சனி, 7 மார்ச், 2020

பேராசிரியர் அன்பழகன் உடல் நிலையில் முன்னேற்றமில்லை: மு.க.ஸ்டாலின்


BBC :திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகனுக்கு தீவிர சிகிச்சை
அளிக்கப்படுகிறபோதும், வயது மூப்பு காரணமாக அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வருடமாக வீட்டில் சிகிச்சை பெற்றுவந்த அவர், கடந்த பிப்ரவரி 24ம் தேதி கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவ்வப்போது திமுக தலைவர்கள் அவரை சென்று பார்த்து வருகின்றனர்.
தற்போது, அன்பழகனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. வெள்ளிக்கிழமை மாலை திமுக தலைவர் ஸ்டாலின் மருத்துவமனைக்குச் சென்று பார்த்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது தீவிர கண்காணிப்பில் இருந்தாலும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை என வருத்தத்துடன் தெரிவித்தார்.
"ஒரு வருடமாக அவர் இல்லத்தில் ஓய்வில் இருந்தார். கடந்த மாதம் உடல்நலம் மிகவும் குன்றியது. மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆனால் வயது முதிர்வு காரணமாக சிகிச்சைக்கு இதுவரை பலன் ஏற்படவில்லை," என்றார் ஸ்டாலின்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக