வியாழன், 5 மார்ச், 2020

பார்ப்பனீயம் பதம் பார்த்த ஆ.ராசா ..இளையராஜா .. வடிவேலு...

Seetha Ravi Suresh : 1, நகைச்சுவை நடிகர் வடிவேலு வாய்ப்புகள் முடக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டது ஏன்!?
ஒரேயொரு என்.எஸ்.கிருஷ்ணனின் பகுத்தறிவு மற்றும் திராவிட பிரச்சாரத்தின் வீரியத்தையும் அது அன்றுண்டாக்கிய திராவிட எழுச்சியையும் கண்கண்டு விக்கித்துப்போன பார்ப்பனியம் அதேபோன்று வடிவேலு எனும் நகைச்சுவை நடிகன் திமுக ஆதரவு
பிரச்சாரத்தை கையிலெடுப்பதை எவ்வாறு சகித்துக்கொள்ளும் என்பதை சிந்தித்துப்பார்த்தால் வைகைப்புயல் வடிவேலு ஓரங்கட்டப்பட்டதின் நுண்ணரசியல் தெரியவரும்!
2, மல்ட்டி மீடியாக்களையும் செய்தி ஊடகங்களையும் கைகளில் வைத்து அம்மானையாடும் பார்ப்பனிய லாபிக்கு தொலைத்தொடர்பில் மாறனும், ஆ.ராசாவும் செய்த சீர்திருத்தங்களை பற்றி ஆரம்பத்தில் பெரிய கருத்துமுரண்கள் இருந்திருக்கவில்லை. ஆனால்,
ஆன்ட்ராய்டு மொபைல்களின் வருகையால் ஒட்டுமொத்த ஊடக ஏகாதிபத்திய ஆக்ரமிப்புகளையும் சிதறடித்து வளர்ந்தெழுந்த சோஷியல் மீடியாவின் தாக்கமானது பார்ப்பனியத்தின் ஊடகலாபியை தரைமட்டமாக்கியதை கண்டபின்னரே அவர்கள் சுதாரிக்கவாரம்பித்தனர்.

அதன்பிறகே மல்ட்டிமீடியாவை கான்ட்ராக்ட் எடுத்துக்கொண்டு பாஜகவின் ஊதுகுழலாக அதை மாற்றிக்கொண்டனர். எல்லா சேனலிலும்
பத்திரிக்கைகளிலும் பாசிச பாஜக ஆதரவுநிலையை பகிரங்கமாக கைக்கொள்ளும்படிக்கு ஊடகங்களை நிர்பந்தித்தனர்.
இதற்கெல்லாம் மேலாக பார்ப்பனியத்தின் அடிமை சினிமா இயக்குனர் சங்கரை மற்றும் ரஜினியை வைத்து ரோபோ 2 படமாக்கப்பட்டது எதற்காகவென்றால்!?

கைபேசிகள் மூலமாகவியங்கும் சோஷியல் மீடியாவினால் பார்ப்பனியத்துக்கும் சங்கிகளுக்கும் எதிரான பலமான பிரச்சாரமும் பார்ப்பனிய புரட்டுகள் தோலுரிக்கப்படுவதும் வெகுசாதாரணமாக இங்கு நடைபெற்று அதுவும் வெகுஜனங்களே காரித்துப்புகிற அளவுக்கு இந்துத்வா கேவலப்பட்டதையும் கண்ட பார்ப்பனியம் ஆ.ராசாவின் தொலைத்தொடர்பு கொள்கையை குற்றஞ்சாட்ட முற்ப்பட்டதே காரணம்.
செல்போன்களால் சூழல்மாசு எனும் கதைபுனைந்து அதில் ராட்சஸ பறவையாக "ஆரா" எனும் பெயரை சூட்சுமமாக வைத்ததில் உள்ள அரசியல் என்னவென்றால்!?
"ஆரா என்பது ஆ.ராசா" என்பதன் சுருக்கமே என்கிற பார்ப்பனிய மேட்டிமைத்தன கருத்தாக்கம்தான்.
என்பதை புரிந்துகொள்வதே இதிலுள்ள நுண்ணரசியல்.

3, திரையிசை என்பதை மண்சார்ந்த இசையாக கொண்டால் அதில் கேவி.மகாதேவனும், இளையராஜாவும் மட்டுமே இருப்பார்கள். தமிழர்களின் நையாண்டி மேளம் மற்றும் பறை,உருமி போன்ற தாளவாத்தியங்களின் மூலம் மண்சார்ந்த இசையை கொடுத்தவர்கள் இவ்விருவர் மட்டுமே. அதுவும் இளையராசாவின் வளர்ச்சியை பார்ப்பனியத்தால் சகித்துக்கொள்ளவே முடியவில்லை. அதற்கு மிகப்பெரிய உதாரணம் கே.பாலச்சந்தர் வகையறாவின் இளையராஜா புறக்கணிப்பு.
மண்சார்ந்த திரையிசை இங்கே பார்ப்பனியத்தால் எவ்வாறு அப்புறப்படுத்தப்பட்டதென்றால்!? பார்ப்பனிய மணிரத்தினம் இதயக்கோயில்னு ஒரு சினிமா எடுத்தார். சினிமா அட்டர் பிளாப். ஆனால் அத்திரைப்படத்தின் பாடல்கள் நூறாண்டுதாண்டியும் நீடித்திருக்கும் அளவுக்கு மகத்தான படைப்பாக இளையராஜாவின் பெயரை சொல்லிக்கொண்டிருக்கும்.
வானுயர்ந்த சோலையிலே...
நான் பாடும் மௌனராகம்....
இதயம் ஒரு கோயில்
யார்வீட்டில் ரோஜா பூப்பூத்ததோ....
கூட்டத்திலே கோயில்புறா....
பாட்டுத்தலைவன் பாடினால் பாட்டுதான்..
என அத்தனையும் காலத்தால் நீடித்திருக்கும் பாடல்களாகும். மணிரத்தினத்தின் இதயக்கோயில் மட்டுமல்லாது பகல்நிலவு, மௌனராகம், அஞ்சலி, அக்னிநட்சத்திரம், இதயத்தை திருடாதே, தளபதி என அத்தனை படங்களும் இளையராஜாவின் இசையாலே பெருமைபெற்றதாக வந்த விமர்சனங்களை தாங்கமுடியாத பார்ப்பனிய மணிரத்தினம்.
ஒரு தாழ்த்தப்பட்டவன் தன்னைவிட பெருமையடைவதா என்கிற வெறியில் ஒரு மேடையிலேயே தனது விஷத்தை கக்கினான்.
"இதயக்கோயில் படத்தை நான் ஏன் எடுத்தேன்? அதுவொரு குப்பை!, வெறும் ஒன்றுக்கும் உதவாத பாடல்களும் இசையும் இருந்தால் சினிமாவாகிவிடாது" என ஹாலிவுட் டைரக்டர் ரேஞ்சிற்கு தன்னை உயர்த்திப்பிடிக்க முனைந்தான் அம்மேடையில்.
அந்த உரசலுக்கு பிறகான சினிமா பார்ப்பனர்களின் ஒரேநோக்கம் இளையராஜாவை வீழ்த்துவதாக இருந்தது. எங்கோ கீபோர்ட்ல ஜிங்கிள்ஸ் பழகிட்டிருந்த ஏஆர்.ரகுமானை சினிமாவுக்குள் கொண்டுவந்து தங்கள் பார்ப்பனிய வெறியை தீர்த்துக்கொண்டனர். ரகுமான் வந்தபிறகு நமது மண்சார்ந்த இசை எங்கேப்போனதுன்னு தெரியலை.
சோழம் வெதைக்கையிலே...
நடைய மாத்து.....
மாமன் ஒருநாள் மல்லியப்பூ....
இப்படிப்பட்ட கிராமத்து இசைக்கோர்வைகள் நமது கலாச்சாரத்தோடான இயல்பைக்கொண்ட பாடல்கள் நம்மைவிட்டு அகன்றன. தாழ்த்தப்பட்ட இளையராசா பார்ப்பனியத்தால் வீழ்த்தப்பட்டார். அத்தோடு நம்மண்சார்ந்த இசையும் நம்மிடமிருந்து பிடுங்கப்பட்டது.
--------+++++---------+++++----------
இம்மூன்று செய்திகளில் இருக்கிற நுண்ணரசியலை புரிந்துகொண்டு எதைச்செய்தால் நாம் சமூகநீதியை காப்பாற்ற முடியும்? எதை எதிர்த்தால் நமது மக்களை சமூகவிடுதலையை நோக்கி செலுத்தமுடியும்!? எவற்றிலெல்லாம் நாம் சூதனமாக இருந்தால் வெற்றியை எட்டமுடியும் என்பதை புரிந்துகொள்ளுங்கள் தோழர்களே! பார்ப்பனியம் எவ்வளவு விஷமானது, அது தனது அடிமைகளை வைத்தே நம்மை சீரழிக்கும் தன்மைபூண்டது என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.
வாழ்க திராவிடம்!
வாழ்க பொதுவுடமை!
புகச்சோவ்.

1 கருத்து:

  1. இளையராஜா தவிர மற்ற இரண்டும் சரி யான கருத்துக்களே. இன்று இளையராஜா இந்துக்களின் செல்லப் பிள்ளை.. பார்பனர்கள் சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் சங்கர மடத்தின் அடிமையாக அவர் தன்னை அமைத்து கொண்டு விட்டார்.

    பதிலளிநீக்கு