சனி, 7 மார்ச், 2020

ஏ.ஆர்.ரஹ்மான் காலத்தின் கட்டாயம்? இளையராசா .? .. சமுக வலையில் ஒரு அலசல் ..

Nilavinian Manickam  : இளைய ராசாவைவிமர்ச்சிக்கும் முன்னமே ஓர்
அறிமுகம்..இளையராசா என் மாவட்டத்துக்காரர் மற்றும் அவரின் தீவிர இரசிகனென்பதுவும் ...நான் பெருமைகளாக கருதுபவை இளையராசா ஒன்றும் யோக்கியரல்ல...தன்கர்வம் கொண்டு மனிதர்களை மனிதர்களாக மதிக்கத்தெரியாத பார்பானீய புத்தி படைத்தவர்.. இசையின் உச்சியில் இருந்த காலங்களில் அவர் படம் முழுதும் தன் ஆக்கிரமிப்பை பயன்படுத்த முனைந்தவர்..பயன்படுத்தியவர்..
அவர் அத்தனை ஆண்டுகள் உச்சத்திலிருந்து..ரஹ்மானை விட எத்தனை தமிழ்ப்பாடகர்களை அறிமுகப்படுத்தி ஊக்குவித்து விட்டார்?
ஜெயச்சந்திரன் மற்றும் மலேசியா வாசுவை ஒழித்துக்கட்டியவர்..மனோ,சித்ரா மற்றும் அருண்மொழியை அறிமுகப்படுத்தியவர்...என்ற அளவுதான் அவருடைய அறிமுக ஊக்குவிப்புகள்...
..ஏ.ஆர்.ரகுமான் காலத்தின் கட்டாயம்...அவரால் இன்று உருவான தமிழ்ப்பாடகர்களின் பட்டியல் மிக நீளமானது..
ஒரு கவிஞரின் சுதந்திரத்தில் தலையிட்டதோடல்லாமல் ..முகப்பு பாடல்கள் மற்றும் உள் பாடல்களில் இவரின் பெருமையை பீத்த மறுத்த வைரமுத்துவுடன் முரண்பட்ட வேடதாரிதான் இளைய ராசா. (எ.கா..இராஜா..இராஜாதி இராசனிந்த இராஜா)
வைரமுத்து தனது நூலில்...இவரின் நேர்மறை மற்றும் எதிர்மறைகளை மறைக்காமல் மறுக்காமல் கூறியிருக்கிறார்...
கமலஹாசன் வாய்ப்புத்தந்த மருதநாயகம் திரைக்கதை எழுதும் பொறுப்பை ....கீழ்சபையின் தீர்மானம் மேல்சபையில் நிராகரிக்கப்படுவது போல....தட்டிவிட்டு பறித்தாயே என்ற குற்றச்சாட்டுக்கெல்லாம் வாய் திறக்காதவர்தான் இளைய ராஜா

வைரமுத்துவுடன் முரண்பாடு இருந்ததாலும்....கால நேரம் மற்றும் இசையமைப்பாளரிடமிருந்து சினிமாவின் அதிகாரம் இயக்குனரின் கைகளுக்கு மாறிக்கொண்டிருந்த காலம்...இயக்குனருக்கு அடிபணியவும் புதிய இசையமைப்பாளர ஒருவர் தேவைப்பட்டார்...அதுதான் ஏ.ஆர்.ரஹ்மான்..
இன்னமும் இருபத்தைந்து வருடங்களுக்கு முன் அவரை விமர்ச்சித்து வைரமுத்து எழுதிய
"நான் மனிதத்தைப் பேண தியானத்தை விட்டு விட்டேன்...
நீ தியானத்தைப்பேண மனிதத்தை விட்டுவிட்டாய்" என்ற வரிகள் அப்படியே இருக்கின்றன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக