சனி, 24 நவம்பர், 2018

நடிகர் அம்பரீஷ் காலமானார்.. கர்நாடக அமைச்சர் . Veteran Kannada actor Ambareesh passes away நடிகை சுமலதாவின் கணவர்

Veteran Kannada actor and politician Ambareesh has passed away, as per the latest reports from Bangalore. The actor was reportedly admitted to a hospital due to respiratory problem, and shortly after that, he breathed his last. He was 66 years old.
பிரபல கன்னட நடிகர் அம்பரீஷ். 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். சமீபகாலமாக அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் இறந்தார்.
அவருக்கு வயது 66. அவருடைய மனைவி சுமலதாவும் நடிகை ஆவார். நடிகர் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பராக அம்பரீஷ் இருந்தார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அவர் சித்தராமையா மந்திரிசபையில் கேபினட் மந்திரியாக பதவி வகித்தார்.

BBC :ஒரே ஆண்டில் அழிக்கப்பட்ட 7,900 சதுர கிலோ மீட்டர் அமேசான் மழைக்காடுகள்


பூமியின் நுரையீரல் என்றும் சிலரால் அமேசான் காடுகள் அழைக்கப்படுகின்றன. உலகின் மிகப்பெரிய வெப்பமண்டல மழைக் காடான அமேசான் காடுகளில் இந்த தசாப்தத்தில் காடுகள் அழிக்கப்பட்ட விகிதம்தான், இதுவரை அங்கு நடந்த காடுகள் அழிப்பிலேயே வேகமானது என பிரேசில் அரசு வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன. தென்னமெரிக்க கண்டத்தில் உள்ள அமேசான் காடுகளின் பெரும் பரப்பு பிரேசில் எல்லைக்குள்தான் உள்ளன.
ஆகஸ்ட் 2017 முதல் ஜூலை 2018 வரையிலான ஓராண்டு காலகட்டத்தில் மட்டும், பிரேசிலில் உள்ள சுமார் 7,900 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள அமேசான் மழைக்காடுகள் அழிக்கப்பட்டுள்ளன.
இந்தப் பரப்பளவு தோராயமாக லண்டன் நகரைப் போல ஐந்து மடங்காகும். சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்படுவதே இதற்குக் காரணம் என பிரேசில் சுற்றுக்சூழல் அமைச்சர் எட்சன் துவார்த்தே கூறியுள்ளார்.

கஜா புயலை தேசிய பேரிடராக அறிவிங்க.. ஆளுநர் மாளிகையை முற்றுகையிட வந்த மாணவி நந்தினி கைது

law student Nandhini arrestedtamil.oneindia.com - alagesan.:சென்னை: ஆளுநர் மாளிகையை முற்றுகையிட வந்த சட்டக் கல்லூரி மாணவி நந்தினி கைது செய்யப்பட்டார்.
கஜா புயலால் வாழ்வாதாரத்தை இழந்து டெல்டா மாவட்ட மக்கள் தவிப்புக்கு உள்ளாகி உள்ளனர். அவர்களுக்கு அரசு நிவாரண உதவி மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் நிவாரண உதவி செய்யப்பட்டாலும், போதுமானதாக இல்லை என கூறப்படுகிறது. குடியிருக்க வீடு, குடிக்க தண்ணீர் இன்றியும், போதிய உணவு இல்லாமல் பொதுமக்கள் ஆங்காங்கே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தென்னை மரங்கள், விவசாய பயிர்கள் கஜா புயலில் அழிந்ததால், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி விவசாயிகள் உள்ளனர். முழுமையான மின் இணைப்புக்கு இன்னும் சில வாரங்கள் ஆகும் என கூறப்படுகிறது.

ரிசர்வ் வங்கியா ? ரிலையன்ஸ் வங்கியா ?

வினவு :ரிசர்வ் வங்கியைத் தனது தலையாட்டி பொம்மையாக மாற்றுவதன் மூலம், பொதுத்துறை வங்கிகளைக் கார்ப்பரேட் முதலாளிகள் மொத்தமாக விழுங்கிவிடும் சூழலை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது மோடி அரசு.
பா.ஜ.க. கூட்டணி அரசிற்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் ஊடல் குறித்து, “நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காகவே ரிசர்வ் வங்கியோடு மோடி அரசு முரண்பட்டு நிற்பதாக’’க் கூறுகிறது, ஆர்.எஸ்.எஸ். “தனது நிறுவன சுதந்திரத்தைப் பாதுகாத்துக் கொள்ளவும், நாட்டின் எதிர்கால நலன் கருதியும்தான் மோடி அரசோடு ஒத்துப்போக மறுப்பதாக’’க் கூறி வருகிறது, ரிசர்வ் வங்கி.
இந்த இரண்டு விளக்கங்களிலும் இம்மியளவும் உண்மை இல்லை. எனினும், இப்பிரச்சினையில் மோடி அரசு அம்பானி, அதானி உள்ளிட்ட சில குறிப்பிட்ட அதிகாரவர்க்கத் தரகு முதலாளிகளின் ஏஜெண்டாக நடந்துகொள்வதும், ரிசர்வ் வங்கியைத் தனது தலையாட்டி பொம்மையாக மாற்ற முயலுவதும்தான், ரிசர்வ் வங்கியின் வர்க்கச் சார்பைக் காட்டிலும் அபாயகரமானதாகும்.

Hurray Menses ! சபரிமலை பெண்கள் நுழைவு | கேரளா கருத்தரங்கம்

வினவு :வணக்கம், பெண்களின் மாத ஒழுங்கை இழிவாகக் காட்டி வெட்கமில்லாமல் பெண்கள் மீது பாரபட்சம் காட்டும் நாடு இந்தியா. தங்களது வலதுசாரி முழக்கங்களுடன் மாத ஒழுங்கு வரும் பெண்களின் மீது போர் தொடுத்துவரும் சங்கபரிவார கும்பல்களை இனியும் அனுமதிக்க முடியாது.
வெள்ளத்தை ஒற்றுமையோடும் இணக்கத்தோடும் எதிர் கொண்ட சமூகம் நாம். நமது சமூகத்தில், பழமையான சடங்கு மற்றும் மதத்தின் அடிப்படையில் நம்மிடையே பிரிவை உண்டாக்கும் வலதுசாரி பேராபத்தை எதிர்த்து தாக்குப் பிடிக்க வேண்டும். கட்ந்த 1927-ம் ஆண்டு அம்பேத்கர் மனுஸ்மிருதிய தீயிலிட்டு, இந்திய அரசமைப்புச் சட்டத்தை வழங்கினார். நாமும் மனுஸ்மிருதிக்கு எதிராக  நமது அரசமைப்புச் சட்டத்தை உயர்த்திப் பிடிப்போம்.
சங்க பரிவாரத்திற்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைவோம். ஸ்ரீநாராயணகுரும் அய்யங்காளி மற்றும் பொய்கையில் அப்பச்சன் ஆகியோரின் மறுமலர்ச்சி இயக்கங்களின் மீது கட்டப்பட்டிருக்கும் கேரளத்தை சங்க பரிவாரம் சின்னாபின்னமாக்க விடாமல் தடுப்போம்.

6வது தங்கம் வென்றார் மேரி கோம் .. உலக பெண்கள் குத்துச்சண்டை போட்டியில்

உலக பெண்கள் குத்துச்சண்டை போட்டியில் 6வது தங்கம் வென்றார் மேரி கோம்மாலைமலர் :  பெண்கள் உலக சாம்பியன்ஷிப்ஸ் குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனை மேரி கோம் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று 6வது தங்கப் பதக்கத்தை வென்றார். #MaryKom #WorldBoxing புதுடெல்லி: டெல்லியில் நடைபெற்று வரும் உலக பெண்கள் குத்துச்சண்டை போட்டியில் பல்வேறு பிரிவுகளில் இன்று இறுதி போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
அதில் 48 கிலோ எடைப்பிரிவுக்காக நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியாவின் மேரிகோம், உக்ரைனின் ஹன்னா ஒகோட்டோவை எதிர் கொண்டார். இந்த போட்டியில் அபாரமாக ஆடிய மேரி கோம் 5-0 என்ற கணக்கில் உக்ரைன் வீரர் ஹன்னா ஒகோட்டோவை வீழ்த்தினார். இதன்மூலம் உலக குத்துச்சண்டை போட்டியில் 6-வது தங்கப் பதக்கத்தை கைப்பற்றி அசத்தியுள்ளார்.

இலங்கை அரசியல் சிக்கல் ஓய்ந்தது: பிரதமராகிறார் ரணில் விக்ரமசிங்கே!


NDTV :இன்று பாராளுமன்ற, கூடியதும் எடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் ரணில் விக்ரமசிங்கேவுக்கு அதிக ஆதரவு கிடைத்தது.இலங்கையில் அரசியல் சூழல் சில நாட்களாகவே சரியில்லாத நிலையில் இருந்தது. அதிபர் மைத்ரிபாலா, சிறிசேனா பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை நீக்கிவிட்டு புதிய பிரதமராக முன்னாள் அதிபர் ராஜபக்சேவை நியமித்தது தான் இந்த அரசியல் சூழலில் ஏற்பட்ட அமைதியற்ற தன்மைக்கு காரணமாக அமைந்தது.
இன்று பாராளுமன்ற, கூடியதும் எடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் ரணில் விக்ரமசிங்கேவுக்கு அதிக ஆதரவு கிடைத்தது. அவரது கூட்டணி வென்றதாக அறிவிக்கப்பட்டது. அதிபர் சிறிசேனாவின் கட்சி உறுப்பினர்கள் அவை தொடங்கிய சிறிது நேரத்தில் வெளிநடப்பு செய்தனர். அவர்கள் சபாநாயகர் கரு ஜெயசூர்யாவுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு வெளியேறினர்.

கடவுள் தான் கற்பழிக்க சொன்னார்: 9 பெண்களை சீரழித்த மதபோதகர்

Leeவெப்துனியா: தென்கொரியாவில் மதபோதகர் ஒருவர் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்கொரியாவில் மக்களிடையே பிரபலமானவர் தான் மதபோதகர் ஜேராக் லீ. இங்கு எப்படி நித்யானந்தாவோ அங்கு அவர் அப்படி.இவனது முழு வேலையே கடவுளின் பெயரை சொல்லி அவனிடம் வரும் பெண்களை சீரழிப்பதுதான். கடவுள் தான் இப்படி செய்ய சொன்னார் என கூறி கிட்டதட்ட 9 பெண்களை இவன் கற்பழித்துள்ளான்.>இவனது கொடுமைகளை தாங்க முடியாத பெண் ஒருவர் இதுகுறித்து ஆதாரத்துடன் காவல் நிலையத்தில் முறையிட்டார். இதனையடுத்து போலீஸார் ஜேராக் லீயை கைது செய்தனர். இவனுக்கு நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

மின்கம்பங்கள்... உயிரை பணயம் வைத்து இராப்பகலாக .. உண்மையான கதாநாயகர்கள் நீங்கள் தான்! படங்கள்

electricity board workersநக்கீரன் :கஜா புயலின் கோரத்தாண்வத்தினால் டெல்டா மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான மின் கம்பங்கள் சரிந்துள்ளன. பெரும்பாலான மின்கம்பங்கள் வயல்களில் விழுந்துள்ளன.
electricity board workersபல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மின் ஊழியர்கள் அவற்றை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உணவு அருந்தக்கூட நேரம் இல்லாமல் அவர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அம்மாவட்டங்களில் தொடர்ந்து அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது. வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கி நிற்கும் நிலையிலும் மின்வாரிய பணியாளர்கள் சாலையில் இருந்து 200 மீட்டர் தூரத்திற்கும் மேல் மிகுந்த சிரமத்திற்கு இடையில் மின்கம்பங்களை எடுத்துச்சென்று குழிபறித்து ஒவ்வொரு மின்கம்பமாக நட்டு வருகின்றார்கள். நாகப்பட்டிணத்திலல் மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட ஊழியர் ஒருவர், சாப்பிடக்கூட நேரம் இல்லாமல் மின்கம்பத்தின் மேலே உட்கார்ந்தப்படியே உணவருந்தினார்.

NDTV :மத்திய பிரதேசத்தில் மாயாவதியுடன் ஏன் கூட்டணி அமையவில்லை!’- காங்கிரஸ் விளக்கம்

மத்திய பிரதேசத்தில் இம்மாதம் தேர்தல் நடந்து அடுத்த மாதம் 11 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.


  • ம.பி-யில் மாயாவதி-காங்கிரஸ் கூட்டணி அமையும் என எதிர்பார்க்கப்பட்டது
  • ஆனால் இரு தரப்புக்குமான பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்படவில்லை
  • ம.பி-யின் 230 தொகுதிகளுக்கும் ஒரு கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது
  • மத்திய பிரதேசத்தில் இன்னுற் ஒரு சில நாட்களில் தேர்தல் நடக்க உள்ளது. இந்தத் தேர்தலில் காங்கிரஸுடன் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி வைத்து களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் கூட்டணி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இது அம்மாநில தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில் மத்திய பிரதேச காங்கிரஸின் முக்கிய புள்ளிகளில் ஒருவரான கமல்நாத், மாயாவதியுடன் ஏன் கூட்டணி முறிவு ஏற்பட்டது என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
    8lhldrh8
    இது குறித்து கமல்நாத் என்.டி.டி.வி-யிடம் பேசும்போது, ‘மாயாவதி கேட்ட தொகுதிகளும், கேட்ட தொகுதிகளின் எண்ணிக்கையும் வெற்றி பெருவதற்கு உகந்த வகையில் இருக்கவில்லை. நாங்கள் மாயாவதிக்கு மொத்தம் இருக்கும் 230 தொகுதிகளில் 25 முதல் 30 தொகுதிகள் வரை ஒதுக்கத் தயாராக இருந்தோம். ஆனால், மாயாவதி 50 தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்று கேட்டார்' என்று கூறினார்.

    சபரிமலையில் 2 நாள் பெண்கள் வழிபாடு செய்ய ஒதுக்கத் தயார்: உயர்நீதிமன்றத்தில் கேரள அரசு தகவல்

    tamil.thehindu.com : சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுப் பெண்களும் வழிபாடு செய்வதற்காக 2 நாட்கள் ஒதுக்கத் தயாராக இருப்பதாக உயர் நீதிமன்றத்தில் கேரள அரசு தெரிவித்துள்ளது.
    சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பைத் தொடர்ந்து, 4 பெண்கள் தாங்கள் சபரிமலைக்குச் சென்று தரிசனம் செய்ய போலீஸார் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவை நேற்று நீதிமன்றம் விசாரித்த போது, இந்தத் தகவலை கேரள அரசு தெரிவித்தது.<
    சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என்று உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பரில் தீர்ப்பளித்தது. ஆனால், சபரிமலையில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து, ஐயப்ப பக்தர்களும் இந்து அமைப்பினரும் தீவிர போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    காப்பகங்களில் உள்ள குழந்தைகளின் மரபணு மாதிரிகளை சேகரித்து வைக்கவேண்டும்: உயர் நீதிமன்றம்

    THE HINDU TAMIL : குழந்தைகள் காப்பகங்களில் சேர்க்கப்படும் குழந்தைகளின் மரபணு மாதிரிகளை சேகரித்து வைக்க சென்னை உயர்நீதிமன்றம், அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
    தமிழகத்தில் குழந்தைகள் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி சென்னையை சேர்ந்த நிர்மல் குமார் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அமர்வில் விசாரணைக்கு வத்தது. அப்போது, தமிழகத்தில் மொத்தம் 1,274 குழந்தை காப்பகங்கள் இருப்பதாகவும், அதில் 3 காப்பகங்கள் பதிவு செய்யாமல் செயல்பட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டது.

    இதயம் செயல் இழந்த பின்பு ஜெயலலிதாவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று அறிக்கை கொடுத்தது எப்படி? ஆணையத்தின் கேள்வி.. அப்பல்லோ மருத்துவர் திணறல்

    இதயம் செயல் இழந்த பின்பு ஜெயலலிதாவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று அறிக்கை கொடுத்தது எப்படி? ஆணையத்தின் கேள்வியால் அப்பல்லோ மருத்துவர் திணறல்தினத்தந்தி :‘இதயம் செயல் இழந்த பின்பு, ஜெயலலிதாவுக்கு இதயத்தில் எந்த பிரச்சினையும் இல்லை’ என்று அப்பல்லோ மருத்துவர் அறிக்கை அளித்துள்ளார். இதுதொடர்பாக ஆணையம் எழுப்பிய கேள்விக்கு அவர் பதில் அளிக்க முடியாமல் திணறினார். சென்னை, ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. அப்பல்லோ மருத்துவமனையின் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் சுரேஷ் மாணிக்கவேல், இதய நோய் தடுப்பு சிகிச்சை மருத்துவர் பிரகாஷ்சந்த் ஜெயின் ஆகியோர் நேற்று ஆணையத்தில் ஆஜராகினர்.
    ஜெயலலிதாவுக்கு மூச்சுத்திணறல் எந்த நிலையில் இருக்கிறது என்பதை கண்டறிவதற்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேதியான 22.9.2016 முதல் 25.10.2016 வரை அவருக்கு மூச்சுத்திணறல் தொடர்பாக எடுக்கப்பட்ட எக்ஸ்-ரே முடிவுகளை மருத்துவர் சுரேஷ் மாணிக்கவேல் ஆய்வு செய்துள்ளார்.

    வங்கி ஊழியர் இசக்கி சங்கர் ஆணவ கொலையில் 5 சிறுவர்கள் கைது ..


    aaதினத்தந்தி :அம்பை, அம்பை அருகே வங்கி ஊழியர் கொலையில் 5 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். வங்கி ஊழியர் கொலை நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள வெள்ளாங்குழி கிராமம் முத்தாரம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுடலை முத்துமணி மகன் இசக்கி சங்கர் (வயது 33). இவர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி களக்காடு கிளையில் ஊழியராக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று இசக்கி சங்கர் வழக்கம்போல் அந்த பகுதியில் அங்குள்ள தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றார். அங்கு குளித்து விட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அவர் ஆற்றங்கரையில் நடந்து வந்தபோது, அங்கு வந்த மர்மநபர்கள் அவரை சுற்றி வளைத்து பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர்.

    டெல்டா விவசாயம் ..நெல்லுக்கு மாற்று பயிராக தென்னை தேக்கு என்று .....படித்த_முட்டாள்களால்...

    வனத்தையன் தமிழரிமா : கஜா புயல் ஆடித்தீர்த்த கோரதாண்டவத்தால் சிதறடிக்கப் பட்டுள்ளது டெல்டா மாவட்டங்கள். நிவாரணம் அளிக்க வேண்டிய மாநில அரசும், மத்திய அரசும் மக்களின் துயரத்தில் பங்கேற்காமல் புள்ளிவிவரங்களை அள்ளிவீசி அரசியல் செய்து கொண்டிருக்கின்றன.
    காற்றின் வேகத்தை தாங்கி நிற்கக்கூடிய வேர் பிடிப்புள்ள மரங்கள் நிறைந்த காடுகளை அழித்து விட்ட காரணத்தால் காற்றின் வேகம் எங்கும் தடைப்படாமல் கடற்கரை கிறாமங்களைத் தாண்டி மாநிலத்தின் மத்திய பகுதிகளிலும் புயல் தடையின்றி கடந்து செல்கிறது. அதன் விளைவாக 30 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விட கூடுதல் இழப்புக்களை புயல் காலங்களில் சந்திக்கிறது தமிழகம்.
    டெல்டா மாவட்டங்கள் காடுகள் நிறைந்த பகுதி அல்ல. அது ஒரு சமவெளிப்பகுதி. காற்றைத் தடுக்கும் திறனுள்ள மரங்கள் அங்கே கிடையாது. மாநிலத்தின் நெற்களஞ்சியமான டெல்டாவில் நெல் பயிரிடப்பட்டிருந்தால் இதுபோன்ற பேரிடர் காலங்களில் ஒரு போகம் மட்டுமே இழப்பாக இருந்திருக்கும்.
    டெல்டா மாவட்டங்களில் காவிரிப் பொய்த்துப்போனதால் அரசியல் வாதிகளும், அதிகாரிகளும் நெல்லுக்கு மாற்றுப்பயிரை பயிரிடுங்கள் என்று சொன்னதை நம்பி தென்னை, தேக்கு பயிரிட்டனர்.
    தென்னையும், தேக்கு வும் நீண்ட காலத்துக்கு பராமரிக்க வேண்டியப் பண பயிர்கள். அதிலும் தென்னை 50 ஆண்டுகளுக்கு மேல் தொடர் விளைச்சலைக் கொடுக்கக்கூடிய பயிர்.
    தென்னையும் , தேக்கும் பலத்தப் புயலடித்தால் வேரோடு சாயும் தன்மைக் கொண்டவை. அந்த மரங்களின் வேர்ப்பிடிப்புத் தன்மை அப்படிபட்டது. இப்பயிரகள் டெல்டா மாவட்டத்துக்கு ஏற்றப் பயிர்களே அல்ல. இதை கடலோர டெல்டா மாவட்டங்களில் பயிர் செய்ய சொன்ன அறிவாளிகள் தான் இன்றைய அவலத்திற்கெல்லாம் காரணம்.

    சுழியம் (0) [Zero] என்ற எண்ணை முதலில் அறிந்திருந்த தமிழர்கள்: `பரிபாடல்` பகரும் சான்று :::

    இலங்கநாதன் குகநாதன் : சுழியம் (0) [Zero] என்ற எண்ணை முதன்முதலில்
    அறிந்திருந்த தமிழர்கள்:
    `பரிபாடல்` பகரும் சான்று ::::
    0 (Zero ) இன் பயன்பாட்டினை முதன்முதலில் அறிந்திருந்தவர்கள் யார் என்ற கேள்விக்கு அராபியர்கள், ஆரியப்பட்டர், பிரம்ம குப்தா எனப் பல பதில்களை நீங்கள் அறிந்திருக்கக்கூடும். இவர்கள் எல்லோரிற்கும் முன்னரே தமிழர்கள் அந்த ` 0` எண்ணினை அறிந்திருந்தார்கள் என்றால் நீங்கள் வியப்படையக்கூடும். முதலில் பூச்சியம், சூனியம் என்பன வடமொழிச் சொற்கள்(தமிழல்ல). அதற்கான தமிழ்ச்சொல் சுழியம்/ பாழ் ஆகும். இங்கு நாங்கள் கவனத்தில் எடுக்கப்போகும் சொல் #பாழ் என்ற தமிழ்ச்சொல்லே ஆகும். பொதுவாக இன்றும் பேச்சு வழக்கில் “பாழாய்ப் போச்சுது” என்பது `ஒன்றுமில்லாமல் போய்விட்டது` என்பதனைக் குறிக்கும். அதேபோன்று `பாழ் நிலம்` , `பாழ் கிணறு` என்ற சொற் தொடர்களையும் கேள்விப்பட்டிருப்பீர்கள். இங்கெல்லாம் பாழ் = ஒன்றுமில்லை/ சுழியம் என்ற பொருளிலேயே பயன்படுத்தப்படுகின்றது. “பாழாய்ப் போக” என்ற வஞ்சினச் சொல் இன்றும் வழக்கில் உள்ளது. எனவேதான் `0` என்ற எண்ணைக் குறிக்க முதன்முதலில் பாழ் என்ற தமிழ்ச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது என்கின்றார்கள். இதற்கான சான்று பரிபாடலிலேயே உள்ளது (பின்னர் பார்ப்போம்).

    பாகற்காய் ரசம் கேன்சரை உருவாக்கும் செல்களை கொல்லும் சக்தியை கொண்டது

    Renganathan Narayanan‎  : சீனாவில் பெய்ஜிங் நகரில் உள்ள இராணுவ பொது அதனை உறுதிப்படுத்தியுள்ளார். மேற்படி விவரத்தினை ஒவ்வொருவரும் குறைந்தது 10 நபருக்கேனும் அனுப்பினால் மிக வேகமாக பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கும் நபர்களுக்கு உதவியாக இருக்கும்.
    மருத்துவப் பிரிவில் உள்ள மருத்துவ பேராசிரியர் சென் ஷூய் ரென் அவர்கள்கள் கேன்சருக்கான புதிய இயற்கை மருந்தினை கண்டறிந்து
    பாகற்காயை சுடுதண்ணிரில் போட்டுக் குடிக்க அது நமக்கு உதவி செய்யும். நீங்கள் எவ்வளவு முக்கியமான வேலையாக இருந்தாலும் பரவாயில்லை தயவு செய்து இதை படிக்கவும்.
    சூடான பாகற்காய் சுடுநீர் கேன்சரை உருவாக்கும் செல்களை கொல்லும் சக்தியை கொண்டது
    பாகற்காயினை எடுத்து 2 -3 மெல்லிய துண்டுகளாக நறுக்கி ஒரு டம்ளரில் போட்டு அதில் சூடான நீரை ஊற்ற வேண்டும். அந்த சூடான நீர் ALKALINE எனப்படும் காரத்தன்மை கொண்ட நீராக மாறிவிடும். அந்த தண்ணீரை தினமும் குடிக்க வேண்டும். நோயினால் பாதிக்கப்பட்டவருக்கு மிக மிக உதவியுள்ளதாக இருக்கும்

    மீண்டும் மக்கள் நலக்கூட்டணி?... ஆட்சியில் அதிகார பகிர்வு சாத்தியமா?

    ஷண்முகசுந்தரம் சிக்கல் - :  மக்கள் நலக் கூட்டணியை விடுதலைச் சிறுத்தைகள் மீண்டும் தொடங்கினால் என்ன ஆகும்? என்று சில விசிகவினர் சொல்வது கொஞ்சம் பலமாகவே கேட்கிறது. சுருக்கமாகச் சொல்வதென்றால் அது விசிக முன் வைக்கிற அதிகாரப் பகிர்வு என்ற முன்னெடுப்பைக் குழி தோண்டிப் புதைப்பதாக அமையும் என்பது தான் கசப்பான உண்மை.
    கடந்த தேர்தலில் விசிக 25 இடங்களில் பெற்ற 0.77 சத வாக்குகளை 234 தொகுதிகளுக்குக் கணக்கிட்டால் 7 - 7.25 சத வாக்குகளைப் பெற்றிருக்கக் கூடும். ஆனால் இந்த எளிய கணக்கீட்டையே கள நிலவரமும் பிரதிபலிக்கும் என்று யாராலும் அறுதியிட்டுக் கூற இயலாது. இந்த 0.77 சதம் வாக்கு என்பதும் கூட மக்கள் நலக் கூட்டணி என்ற அணிச் சேர்க்கையின் விளைவு மட்டுமே. விசிகவின் அணிச் சேர்க்கை வேறு விதமாக அமைந்திருந்தால் அது அதிகரிக்கவும் செய்திருக்கலாம் அல்லது குறையவும் வாய்ப்பு இருந்திருக்கலாம்.
    ஆனால், இதில் அடிப்படைத் தர்கம் என்னவென்றால் அதிகபட்சக் கணக்கீடான 7.25% வாக்குகள் கூடவிசிக தலைமையில் ஆட்சியமைக்கப் போதுமானல்ல என்பதே! இந்த நிதர்சனம் மற்றவர்களை விட நாங்கள் மீண்டும் மக்கள் நலக் கூட்டணியைத் தொடங்கினால் என்ன ஆகும் தெரியுமா! என்பவர்களுக்கே மிகச் சிறப்பாகத் தெரியும்.

    பைக்கில் அரிவாளால் வீசியபடி சென்ற ரவுடி.. 7 வயது சிறுவனுக்கு தலையில் வெட்டு.. திகிலில் சென்னை!

     இளைஞர்கள் போதை மயங்கி சரிந்தான்tamil.oneindia.com - hemavandhana : அரிவாளால் வீசியபடி சென்ற ரவுடி, 7 வயது சிறுவனுக்கு வெட்டு. சென்னை: தெருவில் நடந்து சென்ற 7 வயது சிறுவனை பைக்கில் வந்த 2 பேர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் வலியால் அலறி துடித்த சிறுவன் அங்கேயே மயங்கி விழுந்தான்.
     பின் பக்க மண்டைசென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் கார்த்திக். இவர் டெய்லராக உள்ளார். இவருக்கு திருணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன் பெயர் சந்துரு. 7 வயதாகிறது. அங்குள்ள பள்ளி ஒன்றில் 2-ம் வகுப்பு படிக்கிறான்.
    மழைக்காக சென்னையில் பள்ளிகள் நேற்று லீவு விடப்பட்டிருந்தது. மேலும் சந்துருவுக்கு உடம்பு சரியில்லை என்பதால், அவனது தாய்மாமா, ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போய் மீண்டும் வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது தெருவில் நடந்து வரும்போது. அந்த வழியாக மின்னல் வேகத்தில் இரண்டு பேர் பைக்கில் வந்தார்கள்.

    அந்தமான் : ஜீசஸை அறிமுகம் செய்யச் சென்ற ஜான் ஆலன் சாவ் பழங்குடிகளால் ...

    ஜான் ஆலன் சாவ்
    வினவு :நவீன கொலம்பஸாக தன்னை கருதி பழங்குடிகளுக்கு ‘ஜீசஸை அறிமுகம்’ செய்யச் சென்ற ஜான் ஆலன் சாவ் என்ற அமெரிக்கர், அந்தமான் நிகோபர் தீவுகளில் உள்ள பழங்குடிகளால் கொல்லப்பட்டிருக்கிறார்.
    சுமார் 30 ஆயிரம் வருடங்களுக்கு மேலாக அந்தமானின் வடக்கு செண்டினல் தீவில் வசிக்கும் செண்டினல் பழங்குடி மக்கள், வெளியுலக தொடர்பை மறுத்து வாழ்ந்து வருகின்றனர்.  வெளி ஆட்கள் யாரேனும் தீவுக்குள் ஊடுருவினால் அவர்களை அம்பெய்து கொல்வது பழங்குடிகளின் வழக்கம்.< பிரிட்டீஷ் காலனியாளர்கள் நான்கு செண்டினல் பழங்குடிகளை கடத்தி, அவர்களிடம் மரபணு ஆய்வு செய்திருக்கிறார்கள். அதன்பின் 1967-ம் ஆண்டு மானுடவியல் ஆய்வாளர் செண்டினல் பழங்குடிகளை சந்தித்துள்ளார். அதன்பின், வெளியுலகத்துடன் பழங்குடிகள் எவ்வித தொடர்பையும் வைத்துக்கொள்ளவில்லை.

    வெள்ளி, 23 நவம்பர், 2018

    காபறேட்டுகளை விட அதிக செலவில் விளம்பரங்கள் செய்யும் பாஜக ... உலக சாதனை


    Swathi K : உலக "அரசியல்" வரலாற்றில் முதல் முறையாக...
    தொலைக்காட்சியில் கமர்சியல் விளம்பரங்களை விட அதிக அளவில் விளம்பரம் செய்த ஒரே கட்சி என்ற பெருமையை பிஜேபி பெறுகிறது!
    5 மாநிலங்களில் தேர்தல் நடப்பதால், நவம்பர் 10-16 (7 நாட்கள்) மட்டும் 22,099 முறை பிஜேபி விளம்பரம் டிவி'யில் வந்துள்ளது..
    சராசரியாக ஒரு நிமிடத்திற்கு 2.3 விளம்பரங்கள்.. தேர்தல் நடக்கும் மாநிலத்தில் டிவியில் எந்த சேனல் மாற்றினாலும் பிஜேபி விளம்பரங்கள் தான்..
    மாநில தேர்தலுக்கே இவ்வளவு செலவு செய்கிறது என்றால்..
    2019ம் ஆண்டு தேர்தலுக்கு???
    சரி இல்லாத சரக்கை எப்படியாவது போலி விளம்பரம்கள் மூலம் விற்றுவிட முடிவு.. - சுவாதி

    பொன் ராதாகிருஷ்ணனை நிறுத்திய கேரள காவல்துறை எஸ்.பி. யதீஸ் சந்திராவின் கடந்த காலம் ..

    ppnakkheeran.in/author/tarivazhagan": ‘யதீஷ் சந்திரா’ என்பதுதான் அந்த காவல்துறை அதிகாரியின் பெயர். இவருக்கும், மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனுக்கும் இடையே நடந்த வாக்குவாதம் சமூக ஊடகங்களிலும், இளையதலைமுறையினர் மத்தியிலும் அதிகமாக பேசு பொருளாக மாறியுள்ளது. யதீஷ் சந்திரா இதுபோல் நடந்துகொள்வதும், அவரைப் பற்றி பொதுவெளியில்
    ppபேசப்படுவதும் இது முதல் முறை அல்ல. இவர் பிறந்து, வளர்ந்தது எல்லாம் கர்நாடகா  மாநிலம். 2010-ம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில், அகில இந்திய அளவில் 211-ம் இடம் பிடித்தார். 2015-ம் ஆண்டு கேரள மாநிலத்தில் பணியமர்த்தப்பட்டார். இவர் பொறுப்பேற்றிருந்தபோது கேரளாவில் காங்கிரஸ் ஆட்சி நடைப்பெற்றுக்கொண்டிருந்தது. கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்கட்சியாக இருந்தது. அப்போது கம்யூனிஸ்ட் கட்சினர், ஆளும் காங்கிரஸ் கட்சினருக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள். அப்போது தடியடி நடத்தி கூட்டத்தை களைத்து பெரும் சர்ச்சையில் சிக்கினார் யதீஷ் சந்திரா.

    BBC :ராஜபக்ஷ தரப்பினர் வெளிநடப்பு - இலங்கை நாடாளுமன்றத்தில் மீண்டும் கூச்சல் .. விடியோ


    BBC : மகிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கையாள்வதற்கு நியமிக்கப்படும் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவிற்கான பெயர்ப் பட்டியல் 121 வாக்குகளால் இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நிறைவேற்றப்பட்டது. இன்று காலை 10.30 மணிக்கு இலங்கை நாடாளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கமைய நாடாளுமன்றத் தெரிவுக் குழுவை அமைப்பதாகக் கூறிய சபாநாயகர் தெரிவுக் குழுவிற்கு கிடைத்துள்ள பெயர் பட்டியலை சபையில் வாசித்தார்.
    மகிந்த ராஜபக்ஷ அங்கம் வகிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக, தினேஸ் குணவர்தன, எஸ்.பீ.திஸாநாயக்க, நிமல் சிறிபால டி சில்வா, மகிந்த சமரசிங்க, விமல் வீரவங்ச ஆகிய ஐவர் பெயரிடப்பட்டிருந்தனர். ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக லக்ஸ்மன் கிரியெல்ல, மனோ கணேசன், ரிசாட் பதியூதீன், ரவூப் ஹக்கீம், சம்பிக்க ரணவக்க ஆகியோர் பெயரிடப்பட்டிருந்தனர். இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பாக மாவை சேனாதிராஜாவும், ஜே.வி.பி. சார்பாக விஜித்த ஹேரத்தும் பெயரிடப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்தார்.

    சேதங்கள் முழுமையாக மதிப்பீடு செய்யப்படவில்லை!

    சேதங்கள் முழுமையாக மதிப்பீடு செய்யப்படவில்லை!மின்னம்பலம் :கஜா புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் ஏற்பட்ட சேதத்தை முழுமையாக மதிப்பீடுசெய்து உரிய இழப்பீடு வழங்க கோரிய மனுவுக்கு பதிலளிக்கும் படி, மத்திய -மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    கஜா புயல் தாக்கியதில் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை
    மாவட்டங்கள் பலத்த சேதத்தை சந்தித்தன.இந்த மாவட்டங்களில் உள்ள பல கிராமங்களில் சேதங்கள் மதிப்பீடு செய்யப்படவில்லை எனவும், அவற்றைமதிப்பீடு செய்யக் கோரியும் சென்னை கொரட்டூரைச் சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்தார்.
    அந்த மனுவில், புயல் காரணமாக தஞ்சையில் 83 கிராமங்களும், புதுக்கோட்டையில் 43 கிராமங்களும், நாகையில்87 கிராமங்களும் பெருத்த சேதத்தை சந்தித்துள்ளன எனக் கூறியுள்ளார்.

    புயல் பாதிப்பு .. மத்திய அரசின் கள்ள மௌனத்தை திசை திருப்ப பொன் ராதாகிருஷ்ணன் சபரிமலை வன்முறை .. மாக்சிஸ்ட் கம்யுனிஸ் கட்சி கடும் கண்டனம்


    THE HINDU TAMIL< : கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசிடம் பேசி உரிய நிவாரணம் பெற்றுத்தராமல் மத்திய அரசின்
    பராமுகத்தை திசைத்திருப்ப பொன் ராதாகிருஷ்ணன் வன்முறையை தூண்டிவிடுகிறார் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
    இதுகுறித்து மார்க்சிஸ்ட் மாநிலச்செயலாளர் கே. பாலகிருஷ்ணன் இன்று விடுத்துள்ள அறிக்கை: “கஜா புயலின் காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்கள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. மக்கள் குடிநீருக்கும், உணவுக்கும், மின்சாரத்திற்கும் வழியின்றி தவித்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பொருளாகவும், பணமாகவும் நேரடி நிவாரணப்பணிகளிலும் உதவிக்கரம் நீட்டி வருகிறார்கள்.
    ஆனால், தமிழகத்தில் உள்ள ஒரே மத்திய அமைச்சரான பொன்.ராதாகிருஷ்ணன் பாதிப்புக்குள்ளான பகுதிக்கு உடனடியாக செல்லவில்லை. ஏற்கெனவே, ஒக்கி புயலால் கன்னியாகுமரி மாவட்டமே சிதைந்து சின்னாபின்னமாகி மக்கள் சொல்லொணா கொடுமைகளுக்கு ஆளானபோது இதே பொன்.ராதாகிருஷ்ணன் சொந்த தொகுதி மக்களுக்கு ஆறுதல் சொல்வதற்கு மாறாக, வெளிநாடுகளில் சுற்றுலாப்பயணத்தை முடித்து பல நாட்கள் கழித்த பிறகே  திரும்பி வந்ததை குமரி மாவட்ட மக்கள் இன்றும் மறக்கவில்லை.

    கஜா’ சேதங்களை ஆய்வு செய்ய ‘மத்திய குழு’ தமிழகம் வருகை!

    ‘கஜா’ சேதங்களை ஆய்வு செய்ய ‘மத்திய குழு’ தமிழகம் வருகை!ndtv- vinoth ravi : ‘கஜா’ சேதங்களை ஆய்வு செய்ய ‘மத்திய குழு’ தமிழகம் வருகை!" type="image/webp"> சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தைப் புரட்டிப் போட்ட ‘கஜா' புயலினால் ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்ய தமிழகம் வருகிறது மத்திய குழு. அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தின் புயலால் பாதித்த பல்வேறு இடங்களுக்குச் சென்று பாதிப்புகளை பார்வையிட உள்ளது மத்திய குழு.
    நேற்று கஜா சேதங்கள் குறித்து விளக்கி நிவாரணம் பெறும் நோக்கில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லி சென்று சந்தித்தார். பிரதமருடனான சந்திப்புக்குப் பிறகு முதல்வர், ‘கஜா புயல் காரணமாக இதுவரை 12 மாவட்டங்களில் 63 பேர் உயிரிழந்துள்ளனர். கஜா புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்ச ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும். கஜா புயலால் 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன.
    கஜா புயல் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்ய விரைவில் மத்திய குழுவை தமிழகத்திற்கு அனுப்பி வைக்குமாறு பிரதமரிடத்தில் கோரினேன்.

    ராஜஸ்தான் ஆட்டுக்கு அவசியம் என்ன? ஒரு நாளைக்கு எட்டு கோடி ரூபாய் வியாபாரம் .......

     சிறப்புச் செய்தி: ஒரு பிரேக்கிங் நியூஸும் எட்டு கோடி ரூபாய் இழப்பும்!
    ஆரா - மின்னம்பலம் : கடந்த சனிக் கிழமை (நவம்பர் 17 ஆம் தேதி) பகல் பொழுதில் ஒரு பிரேக்கிங் நியூஸ் உண்மையிலேயே பலருக்கும் அதிர்ச்சியை அளித்தது.
    ‘சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து அனுப்பப்பட்ட 2 ஆயிரம் கிலோ நாய்க் கறி கைப்பற்றப்பட்டது” என்பதுதான் அந்தத் தகவல். அனைத்து செய்தித் தொலைக்காட்சிகளிலும், நாளிதழ்களிலும், இணைய ஊடகங்களிலும் இந்தச் செய்தி பிரதான இடம் பிடித்தது. சென்னை மக்களிடையே இது பெரும் பீதியையும் ஏற்படுத்தியது. நாய்க் கறி கைப்பற்றப்பட்டது என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாக செய்திகள் வெளியானதால் பலரும் கறி சாப்பிடவே தயங்கினர். சமூக ஊடகங்களில் இதை வைத்து பல்வேறு தகவல்கள் பரப்பப்பட்டன.

    நிர்பயா: மரண தண்டனையை நிறைவேற்றுமாறு மனு!

    நிர்பயா: மரண தண்டனையை நிறைவேற்றுமாறு மனு!மின்னம்பலம் : நிர்பயா பாலியல் வல்லுறவுக் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 4 குற்றவாளிகளுக்கும் உடனடியாகத் தண்டனையை நிறைவேற்றக் கோரி, நேற்று உச்ச நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், பாலியல் வல்லுறவுக் கொலை வழக்கில் கீழமை நீதிமன்றத்தால் மரண தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளிக்கு எட்டு மாதங்களுக்குள் தண்டனை நிறைவேற்ற வழிவகை செய்ய வேண்டுமென்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    2012ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி நள்ளிரவில், டெல்லி மாநகரப் பேருந்தொன்றில் 23 வயது மருத்துவ மாணவி ஒருவர் ஆறு நபர்களால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டார். அவருடன் இருந்த ஆண் நண்பரும் கடுமையாகத் தாக்கப்பட்டார். மிக மோசமான கொலைத் தாக்குதலுக்கு ஆளான அந்த பெண்ணும் அவரது நண்பரும், அந்த நபர்களால் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டனர்.

    நிவாரண பொருட்களை அதிமுகவினர் வழிமறித்து கைப்பபற்றி .. புதுகோட்டையில் பாதிக்கப்பட்ட ..

    புதுக்கோட்டையில் பாதிக்கப்பட்டவர்களுக்காக கொண்டுவந்த நிவாரணப் பொருட்களை கைப்பற்ற முயற்சி: நாகப்பட்டினம்  அருகே வட்டாட்சியரை தாக்கி பொருட்கள் கொள்ளை; திருவாரூரிலும் பறிமுதல் 
    tamil.thehindu.com : புதுக்கோட்டை ஈரோட்டில் இருந்து புதுக்கோட் டைக்கு வந்த நிவாரண பொருட் களை அதிமுக பிரமுகர் மடக்கி கைப்பற்ற முயன்றதைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டது தொடர்பாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ‘கஜா’ புயலின் கோரதாண்ட வத்தால் புதுக்கோட்டை மாவட் டத்தில் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் இந்த மக்களுக்கு ஈரோட்டில் உள்ள 'ஈரோடு சிறகு கள்' எனும் சமூக சேவை அமைப்பு, நேற்று முன்தினம் புதுக்கோட்டை கொண்டுவந்த நிவாரணப் பொருட் களை அதிமுக பிரமுகர் ஒருவர் லாரியோடு மடக்கி கைப்பற்ற முயன்றதைக் கண்டித்து போராட் டத்தில் ஈடுபட்டது தொடர்பாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

    சபரிமலையில் 144 தடை உத்தரவு - வரும் 26-ம் தேதி வரை நீட்டிப்பு

    சபரிமலையில் 144 தடை உத்தரவு - வரும் 26-ம் தேதி வரை நீட்டிப்பு தினத்தந்தி :  சபரிமலையில் 144 தடை உத்தரவு மேலும் 4 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. சபரிமலை, சபரிமலை அய்யப்பன் கோவிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி இல்லை என்ற நிலையை சுப்ரீம் கோர்ட்டு மாற்றி அமைத்து தீர்ப்பு வழங்கியது. 5 நீதிபதிகள் அமர்வில் ஒரே ஒரு பெண் நீதிபதியான இந்து மல்கோத்ரா தவிர்த்து எஞ்சிய 4 பேரும், சபரிமலை அய்யப்பன் கோவிலில் எல்லா வயது பெண்களும் செல்ல அனுமதித்து இந்த தீர்ப்பை அளித்தனர். இந்த தீர்ப்பு ஒரு சில பெண் அமைப்புகளால் வரவேற்கப்பட்டாலும், அய்யப்ப பக்தர் அமைப்புகள், சில அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றன. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளன.

    வியாழன், 22 நவம்பர், 2018

    பாகிஸ்தானுக்கு ரூ.11,950 கோடி நிதி உதவி நிறுத்தம் - அமெரிக்கா அறிவிப்பு .. பயங்கரவாதத்தை ஒடுக்க நடவடிக்கை இல்லை


    தினத்தந்தி : பயங்கரவாதத்தை ஒடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், பாகிஸ்தானுக்கு ரூ.11 ஆயிரத்து 950 கோடி நிதி உதவியை அமெரிக்கா நிறுத்தி விட்டது. வாஷிங்டன், உலகளாவிய பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் அமெரிக்காவின் கூட்டாளியாக பாகிஸ்தான் உள்ளது. இதற்காக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஆண்டு தோறும் நிதி உதவி அளித்து வந்தது.
    ஆனால் அந்த நிதியை பாகிஸ்தான் பெற்றுக்கொண்டு, தன் சொந்த நாட்டில் உள்ள தலீபான், லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது, ஹக்கானி நெட்வொர்க் அமைப்பினர், அல்கொய்தா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளை பாரபட்சமின்றி ஒடுக்கத்தவறி விட்டது என்பது அமெரிக்காவின் கருத்தாக உள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் அரசை பல முறை அமெரிக்கா வலியுறுத்தியும் கூட, அந்த நாடு நடவடிக்கை எடுப்பதில்லை என்பதில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் கடும் அதிருப்தியில் உள்ளது.

    ஆரியம் விரிக்கும் மத - சாதி வலையில் ஈழத் தமிழர்கள் சிக்கவேண்டாம்: ஆசிரயர் கி.வீரமணி

    tamilthehindu :ஆரியம் விரிக்கும் மத - சாதி வலையில் ஈழத்தமிழர்கள் சிக்கவேண்டாம் என,
    திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
    இதுதொடர்பாக கி.வீரமணி இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில்,
     "ஈழத் தமிழர்கள் என்றும் திராவிட இனத்தின் தொப்புள்கொடி உறவுகள்.  
    ஈழத் தமிழர்கள் மத்தியில் ஆரியம்!
    ஈழத் தமிழர்கள் மத்தியில் ஆரியர்கள் அதிகம் புகாவிட்டாலும் ஆரியம் புகுந்து சாதியும், பக்தி என்ற பெயரில் மூடநம்பிக்கைகளும் அவர்களிடம் உள்ளே புகுந்தது உண்மை. இன்னும் இவ்வளவு பெரிய கொடுமை, பேரிழப்புகள், இனப்படுகொலைகள் நடந்தும் கூட, வேறு வழியின்றி புலம் பெயர்ந்து வாழும் நிலையிலும், சாதியாலும், பல்வேறு மூடநம்பிக்கை மீது, இந்து மதவெறி சாமியார்கள் மீது வைத்துள்ள அளவற்ற மூடப்பக்தியாலும் இழக்கக்கூடாத பகுத்தறிவு - தன்மானத்தை அவர்கள் இழந்துவருவது வேதனை அளிக்கிறது. அவர்கள்பால் உண்மையான அக்கறையும், கவலையும் உள்ளது. இதனை வெளிப்படுத்தவேண்டிய தருணம் இதுவாகிவிட்டது.
    ஈழப் போராளிகளுக்குப் பாஜக சூட்டிய பெயர்கள் என்ன?
    அவர்களின் வாழ்வுரிமைக்காக உயிர்த் தியாகங்கள், சிறைவாசங்கள் போன்ற பலவற்றையும் இன்முகத்தோடு ஏற்றும் இன்னும் அவர்களுக்கு விடியல் வரவில்லையே என்று இன உணர்வு, மொழி உணர்வுடனும், மனிதநேய உணர்வாலும், பண்பாட்டுப் பாதுகாப்பு உந்துதலாலும் இன்றும் ஏக்கத்தில் உள்ள உறவுகள் திராவிட - தமிழ் உணர்வாளர்கள். இலங்கையில் உள்ள கதிர்காம முருகன்கள் - அவர்கள் வணங்கும் இந்துக் கடவுள் எந்த வகையில் உதவியது அவர்களுக்கு?
    அங்கே கொன்றழிக்கப்படுபவர்கள் நம் இந்துக்கள்தான் என்ற உணர்வு இங்குள்ள ஆர்எஸ்எஸ், பாஜக, இந்து முன்னணி காவிகள் வடபுலத்தவர்களுக்கு, சமஸ்கிருத ஆதிக்கவாதிகளுக்கு - விடுதலைப் போராளி களத்தில் நின்ற போதும் சரி, பிறகும் இன்றுவரையில் உண்டா? அவர்கள் ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் போராளிகளுக்குச் சூட்டிய பெயர் என்ன தெரியுமா?
    'தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், தமிழ் மொழி வெறியர்கள், தமிழ் வெறியர்கள்'

    ருக்மாபாய் ராவ்த் ... ஆணாதிக்கத்துக்கு எதிராக போராடி வென்ற ஒரிஜனல் புதுமை பெண்.. பிறந்த தினம்!

    Devi Somasundaram :   Rukmabai Raut .. கேரள பெண் அழகா, லெக்கின்ஸ் போடுவது,
    பாரதியார் பாட்டுக்கு படுத்துகலாமா என்று பேசுவது தான் புரட்சி என்று நினைத்து கொண்டிருக்கும் நம் தலைமுறை உண்மையில் புரட்சி என்றால் என்ன என்று அறியனும் ..
    நவம்பர் 22 ,1864 ல் மகராஷ்டிராவின் மராத்தி குடும்பத்தில் பிறந்தவர் ருக்மா. அப்பா ஜனார்த்தனன் பாண்டுரங்கன் . ஆசாரி குடும்பத்தை சேர்ந்த சூத்ர வகுப்பை சேர்ந்தவர்..அம்மா ஜெயந்திபாய் ..ஒரளவு வசதியான குடும்பம். அப்பா சிறு வயதில் இறந்து போக அம்மா ஜெயந்தி குடும்ப சொத்துகளை மகள் ருக்மா பேரில் எழுதி வைத்துவிட்டு மனைவியை இழந்த சக்ராம் அர்ஜுன் என்ற மருத்துவரை திருமணம் செய்து கொள்கிறார்.
    11 வயதில் அந்த கால முறைபடி தன்னை விட 9 வயது மூத்த தாதாஜி பிகாஜி என்பவருக்கு ருக்மா திருமணம் செய்து வைக்க படுகிறார். ஆனாலும் கணவன் வீட்டுக்கு போகாமல் ஸ்டெப் பாதர் அர்ஜுன், தாய் ஆகியோருடன் வசித்து வருகிறார்.
    அருகில் இருந்த கிறிஸ்துவ மிஷன் லைப்ரரியில் வாசிப்பு. அம்மாவும் பெண்ணும் ஆரிய சமாஜ கூட்டங்களுக்கும் போகிறவர்கள். ருக்மாவின் மாமியார் இறந்து போக தாதாஜி ருக்மாவை தன்னுடன் வாழ அழைக்கிறார். ருக்மா தனக்கு விருப்பமில்லை என்று மறுக்கிறார். அவரது இரண்டாவது தந்தை அர்ஜுன் ருக்மாவின் கருத்தை ஆதரிக்கிறார்.

    கஜா புயல் நிதிக்காக அதிமுக எம்.பிக்கள், எம்எல்ஏக்கள் ஒருமாத சம்பளம் வழங்குவர் - முதலமைச்சர் பழனிசாமி

    கஜா புயல் நிதிக்காக அதிமுக எம்.பிக்கள், எம்எல்ஏக்கள் ஒருமாத சம்பளம் வழங்குவர் - முதலமைச்சர் பழனிசாமிமாலைமலர் : அதிமுக எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏக்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை கஜா புயல் நிவாரண நிதிக்கு வழங்குவர் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார் புதுடெல்லி: தமிழகத்தில் ஏற்பட்ட கஜா புயல் தாக்கத்தால் பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளன. அந்தந்த மாவட்டங்களில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.< இதற்கிடையே, கஜா புயல் பாதித்த இடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்தார். ஆய்வு தொடர்பாக முதல் கட்ட அறிக்கையை தயாரித்துக் கொண்டு இன்று காலை டெல்லி சென்றார். அங்கு அவர் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்தார். அப்போது கஜா புயல் பாதிப்புகள் குறித்து விளக்கினார்.

    ஆட்டுக்கறிய நாய்க்கறின்னு கூவுனவன் எவன்டா ? வினவு .காம்

    ஜோத்பூரிலிருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்ட 1000 கிலோ நாய்க்கறி பறிமுதல்” என நவம்பர் 17 அன்று ஊடகங்கள் பரபரப்பைக் கிளப்பின. சில ஊடகங்கள் 1000 கிலோ என்றும் வேறு சில 2000 கிலோ நாய்க்கறி என்றும் மனம் போன போக்கில் செய்திகளை வெளியிட்டன.
    வழக்கமாக போலீசு கூறும் கட்டுக்கதைகளை அப்படியே ’க்’, ’ச்’ விடாமல் வெளியிடும் ஊடகங்களுக்கு, இது போன்ற நடுத்தர வர்க்கத்தை நடுங்கச் செய்யும் பரபரப்புச் செய்தி என்றால் சும்மாவா? அதுவும் சைவ உணவு வெறியர்களாக அசைவத்தின் மீது வன்மம் கக்கும் பார்ப்பன ஊடகங்களுக்கு சொல்லவா வேண்டும்? இவ்விவகாரம் ஊடகங்களில் இருந்து உடனடியாக சமூக வலைத்தளங்களுக்குப் பரவி அங்கும் நாய்க்கறியே பேச்சானது. மீம் கிரியேட்டர்கள் நாய்க்கறிக்கும் மீம்களை தட்டிவிடத் துவங்கினர். கூடுதலாக வாட்சப் வதந்திகளும் பஞ்சமில்லாமல் பறந்தன. பார்ப்பனிய கார்ப்பரேட் ஊடகங்கள்தான் வாட்சப் வதந்திகளையும் உருவாக்குகின்றன என்பது இங்கேயும் நிரூபிக்கப்பட்டது.

    மதம் பரப்ப சென்ற அமெரிக்கரை அம்பு எய்து கொன்ற அந்தமான் தீவு பழம்குடி மக்கள்!!


    மதம் பரப்ப சென்ற அமெரிக்கரை அம்பு எய்து கொன்ற அந்தமான் தீவு பழம்குடி மக்கள்!!tamiloneindea : அந்தமான் சென்டினல் தீவில் தடை செய்யப்பட்ட பழங்குடியினர் பகுதிக்கு படகு மூலம் சென்ற அமெரிக்கர் ஜான் ஆலன் சாவ் (26) அங்கு வாழும் பழங்குடியினரால் அம்பு எய்து கொல்லப்பட்டார்.
    அவர் ஒரு மிஷனரி. “ஜான் ஆலனின் நோக்கம் அத்தீவின் பழங்குடியினரிடம் சுவிசேஷத்தை கொண்டு செல்வதுதான்” என்று அவரது பயணத்தின் கடைசி நாள்களில் அவருடன் தொடர்பில் இருந்த மற்றொரு மிஷனரி கூறியுள்ளார்.
    ஜான் ஆலனை அந்த தீவுக்கு அழைத்துச் சென்றதாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    இன்ஸ்டாகிராமில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட ஜான் ஆலனின் குடும்பம், அந்தப் பழங்குடியினரை மன்னித்துவிடுவதாக அறிவித்துள்ளது.
    “ஜான் ஆலன் சாவ் கடவுளையும் வாழ்க்கையையும் நேசித்தார். துன்பத்தில் இருப்பவர்களுக்கு உதவினார்.

    விவசாயி தற்கொலை.. அரசு அறிவித்த நிவாரணத்தால் மனமுடைந்தார்!

    o
    onakkheeran.in - பகத்சிங் : தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகில் உள்ள சோழகன்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சுந்தராசன்(வயது 57).  ஐந்து ஏக்கரில் நடப்பட்டிருந்த தென்னை மரங்கள் கஜாவின் கோர தாண்டவத்திற்கு தப்பிக்கவில்லை.  இதனால் மனமுடைந்த விவசாயி விரக்தியின் உச்சத்தில் இருந்த போது தமிழக அரசு அறிவித்த நிவாரணம் மேலும் ரணமாக்கிவிட்டது. சில நாட்களுக்கு முன்பு தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்த போது அரசு நிவாரணம் போதாது என்று நொந்துகொண்டார். அதன் பிறகு வீட்டிற்கும் வரவில்லை. மகன் போய் அழைத்தும் வரவில்லை.இந்த நிலையில் தான் விவசாயி சுந்தரராசன் அங்குள்ள குளத்துக்கரையில்  விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    விபரம் அறிந்த சிபிஎம் மகேந்திரன் உள்ளிட்ட தோழர்கள் விவசாயி சுந்தரராசன் குடும்பத்திற்கு ஆறுதல் சொன்னதுடன்.. தமிழக அரசு அறிவித்த குறைவான நிவாரணமே சுந்தரராசனை கொன்றுவிட்டது. அதனால் அவரது குடும்பத்திற்கு ரூ 25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். இனிமேலாவது தென்னை மற்றும் பலா போன்ற மரங்கள் பயிர்களுக்கு சரியான நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்

    கஜா புயல் பாதிப்பு: தமிழக அரசின் நிவாரணப் பணிகள் என்ன?- அறிக்கை கேட்கிறது உயர் நீதிமன்றம்

    tamilthehindu : கஜா புயல் பாதித்த பகுதிகளில் தமிழக அரசு மேற்கொண்டு வரும் நிவாரணப் பணிகள் குறித்த விரிவான அறிக்கையை நவம்பர் 29-ம் தேதி தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆஜராகி கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக அரசு நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் சங்கரசுப்பு குறுக்கிட்டு அரசு மேற்கொள்ளும் பணிகளின் பலன் மக்களைச் சென்றடையவில்லை எனத் தெரிவித்தார்.
    இரு தரப்பு விளக்கத்தையும் ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தமிழக அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை நவம்பர் 29-ம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
    முன்னதாக, நவம்பர் 16-ம் தேதி நாகை வேதாரண்யம் அருகே கஜா புயல் கரையைக் கடந்தது. இதனால் நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 12 மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்கள் 30 ஆண்டுகளில் இல்லாத பேரழிவைச் சந்தித்தன.

    பிரசன்னாவை பேசவைத்த ‘மீம்’!

    மின்னம்பலம் : மீம் என்றாலே பயப்படும் அளவுக்கு சினிமா துறையை நடுங்க வைத்து வருகின்றனர் மீம் கிரியேட்டர்ஸ். ஓரிரு இடங்களில் சுவாரசியமான மீம்கள் உருவாகினாலும், பல மீம்கள் ஒருவரைப் புகழவும், இன்னொருவரை இகழவுமே உருவாக்கப்படுகின்றன. இந்த கலாச்சாரப் புயலில் இன்று சிக்கியவர் பிரசன்னா.
    2011ஆம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் பிரசன்னா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட படத்தையும், 2018ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நிகழ்ச்சியை பிரசன்னா தொகுத்து வழங்கியதையும் ஒப்பிட்டு உருவாக்கப்பட்டது ஒரு மீம். அதனைப் பகிர்ந்து பல விதங்களிலும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்துவந்தனர் ட்விட்டர்வாசிகள். ஆனால், அவர்களில் ஒருவர் கொஞ்சம் அதிகபட்சமாகச் சென்றார்.

    ராஜஸ்தான் 2,100 கிலோ இறைச்சி நாய்க்கறி அல்ல, செம்மறி ஆட்டின் இறைச்சிதான்!

    செம்மறி ஆட்டிறைச்சிதான்!மின்னம்ப்லம் : ராஜஸ்தானிலிருந்து சென்னைக்குக் கொண்டுவரப்பட்ட 2,100 கிலோ இறைச்சி நாய்க்கறி அல்ல, அது செம்மறி ஆட்டின் இறைச்சிதான் என்று சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி உறுதி செய்துள்ளது.
    கடந்த 17ஆம் தேதியன்று ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரிலிருந்து சென்னை எழும்பூர் வந்த ரயிலில் 2,100 கிலோ இறைச்சியைப் பறிமுதல் செய்தனர் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள். தோற்றத்தில் அது நாய்கறி போன்றிருந்ததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. நாய்க்கறியா அல்லது கெட்டுப்போன ஆட்டிறைச்சியா என்ற சந்தேகத்தின் காரணமாக, அவற்றைச் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பரிசோதனைக்காக அனுப்பினர் உணவு பாதுகாப்புத் துறையினர்.

    11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

    11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்புதினத்தந்தி :தமிழகத்தின் உள்பகுதிகளில் நிலைகொண்டு இருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக 11 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறுவதால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் 2 நாட்களுக்கு பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை பெய்து வருகிறது.
    பிற மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. இப்போது உள்தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலைக்கொண்டு இருப்பதாகவும், இதனால் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
    தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழக கடலோர பகுதிகளில் நிலை கொண்டு இருந்த வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக தமிழகத்தின் உள்பகுதிகளில் நிலை கொண்டு இருக்கிறது.
    இது தொடர்ந்து வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வலு இழக்கக்கூடும். அடுத்து வரும் 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் வட தமிழகத்தில் பரவலாகவும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யும்.