தான் மிக வேகமாக வளர்ந்து வருவதாக பீற்றிக் கொள்ள
கிடைக்கும் எந்த வாய்ப்பையும் குஜராத் தவறவிடுவதில்லை. ஆனால் பிரம்மாண்டமான
அதிவிரைவுச் சாலைகள், பெரும் தொழிற்சலைகள் மற்றும் பொருளாதார
மண்டலங்களுக்குப் பின்னே, குஜராத்துக்கு வேறு ஒரு முகம் உள்ளது. தீவிரமான
ஊட்டச்சத்து குறைபாடும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியச்
சீர்கேடும் குஜராத் எதிர்கொள்ளும் இரண்டு கடுமையான சவால்கள் என்று சமூகப்
பொருளாதார குறியீட்டெண்கள் தெரிவிக்கின்றன. பிற மாநிலங்களில் இந்தப்
பிரச்சினைகள் பழங்குடியின பிராந்தியங்களுடையதாக உள்ள நிலையில், தலைநகர்
அகமதாபாத் உள்ளிட்டு குஜராத் முழுவதும் இப்பிரச்சினைகள் நிலவுகின்றன.
கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட 2014-2015ம் ஆண்டுக்கான சமூகப் பொருளாதார ஆய்வின் படி, குஜராத்தில் உள்ள பானாஸ்கந்தா, பதான், நவ்சாரி, ஜூனாகட் மற்றும் கேடா உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் 46 தாலுக்காக்களில் 1.97 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டாலும், 24,762 குழந்தைகள் தீவிர ஊட்டச்சத்து குறைபாட்டாலும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.