வெள்ளி, 6 மார்ச், 2020

தலீவர் அரசியலுக்கு வருவாரான்னு வேடிக்கை பார்க்க போனோர் கூறியது இதுதான் ...

சிவாஜி ராவ் கேக்வார்ட்  :வீட்டிலிருந்து தனது திருமண மண்டபத்துக்கு புறப்பட்டார்...
வணக்கம்,
எல்லோரும் உட்காருங்க, அப்புறம், எப்படி இருக்கீங்க,
மக்கள் நம்மள பத்தி என்ன பேசிக்கிறாங்க..?


  சி ரா கே : இப்படி கேட்டது தான் தாமதம்,
சூப்பர் தலைவா,
அடுத்தது நம்ம ஆட்சி தான் தலைவா
நீங்க தான் அடுத்த முதல்வர் தலைவா
என்று ஆளாளுக்கு குதூகலித்தார்கள்.
கைகளை உயர்த்தி சைகையால் அவர்களை அமைதிப்படுத்திய சி ரா கே  பேசத் தொடங்கினார்.
எனக்கு உண்மையான தகவல் வேணும்.
அதாவது நிஜமாவே மக்கள் நம்மை பத்தி என்ன பேசிக்கிறாங்கன்ற உண்மையான தகவல் வேணும். நானும் டெய்லி தொலைக்காட்சி விவாதங்கள், சமூக வலைதளங்கள்ல என்னோட அரசியல் எண்ட்ரிய பத்தி வர்ற கமெண்ட்ஸ்களையெல்லாம் பார்த்துட்டுத் தான் இருக்கேன். ஸோ, என்னை திருப்திப்படுத்தவோ, சந்தோஷப்படுத்தவோ தயவுசெய்து தவறான தகவலை யாரும் இங்கே சொல்ல வேண்டாம். மறுபடியும் சொல்றேன் எனக்கு உண்மையான தகவல் வேணும், சும்மா பயப்படாம தைரியமா மக்கள் என்னை பத்தியும், என்னோட அரசியல் வருகைய பத்தியும் என்ன பேசிக்கிறாங்க, நமக்கு என்ன மாதிரியான வரவேற்பு இருக்குன்ற உண்மைகளை மட்டும் ஒவ்வொருத்தரா சொல்லுங்க....
கூட்டத்தில் அமைதி.....
"ம், சொல்லுங்க
யாரவது ஆரம்பிங்கப்பா
முதல்ல நீங்க சொல்லுங்க பெரியவரே...." என்று தனக்கு எதிரே முதல் வரிசையில் இருந்தவரை பேசச் சொன்னார் சி ரா கே .
தயங்கியபடியே எழுந்த அவர்,
கட்டாயம் அரசியலுக்கு வருவேன்னு நீங்க சொன்னப்ப, மக்கள்ட்ட ஒரு எதிர்பார்ப்பு இருந்தது உண்மை தான்.

ஆனா ரெண்டு வருசமாகியும் இன்னும் கட்சியோட பேரு, கொள்கை, கொடி, சின்னம்னு எதையும் முடிவு பண்ணாம, தொடர்ந்து கேப் விடாம சினிமால நடிச்சுட்டே இருக்கிறத பாத்தா, இந்த வாட்டியும் தலைவர் அல்வா தான் கொடுப்பார்னு மக்கள் அவங்களுக்குள்ளேயே பந்தயம் வச்சு விளையாட ஆரம்பிச்சுட்டாங்க தலைவா...
ஓஹோ, சரி நீங்க உட்காருங்க,
ஐயா நீங்க சொல்லுங்க....
என்னத்த சொல்றது,
இது சரியான நேரம் வர்றதுக்கு.
ஐயாவும் இல்ல, அம்மாவும் இல்ல,
இந்த நேரத்துல கூட நீங்க தைரியமா வராம, இதோ அதோன்னு சொல்லிட்டே இருக்கீங்க, நாங்களும் எவ்ளோ நாள் தான் உங்களுக்காக காத்து கிடக்க.....
சரி உட்காருங்க, நீங்க சொல்லுங்க....
அடுத்தவரை கை காட்டினார் சி ரா கே
சார், புதுசா அரசியலுக்கு வர்ற நாம மக்கள் பக்கத்தில் நின்னு, மக்கள் பிரச்சனைய பேசனும். ஆனா நீங்க மத்திய அரசு பக்கத்தில் நின்னு, மத்திய அரசு கொண்டு வர்ற மக்கள் விரோத திட்டங்களையெல்லாம் ஆதரிக்கிறீங்க. இதெல்லாம் நமக்கு பின்னடைவை தான் உண்டாக்கும். ஏன்னா ஓட்டு போடுறது மக்கள் தானே தவிர, மத்திய அரசு இல்ல.
அதனால நீங்க மக்களுக்கு ஆதரவா பேசனும்ன்றது என்னோட விருப்பம்...
ரைட், நெக்ஸ்ட்.....
எனக்கு சொல்றதுக்கு ஒன்னும் இல்ல, உங்க கிட்டே கேட்கத்தான் ஒரு கேள்வி இருக்கு
யெஸ், கேளுங்க....
நீங்க அரசியலுக்கு வருவீங்களா, மாட்டீங்களா...?
இதைக் கேட்டு அதிர்ந்த காத்தவராயன்,
என்ன இப்படி கேட்டுட்டீங்க,
நீங்க எந்த ஊர்ல இருந்து வர்றீங்க என்றார்
தூத்துக்குடி....
ஆத்தாடி என்றவர், இருக்கையிலிருந்து எழுந்து தலைக்கு மேல் கைகளை தூக்கி தன்னுடைய வழக்கமான ஸ்டைலில் ஒரு பெரிய கும்பிடு போட்டு, கேள்வி கேட்டவரை உட்காரச் சொன்னார்....
கூட்டம் கலைந்தது.
சிவாஜி ராவ் கேக்வார்ட் மண்டபத்திலிருந்து தனது வீட்டிற்கு புறப்பட்டார்....!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக