வியாழன், 22 நவம்பர், 2018

ருக்மாபாய் ராவ்த் ... ஆணாதிக்கத்துக்கு எதிராக போராடி வென்ற ஒரிஜனல் புதுமை பெண்.. பிறந்த தினம்!

Devi Somasundaram :   Rukmabai Raut .. கேரள பெண் அழகா, லெக்கின்ஸ் போடுவது,
பாரதியார் பாட்டுக்கு படுத்துகலாமா என்று பேசுவது தான் புரட்சி என்று நினைத்து கொண்டிருக்கும் நம் தலைமுறை உண்மையில் புரட்சி என்றால் என்ன என்று அறியனும் ..
நவம்பர் 22 ,1864 ல் மகராஷ்டிராவின் மராத்தி குடும்பத்தில் பிறந்தவர் ருக்மா. அப்பா ஜனார்த்தனன் பாண்டுரங்கன் . ஆசாரி குடும்பத்தை சேர்ந்த சூத்ர வகுப்பை சேர்ந்தவர்..அம்மா ஜெயந்திபாய் ..ஒரளவு வசதியான குடும்பம். அப்பா சிறு வயதில் இறந்து போக அம்மா ஜெயந்தி குடும்ப சொத்துகளை மகள் ருக்மா பேரில் எழுதி வைத்துவிட்டு மனைவியை இழந்த சக்ராம் அர்ஜுன் என்ற மருத்துவரை திருமணம் செய்து கொள்கிறார்.
11 வயதில் அந்த கால முறைபடி தன்னை விட 9 வயது மூத்த தாதாஜி பிகாஜி என்பவருக்கு ருக்மா திருமணம் செய்து வைக்க படுகிறார். ஆனாலும் கணவன் வீட்டுக்கு போகாமல் ஸ்டெப் பாதர் அர்ஜுன், தாய் ஆகியோருடன் வசித்து வருகிறார்.
அருகில் இருந்த கிறிஸ்துவ மிஷன் லைப்ரரியில் வாசிப்பு. அம்மாவும் பெண்ணும் ஆரிய சமாஜ கூட்டங்களுக்கும் போகிறவர்கள். ருக்மாவின் மாமியார் இறந்து போக தாதாஜி ருக்மாவை தன்னுடன் வாழ அழைக்கிறார். ருக்மா தனக்கு விருப்பமில்லை என்று மறுக்கிறார். அவரது இரண்டாவது தந்தை அர்ஜுன் ருக்மாவின் கருத்தை ஆதரிக்கிறார்.

தாதாஜி ருக்மாவின் பேரில் இருக்கும் சொத்துகாக அர்ஜுன் ருக்மாவை தன்னுடன் வாழ அனுப்பவில்லை என்று வக்கில் மூலம் நோட்டிஸ் அனுப்புகிறார்..
ருக்மா தான் தாதாஜியுடன் வாழ விரும்பவில்லை என்று கோர்ட் ஏறுகிறார்.
1885 ல் dadaji vs rukmabai வழக்கு சட்ட அறிஞர்கள் Payne,Gilbert, sajam , தலைமையில் வழக்காகிறது..கோர்ட் ஹிந்த் திருமண முறைக்கும் ஆங்கில சட்ட முறைக்கும் இடையில் அல்லாடுகிறது..அறியா பருவத்தில் ருக்மாவின் திருமணம் நடந்துள்ளது என்று நீதிபதி Robert hill pinley தீர்ப்பு சொல்ல வழக்கு பரபரப்படைகிறது..
ஹிந்து அமைப்புகள் ஆங்கில சட்டம் ஹிந்துகளின் புனித தன்மைக்கு எதிரானவை என்று குற்றம் சாட்டின... பாலகங்காதர திலக் தன் பத்திரிக்கையில் நீதிபதியை கடுமையா விமர்சிக்கிறார். இங்கிலாந்தில் ராணிக்கு நீதிபதி குறித்து கண்டனம் அனுப்ப படுகிறது.
இந்திய வரலாற்றில் முதன் முதலாக ருக்மா வழக்கு அப்பிலுக்கு போகிறது. பெண்ணுரிமை அமைப்புகள் ருக்மாவுக்கு ஆதரவா களம் இறங்கின..
ருக்மா கணவருடன் வாழ வேண்டும் அல்லது 3 மாதம் சிறை தண்டனை என்று தீர்ப்பளிக்க .தான் இன்னும் அதிக பட்ச தண்டனை கூட ஏற்க தயார் ஆனால் கணவருடன் வாழ மாட்டேன் என்று கோர்டில் ரிட்டர்ன் சப்மிட் செய்கிறார்.
வழக்கு மேலும் பரபரப்பாகிறது. ருக்மாவுக்கு ஆதரவா Eva macmulan ,Walter macmulan , shivajirao , behramji malabari .போன்றவர்கள் போராட .தத்துவவாதி மேக்ஸ் முல்லர் எலிஸபத் ராணிக்கு நீண்ட வேண்டுகோள் ஒன்றை அனுப்புகிறார்.
ஹிந்து திருமண அமைப்பு பெண்களுக்கு எதிராக உள்ளது.ருக்மா நல்ல புத்திசாலி.அவர் படிக்க வைக்க பட வேண்டும்.திருமண வயது குறித்து சட்டம் இயற்பட வேண்டும் என்று எழுதுகிறார். ருக்மா டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையில் Hindu lady என்ற புனை பெயரில் தொடர்ந்து பெண்ணுரிமைகாக எழுதினார்.
1888 ல் ருக்மாவிற்கு எதிரான வழக்கு டிஸால்வ் செய்ய படுகிறது. தாதாஜிக்கு நஷ்ட ஈடு கொடுத்து ருக்மா திருமணம் செல்லாது என்று அறிவிக்க படுகிறது.அன்றிலிருந்து ருக்மா வெள்ளை புடவை உடுத்த நிர்பந்த படுத்தப் பட்டார்.
ருக்மா தான் மருத்துவராக விருப்பம் தெரிவித்தார்... பல பெண்ணுரிமை அமைப்புகள், கிறிஸ்துவ மிஷனரிகள் பெக்ரம் மலபாரி போன்ற தனிநபர்கள் நிதி சேர்த்து தர 1889 லண்டனில் டாக்டராக படிக்க போகிறார்.
இங்கிலாந்து ராணி முயற்சியால் 1891 ல் age of consent act கொண்டுவர படுகிறது. பெண் குழந்தைகளின் பால்ய விவாகம் தடை செய்ய படுகிறது .
ஆனந்தி பென் ஜோஷிக்கு முன்னதாக படிப்பை முடுத்து விட்டு டாக்டராக பணிசெய்ய ராஜ்கோட்டில் சேர்கிறார். 1930 வரை மும்பையில் டாக்டரா சேவை செய்தார் ருக்மா.. Purdah - the needs for its abolition என்ற சேவை மையத்தை தொடர்ந்து செயல்படுத்தினார்.
ஹிந்து மதம், இங்கிலாந்து அரசு, ஆணாதிக்க சமுகம், உறவுகள் என்று நாலா புறமும் தொடர்ந்து எதிர்த்த போதும் தன் உரிமைக்காக விடாது போராடிய ருக்மா பாய் ராவ்ட் அவர்களின் பிறந்த தினம் இன்று..
பால்ய விவாகம் என்ற பேராபத்தில் இருந்து நம்மை எல்லாம் காக்க போராடிய மாபெரும் புரட்சியாளருக்கு நன்றியோடு இருப்போம்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக