாற்று பாடம் எங்கள் இனமான பேராசிரியர் அன்பழகன்

17 September 1949 ..  அன்று கொட்டும் மழையில் ராபின்சன் பூங்காவில் தொடங்கப்பட்ட திராவிட
முன்னேற்ற கழகத்தின் கடைசி சாட்சியாக இருந்த  இனமான பேராசிரியர் அன்பழகன் .!.
 97 வயது வரை நீண்ட நெடிய வாழ்க்கை பயணத்தை ஒரு காவியம் போல வாழ்ந்து காட்டிவிட்டு சென்றிருக்கிறார் எங்கள் திராவிட பெருந்தகையாளன் பேராசிரியர் அன்பழகன் அவர்கள்.
இனமான பேராசிரியரின் ஒவ்வொரு பக்கமும் ஒவ்வொரு காவியம் போலவே போற்ற தகுந்தாகும்.
சுயமரியாதை சமூகநீதி பகுத்தறிவு கொள்கைகளை எந்த காலத்திலும் சமரசம் செய்துகொள்ளாத திராவிட போராளி!
திராவிட முன்னேற்ற கழக கப்பல் எங்கே தரை தட்டிவிடுமோ என்று பலரும் தடுமாறி தப்பி ஓடிய காலங்களில் எல்லாம் தளராது தன் ஆருயிர் நண்பன் கலைஞருக்கு பக்க பலமாக  உடுக்கை இழந்தவன் கைபோல இடுக்கண் களைவதாம் நட்பு என்ற திருக்குறளுக்கு ஒரு மகுடமாக வாழ்ந்த பண்பாளன்.
கழகம் தோல்வியின் எல்லைக்கே சென்றாலும்  தனது உறுதியை ஒருபோதும் இழக்காமல் அடுத்த களத்துக்கு எப்போ நாள் குறிப்போம் நண்பா என்று ஓயாத போராட்டங்களால் திராவிட இயக்கத்தை உயிர்ப்போடு வைந்திருந்து அடுத்த தலைமுறைக்கு கையளித்து விட்டு சென்ற தலைமுறைகளின் நாயகன்.
தலைவர்களும் அடிமட்ட தொண்டர்களும் கூட ஒருவேளை தங்கள் நம்பிக்கையை இழந்திருந்த காலக்கட்டங்களிலும் கூட பேராசிரியர் ஒருபோதும் தனது நம்பிக்கையை இழந்தவர் அல்லர் .
அரசியல் எதிரிகளுக்க்கு பேராசிரியர் தொடுத்த தாக்குதல்கள் மிக மிக உக்கிரம் வாய்ந்தவை ஆகும். குறிப்பாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மீதான வழக்குகளை தொடுத்து அதில் வெற்றி கண்டவர் பேராசிரியர் . ஆனாலும் அவர்கூட ஒரு போதும் பேராசிரியரை வெறுத்ததாக தெரியவில்லை.
பேராசிரியரின் போர் முழக்கம் கூட ஒரு poetic  ஆகவே இருந்தது. கண்ணியம் என்ற வார்த்தையின் அர்த்தமாகவே வாழ்ந்த கண்ணியவான்
இனி வரப்போகும் நூற்றாண்டுகளுக்கு வழிகாட்டும் வரலாற்று பாடம் எங்கள் இனமான பேராசிரியர் அன்பழகன்

பேராசிரியர் அன்பழகன் காலமானார் ...

.seithisolai.com : திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன்
காலமானார்.
பேராசிரியர் .க.அன்பழகன் 1977 முதல் திமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். தமிழகத்தின் அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவரான இவருக்கு பிப்ரவரி 24ஆம் தேதி வயது மூப்பின் காரணமாக திடீரென அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
இதன் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு செயற்கை சுவாச பொருத்தப்பட்டு தொடர்ந்து 12 நாட்களாக அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.அவரின் உடல் முன்னேற்றம் அடைந்து மீண்டும் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் க.அன்பழகன் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. 98 வயதான திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் மறைவை கேட்ட திமுக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பேராசிரியர் அன்பழகன் உடல் நிலையில் முன்னேற்றமில்லை: மு.க.ஸ்டாலின்


BBC :திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகனுக்கு தீவிர சிகிச்சை
அளிக்கப்படுகிறபோதும், வயது மூப்பு காரணமாக அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வருடமாக வீட்டில் சிகிச்சை பெற்றுவந்த அவர், கடந்த பிப்ரவரி 24ம் தேதி கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவ்வப்போது திமுக தலைவர்கள் அவரை சென்று பார்த்து வருகின்றனர்.
தற்போது, அன்பழகனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. வெள்ளிக்கிழமை மாலை திமுக தலைவர் ஸ்டாலின் மருத்துவமனைக்குச் சென்று பார்த்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது தீவிர கண்காணிப்பில் இருந்தாலும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை என வருத்தத்துடன் தெரிவித்தார்.
"ஒரு வருடமாக அவர் இல்லத்தில் ஓய்வில் இருந்தார். கடந்த மாதம் உடல்நலம் மிகவும் குன்றியது. மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆனால் வயது முதிர்வு காரணமாக சிகிச்சைக்கு இதுவரை பலன் ஏற்படவில்லை," என்றார் ஸ்டாலின்.

வெள்ளி, 6 மார்ச், 2020

பெரியார் இயக்கங்களும் புலி அமைப்பும் .. முகநூல் கருத்து பரிமாற்றங்கள்

Kalai Selvi : · 30 ஆண்டுகளாக ஈழப் போராட்டத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் ஆதரவாக நின்ற பெரியார் இயக்கங்கள் தந்தை பெரியாரை பலி கொடுத்து விட்டன,

Dev JB அதிலும் பெரியார் படத்தை வைக்கும் இடத்தில அதற்கு சமமாக பிரபாகரன் படம் வைப்பதெல்லாம் கேவலம்... உனக்கு பிரபாகரன் தலைவன்னா அவர் படம் மட்டும் வை.. என்னமோ செய்.. ஆனா ...

இராவண கோபால் : முற்றிலும் புலிகளையோ மற்ற ஈழ இயக்கங்களையோ புறந்தள்ளவும்.முடியாது . நாமுடைய அளவு என்பது தமிழர்களுக்கான ஆதரவு மட்டுமே என்பதாக இருக்க வேண்டும் .இருந்திருக்க வேண்டும் . ஆனால் ஒருவரை மட்டும் கதா நாயகனாக பார்க்கும் மனப்பான்மைதான் இன்னும் பலபேருக்கும்.( நானும் அப்படி இருந்தவன் தான்) வீர தீர சாகசங்களை அவ்வப்போது பேசுவது . உணர்ச்சி வயப்பட்டு துடிப்பதுபோல நடிப்பது .இதன் மூலம் தன்னை வீரனாக காட்டிக்கொள்வது

வளன்பிச்சைவளன் :  உண்மை கோடம்பாக்கம் சம்பவத்திற்கு பிறகு அமிர்தலிங்கம் பிரபாகரன், உமாமகேஷ்வரிடம் இருவரும் ஒருவரை ஒருவர் கொல்ல முயற்சிப்பது இல்லை என்ற உறுதி மொழியை பெற்றார். அப்போது எல்லா இயக்கங்களும் பரஸ்பரம் உறவு இருந்தது பண முடை ஏற்படும் காலங்களில் மற்ற இயக்கத்தினரிடம் இருந்து பணம் பெறும் அளவிற்கு உறவும் இருந்தது. பெரியாரிய இயக்கங்கள் புலிகளை தமிழகம் பிரமிப்பாக பார்க்கும் மனநிலையை உருவாக்கினார்களே அன்றி அவர்களை தங்கள் சித்தாந்த வயப்படுத்த எந்த ஒரு சிறுமுயற்சியும் எடுக்க வில்லை அந்த சிந்தனையே அற்றவர்களாக இருந்தனர். அவர்களை தொழுது வணங்கும் நிலையில் இருந்தனர் என்பது கசப்பான உண்மையே. இதில் கலைஞர் மிகச் சரியான நிலைப்பாட்டில் இருந்தார், சர்வாதிகார மனநிலை கொண்டவரை ஆதரிக்க ஆதரிப்பது தவறு என்பதால் விலகிக் கொண்டார் ஆனால் பெரியவாதிகள் உயர்த்தி பிடித்தது வேதனை, அந்த தவறை மறுபரிசீலனை செய்ய மறுப்பது இன்றும் மாவீரர் நாட்களில் துதி பாடுவது பெரியாருக்கு இழைக்கும் துரோகமே.

Devi Somasundaram : டெஸோ வ கலைஞர் ஆரம்பித்த போது அவரோடு இருந்து இருக்கலாம்னு சொன்னேன் தோழர் ..தமிழக பெரியாரிய இயக்கங்களின் ஆதரவு பிரபாகரனுக்கு கிடைக்காமல் இருந்திருந்தால் அவர் கொஞ்சம் இறங்கி வர யோசிக்க வாய்ப்பை தந்து இருக்கலாம் ...சித்தாந்த ஆதரவை தாண்டி ஆயுத உதவி, பொருள் உதவின்னு கிட்ட தட்ட கடத்தல்காரர்களா மாறினதுலாம் தடுக்கப் பட்டு இருந்தால் பிரபாகரனுக்கு இத்தனை துணிச்சல் வந்திருக்காது .... கோடம் பாக்கம் துப்பாக்கி சூட்டுக்கு பின்னும் எப்படி பிரபாகரனை ஆதரித்தார்கள்னு புரியல .

Crypto Currency கிரிப்டோ கரன்சி .. இதன் வளர்ச்சி என்ன ? ஏன் இதை தடை செய்தார்கள்?... இதற்கு demand இருந்துக் கொண்டே...

Muralidharan Pb : Crypto Currency கிரிப்டோ கரன்சி ஒரு பார்வை.
இரு நாட்களுக்கு முன்பு உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை தந்தது நினைவிருக்கலாம். அது தான் கிரிப்டோ கரன்சி எனப்படும் மெய் நிகர் நாணயம் இந்திய மத்திய வங்கியால் தடை செய்யப்பட்டிருந்தது. அந்த தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது அந்த தீர்ப்பு.
அந்த கிரிப்டோ கரன்சி பற்றிய நமது புரிதல் அல்லது நாம் அறியவேண்டிய சில உண்மைகள் மற்றும் அதனுடைய வளர்ச்சி.
வளர்ச்சியைப் பற்றி பிறகு பார்க்கலாம்.
முதலில் கிரிப்டோ கரன்சி பற்றிய உண்மைகள் அறிவோம்.
கிரிப்டோ கரன்சி பற்றிய அறிய நாம் ஒரு எடுத்துக்காட்டோடு விளக்கினால் எளிதில் புரியும்.
கிரிப்டோ சுர்ரெனசி என்றொரு (Innovative) புதுமையான நாணயத்தில் முதன்முதலில் உருவாக்கப்பட்டது தான் பிட் காயின் Bit Coin. இதை வடிவமைத்தவர் ஒரு அமெரிக்க வாழ் ஜப்பானியர். பெயர் சடோஷி நாகமோட்டோ.
இதை உருவாக்கியபின், மின்னணு பணப்பரிவர்தனைகளை நடத்தும் போது, கூடுமானவரையில் மூன்றாவது நபர் தலையீடில்லாமல் பணம் பெறுபவரும் பணம் அளிப்பவரும் தங்களது ஒப்புகையோடு பரிமாறிக்கொள்ளலாம். ஆனால் மூன்றாவது நபரை விட நம்பகமான பாதுகாப்பைக் கொண்டு, பண பரிவர்த்தனைகளை செய்திட முடியும் என்பதே பிட் காயின் என்ற வழிமுறையின் இமாலய வளர்ச்சி.
Bit Coin என்பது ஏதோ ஒரு வட்ட வடிவ, சதுர வடிவ நாணயமோ அல்ல. அது ஒரு மென்பொருளால் உருவான ஒரு குறியீட்டு எண். Address. Virtual Money, மெய்நிகர் காசு.

YES Bank வீழ்ச்சியை பார்க்கும் போது ... Margin Call படம் வந்து செல்கிறது.

Karthikeyan Fastura : YES Bank வீழ்ச்சியை பார்க்கும் போது கண் முன்னே Margin Call படம் வந்து செல்கிறது.
அந்தப்படத்தில் வால் ஸ்ட்ரீட்டில் இயங்கும் புகழ்பெற்ற ஒரு இன்வெஸ்ட்மென்ட் வங்கியில் திடீரென்று பிங்க் ஸ்லிப் கொடுத்து சில பணியாளர்களை வீட்டிற்கு அனுப்புவார்கள். அதில் அந்த வங்கியில் நீண்டகாலமாக பணிபுரிந்த ரிஸ்க் மேனேஜ்மென்ட் பிரிவின் தலைவரையும் கிளப்புவார்கள். அப்போது அவர் சொல்வார் "வங்கியின் நிதி நிலை பற்றிய ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி நான் ஆராய்ந்து வருகிறேன். கொஞ்சம் டைம் கொடுங்கள்" என்று கேட்பார். "அதை அடுத்து வரும் உங்கள் ஜூனியர் பார்த்துக்கொள்வார். நீங்கள் கிளம்பலாம்" என்று ரொம்ப எகத்தாளமாக வெளியே அனுப்புவார் வங்கியின் மனித வளத்துறை அதிகாரி.
அவர் எல்லாவற்றையும் பேக் செய்து விட்டு கிளம்பும்போது லிப்டில் வைத்து ஒரு பென்-டிரைவில் கொடுத்து "இது ரொம்ப முக்கியம் கவனமாக இரு" என்று சொல்லிவிட்டு செல்வார்.
அதை அன்று இரவு அந்த ஜூனியர் எடுத்து ஆராய்ந்து பார்ப்பார். அங்கு அவருக்கு ஒரு திடுக்கிடும் செய்தி காத்திருக்கும். வங்கியின் நிதி நிலை இன்னும் சில நாட்கள் கூட தாங்காது. அவர்களின் போர்ட்போலியோ 25% விழுந்துவிட்டால் வங்கியின் மொத்த மதிப்பும் விழுந்துவிடும். அதேபோல வங்கியின் கடன் காப்பு அளவு அதன் தாங்கு திறனை விட மிக மோசமாக இருக்கும். மொத்தத்தில் எப்படிப் பார்த்தாலும் வங்கியின் மதிப்பு விழுவது உறுதி.

பெண் சிசு கள்ளிப்பால் ஊற்றி கொன்ற பெற்றோர், தாத்தா கைது


BBC : மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பி.மீனாட்சிபட்டி எனும் கிராமத்தைச் சேர்ந்த பெற்றோர், பிறந்து ஒரு மாதமே ஆன பெண் குழந்தையை கொன்று புதைத்துள்ளனர் என வழக்கு பதிவாகியுள்ளது. வைரமுருகன்-செளமியா தம்பதிக்குப் பிறந்த இரண்டாவது குழந்தையும் பெண் குழந்தையாக பிறந்ததால் கொன்று புதைத்ததுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட தம்பதி, குழந்தைக்கு கள்ளிப்பால் கொடுத்ததை ஒப்புக்கொண்டுள்ளனர் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, குழந்தை கொலை செய்யப்பட்டது குறித்து காவல்துறை கட்டுப்பாடு அறைக்கு (உதவி எண் 100) வந்த தொலைபேசி தகவலை அடுத்து பெற்றோரை விசாரிக்க காவல்துறையினர் சென்றபோது, அவர்கள் வீட்டிலிருந்து வெளியேறிவிட்டனர் என தெரியவந்தது.
ஆனால் அவர்கள் வழக்கறிஞரின் துணையோடு அடுத்தநாள் காவல்துறையிடம் சரண் அடைந்தனர் என்றனவைரமுத்து - சௌமியா அளித்த வாக்குமூலத்தின்படி, கொலை செய்யப்பட்ட குழந்தையை தாத்தா சிங்கத்தேவன் வீட்டுக்கு அருகே புதைத்தது கண்டறியப்பட்டது என அதிகாரிகள் கூறுகின்றனர்.

சென்னை பல்கலை கழக துணை வேந்தராக ஜெகதீஷ் (telugu).. தமிழகத்தில் யாருக்கும் தகுதியில்லையா?

சென்னை பல்கலை: தமிழகத்தில் யாருக்கும் தகுதியில்லையா?மின்னம்பலம் : சென்னை பல்கலை துணை வேந்தர் தேடுதல் குழு தலைவர் நியமனத்திற்கு தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பொறுப்பேற்றதில் இருந்து பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர்களாக வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களே நியமிக்கப்பட்டு வருகின்றனர். அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்திற்கு ஆந்திராவைச் சேர்ந்த சூரிய நாராயண சாஸ்திரியையும். சென்னை அண்ணா பல்கலைக் கழகத்திற்கு கர்நாடகாவைச் சேர்ந்த எம்.கே. சூரப்பாவும் நியமனம் செய்யப்பட்டனர். இதற்கு எதிராக, தமிழகத்தில் ஒருவர் கூடவா துணை வேந்தர் பதவிக்கு தகுதியானவர் இல்லை என்று அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பின.
தற்போது சென்னை பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கான தேர்வுக்குழுவின் தலைவராக புதுடெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் ஜெகதீஷ் குமாரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமித்துள்ளார்.இதற்கும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

பார்ப்பனர்களுக்கு தனி கழிப்பறை; கேரள மகாதேவா கோவிலின் அறிவிப்புப் பலகை


தினமணி :கேரளாவின் திரிச்சூரில் புகழ்பெற்ற குட்டுமுக்கு மகாதேவ கோயிலில் அமைந்துள்ளது. சமீபத்தில் திருவிழா ஒன்றிற்காக அங்கு சென்ற அரவிந்த் என்ற ஆராய்ச்சி மாணவர்தான் கோவிலில் இத்தகைய அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருப்பதை முதலில் கண்டறிந்தவர்.  கோவில் வளாகத்தில் மூன்று டாய்லெட்டுகள் இருந்துள்ளன. அதில் வழக்கம்போல் முதல் இரண்டு டாய்லெட்டுகளில் ஆண், பெண் என எழுதப்பட்டிருந்தது. மூன்றாவதாக மூடப்பட்டிருந்த அந்த டாய்லெட் அறையின் மேலே பிராமணர்களுக்கு என்று எழுதப்பட்டிருந்திருக்கிறது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக அதனை புகைப்படம் எடுத்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  இது சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது. கோவில் நிர்வாகத்தின் இந்த  செயலுக்கு பல்வேறு திசைகளில்  இருந்தும் கடுமையான கண்டனங்கள் எழுந்தன. குறிப்பாக டாய்லெட்டில் கூட சாதி பார்க்கப்படுவதாக பலரும் கோபத்துடன் கருத்து தெரிவித்ததை அடுத்து, பிராமணர்களுக்கு என்று எழுதப்பட்டிருந்த பலகையை கோயில் நிர்வாகம் நீக்கியுள்ளது.

ரூ.500 கோடி செலவில் பிரம்மாண்டமாக நடந்த கர்நாடகா பாஜக அமைச்சர் வீட்டு திருமணம்

மாலைமலர் :கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீராமுலுவின் மகள் திருமணம் ரூ.500 கோடி செலவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீராமுலுவின் மகள் ரக்‌ஷிதாவுக்கும் பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் ரவிக்குமாருக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது.
இந்த திருமண விழாவுக்காக ரூ.500 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளதாக அமைச்சர் ஸ்ரீராமுலுவின் அலுவலகச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமண விழாக் கொண்டாட்டங்கள் பிப்ரவரி 27-ந் தேதியே தொடங்கிவிட்டன. 9 நாள் திருமண விழா பெங்களூரு அரண்மனை வளாகத்தில் நடைபெற்றது. 40 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட முறையில் திருமண அரங்கு அமைக்கப்பட்டது. 27 ஏக்கர் விழா அரங்குக்காகவும் 15 ஏக்கர் பார்க்கிங்காகவும் ஒதுக்கப்பட்டன.
நான்கு ஏக்கர் பரப்பளவில் அலங்கரிக்கப்பட்டுள்ள மணப்பந்தலில் ஹம்பியில் அமைந்துள்ள வீரபக்‌‌ஷர் ஆலய வடிவம் உட்பட பல அரங்குகள் அமைக்கப்பட்டன.

இளைஞரைத் தாக்கிய பெண் போலீஸ்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

இளைஞரைத் தாக்கிய போலீஸ்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!மின்னம்பலம் : காவல் நிலையத்துக்குப் புகார் அளிக்க வந்த இளைஞரைப் பெண் தலைமைக் காவலர் தாக்கிய விவகாரம் குறித்து கோவை காவல் துறை கண்காணிப்பாளர் அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கோவை மாவட்டம் பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தவர் கிருஷ்ணவேணி. இவர் காவல்நிலையத்துக்குப் புகார் அளிக்க வருபவர்களிடம் மிரட்டி லஞ்சம் பெற்று வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Yes Bank 96% நஷ்டம் கொடுத்த யெஸ் பேங்க்! பணம் போட்டவர்கள் ????


tamil.goodreturns.in  :யெஸ் பேங்க். தற்போது அதிகம் மக்களால் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு நிறுவனம். நேற்று முதல் இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள், வங்கியில் இருந்து 50,000 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் எனச் செய்திகள் வெளியானது. அதன் பின் யெஸ் பேங்க் என்ன ஆனது. இந்த வங்கியில் என்ன பிரச்சனை, ஏன் இந்த கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறார்கள் என பல செய்திகள் வந்து குவியத் தொடங்கிவிட்டன.
இந்த நேரத்தில் யெஸ் பேங்கின் பங்கு விலை குறித்தும் செய்திகள் வெளியாகத் தொடங்கி இருக்கின்றன. யெஸ் பேங்க் பங்கின் விலை போக்கைத் தான் கட்டுரையில் விரிவாகப் பார்க்க இருக்கிறோம். கடந்த 12 ஜூலை 2005 அன்று சந்தையில் பட்டியலிடப்பட்டது யெஸ் பேங்க் பங்குகள். முதல் நாளே யெஸ் பேங்க் 13 ரூபாய்க்கு வர்த்தகமாகத் தொடங்கியது. பட்டியலிடப்பட்டதில் இருந்து சென்செக்ஸின் குறைந்தபட்சப் புள்ளி என்றால் அது 11.25 தான். 15-07-2005 அன்று யெஸ் பேங்க் 11.25 என்கிற குறைந்தபட்ச விலையைத் தொட்டது.
 எதுவரை விலை ஏற்றம் எதுவரை விலை ஏற்றம் கடந்த 10-01-2006 அன்று யெஸ் பேங்க் பங்கு விலை 55 ரூபாயைத் தொட்டு வர்த்தகமானது. இதை முதல் நல்ல விலை ஏற்றம் என்று சொல்லலாம். ஆனால் எதிர்பாராத விதமாக அடுத்தடுத்த ஆண்டுகளில் யெஸ் பேங்க் பங்கு சரியத் தொடங்கிவிட்டது. எதுவரை சரிந்தது என்று கேட்டால் 09-03-2009-ம் தேதி 8.16 ரூபாய் வரை சரிந்தது. இதில் 2008 பொருளாதார நெருக்கடியும் வந்து போனது குறிப்பிடத்தக்கது.

Yes Bank பணம் மீளப்பெற கட்டுப்பாடு .. யெஸ் வங்கியில் ₹1300 கோடி வைத்திருந்த திருப்பதி தேவஸ்தானம் இரு மாதங்களுக்கு முன்பே மீட்டது...


tamil.news18.com :இன்றைய சூழலில் யெஸ் வங்கிக் கணக்கு ஒன்றிலிருந்து 50 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக அடுத்த ஒரு மாதத்துக்கு எந்த ஒரு வாடிக்கையாளரும் பணம் எடுக்க முடியாது வாராக்கடன், மோசமான நிர்வாகம் உள்ளிட்ட காரணங்களால் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் யெஸ் வங்கி, கடந்த ஆண்டு 1,500 கோடி ரூபாய் இழப்பை சந்தித்தது. இதனால், அந்த வங்கியை, ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டுவருவதாக நேற்று அறிவித்தது.
இன்றைய சூழலில் யெஸ் வங்கிக் கணக்கு ஒன்றிலிருந்து 50 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக அடுத்த ஒரு மாதத்துக்கு எந்த ஒரு வாடிக்கையாளரும் பணம் எடுக்க முடியாது. ஆனால் சில மாதங்களுக்கு முன்னர்தான் திருப்பதி தேவஸ்தானம் தனது யெஸ் வங்கிக் கணக்கிலிருந்து மொத்தமாக 1300 கோடி ரூபாயை எடுத்துள்ளது.யெஸ் வங்கியின் திறன் நடவடிக்கைகளைத் தொடர்ந்து ஆராய்ச்சி செய்ததில் அதனது போக்கு சரியில்லை என்பதை அறிந்த திருப்பதி தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டி மொத்தப் பணத்தையும் எடுத்துவிட தீர்மானித்துள்ளார். இதுகுறித்து ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியிடம் தகவல் அளித்தப் பின்னர் தேவஸ்தானம் மொத்தப் பணத்தையும் கணக்கிலிருந்து எடுத்துள்ளது.

முஸ்லிம்களை படுகொலை செய்வதை நிறுத்துங்கள்: இந்தியாவுக்கு ஈரான் தலைவர் அயத்துல்லா காமினி கண்டனம்

after-zarif-and-qalibaf-ayatollah-khamenei-calls-on-india-to-stop-massacre-of-muslims hindutamil.in : ஈரான் தூதரக அதிகாரிக்கு மத்திய அரசு அழைப்பாணை உத்தரவு பிறப்பித்ததையடுத்து ஈரான் நாட்டுத் தலைவர் அயத்துல்லா காமினி ‘முஸ்லிம்களைப் படுகொலை செய்வதை இந்தியா நிறுத்த வேண்டும்’ என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் நாடுகளிடமிருந்து தனிமைப்பட்டுப் போகாமல் இருக்க வேண்டுமெனில் முஸ்லிம்களை படுகொலை செய்வதை நிறுத்த வேண்டும் என்று அயத்துல்லா காமினி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்முன்னதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் ஜவாத் ஜரீஃபும் பாகுபாடின்றி எல்லா குடிமக்களையும் நடத்துமாறு இந்தியாவுக்கு அறிவுறுத்தினார்.

ரஜினிக்கு ஏமாற்றம் தந்தது எது.. கூட்டத்தில் நடந்தது பற்றி ...

ரஜினிக்கு ஏமாற்றம் தந்தது எது?
மின்னம்பலம் : ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நேற்று (மார்ச் 5) சென்னையில் நடைபெற்றது. கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி,
“கட்சி தொடங்குவது குறித்தான விஷயங்களை விவாதிப்பதற்காக ஓர் ஆண்டுக்குப் பிறகு மாவட்டச் செயலாளர்களைச் சந்தித்தேன். அவர்களின் நிறைய கேள்விகளுக்கு நான் பதிலளித்தேன். நிறைய விஷயங்களைப் பரிமாறிக்கொண்டோம். மாவட்டச் செயலாளர்களுக்குத் திருப்தியாக இருந்தது. ஆனால், ஒரு விஷயத்தில் எனக்குத் திருப்தி கிடையாது, ஏமாற்றம்தான். அது என்ன என்பதை தற்போது சொல்ல விரும்பவில்லை. நேரம் வரும்போது சொல்கிறேன்” என்று தெரிவித்தார்.

கர்நாடகாவில் சாலை விபத்து- தமிழக பக்தர்கள் 10 பேர் உயிரிழப்பு !

today early morning incident in karnatakaநக்கீரன் :கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் தமிழக பக்தர்கள் 10 பேர் உள்பட 12 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சீக்கணப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த 12 பேர் காரில் கர்நாடக மாநிலத்தில் உள்ள தர்மஸ்சாலா கோயிலுக்கு சென்றனர். பின்பு தரிசனம் செய்து விட்டு ஊர் திரும்பும் போது தும்கூர் அருகே குனிகல் பகுதியில் கார் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தமிழக பக்தர்கள் 10 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் தமிழக பக்தர்களின் காரையடுத்து பின்னால் வந்த காரும் விபத்தில் சிக்கியதில் பெங்களூரை சேர்ந்த 2 பேரும் பலியாகினர். 

அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா மார்ச் 10 ம் தேதி ..

Arun Prakash : தோழர்களுக்கு வணக்கம்... அன்னை மணியம்மை குறித்து பெரும்பாலும் நாம் அறிந்திருப்போம். சென்ற ஆண்டு மார்ச் 10ம் தேதி அவர்களது பிறந்தநாள் மணியம்மை நூற்றாண்டு விழாவாக மாதம் முழுவதும் சிறப்பாய் கொண்டாடினோம்.
இந்த வருடம் மார்ச் 10 ம் தேதி அவர்களுடைய பிறந்தநாளை முன்னிட்டு மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும்  அவர்களை பற்றிய  செய்திகளை  படித்து  பதிவிடலாம் என முடிவு செய்துள்ளோம். தோழர்கள் அனைவரும் இதை முயற்சி செய்தால் மகிழ்ச்சி.

இன்று மணியம்மை அவர்கள் குறித்து ஒரு அறிமுகம் மட்டும் #02_03_2020
பெரியாருடன் குற்றாலத்திலும், ஈரோட்டிலும் ஒரு மாத காலமிருந்தேன். அவர் உடல்நிலை மிகப்பலவீனமாகவும் நாளுக்கு நாள் மெலிவாகியும் வருகிறது. அவர் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. அவருக்குப் பின்  இயக்கக்  காரியங்களைப் பார்க்கத்  தகுந்த  முழு  மாதக்காலமும்  முழுக்  கொள்கைக்காரர்களும் கிடைப்பார்களா..??  என்ற கவலையிலேயே இருக்கிறார்.’’
1943-ம் ஆண்டு குடியரசு ஏட்டில் மணியம்மை_எழுதியதில்_உள்ள_வரிகள் இவை. இந்த வரிகளில் தென்படுவது மணியம்மையின் உண்மையான அக்கறை.

தலீவர் அரசியலுக்கு வருவாரான்னு வேடிக்கை பார்க்க போனோர் கூறியது இதுதான் ...

சிவாஜி ராவ் கேக்வார்ட்  :வீட்டிலிருந்து தனது திருமண மண்டபத்துக்கு புறப்பட்டார்...
வணக்கம்,
எல்லோரும் உட்காருங்க, அப்புறம், எப்படி இருக்கீங்க,
மக்கள் நம்மள பத்தி என்ன பேசிக்கிறாங்க..?


  சி ரா கே : இப்படி கேட்டது தான் தாமதம்,
சூப்பர் தலைவா,
அடுத்தது நம்ம ஆட்சி தான் தலைவா
நீங்க தான் அடுத்த முதல்வர் தலைவா
என்று ஆளாளுக்கு குதூகலித்தார்கள்.
கைகளை உயர்த்தி சைகையால் அவர்களை அமைதிப்படுத்திய சி ரா கே  பேசத் தொடங்கினார்.
எனக்கு உண்மையான தகவல் வேணும்.
அதாவது நிஜமாவே மக்கள் நம்மை பத்தி என்ன பேசிக்கிறாங்கன்ற உண்மையான தகவல் வேணும். நானும் டெய்லி தொலைக்காட்சி விவாதங்கள், சமூக வலைதளங்கள்ல என்னோட அரசியல் எண்ட்ரிய பத்தி வர்ற கமெண்ட்ஸ்களையெல்லாம் பார்த்துட்டுத் தான் இருக்கேன். ஸோ, என்னை திருப்திப்படுத்தவோ, சந்தோஷப்படுத்தவோ தயவுசெய்து தவறான தகவலை யாரும் இங்கே சொல்ல வேண்டாம். மறுபடியும் சொல்றேன் எனக்கு உண்மையான தகவல் வேணும், சும்மா பயப்படாம தைரியமா மக்கள் என்னை பத்தியும், என்னோட அரசியல் வருகைய பத்தியும் என்ன பேசிக்கிறாங்க, நமக்கு என்ன மாதிரியான வரவேற்பு இருக்குன்ற உண்மைகளை மட்டும் ஒவ்வொருத்தரா சொல்லுங்க....
கூட்டத்தில் அமைதி.....
"ம், சொல்லுங்க
யாரவது ஆரம்பிங்கப்பா
முதல்ல நீங்க சொல்லுங்க பெரியவரே...." என்று தனக்கு எதிரே முதல் வரிசையில் இருந்தவரை பேசச் சொன்னார் சி ரா கே .
தயங்கியபடியே எழுந்த அவர்,
கட்டாயம் அரசியலுக்கு வருவேன்னு நீங்க சொன்னப்ப, மக்கள்ட்ட ஒரு எதிர்பார்ப்பு இருந்தது உண்மை தான்.

தான்சானியா: வரி நிர்வாக முன்னோடி.. தனிநபர் வரி ஒழிக்கப்பட்டது.

tanzaniahindutamil.in: ஆப்பிரிக்கா என்றவுடன் சோமாலியாவிலும் தெற்கு சூடானிலும் நிகழ்ந்துகொண்டிருக்கும் வன்முறையும் பட்டினிச் சாவுகளும் நம் நினைவுக்கு வரும். நைஜீரியாவில் நிகழும் போகோ ஹராம் பயங்கரவாதச் செயல்கள் நினைவுக்கு வரும். ஆனால், முழு உண்மை அதுவல்ல. ஆப்பிரிக்கக் கண்டத்தின் பல பகுதிகள், நிலையான சமூக அரசியல் அமைப்புகளைக் கொண்டவை. கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்திருக்கும் தான்சானியா அதில் முக்கியமான நாடு. இந்தியாவின் பரப்பளவில் 28% கொண்டிருக்கும் தான்சானியா, இந்திய மக்கள்தொகையில் 4% (5.6 கோடி) கொண்டது. இதன் பொருளாதார அளவு இந்தியாவுடன் ஒப்பிடுகையில் 2%தான். ஆனால், தான்சானியாவிடமிருந்தும் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உண்டு. முக்கியமாக, வரி வசூல்!
1961-ல் விடுதலை பெற்ற இந்த நாடு, 1969 வரை பிரிட்டிஷ்காரர்கள் விதித்துவந்த தலைவரி என்னும் தனிநபர் வரிவிதிப்பை மேற்கொண்டுவந்தது. அந்த வரி, குடிமக்களின் வருமான ஏற்றத்தாழ்வுகளை மனதில்கொள்ளாமல் அனைவருக்கும் ஒரே அளவில் இருந்தது. இதனால், ஏழைகள் வரி கட்டுவதில் மிகவும் சிரமப்பட்டனர். இந்த வரிமுறையை மாற்றி 1969-ல் தான்சானியா அரசு நவீன வரிமுறைகளை அறிமுகப்படுத்தியது. தனிநபர் வரி ஒழிக்கப்பட்டது.

வியாழன், 5 மார்ச், 2020

பார்ப்பனீயம் பதம் பார்த்த ஆ.ராசா ..இளையராஜா .. வடிவேலு...

Seetha Ravi Suresh : 1, நகைச்சுவை நடிகர் வடிவேலு வாய்ப்புகள் முடக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டது ஏன்!?
ஒரேயொரு என்.எஸ்.கிருஷ்ணனின் பகுத்தறிவு மற்றும் திராவிட பிரச்சாரத்தின் வீரியத்தையும் அது அன்றுண்டாக்கிய திராவிட எழுச்சியையும் கண்கண்டு விக்கித்துப்போன பார்ப்பனியம் அதேபோன்று வடிவேலு எனும் நகைச்சுவை நடிகன் திமுக ஆதரவு
பிரச்சாரத்தை கையிலெடுப்பதை எவ்வாறு சகித்துக்கொள்ளும் என்பதை சிந்தித்துப்பார்த்தால் வைகைப்புயல் வடிவேலு ஓரங்கட்டப்பட்டதின் நுண்ணரசியல் தெரியவரும்!
2, மல்ட்டி மீடியாக்களையும் செய்தி ஊடகங்களையும் கைகளில் வைத்து அம்மானையாடும் பார்ப்பனிய லாபிக்கு தொலைத்தொடர்பில் மாறனும், ஆ.ராசாவும் செய்த சீர்திருத்தங்களை பற்றி ஆரம்பத்தில் பெரிய கருத்துமுரண்கள் இருந்திருக்கவில்லை. ஆனால்,
ஆன்ட்ராய்டு மொபைல்களின் வருகையால் ஒட்டுமொத்த ஊடக ஏகாதிபத்திய ஆக்ரமிப்புகளையும் சிதறடித்து வளர்ந்தெழுந்த சோஷியல் மீடியாவின் தாக்கமானது பார்ப்பனியத்தின் ஊடகலாபியை தரைமட்டமாக்கியதை கண்டபின்னரே அவர்கள் சுதாரிக்கவாரம்பித்தனர்.

உங்கள் NEETஐ குப்பையில் போடுங்கள்.. அலுமினிய பட்டறையில் இருந்து ...

டாக்டர் நாகராஜன்
முரசொலி : உங்கள்  NEETஐ குப்பையில் போடுங்கள்...
அலுமினிய பட்டறையில் வேலை செய்பவரின் மகன். ,6 வது பிரசவம் பார்த்து அந்த குழந்தையோடு புகைப்படம் போட்டுள்ளார்...
 பள்ளியில் படிக்கும் போது இவருடைய விடைத்தாளை வைத்துதான் ஆசிரியர்கள் மற்ற மாணவர்களின் விடைத்தாளை திருத்துவார்கள்..
அந்த அளவிற்கு பயங்கரமாக படிப்பவர் .. 10ம் வகுப்பு பொது தேர்வில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்தவர் (before samacheer kalvi)... 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்து மருத்துவம் படித்து DOCTOR ஆகி உள்ளார்.
என் நண்பன்..  NEET ல் ஆள்மாராட்டம் செய்தவனல்ல..
State board ல் படித்து மருத்துவர் ஆகி இருக்கிறான்..
எங்கள் கல்வி முறை தகுதியான மருத்துவர்களை உருவாக்கி கொண்டுதான் இருக்கிறது...
 ஒரு வேளை இவன் படிக்கும் போதே NEET கொண்டு வந்திருந்தால்.... அலுமினிய பட்டறையில் காய்ந்து கொண்டிருந்த அந்த தகப்பனின் ஆசை அலுமினியத்தோடு கரைந்தோடி இருக்கும்... Ban_NEET.

குமுதம் நிருபர் மீது தாக்குதல்! - திமுக கூட்டணிக் கட்சியினர் சிவகாசியில் ஆர்ப்பாட்டம்!

sivakasi journalist issue sivakasi journalist issue நக்கீரன் : சிவகாசியில்  ‘குமுதம் ரிப்போர்ட்டர்’  இதழின் நிருபர் கார்த்தி கடந்த 3-ஆம் தேதி தாக்கப்பட்டார். இதனைக் கண்டித்து, சிவகாசியில்  திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர்  சார்பில்  இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ;அதிமுக உட்கட்சி பூசல் குறித்தும், அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மற்றும் சாத்தூர் எம்.எல்.ஏ. எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன்  குறித்தும்  செய்தி வெளிவந்ததைத் தொடர்ந்து நிருபர் கார்த்தி தாக்கப்பட்டார். ஸ்டெல்லா பாண்டியும்  பூ முருகனும்தான்  தாக்கினார்கள்  என்று இருவரையும் காவல்துறை கைது செய்தது.

டெல்லி பள்ளிகளுக்கு 27 நாட்கள் விடுமுறை.. கொரோனா முன் எச்சரிக்கை ..

மின்னம்பலம் : கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் டெல்லியில் ஆரம்ப பள்ளிகளுக்கு மார்ச் 31 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா: டெல்லி பள்ளிகளுக்கு  27 நாட்கள் விடுமுறை!உலகநாடுகள் அனைத்தையும் பெருமளவில் பீதியில் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவில் இதுவரை 29 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. எனவே அதற்கான பாதுகாப்பு நடவடிக்கையாக டெல்லியில் ஆரம்ப பள்ளிகளுக்கு மார்ச் 31 வரை விடுமுறை அளிக்கப்படுவதாக துணை முதல்வர் மணிஷ் சிசோடியா அறிவித்துள்ளார்.
உலகம் முழுவதிலும் 90 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ளனர். இந்த கொடூர வைரஸின் தாக்கத்தால் மூவாயிரத்துக்கும் அதிகமான அப்பாவி மக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் கேரளாவைச் சேர்ந்த மூன்று பேருக்கு கொரோனா தாக்கம் ஏற்பட்டு அவர்கள் குணமடைந்து விட்டனர். இந்தியாவின் முக்கிய நகரங்களில் கொரோனா பாதிப்பு குறித்த அச்சம் எழுந்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவ்வாறு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

BBC : கொரோனா வைரஸ்: மலேசியாவில் ஒரே வாரத்தில் இரட்டிப்பான பாதிப்பு, போராடுகிறது சிங்கப்பூர்


மலேசியாவில் கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை வியாழக்கிழமை மாலை நிலவரப்படி, 55ஆக உள்ளது.
கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி வரை மலேசியாவில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 25க்கும் குறைவாகவே இருந்தது. இதையடுத்து பிப்ரவரி 26ஆம் தேதி வரை, 11 நாட்களுக்கு புதிதாக யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை.
இதனால் மலேசிய அரசும் மக்களும் நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில், திடீரென கடந்த சில தினங்களாக அங்கு கிருமித் தொற்று இருப்பவர்களின் எண்ணிக்கை மளமளவென அதிகரித்துள்ளது.
ஒரு நபரிடம் இருந்து பலருக்கு பரவிய கிருமித் தொற்று
கடந்த செவ்வாய்க்கிழமை ஏழு பேருக்கும், புதன்கிழமை 14 பேருக்கும், வியாழக்கிழமை 5 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பதை மலேசிய சுகாதார அமைச்சு உறுதி செய்துள்ளது.
ஒரு நிறுவனத்தின் பெரிய அதிகாரிக்கு கொரோனா கிருமித் தொற்று ஏற்பட்டது என்றும், அவர் நடத்திய கூட்டங்களில் பங்கேற்ற பலருக்கு கிருமித் தொற்று பரவியுள்ளது என்றும் தெரிய வந்துள்ளது.
அண்மையில் அவரைச் சந்தித்துப் பேசிய 20க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. அவருடன் தொடர்பில் இருந்த மேலும் பலரை அடையாளம் காணும் நடவடிக்கைகளை அதிகாரிகள் முடுக்கிவிட்டுள்ளனர்.

கனிமொழி நாடாளுமன்றத்தில் : `கொரோனா வைரஸ் தடுக்க தெர்மல் சோதனை; வைராலஜி ஆய்வு மையம்’ - கோரிக்கை

கனிமொழிவிகடன் : இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மத்திய அரசு இன்னும் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என ஆலோசனை வழங்கியுள்ளார் தி.மு.க எம்.பி கனிமொழி. கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வரும் நிலையில் இதுகுறித்து மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து இன்று, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் மக்களவையில் பேசினார். இதன் பின் பேசிய தி.மு.க மக்களவைக் குழு துணைத் தலைவர் கனிமொழி, “மத்திய அமைச்சர் அளித்துள்ள விளக்கத்தில், கடந்த ஜனவரி மாதமே கொரோனா குறித்த எச்சரிக்கை விடப்பட்டது என்றும் பல நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதற்காக அவரைப் பாராட்டுகிறோம்.
அதேநேரம் மத்திய அமைச்சர் தன் உரையில் இந்தியாவிலேயே புனேயில் இருக்கும் தேசிய வைராலஜி ஆய்வு நிலையம் ஒன்று மட்டுமே உள்ளது என்று குறிப்பிட்டார். இது போதாது. ஏனென்றால் கொரோனா என்பது உலக அளவிலான அச்சுறுத்தலாக உள்ளது. இதை எதிர்கொள்ள இதுகுறித்து ஆராய்ச்சிகள் செய்ய நாட்டில் மண்டலத்துக்கு ஒரு வைராலஜி ஆய்வு நிலையமாவது அமைக்கப்பட வேண்டும்.

7 காங்கிரஸ் எம்பிக்கள் பட்ஜெட் கூட்ட தொடரில் கலந்து கொள்ள தடை


 மாணிக் தாகூர் உள்ளிட்ட 7 காங்கிரஸ் எம்.பி.க்களை நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க சபாநாயகர் ஓம் பிர்லா தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
 மக்களவையில் அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்பிக்கள் மாணிக் தாகூர், பிரதாபன், கவுரவ் கோகோய், டீன் குரியகோஸ், ராஜ்மோகன் உன்னிதன், பென்னி பெஹ்னான், குர்ஜித் சிங் ஆஜ்லா ஆகியோரை சபாநாயகர் ஓம் பிர்லா இன்று சஸ்பெண்ட் செய்தார். 7 எம்.பி.க்களும் நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடர் முழுவதும் பங்கேற்க தடை விதிக்கபட்டு உள்ளது

ஆறுமுக நாவலரையே உள்வாங்கிய வைதீகம் .. சாதாரண மக்களின் கதி ?

Dhinakaran Chelliah : நாவலரையே உள்வாங்கிய வைதீகம்!
வாழ்நாள் முழுதும் தமிழையும் சைவத்தையும் வளர்த்த பெருமகனார் ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலரையே வைதீகம் உள்வாங்கிக் கொண்டது என்றால் வர்ணாசிரம சனாதன தர்ம வேத ஆகமங்களைப் பற்றிய நமது மதிப்பீடுகளை மறு ஆய்வு செய்வது நலம்.அவருக்கே இந்த நிலையெனில் சாதாரண சனங்களின் கதி என்னவாகும்?
உதாரணத்திற்கு நாவலர் எழுதிய சைவ வினா விடை (புத்தகம் 1 மற்றும் 2) நூலில் உள்ள ஒரு சில கேள்வி பதில்கள்.
ஆறுமுகநாவலர் அவர்களின் சைவ வினா விடை புத்தகம் 2:
86. வேதத்தை ஓதுதற்கு அதிகாரிகள் யாவர்?
உபநயனம் பெற்றவராகிய பிராமணர், க்ஷத்திரியர், வைசியர் என்னும் முதன் மூன்று வருணத்தார்.
87. சூத்திரரும், நான்கு வருணத்துப் பெண்களும் எதற்கு அதிகாரிகள்?
இதிகாச புராணம் முதலியவைகளை ஓதுதற்கும், வேதத்தின் பொருளைக் கேட்டற்கும் அதிகாரிகள்.
90. சூத்திரர் முதலாயினாருக்கு எக்கிரியைகள் செய்யத் தக்கன?
சிவதீக்ஷை பெற்ற சூத்திரருக்கும் அநுலோமருக்கும் ஆகமக் கிரியைகள் செய்யத்தக்கன. சிவதீக்ஷை பெறாத சூத்திரர் முதலானவருக்குப் பிரணவமின்றி நமோந்தமாகிய தேவ தோத்திரங்களைக் கொண்டு கிரியைகள் செய்யத் தக்கன.
116. சைவர்கள் சாதிபேதத்தினால் எத்தனை வகைப்படுவார்கள்?
ஆதிசைவர்; மகாசைவர்; அநுசைவர்; அவாந்தரசைவர், பிரவரசைவர், அந்தியசைவர் என அறு வகைப்படுவார்கள்.

கொரோனா: கதிகலங்கும் இந்திய ஸ்மார்ட்போன் உலகம்!

மின்னம்பலம் : கொரோனா பாதிப்பு ஏற்படுத்திய அச்சத்திலிருந்து உலக நாடுகள் பலவும் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகின்றன.
வீட்டிலிருந்தே வேலையை செய்யச் சொன்ன பெரும் நிறுவனங்கள் அனைத்தும், தங்களது ஊழியர்களை மீண்டும் அலுவலகத்துக்கு வரச் சொல்லி அவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுவரும் சூழலில், கொரோனா வைரஸ் மிக வேகமாக இந்தியாவில் பரவி வருகிறது. இதனால், இந்திய நாட்டின் பல வேலைகள் பாதிக்கப்படும் என்று கணக்கிடப்பட்டிருந்தது. ஆனால், முதலாவதாக பாதிக்கப்பட்டிருப்பது டெக் உலகம்தான்.
மும்பையில் நடைபெறுவதாக இருந்த அமேசான் வெப் சர்வீஸ் (AWS) உச்சி மாநாடு திட்டமிட்டபடி நடைபெறாது என்பதை அதிகாரபூர்வமாக அமேசான் நிறுவனம் அறிவித்திருக்கிறது. “ஏப்ரல் 7 முதல் ஏப்ரல் 9 வரை மும்பையில் நடைபெறுவதாக இருந்த AWS உச்சி மாநாட்டை நாங்கள் நடத்தப் போவதில்லை. பல்வேறு காரணிகளைக் கருத்தில்கொண்டு இந்த முடிவுக்கு நாங்கள் வந்திருக்கிறோம். எங்கள் ஊழியர்கள், கஸ்டமர்கள் மற்றும் பார்ட்னர்களின் உடல்நலனே எங்களுக்கு முக்கியம்” என்று அமேசானின் செய்தித் தொடர்பாளர் கூறியிருக்கிறார்.

கொரோனாவும், இந்தியாவும்... தமிழ் நாட்டை "தனிமைப்படுத்துவோம்". மக்களை பாதுகாப்போம்

சிவசங்கர் எஸ்எஸ் : கொரோனாவும், இந்தியாவும்...
கொரோனா குறித்த அலறல், இன்று தான் இந்தியாவில் வெளியில் கேட்கிறது. நேற்று வரை மூன்று பேர் தான் பாதித்திருக்கிறார்கள் என்று சொல்லி, இந்தியாவிற்கு பிரச்சினை இல்லை என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நிதானமாக பேட்டி அளித்துக் கொண்டிருந்தார்.
ஆனால் இன்று நிலைமை வேறாகி விட்டது. ராஜஸ்தானுக்கு வந்த இத்தாலிய சுற்றுலாப் பயணிகள் 'படார்' என கணக்கை உயர்த்தி விட்டார்கள். கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 28 ஆனது. இப்போது 29 ஆம். இந்த எண்ணிக்கைக்கு ஏன் அலறனும்னு கேள்வி வரும்.
இந்தியாவின் முதல் குடிமகன் தான் சிக்னல் கொடுத்திருக்கிறார். ஆமாம், குடியரசு தலைவர், இன்று மாலை ஓர் அறிவிப்பைக் கொடுத்தார். இந்த ஆண்டு, 'குடியரசுத் தலைவர் மாளிகையில் ஹோலி கொண்டாட்டங்கள் ரத்து' என்பது தான் அது. அடுத்து பிரதமர் மோடி இந்த ஆண்டு எந்த ஹோலி கொண்டாட்டங்களிலும் பங்கேற்கப் போவதில்லை என சொல்லி விட்டார். இந்த இரண்டு அறிவிப்புகளுக்கான காரணம் ஒன்று தான். கொரோனா. அவர்களே வாய் திறந்த பிறகு தான் ஊடகங்கள் பேச ஆரம்பித்திருக்கின்றன.
சீனாவில் ஆயிரக்கணக்கில் கொரோனா பலி விழுந்த போதே தயாராகி இருக்க வேண்டும். இப்போது உலக அளவில் இறப்பு மூவாயிரத்தை தாண்டி விட்டது. ஆறு கண்டத்திற்கும் பரவி விட்டது கொரோனா. அங்கே வராது, இங்கே வராது என்று சொல்லியதை எல்லாம் பொய்யாக்கி விட்டது. 65 நாடுகளில் நுழைந்திருக்கிறது.
மோடியின் அண்ணன் டிரம்ப் கொரோனாவை பார்த்து கர்ஜித்தார். அமெரிக்காவில் அதற்கு வேலை இல்லை என்றார். எதிர்கட்சிகள் தேர்தலுக்காக கிளப்பிய புரளி என்றார். அங்கு சாவு 9 ஆகி விட்டது. இப்போது துணை அதிபர் தான் பேட்டி கொடுக்கிறார்.

புதன், 4 மார்ச், 2020

இஸ்லாமியர்களும் திமுகவும் ... விரிவான ஆய்வு கட்டுரை .ஆலஞ்சியார்

ஆலஞ்சியார் : திமுகவிற்கு இஸ்லாமியர்களின் வாக்கு முழுவதுமாக விழுவதில்லை.. திமுகமீது முஸ்லிம்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள்.. சமீபத்தில் அதிகமாக இப்படிபட்ட செய்திகள் உலா வருகிறது ..
ஒரளவு உண்மையும் கூட .. இஸ்லாமியர்களை கைவிட்டுவிட்டதா என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பபட்டும் வருகிறது.. திமுக துரோகம் செய்துவிட்டது என்று கூட பேசுகிறார்கள் ஆனாலும் சிலர் இன்னும் திமுகவை ஏன் பிடித்துக்கொண்டு தொங்குகிறார்களென்ற கேள்வியையும் வைக்க மறப்பதில்லை .. இஸ்லாமிய சமுதாயத்திற்கு திமுக செய்ததைப்போல வேறெந்த கட்சியும் செய்ததில்லை என பெரும் பட்டியலை தரமுடியும் .. தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இஸ்லாமியர்களை சேர்த்தது கூட திமுக அரசுதான் .. இன்று கல்வி வேலைவாய்ப்பில் சுலபமாக வர வழிவகை செய்து 3.5% விழுக்காடு இடஒதுக்கீட்டை தந்ததுவரை நிறைய சொல்லலாம் .. பார்பன சக்திகள் திடீரென பிள்ளையாரை கொண்டுவந்து வைத்த போது.. மதகலவரத்தை தூண்ட அறிவாளிகள் படிக்கும் துக்ளக்கில்
சோ எழுதியதும்
கொஞ்சமும் சளைக்காமல் திருவல்லிகேணியிலேயே கூட்டம் போட்டு கலைஞரே திடீர்பிள்ளையார் என்று அறிவித்தெல்லாம் இன்று மதவெறியில் சிக்கி தவிப்பவர்களுக்கு புரிந்திருந்திருக்கும்.. 

பார்ப்பனர்கள் இந்து அறநிலையத்துறை பற்றி பொய்களையே மீண்டும் மீண்டும் பரப்புகிறார்கள்.

Krishnavel T S : கோயில்களில் இருந்து அரசு வெளியேற வேண்டும் என சொல்லிவந்த ஹிந்துத்துவா கும்பல், இப்போது மத்திய அரசின் கீழே இருக்கும் தொல்லியல் துறைக்கு கோயில்கள் செல்வதை வரவேற்கிறது.. இதிலிருந்து என்ன புரிகிறது என்றால், தமிழ்நாட்டில் சமூக நீதியின் அடிப்படையில் கோயில் நிர்வாகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின ஹிந்துக்களை துரத்திவிட்டு, இங்கெல்லாம் வடநாட்டு உயர்சாதி பார்ப்பனர்களை பணியில் அமர்த்த இந்த பார்ப்பனிய அடிமை கும்பல் ஆதரவு தெரிவிக்கிறார்கள்..
அப்படி என்றால் இத்தனை நாட்களாக இவர்கள் சொல்லிவந்த, அரசே கோயில்களிலிருந்து வெளியேறு.. என்ற கோஷம் பொய்யானது.. சூத்திர பஞ்சம இந்துக்களை வெளியேறுங்கள்... கோயில்களை பார்ப்பனர்களிடம் ஒப்படையுங்கள் என்பதுதான் அவர்களின் கோஷம்..
பார்பனர் கோயில் பணத்தை கொள்ளை
அடிப்பதை தடுக்க ஏற்படுத்தப்பட்ட ஒரு துறையை பற்றி, நம் தமிழ் நாட்டில் பலர் இன்னமும் கோயிலில் வசூலாகும் கோடிக்கணக்கான பணம் தமிழக அரசுக்கு தான் வந்து விடுகிறது என்று தவறாக பொதுமக்களின் மண்டையில் ஏற்றியது தான் உண்மையான பார்பன புரட்டு.
பல வருடமாக இந்து அறநிலையத்துறை பற்றி இல்லாத ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் பார்பனர் சொல்லிவருகின்றனர், மக்களும் அறியாமல் நம்பி வருகின்றனர்.

10 வங்கிகளுக்கு பதிலாக இனி 4 வங்கிதான்.. வங்கிகள் இணைப்பு .. நிதி சர்வாதிகாரம் ...கேபினெட் ஒப்புதல்

ஏப்ரல் 1 Veerakumar - /tamil.oneindia.com : டெல்லி: 10 பொதுத்துறை வங்கிகளை நான்கு வங்கிகளாக இணைக்க மத்திய அமைச்சரவை இன்று, ஒப்புதல் அளித்தது. பிரதமர் மோடி தலைமையில், இன்று, நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு நிருபர்களிடம் பேசிய, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், "இணைப்பு திட்டத்தை வங்கிகள் சமர்ப்பித்துள்ளன, அவற்றுக்கு இன்று அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது" என்றார்

அதிமுக முன்னாள் எம்.பி.கே.என்.ராமச்சந்திரனுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை நீதிமன்றம் தீர்ப்பு

4444தினமணி : கடன் மோசடி வழக்கில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்.பி. கே.என்.ராமச்சந்திரனுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 
ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்.பி. கே.என்.ராமச்சந்திரன், தனக்குச் சொந்தமான கல்லூரி விரிவாக்கத்திற்கு சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் ரூ. 20 கோடி கடன் கேட்டுள்ளார். ஆனால், போதிய ஆவணங்கள் அவரிடம் இல்லை என்று கூறி வங்கி அதிகாரிகள் முதலில் நிராகரித்துள்ளனர். பின்னர் ராமச்சந்திரன், வங்கி மேலாளர் தியாகராஜனுக்கு லஞ்சம் கொடுத்து கடன் பெற்றுள்ளார். 
இது தொடர்பான புகாரில், ராமச்சந்திரன், அவரது மகன் ராஜசேகரன், வங்கி மேலாளர் தியாகராஜன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது. 
பின்னர் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்ட பிறகு வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

ஒரே நாடு, ஒரே மொழி’: ஜிப்ஸி சென்சார் கட்-2 வெட்டப்பட்ட காட்சிகள் வைரல் வீடியோ



‘ஒரே நாடு, ஒரே மொழி’: ஜிப்ஸி சென்சார் கட்-2!மின்னம்பலம் : ஜீவா நடித்துள்ள ஜிப்ஸி திரைப்படத்தில் இருந்து சென்சார் செய்யப்பட்ட மற்றொரு காட்சியும் யூட்யூபில் வெளியாகியுள்ளது.
வெறும் சுவரொட்டிகளையும், தொலைக்காட்சி மற்றும் வானொலி விளம்பரங்களையும் மட்டுமே நம்பி, ஒரு காலம் வரை தமிழ் சினிமா புரொமோஷன்கள் இருந்துவந்தது. ஆனால் இன்றைய சமூகவலைதளங்களின் வளர்ச்சியாலும், அளவுகடந்த இணைய பயன்பாட்டாலும், சினிமா புரொமோஷன் முறைகளிலும் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. டீசர், ட்ரெயிலர், பாடல்கள் வெளியிடுவது தொடங்கி என்ன அப்டேட் வரப்போகிறது என்பதற்கும் ஒரு அப்டேட் கூறும் அளவிற்கு அனைத்திலும் மாற்றம் ஏற்படுள்ளது.

இலங்கையில் ஏப்., 25ல் பொதுத்தேர்தல்: யார் ஆட்சியை பிடிக்க போவது யார்?

தினமலர் :கொழும்பு : இலங்கை பார்லிமென்ட் ஆயுள் காலம், இன்னும் ஆறு
மாதங்கள் இருக்கும் நிலையில், அதிரடியாக கலைத்தார், அதிபர் கோத்தபய ராஜபக்சே. ஏப்., 25ல், பொதுத் தேர்தல் நடக்கிறது.இலங்கையில், கடந்த நவம்பர் மாதம், அதிபர் தேர்தல் நடந்தது. முன்னாள் ராணுவ அமைச்சரான கோத்தபய ராஜபக்சே, அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே, தனது பதவியை ராஜினாமா செய்தார்.கோத்தபயாவின் மூத்த சகோதரரும், முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்சே, கடந்த டிசம்பரில் இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டார்.
225 உறுப்பினர்கள் கொண்ட பார்லியில், மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் தங்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என, ராஜபக்சே சகோதரர்கள் உறுதியாக இருப்பதால், பார்லியை கலைத்து புதிதாக தேர்தல் நடத்த திட்டமிட்டனர்.
கடந்த தேர்தலில் ரணில் வெற்றி பெற்றபோது, அதிபருக்குரிய பல அதிகாரங்களை பார்லிமென்ட் ரத்து செய்தது. இழந்த அதிகாரங்களை, அதே பார்லி வழியாக மீட்டெடுக்கவே, இன்னும் ஆறு மாதங்கள் எஞ்சியிருக்கும் நிலையில், பார்லியை கலைத்து தேர்தலுக்கு உத்தரவிட்டுள்ளார்,
கோத்தபய ராஜபக்சே. இலங்கை அரசியல் அமைப்பு சட்டத்தின்படி, நான்கரை ஆண்டுகள் பதவிக்காலம் முடிந்தால் மட்டுமே, பார்லியை கலைக்க முடியும். நேற்று முன்தினம்(மார்ச் 2) இரவு நான்கரை ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில், பார்லியை கலைத்து கோத்தபய உத்தரவிட்டார்.

கொரோனா வைரஸ் இந்தியாவில் 28 பேருக்கு தொற்றியது: 78 நாடுகளில் பரவியது நோய்

BBC :சீனாவை மட்டும் ஆட்டிப் படைத்து வந்த கொரோனா வைரஸ் தற்போது உலகில் 78 நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவில் 25 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனா, தென் கொரியா, இரான், சிங்கப்பூர் போன்ற நாடுகள் கொரோனா வைரஸ் தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில், ஒப்பீட்டளவில் இந்தியா பெரிய பிரச்சனை இல்லாமல் இதுவரை தப்பித்துவந்தது.
முதலில் கேரளாவில் மட்டுமே மூவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், அவர்கள் சிகிச்சை பெற்று குணமாகி வீடு திரும்பினர். சில நாள்களுக்கு முன்புவரை இந்தியாவில் யாருக்குமே கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்நிலையில், திங்கள் கிழமை டெல்லியில் ஒருவருக்கும், தெலங்கானாவில் ஒருவருக்கும் என இந்தியாவில் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதில் டெல்லிக்காரர் இத்தாலிக்கும், தெலங்கானா நபர் துபாய்க்கும் பயணம் செய்து வந்திருந்தனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இத்தாலி பயணி ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. நேற்றுவரை இந்த மூவருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் இருந்தது உறுதி செய்யப்பட்டிருந்தது.

காம்பவுண்ட் சுவர் ஏறி.. பிட் பேப்பர்களை விட்டெறிந்து.. பரீட்சை ... மகாராஷ்ட்ராவில் .. வீடியோ


m.dailyhunt.in :காம்பவுண்ட் சுவர் ஏறி.. பிட் பேப்பர்களை விட்டெறிந்து.. அதிர வைத்த நண்பர்கள்.. அசந்து போன அதிகாரிகள்! மும்பை: ஸ்கூல் காம்பவுண்ட் சுவரில் ஏறி.. ஜன்னலுக்குள் பிட் பேப்பர்களை வீசி.. 10-ம் வகுப்பு தேர்வு எழுதும் தங்கள் நண்பர்களுக்கு உதவி செய்துள்ளனர் சகாக்கள்.. இந்த வீடியோதான் வைரலாகி வருகிறது!
பொது தேர்வு எழுதிய மாணவர்களுக்கு பிட் கொடுத்த நண்பர்கள்
மகாராஷ்டிர மாநிலத்தில் 10ம் வகுப்பு மெட்ரிகுலேசன் தேர்வு நடைபெற்று வருகிறது... தேர்வு முறைகேடுகளை தடுக்க அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் அங்கு ஈடுபட்டுள்ளனர். ஆனாலும், இதையும் மீறி சில இடங்களில் மாணவர்கள் காப்பியடித்துள்ளனர்.
யாவத்மால் மாவட்டம் மகாகோன் பகுதியில் உள்ள ஜில்லா பரிஷத் பள்ளியிலும் மாணவர்கள் நேற்று தேர்வு எழுதினர்.. காலையில் தேர்வு துவங்கிய உடன் எல்லோரும் எழுத ஆரம்பித்தனர்.. அப்போது திடீரென காம்பவுண்ட் சுவரில் சில மாணவர்கள் விறுவிறுவென ஏறி நின்று கொண்டனர்.. கிட்டத்தட்ட 10 பேர் இருக்கும்.. அவர்களில் ஒருசிலரின் தோளில் ஸ்கூல் பை தொங்கி கொண்டிருந்தது.

கன்னிமாடம்... காதலர்களுக்கு .... விழிப்புணர்வூட்டுகிறது... விமர்சனம்

Vini Sharpana : 'கன்னிமாடம்' பார்த்தேன். ஆணவக்கொலைக்கு எதிரான
வன்முறைக் கதை. தியேட்டரின் இருக்கையில் அமர்ந்திருப்பது மறந்துபோய்விடுகிறது. ஒருக்கட்டத்தில், சென்னை சூளைமேட்டிலுள்ள ஒரு வீட்டில் அமர்ந்துகொண்டு அக்கம் பக்கத்துவீட்டில் நடக்கும் சம்பவங்களை பார்ப்பதுபோலவே பதைபதைப்பூட்டுகின்றன காட்சிகள்.
சுப்பிரமணியபுரம் படத்து ஜெய் கெட்-அப்பில் இருக்கும் கதையின் நாயகன் அன்பு உட்பட அனைத்து கதாப்பாத்திரங்களும் நடிகர்களைப்போல் இல்லை. அக்கம் பக்கத்து வீட்டில் வசிப்பவர்களைப் போலவே வாழ்ந்திருக்கிறார்கள், பாராட்டுகள்
இருள் கவ்விய சென்னை கிண்டியில் இறங்கியதிலிருந்து க்ளைமாக்ஸ்வரை கண்களாலேயே கதை வசனம் பேசுகிறார் மலர். 'எவ்ளோ பணம் இருந்தாலும் மனசுக்கு புடிச்ச காதலியோட வாழ்ற சந்தோஷம் கிடைக்குமா?' என்று உண்மைக் காதலின் உன்னதத்தைப்பேசி கண்களைக் குளமாக்குகிறார் கதிர்.
சாதீய வெறியால் பெற்றோர்கள் ஆணவக்கொலை செய்யும் சூழல் ஏற்பட்டு வேறுவழியில்லாமல், காதலர்கள் சுயமாக திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துவிட்டால் முதலில் பாதுகாப்பான நபரை நாடிச்செல்லவேண்டும்...

குடியுரிமை திருத்த சட்ட விவகாரம்: ஐ.நா. மனித உரிமைகள் கமிஷன், சுப்ரீம் கோர்ட்டில் திடீர் மனு - மத்திய அரசு அதிர்ச்சி


UN Commissioner for Human Rights files application with Indian top court to join plea challenging the controversial law.
On Monday, UN Commissioner for Human Rights (UNHRC) Michelle Bachelet informed India that her office has filed an application urging the Supreme Court to make the UN body a third party in a petition filed by a former civil servant against the law. 
தினத்தந்தி :குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில், ஐ.நா. மனித உரிமைகள் கமிஷன், சுப்ரீம் கோர்ட்டில் திடீரென ஒரு மனு தாக்கல் செய்துள்ளது.
இதற்கு மத்திய அரசு  எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
 புதுடெல்லி, பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத ரீதியில் துன்புறுத்தலுக்கு ஆளாகி, இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள முஸ்லிம்கள் அல்லாத பிற மதத்தினருக்கு குடியுரிமை வழங்க வகை செய்து, மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்துக்கு எதிராக பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருவதும், டெல்லியில் இந்த போராட்டங்களின்போது, வன்முறை வெடித்ததும் 40-க்கும் மேற்பட்டோர் பலியானதும் சர்வதேச அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்த குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு தரப்பினரும் வழக்குகள் போட்டுள்ளனர். இந்த வழக்குகளை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, இதில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்யுமாறு கடந்த டிசம்பர் 18-ந் தேதி உத்தரவிட்டது.
இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் ஐ.நா. மனித உரிமைகள் கமிஷனர் மிச்செல்லி பேச்லெட் ஜெரியா தரப்பில் திடீரென ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  https://www.aljazeera.com/news/2020/03/india-defends-caa-rights-chief-approaches-supreme-court-200303114701274.html

பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் பால், தயிர் விற்க தடை விதிக்க பரிசீலனை - ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

தினத்தந்தி : பால், தயிர், எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் விற்பனை செய்வதற்கு தடை விதிக்க பரிசீலித்து வருவதாக சென்னை ஐகோர்ட்டில், தமிழக அரசு தெரிவித்துள்ளது.
 சென்னை, தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் டீ கப் உள்ளிட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், பி.டி.ஆஷா ஆகியோர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:- தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை ஒழிப்பதில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அத்துமீறி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்த 52 தொழிற்சாலைகளுக்கு ‘சீல்‘ வைக்கப்பட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

குமரிக்கண்டமா? அது எங்கே இருக்கிறது?

siragu kumarikandam11தேமொழி -siragu.com : -  : தமிழில் நமக்குக் கிடைக்கும் முதல் நூலான தொல்காப்பியத்தின் காலத்தில் தமிழகத்தின் எல்லைகளாக வடக்கே வேங்கடமும் தெற்கே குமரியும் கிழக்கிலும் மேற்கிலும் கடல்கள் எல்லைகளாக இருந்தன எனத் தெரிகிறது. இதனைத் தொல்காப்பியத்திற்குப் பாயிரம் தந்த பனம்பாரனார், “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்” எனக் குறிப்பிட்டு தமிழ்கூறும் நல்லுலகம் வடக்கில் வேங்கடமலைக்கும், தெற்கில் குமரிமுனைக்கும் இடையில் பரந்துகிடந்ததை (தொல்காப்பியம், சிறப்புப்பாயிரம்:1-3) விளக்குவார்.
   “தென்குமரி வடபெருங்கல்
   குணகுட கடலா எல்லை”
என்ற குறுங்கோழியூர் கிழார் (புறநானூறு:17:1-2); மாங்குடி மருதனார் (மதுரைக்காஞ்சி:70-71) சங்கப்பாடல்களிலும்,
  “நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்
   தமிழ் வரம்பறுத்த தண்புனல் நல்நாட்டு”
என இவ்வாறே இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் வேனிற் காதையிலும் (வேனிற்காதை:1-2) குறிப்பிடுவதால் பண்டையத் தமிழகத்தின் எல்லையை நாம் அறிகிறோம்.
தென்குமரி:
இலக்கியங்களில் குறிப்பிடப்பட்ட தமிழகத்தின் தென் எல்லையான குமரிமுனையைக் கடல் கொண்டது என்பதை,
  “வடிவேல் எறிந்த வான்பகை பொறாது
   பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்து
   குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள” (சிலப்பதிகாரம், காடுகாண் காதை:19-22)
என்று இளங்கோவடிகள் குறிப்பிடுவார்.
   “மலிதிரை ஊர்ந்துதன் மண்கடல் வௌவலின்
   மெலிவின்று மேற்சென்று மேவார் நாடு இடம்படப்
   புலியொடு வில் நீக்கிப் புகழ்பொறித்த கிளர்கெண்டை
   வலியினான் வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன்” (கலித்தொகை, முல்லைக்கலி:104-1-4)
என்று சோழன் நல்லுருத்திரனார் குறிப்பிடுவார்.

.இந்தியன் 2 விபத்து : "கமல்ஹாசனை விசாரணைக்கு அழைப்பதா?" - மக்கள் நீதி மய்யம் கட்சி கண்டனம்

தந்திடிவி : இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து தொடர்பாக நடிகர் கமல்ஹாசனை காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை செய்ததற்கு மக்கள் நீதி மய்யம் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சி சார்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், விபத்து நடந்த தளத்தில் இருந்து சில நொடிகளுக்கு முன்பு தான் கமல்ஹாசன் அந்த இடத்தில் இருந்து சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் வளர்ச்சியை பிடிக்காத தமிழக அரசு, காவல்துறை மூலம் சாட்சி என்ற பெயரில் அவரை அழைத்து 3 மணி நேரம் விசாரணை நடத்தி உள்ளதாகவும், அறிக்கையில், கூறப்பட்டுள்ளது.

முகநூல் : மூன்று உயிருக்கு மூணு மணிநேரம் கூட உன்னிடம் விசாரிக்க
கூடாதா.. கமலஹாசா? . அறிக்கை  விடுகிறார் மக்கள் நீதி மையமாம் ... இதுக்கு பேர் மய்யம் அரசியலாம். தன்முனைப்பு மட்டுமே என்று வாழும் சினிமா பட நாயகர்களுக்கு தான் மட்டும் தான். மற்றது எல்லாம் துச்சம்...
கூடவே இன்னொரு தகவல். கமல் lyca விடம் கைநீட்டி சபாஷ் நாயுடுக்கு வாங்கி, நடிக்காமல் அபேஸ் செய்த பணத்தை, அவர்கள் இந்தியன்-2 சம்பளத்தில் அட்ஜஸ்ட் பண்ண சொல்லியதாலும் இவர் வேலைய காட்டறார்.

ஆந்திரா NPR-க்கு எதிராக தீர்மானம் .. பீகாரை தொடர்ந்து ...

பீகாரை தொடர்ந்து NPR-க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் ஆந்திர அரசு!!
நியூஸ் 18  : பீகார் மாநிலத்திற்குப் பிறகு, ஆந்திர மாநில அரசு தேசிய மக்கள் தொகை பதிவுக்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்ற உள்ளது!!
குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவு (NPR) ஆகியவற்றிற்கு எதிராக ஆந்திரா மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் நடந்து வரும் போராட்டங்களுக்கு மத்தியில், ஆந்திர முதல்வர் YS.ஜகன் மோகன் ரெட்டி செவ்வாய்க்கிழமை (மார்ச் 3) தனது அரசாங்கம் NPR-க்கு எதிரான தீர்மானத்தை எதிர்வரும் சட்டமன்றக் கூட்டத்தில் அறிமுகப்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.
NPR-ல் முன்மொழியப்பட்ட சில கேள்விகள் ஆந்திராவில் உள்ள முஸ்லிம்களை பாதுகாப்பற்றவர்களாக ஆக்குகின்றன என்றும், 2010 ஆம் ஆண்டில் இருந்த கேள்விகளுக்கு திரும்புமாறு அவரது அரசாங்கம் மையத்தை வலியுறுத்தியதற்கு இதுவே காரணம் என்றும் ரெட்டி ட்வீட் செய்துள்ளார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பில் இடம் பெறும் 34 கேள்விகள்

மக்கள் தொகை கணக்கெடுப்பில் இடம் பெறும் 34 கேள்விகள்
மாலைமலர் : மக்கள் தொகை கணக்கெடுப்பில் மொத்தம் 34 கேள்விகள் இடம்பெற இருக்கின்றன. வருகிற ஏப்ரல் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை முதல் கட்ட பணியும், அடுத்த ஆண்டு 2-வது கட்ட பணியும் நடைபெறும். இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு (சென்சஸ்) பணி நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இதற்கான தொடக்க பணிகளை மத்திய அரசு தொடங்கி உள்ளது.
மத்திய பதிவாளர் ஜெனரல் அலுவலகம் மூலம் இந்த கணக்கெடுப்பு நடத்தப்படும். இது சம்பந்தமாக மத்திய பதிவாளர் ஜெனரல் அலுவலகத்தில் இருந்து அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
14 பக்கங்கள் கொண்ட அந்த சுற்றறிக்கையில் மக்கள் தொகை கணக்கெடுப்பை எவ்வாறு நடத்த வேண்டும், அதற்கு எந்தெந்த விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
எந்தெந்த மட்டங்களில் அவை நடத்தப்பட வேண்டும், எவ்வாறு அதற்கான ஊழியர்களை தயார்படுத்த வேண்டும் போன்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.