வெள்ளி, 18 நவம்பர், 2016

சென்னையில் வங்கிகள் செயல்படும் கட்டடத்தில் திடீர் தீ: ஊழியர்கள் வெளியேற்றம்


சென்னை பாரிமுனையில் வங்கிகள் செயல்படும் தனியார் கட்டடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

பாரிமுனையில் தாஸ் இந்திய டவர் என்ற பெயரில் கட்டடம் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டடத்தில் தனியார் வங்கிகள், நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. தற்போது, பொதுமக்கள் வங்கிகளில் பணம் மாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், பாரிமுனை தாஸ் இந்தியா டவர் கட்டடத்தில் உள்ள வங்கிகளில் பணம் மாற்றுவதற்காக பொதுமக்கள் குவிந்து இருந்தனர். ஊழியர்களும் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர்.
இதனிடையே, கட்டடத்தின் 3-வது மாடியில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
ஜெனரேட்டர் தீப்பிடித்து எரிந்ததால், பொதுமக்களும், ஊழியர்களும் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்க போராடி வருகி்ன்றனர்.
படம்: ஆ.முத்துக்குமார்
vikatan.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக