வெள்ளி, 18 நவம்பர், 2016

அதிமுக அரசை பாஜகவிடம் தாரை வார்த்து விட்டீர்களே? செய்த ஊழல்களை மறைக்க தமிழகத்தை காட்டி...

தமிழக அரசியலில் இருந்து காணாமற்போன #அதிமுக ...சமீபகாலமாக தமிழக ஊடகங்களின் தலைப்பு செய்திகளில் அதிமுக வை சேர்ந்த அமைச்சர்களோ, MLA களோ, முன்னணி கட்சி நிர்வாகிகளோ எவருமே இடம்பெறுவதில்லை. மாறாக #பாஜக வின் மாநில பொறுப்பாளர்களான,
#பொன்_ராதாகிருஷ்ணன்
#தமிழிசை
#வானதிசீனிவாசன்
#எச்_ராஜா
#எல்_கணேசன்

உள்ளிட்டோர் தான் முன்னிலைப்படுத்த படுகின்றனர். உதய் மின்திட்டம், கருப்பு பண விவாகரத்தில் சாமானிய மக்களின் பாதிப்பு, GST வரிவிதிப்புக்கு தமிழக ஆதரவு, கிண்டி CIPET மாற்றம், பொது மருத்துவ நுழைவு தேர்வு , காவிரிப் பிரச்சனை ஜல்லிக்கட்டு தடை உள்ளிட்ட தமிழக அரசின் பல்டிகள் , தமிழக நலன் சார்ந்த விசயங்கள் குறித்து எதிர்க்கட்சிகளின் எந்த ஒரு கருத்திற்கும், குற்றச்சாட்டிற்கு முன்னே வந்து கருத்து சொல்வதும் இவர்கள் தாம். அதுபோக தமிழக அரசின் சார்பாக எந்த ஒரு கொள்கை முடிவும், அறிவிப்புகளும் #தலைமைச்செயலர் வாயிலாகவும், பொதுவான விஷயங்களில் தமிழக அரசின் கருத்தாக பிஜேபி நியமித்த தமிழக பொறுப்பு #ஆளுநர் #வித்யாசாகர்_ராவ் ன் கருத்தை முன்னிலை படுத்துவதையும் பார்க்கும்போது ஆறு மாதங்களுக்கு முன்பு இங்கு நாம் தேர்ந்தெடுத்த ஒரு அரசு இருக்கிறதா, இயங்குகிறதா , என்ற சந்தேகத்தையே ஏற்படுத்துகிறது.

பாஜக வின் திரைமறைவு பேரங்கள் என்னவென்று தெரியவில்லை. இது இன்னும் எத்தனை நாள் நீடிக்கும் என்று தெரியவில்லை. ஆனால், ஒன்று நிச்சயம், #ஜெயலலிதா வின் #அப்போல்லோ மர்மங்கள் விலகாத வரை, அதனை நாம் விலக்காதவரை, கீழே எஞ்சி நிற்கும் கேள்விகளுக்கு நாம் விடை காணாதவரை #மக்களாட்சி க்கு எதிரான இந்த நிலை மாற வாய்ப்பில்லை. காணாமற் போன அதிமுக அரசு கண்டுபிடிக்கப்படவும் வாய்ப்பில்லை.
அப்பல்லோ மர்மங்கள் விலகுமா?
ஜெயலலிதா வெளியே வருவாரா?
வெளியே வருவது சாத்தியமா ?
எப்போது வருவார்?   முகநூல் பதிவு
V Jeyaganapathi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக