வியாழன், 17 நவம்பர், 2016

1000 ரூபாய் நோட்டுக்கள் இனி வராது .. இப்போதைக்கு வராது .. அருண் ஜெட்லி அருள்வாக்கு ..Jaitley said there is no plan to bring back Rs 1,000 notes.

புதுடில்லி: ஆயிரம் ரூபாய் நோட்டை தற்போதைக்கு வெளியிடும் திட்டமில்லை என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.<கள்ள நோட்டு மற்றும் கருப்பு பணத்தை ஒழிக்க ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டது. வங்கிகளில் பழைய நோட்டுக்களை கொடுத்து ரூ.4,500 வரை மாற்றிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. ஆனால், நாளை முதல் பழைய பணத்தை மாற்றும் அளவு 2 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. வங்கிகளில் விரைவில் பணம் தீர்ந்து விடுவதால் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர்.
இதனை குறைக்கவே பணம் எடுக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்களை வாபஸ் பெற்ற மத்திய அரசு, அதற்கு பதில் ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுக்களை வெளியிட்டுள்ளது. ரூ.1000 நோட்டு வெளியிடப்படவில்லை. இந்த நோட்டு விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியதாவது:

பணம் மாற்றுவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதன் மூலம் பணம் முறைகேடாக பயன்படுத்துவது தடுக்கப்படும். தற்போதைக்கு ரூ.1000 நோட்டு வெளியிடும் திட்டமில்லை. 22,500 ஏ.டி.எம்., மையங்கள் இன்று முதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்றார்.dinamalarcom

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக