சனி, 7 மார்ச், 2020

யெஸ் பேங்க் நெருக்கடி: ஸ்தம்பிக்கும் ஆன் லைன் ஷாப்பிங்..

யெஸ் பேங்க் நெருக்கடி: ஸ்தம்பிக்கும் ஆன் லைன் ஷாப்பிங்!
Yes Bank இயக்குனர் நடிகர் ரவீந்தர்
மின்னம்பலம்: யெஸ் பேங்க் நெருக்கடி டிஜிட்டல் வர்த்தக உலகில் சங்கிலித் தொடர் விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. யெஸ் பேங்க் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்ததால், அதை ரிசர்வ் வங்கி தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்ட நிலையில்... யெஸ் பேங்க்கோடு இணைந்து டிஜிட்டல் பரிவர்த்தனைகளை செயல்படுத்தி வந்த, ‘ஃபோன் பே’ உள்ளிட்ட பல்வேறு டிஜிட்டல் பரிவர்த்தனை செயலிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.
ஃபோன் பேவின் பயனர்கள் செலுத்தும் அனைத்து பணப் பரிமாற்றங்களும் யெஸ் பேங்கை சார்ந்தே இருப்பதால், இந்தியா முழுதும் ஃபோன் பே டவுன் ஆகியிருக்கிறது.
ஃபோன் பே இந்தியாவின் முக்கியமான யுபிஐ பயன்பாடாக இருக்கும் நிலையில், யெஸ் பேங்க் நெருக்கடியால் ஃபோன் பேவின் பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் தங்கள் செயலியை அணுக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஃபோன் பே நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சமீர் நிகாம்,

“ஃபோன் பேவின் இந்த செயலிழப்பு குறித்து வருத்தப்படுகிறோம். தற்போது விரைவில் சேவைகளை மீண்டும் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இந்த பயன்பாடு சில மணி நேரங்களுக்குள் மீண்டும் செயல்பாட்டுக்கு வரும்” என்று ட்விட்டில் தெரிவித்துள்ளார்.
யெஸ் பேங்க் நெருக்கடியால் ஃபோன் பே மட்டுமல்ல... பிளிப்கார்ட், மேக் மை ட்ரிப், ஜபோங், கிளியர் ட்ரிப், ஏர்டெல், ஸ்விக்கி, ரெட் பஸ், ஹங்கர் பாக்ஸ், முத்ரா பே, உதான், மைக்ரோ சாப்ட் கைசலா மற்றும் பிவிஆர் போன்ற பல பிராண்டுகள் யெஸ் வங்கியின் யுபிஐ இயங்குதளத்தைப் பயன்படுத்துவதால் சிக்கல்களை எதிர்கொள்கின்றன.
ஏர்டெல் மற்றும் மிந்த்ரா போன்ற பல நிறுவனங்கள், யெஸ் பேங்க் தவிர பல வணிக கட்டண நுழைவாயில்களைப் பயன்படுத்துவதால், அவர்களின் வணிகங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
-வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக