வெள்ளி, 18 நவம்பர், 2016

அம்பானியின் ஆலோசகர்தான் ரிசேர்வ் வங்கியின் ஆலோசகர் .. நோட்டு செல்லாது என்கின்ற ஆலோசனை...


""ஹலோ தலைவரே, மோடி கிளப்பிய கரன்ஸி சுனாமி இன்னும் அடங்கலை. மக்களின் அலைக்கழிப்பும் இன்னும் முடிவுக்கு வரலை.'' ""மோடி அறிவிப்பு பற்றி அவருக்கு ஓட்டுப் போட்ட சாதாரண மக்களுக்குத்தான் கடைசி நேரம் வரை எதுவும் தெரியாதுப்பா. ஆனா, அவர் அறிவிக்கிறதுச்கு ஒரு வாரம் முன் னாடியே, நாட்ல இருக்கும் அத்தனை வங்கிகளையும் அலர்ட் பண்ணுங்கன்னு ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு சைடில் இருந்து சொல்லப்பட்டிருக்கு. அதாவது, நவம்பர் 2-ந் தேதியே, இந்தியாவில் இருக்கும் அனைத்து வங்கிகளுக்கும், ரிசர்வ் பேங்க் ஒரு நோட்டீஸ் அனுப்பியிருக்கு. அதில், 7-ந் தேதிக்குள், அனைத்து வங்கியிலும் இருக்கும் 7 லட்சம் கோடி மதிப்புள்ள 500 ரூபாய் நோட்டுகளை, 100 ரூபாய் நோட்டுகளா மாற்றி, இந்தியா முழுதிலும் இருக்கும் 2 லட்சம் ஏ.டி.எம்.கள் மூலமும் பொதுமக்களுக்கு விநியோகிச் சிடுங்கன்னு குறிப்பிடப்பட்டிருந்தது.'
100.. 500;..இதை நம்பித்தான் நவம்பர் 8-ந் தேதி இரவு, மோடி அந்த அதிரடி அறிவிப்பை செய்திருக்கிறார். ஆனால் மக்களிடம் அந்த 100 ரூபாய் நோட்டுகள் போய்ச் சேராததால்தான், சில்லறை நெருக்கடி உண்டாச்சு. அதுதான் மக்கள் மத்தியில் மோடிக்கு எதிரான அதிருப்தியையும் ஆவேசத்தையும் பெரும் சூறாவளியா உருவாக்கியிருக்கு.'
'’ ""வங்கிகளின் செயல்பாடுகளை உறுதிப்படுத்தாமலா உர்ஜித் சொன்னார்?''’ ""வங்கிகளைப் பொறுத்தவரை நோட்டுகளை முடிந்தவரை 100 ரூபாயாக மாற்றினாங்க. ஆனா அது பொதுமக்கள் கைகளுக்குப் போகலை. அதுக்கு பதிலா, மோடிக்கு நெருக்கமான அம்பானி-அதானி உள்ளிட்ட தொழிலதிபர்கள் தொடங்கி, நாட்டில் உள்ள பெரிய பெரிய முதலாளிகளின் கைக்கு போய்ச் சேர்ந்துடுச்சு. அவங்க தங்களிடம் இருந்த ஆயிரம், ஐநூறை எல்லாம், நூறு ரூபாய் நோட்டுகளாக மாத்திக்கிட்டாங்க. புழக்கத்தில் விடப்பட்ட 14 சதவீத சில்லறை நோட்டுகளையும் இந்த பணமுதலைகளே முழுங்கிடிச்சி.''

""இதெல்லாம் ரிசர்வ் பேங்க் கவர்னரான உர்ஜித் பட்டேலுக்கு தெரியாதா?'' ""காரணகர்த்தாவே அவர்தான்னு டெல்லி வட்டாரத்தில் சொல்றாங்க. அம்பானியோட ரிலையன்ஸ் நிறுவனத்தின் துணை கம்பெனி ஒன்றில் தலைமை பொறுப்பில் இருந்தவர்தான் உர்ஜித் பட்டேல். ரிலையன்சுக்கு ஆலோசகராகவும் இருந்திருக்காரு.
அதனால நோட்டு மாற்றுவது அம்பானி போன்ற பெரிய கம்பெனிகளுக்கு ஈஸியா இருந்திருக்குது. சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் திருப்பூர் பக்கத்திலே 570 கோடி ரூபாய் பணத்தோட கண்டெய் னர் மாட்டுனதே.. அந்த விவகாரத்தை பத்திரமா முடித்து வைப்பதிலும் உர்ஜித்தோட பங்கு இருந்ததாம்.''
""அப்படின்னா அம்பானி மாதிரியான வடநாட்டு முதலாளி களோடு தமிழ்நாட்டு முதலாளிகளும் முன்கூட்டியே நோட்டுகளை மாற்றியிருப்பாங்களே?'' ""தலைவரே.. தமிழ்நாடுன்னு சொன்னாலே இங்க ஆல் இன் ஆளா இருப்பது போயஸ்கார்டன்தான். நவம்பர் 5-ந் தேதியே இந்தத் தரப்புக் குத் தகவல் போயிடுச்சி. அதனால் வருசத்துக்கு 91 ஆயிரம்கோடி கலெக் சன் பார்க்கும் மாநிலக் கருவூலத்தில் இருந்த 100 ரூபாய் வரையிலான சில்லறை நோட்டுகளையெல்லாம் தங்கள்கிட்ட இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுக் கட்டுகளுக்கு பண்டம் மாற்றிட்டாங்களாம்.
அதுதவிர அமெரிக்க டாலராவும் ஒரு பகுதி கரன்ஸி மாற்றப்பட்டிருக்கு. தங்க நகை பர்ச்சேஸ் மூலம், நகை முதலீடாகவும் மிச்சசொச்ச ஆயிரம் ஐநூறு நோட்டுகள், அழகா, பளபளன்னு அவதாரம் எடுத்திருச்சு. நெல்லுக்குப் பாய்ற நீர், புல்லுக்கும் பாய்ற மாதிரி, இந்தத் தகவல் ஓ.பி.எஸ்., எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி, வேலுமணி, வைத்திலிங்கம்ன்னு அ.தி.மு.க. சீனியர் கள் தரப்புக்கும் போயிருக்கு.''

 ""கார்டன் தரப்பிலிருந்தே சொன்னாங்களா?'' ""துணை சபாநாயகர் தம்பி துரைக்கு டெல்லி வட்டாரத்திலிருந்து தகவல் கிடைக்க அவர்தான் கார்டன் முதல் கட்சி சீனியர்கள் வரை தகவல் சொல்லியிருக்காரு. அவங்கவங்க தரப்பு ஆட்களும் முன்னேற்பாடான வேலைகளை செய்திட்டாங்களாம். கல்லூரி நிர்வாகத்தில் வல்லவரான தம்பிதுரையின் நட்புவட்டத்தில் உள்ள கல்லூரி அதிபர்களுக்கும் அலர்ட் போச்சு. அதில் தி.மு.க.வைச் சேர்ந்த ஒருசிலரும் உண்டு. இவங்க எல்லோருமே ஆயிரம் ஐநூறு நோட்டுகளை சில்லறையா மாத்தி, பழையபடி பதுக்கிட்டாங்க.''’ ""இதையெல்லாம் மத்திய அரசு கவ னிக்காதா?'

' ""மத்திய அரசின் பொருளாதார விவகாரத்துறை செயலாளரா தமிழக கேடர் அதிகாரியான சக்தி காந்ததாஸ்தான் இருக்காரு. அதனால அந்த ஏரியாவிலிருந்து அ.தி.மு.க தரப்புக்கு சேஃப்டியான தகவல்கள் வந்திடுதாம். அரசு நிர்வாகத்தைப் பயன்படுத்தி ரூபாய் நோட்டுகளை மாற்றுவது ஆளுங்கட்சித் தரப்பின் கீழ்மட்டம் வரை தொடருது. மாநகராட்சி, நகராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளில், சொத்துவரி, குடிநீர் வரிகளை ஆயிரம் ஐநூறாக் கட்டலாம்ன்னு அறிவிக்கப் பட்டிருக்கு. அப்படி வரிகட்ட வேண்டியவங் களைத் தேடிப்போய், ஆளும்கட்சி கவுன் சிலர்கள், தங்கள் நோட்டுகளை மாத்திக் கிறாங்களாம்.''

விகடன்.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக