சனி, 24 நவம்பர், 2018

பைக்கில் அரிவாளால் வீசியபடி சென்ற ரவுடி.. 7 வயது சிறுவனுக்கு தலையில் வெட்டு.. திகிலில் சென்னை!

 இளைஞர்கள் போதை மயங்கி சரிந்தான்tamil.oneindia.com - hemavandhana : அரிவாளால் வீசியபடி சென்ற ரவுடி, 7 வயது சிறுவனுக்கு வெட்டு. சென்னை: தெருவில் நடந்து சென்ற 7 வயது சிறுவனை பைக்கில் வந்த 2 பேர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் வலியால் அலறி துடித்த சிறுவன் அங்கேயே மயங்கி விழுந்தான்.
 பின் பக்க மண்டைசென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் கார்த்திக். இவர் டெய்லராக உள்ளார். இவருக்கு திருணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன் பெயர் சந்துரு. 7 வயதாகிறது. அங்குள்ள பள்ளி ஒன்றில் 2-ம் வகுப்பு படிக்கிறான்.
மழைக்காக சென்னையில் பள்ளிகள் நேற்று லீவு விடப்பட்டிருந்தது. மேலும் சந்துருவுக்கு உடம்பு சரியில்லை என்பதால், அவனது தாய்மாமா, ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போய் மீண்டும் வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது தெருவில் நடந்து வரும்போது. அந்த வழியாக மின்னல் வேகத்தில் இரண்டு பேர் பைக்கில் வந்தார்கள்.

பின் பக்க மண்டை அவர்கள் கையில் பெரிய அரிவாள் இருந்தது. அதனை வேகமாக சுழற்றியபடியே இருந்தனர். அரிவாளை சுழட்டும்போதெல்லாம் கத்தி கூச்சல் போட்டார்கள். இந்த சத்தத்தை கேட்டு சந்துரு திடீரென திரும்பினான்.
அப்போது சுழட்டி கொண்டே வந்த அரிவாள் சிறுவனின் பின் பக்க மண்டையிலும், தோள் பட்டையிலும் பலமாக விழுந்தது.
இதில் சிறுவனுக்கு ரத்தம் கொட்டியது. மயங்கி சரிந்தான் வலி தாங்க முடியாத சிறுவன் அலறி துடித்து மயங்கி அங்கேயே சரிந்து விழுந்தான்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த தாய் மாமா சந்துருவை உடனடியாக தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதித்தார். பிறகு மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.

 அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை நடந்து வருகிறது.நெற்றி, தோள்பட்டை, காது என்று பல இடங்களில் காயம் ஏற்பட்டு இருக்கிறது. சிறுவனின் தலை முடியை அகற்றி மொட்டை போட்டு விட்டு நெற்றியில் தையல் போடவேண்டும் என்று டாக்டர்கள் சொன்னார்களாம்.
இளைஞர்கள் போதை பைக்கில் வந்த இருவருமே ஃபுல் போதையில் இருந்திருக்கிறார்கள். சிறுவன் மயங்கி விழுந்ததும் அப்போதே தப்பி பைக்கில் பறந்து விட்டனர்.
ஆனால் அவர்கள் யார் என இதுவரை தெரியவில்லை. இதுகுறித்து தண்டையார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் சிசிடிவி கேமராவை வைத்து ஆய்வு செய்து வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக