வெள்ளி, 18 நவம்பர், 2016

அருப்புக்கோட்டை நகரசபை ஆணையாளர் தற்கொலை!

அருப்புக்கோட்டை நகரசபை ஆணையாளர், தங்கியிருந்த பயணியர் விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆணையாளர்; விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகரசபை ஆணையாளராக பணியாற்றி வந்தவர், முத்துவெங்கடேஸ்வரன் (வயது 54). இவர் கடந்த 1½ ஆண்டாக அருப்புக்கோட்டையில் பணியாற்றி வந்தார்.< இவருடைய மனைவி சென்னையில் தனியார் கல்லூரி ஒன்றில் உதவி பேராசிரியையாக வேலை பார்க்கிறார். இவர்களுடைய மகன், சென்னையில் 7-ம் வகுப்பு படித்து வருகிறான். தூக்குப்போட்டு தற்கொலை குடும்பத்தினர் சென்னை பெரம்பூரில் வசித்து வந்த நிலையில் முத்து வெங்கடேஸ்வரன் அருப்புக்கோட்டையில் உள்ள அரசு பயணியர் விடுதியில் தங்கி இருந்தார். தினமும் காலையில் 10 மணிக்கு அவர் நகரசபை அலுவலகத்துக்கு செல்வார். அலுவலக உதவியாளர் வந்து அவரை அழைத்துச்செல்வது வழக்கமாகும்.


இந்த நிலையில் நேற்று காலை 10 மணி அளவில் வந்து பார்த்த போது அவர் தங்கியிருந்த அறை திறக்கப்படாமல் இருந்தது. நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. இதைதொடர்ந்து போலீசார் வரவழைக்கப்பட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது முத்து வெங்கடேஸ்வரன் வேட்டியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

அவரது உடல் பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பணிச்சுமையா?

தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன், துணை சூப்பிரண்டு தனபால், கோட்டாட்சியர் செல்வி, தாசில்தார் சீதாலட்சுமி ஆகியோர் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக யாரிடமோ செல்போனில் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அவர் தற்கொலைக்கு பணிச்சுமை காரணமா அல்லது குடும்ப பிரச்சினையா என்று, அருப்புக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகையன் விசாரணை நடத்தி வருகிறார்.தினத்தந்தி.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக