வெள்ளி, 18 நவம்பர், 2016

அரவக்குறிச்சி திமுகவினரை மட்டும் வெளியேற்றியது தேர்தல் ஆணையம் .. அதிமுகவினர் விருந்தாளிகளாம்..

திமுக-வினரை மிகுந்த கவனத்துடன் வெளியேற்றியிருக்கிறார்கள். ஆனால் அதிமுக-வினர் மட்டும் விருந்தாளிகள் என்றபெயரில் தொகுதிக்குள்ளேயே முகாமிட்டுள்ளனர்
அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியும், திமுக வேட்பாளராக கே.சி.பழனிசாமியும் நேரடிப் போட்டியில் உள்ளனர். அதிகாரம் உச்சத்தில் உள்ள அமைச்சரான எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள்., எம்.பி.,க்கள் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட தொண்டர்களும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்தனர்.திருவண்ணாமலை மாவட்ட திமுக செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான ஏ.வ.வேலு தலைமையில் திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் ஏராளமானோர் திமுக வேட்பாளரை ஆதரித்து தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்தனர். இந்நிலையில், நாளை (19/11/2016) இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி தேர்தல் அதிகாரிகளும் காவல் துறையினரும் வெளியூர் ஆட்களை தொகுதியிலிருந்து வெளியேற்றினார்கள்.
இதில் முக்கியமாக திமுக-வினரை மிகுந்த கவனத்துடன் வெளியேற்றியிருக்கிறார்கள். ஆனால் அதிமுக-வினர் மட்டும் விருந்தாளிகள் என்றபெயரில் தொகுதிக்குள்ளேயே முகாமிட்டுள்ளனர் என்று திமுக தேர்தல் பொறுப்பாளரும் எம்.எல்.ஏ.,வுமான ஏ.வ.வேலு தெரிவித்துள்ளார்.மின்னம்பலம்.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக