(மனசாட்சி உள்ளவர்களுக்கு மட்டுமான வீடியோ இது.)
120+ கோடி மக்களை கொண்ட இந்தியாவில் இது போல் எத்தனை ஏழை படிப்பறிவில்லாத மக்கள் மோடியின் அறிவிப்பு வெளியான நொடியிலிருந்து அல்லல்பட்டார்களோ, ஏமாந்தார்களோ, ஏமாற்றப்பட்டார்களோ தெரியவில்லை. இங்கு யாருமே கருப்புப் பணத்திற்கு ஆதரவானவர்கள் அல்ல. முறையான அறிவிப்பு வெளியிட்டு, சரியான கால அவகாசம் கொடுத்து மாற்ற நேரம் கொடுக்காமல், இன்னும் நான்கே மணி நேரத்தில் உங்கள் கைகளில் உள்ள பணம் செல்லாது, உங்கள் சேமிப்பு செல்லாது. அதைக் கொண்டு உணவு, மருந்து உள்ளிட்ட எந்த தேவைகளையும் உங்களால் நிறைவேற்றிக் கொள்ள முடியாது. இரண்டு நாட்கள் கழித்து வங்கிளுக்கு சென்று உங்கள் கையிருப்பை புதிய நோட்டுகளாக மாற்றிக்கொண்டால் மட்டுமே பயன்படுத்த முடியும் என்று அறிவித்த விளம்பர மோகவெறி கொண்டு அலையும் #பாசிசகோமாளி யின் கூத்துகளுக்கு பலிகடாவா இவர்கள்?
புழக்கத்தில் உள்ள 14 லட்சம் கோடி மதிப்பிலான ₹500, ₹1000 நோட்டுகளில் அத்தனையும் கருப்பு என்று சொல்லி விட முடியாது. அதே போல் அந்த 14 லட்சம் கோடியின் ஒரு பகுதி மட்டும் தான் கருப்புப்பணம் என்றும் சொல்லிவிட முடியாது. அதை விட பல நூறு மடங்கு வெளிநாட்டிலும், உள்நாட்டில் சொத்துக்களாகவும், தங்கங்கட்டிகளாகவும், வைர , வைடூரிய ஆபரணங்களாகவும் உள்ளதெனும் போது, அவை எதுவுமே சாமானிய மக்களின் சேமிப்பு, பங்களிப்பு துளியளவும் இல்லாதவை எனும் போது நீங்கள் உண்மையானவராக இருந்தால் உங்கள் #சர்ஜிகல்அட்டாக் கை அங்கு அல்லவா நிகழ்த்தியிருக்க வேண்டும்.?
இப்போது இன்று (செப்-10 ) முதல் வங்கிகளுக்கு சென்று பணம் போடுபவர்களுக்கும் 2 1/2 லட்சம் வரை மட்டுமே அனுமதி. அதற்கு மேல் செலுத்த விரும்புபவர்கள் செலுத்தும் தொகை தங்கள் ஆண்டு வருமானத்திற்கு மேலாக இருந்தால் 200% #அபராதம் என்று அறிவித்ததால் 5, 10, 50 லட்சம் என்று வைத்திருப்பவன் அபராதம் செலுத்தி உங்களிடம் ஒப்படைப்பானா? அல்லது கமிசன்கள் மூலம் பினாமிகளை உருவாக்குவானா? அதிலேயே உங்கள் தோல்வி தெரியவில்லையா?
ஆட்சிக்கு வந்து 2 1/2 ஆண்டு காலமாகியுள்ள நிலையில் அதானிகளின், அம்பானிகளின் சொத்துகளை பன்மடங்கு உயர்த்திய சாதனையை தவிர சாதாரண, சாமானிய மக்களுக்காக சொல்லிக் கொள்ளும்படியாக எதையுமே செய்யாமல், இது போன்ற ஸ்டன்ட்களை அவ்வப்போது நிகழ்த்தி வேடிக்கை காட்டி ஏமாற்றியே மீதமுள்ள காலத்தையும் கூட நீங்கள் ஓட்டி விடலாம். ஆனால் இது நிரந்தரமில்லை மோடி அவர்களே. உங்கள் வீழ்ச்சி விரைவில் நிகழும். மீண்டும் எழ முடியாதவாறு, மீண்டு எழவே முடியாதவாறு உங்கள் வீழ்ச்சி நிகழும், நிச்சயம் நிகழும். முகநூல் பதிவு . ஜெயகணபதி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக